"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

3/21/2013

மறுமை நாள்வரை அழைத்தாலும் பதில் தரமாட்டார்கள்

“மறுமை நாள்வரை (அழைத்த போதிலும்) அவர்கள் இவர்களுக்கு பதில் கொடுக்க மாட்டார்கள், ஆகவே (இத்தகைய) அல்லாஹ் அல்லாத வர்களை அழைப்பவர்களை விட மிக வழி கெட்டவர்கள் யார்? அவர்கள், தங்களை இவர்கள் அழைப்பதையும் அறியார்”. (அல்குர்ஆன் 46 :5)
“மறுமை நாள்வரை அழைத்தாலும் யார் பதில் தரமாட்டார்கள்” என்பதை நபி வழியில் நாம் ஆராய்வோம்.
யூத, கிறிஸ்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்துவிடும் போது அவனது கப்ரின் மீது ஒரு வணங்கும் இடத்தை கட்டிக் கொள்வார்கள். நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்துக் கொள்வார்கள். அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) ஆதாரம் : புகாரி 179

“நல்லடியான் மரணமடைந்து , அவன் கப்ரில் வைக்கப்பட்டு, முன்கர், நகீர் என்ற இருவானவர்கள் விசாரித்து முடித்த பின், அவனை நோக்கி “உறங்கு!” என்பர், அதற்கு அவன் “நான் என் குடும்பத்தினரிடம் சென்று (இதை) அறிவித்து விட்டுத் திரும்புகிறேன்” என்பான். அப்போது அவ்விரு மலக்குகளும் அவனை நோக்கி, “புது மாப்பிள்ளை உறங்குவது போல் (அயர்ந்து) உறங்கு! என்பார்கள். அல்லாஹ் அவனை மண்ணறையிலிருந்து எழுப்பும் வரை அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பார்கள்.” என்று அல்லாஹ்வின் திருத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.  அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல் : திர்மிதீ
இந்த ஹதீஸ் விரிவை அஞ்சி சுருக்கப்பட்டுள்ளது தவறான பொருளைக் காட்டுவதற்காக எந்தப் பகுதியும் மறைக்கப்படவில்லை.
இந்த நபி மொழியிலிருந்து “அல்லாஹ், கியாம நாளில் அவர்களை எழுப்பும் வரை, அவர்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பார்கள்” என்று தெளிவாகத் தெரிகின்றது.

இந்த நபி மொழியிலிருந்து “அல்லாஹ், கியாம நாளில் அவர்களை எழுப்பும் வரை, அவர்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பார்கள்” என்று தெளிவாகத் தெரிகின்றது.
கியாம நாள்வரை அழைத்தாலும் அயர்ந்து உறங்குகின்ற அவர்கள், எந்தப் பதிலும் தரமாட்டார்கள் என்பது தெளிவாகின்றது. இந்த விளக்கம் எவரது சொந்த அபிப்பிராயமும் அல்ல. அல்லாஹ்வின் திருத்தூதர்(ஸல்) அவர்கள், மரணமடைந்த நல்லடியார்களின் நிலைமையைப் பற்றி அளித்த விளக்கம்.

“மறுமை நாள்வரை (அழைத்த போதிலும்) அவர்கள் இவர்களுக்கு பதில் கொடுக்க மாட்டார்கள், ஆகவே (இத்தகைய) அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களை விட மிக வழி கெட்டவர்கள் யார்? அவர்கள், தங்களை இவர்கள் அழைப்பதையும் அறியார்”. (அல்குர்ஆன் 46 :5)
அடுத்து இந்தத் திருவசனத்தில் ‘மண்’ என்ற அரபிச்சொல் பயன்படுத்த ப்பட்டுள்ளது. இது அரபி அகராதிப்படியும், அரபியர்களின் வழக்கப்படியும் உயர்திணைக்கு பயன்படுத்தப்படும். அதாவது 'மனிதன்' 'ஜின்' போன்ற பகுத்தறிவுள்ளவர்களுக்கு பயன்படுத்தப்படும் சொல். இதனடிப்படையில் ‘அவர்கள்’ என்று தான் பொருள் கொள்ள வேண்டும். ‘அவைகள்’ என்று பொருள் கொள்ள முடியாது. விதிவிலக்குப் பெற்ற ஒரு சில இடங்களில் ஒன்றாக இது அமைந்திருக்கவில்லை. என்பது அரபி இலக்கியம் அறிந்த வர்களுக்கு   தெரியாமலிருக்க முடியாது.


இந்த ஆயத்தின் இறுதியில் ‘காபிலூன்’ என்று அல்லாஹ் முடிக்கிறான். “அவர்கள் இவர்களின் அழைப்பை உணர்ந்து கொள்ள மாட்டார்கள்” என்று பொருள் செய்யப்பட்டாலும், ‘காஃபிலூன்’ என்பதன் மூலச் சொல் ‘கஃப்லத்’ ஆகும். இந்த கஃபலத் என்பது கவனக்குறைவு, உறக்கம் போன்ற நிலைகளில் இருந்து கொண்டு அழைப்பைக் கேட்காதவர்களுக்கே பயன்படுத்தப்படும் சொல்லாகும். கற்கள், மரங்களுக்கு அந்தச் சொல் பயன்படுத்தப்படாது. இந்த அடிப்படையிலும் இறந்துவிட்ட நல்லடியார்களைப் பற்றியே இந்தத் திருவசம் குறிப்பிடுகின்றது.
 முதல் வசனத்தில் ‘மா’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.   முதல் வசனத்தில் “கல்” போன்றவற்றை அழைப்பது பற்றியும், இரண்டாம் வசனத் தில் இறந்துவிட்ட நல்லடியார்களை அழைப்பது பற்றியும் குறிப்பிட்டு, இரண்டையுமே அல்லாஹ் தவறு என்கிறான். இதற்கு இன்னும் விரிவான விளக்கத்தைப் (பின்னர்) பார்ப்போம்.
 நன்றி  : annajaath.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்