"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

10/09/2013

வஹ்வாபிசம்

## கூர்ந்து கவனியுங்கள் ##
இந்த கபுருகளை வணங்கும் கூட்டம் உதிர்க்கும் வஹ்ஹாபி, வஹ்வாபிசம், போன்ற வார்த்தைகளைக் கூர்ந்து கவனியுங்கள்.
“வஹ்ஹாப்” என்றால் அல்லாஹ்வின் பெயர்களின் ஒன்று; கொடையாளன் என்பது அதன் பொருள்.
மவ்லவி என்றால் மவ்லாவைச் சேர்ந்தவன் என்றும்
கீரனூரி என்றால் கீரனூரைச் சேர்ந்தவன் என்றும்
பங்காளி என்றால் பங்களாதேசை சேர்ந்தவன் என்றும்
பாகிஸ்தானி என்றால் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்றும்

பொருள்படுவது போல், 'வஹ்ஹாபி'' என்றால் வஹ்ஹாபான அல்லாஹ்வைச் சேர்ந்தவன்  என்பதே அதன் பொருளாகும்.

நம்மை அல்லாஹ்வைச் சேர்ந்தவன் என்று வாய் நிறைய சொல்லும்போது அவர்களை அறியாமலேயே அவர்கள் ஷைத்தானைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.





மக்களில் இரு கூட்டம் மட்டுமே உண்டு.
1 சுவர்க்கத்திற்குரியவர்கள் (அல்லாஹ்வை சேர்ந்தவர்கள் )
2 நரகத்திற்குரியவர்கள் (ஷைத்தானைச் சேர்ந்தவர்கள் )
நம்மை வஹ்ஹாபி – அல்லாஹ்வைச் சேர்ந்தவன் என்பவர்கள். – ஷைத்தானைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

அதே போல் “வஹ்ஹாவிசம்” என்று அவர்கள் கூறுவது வஹ்ஹாபான அல்லாஹ் வகுத்தளித்த கொள்கை என்பதே அதன் பொருளாகும். நாம் அல்லாஹ் வகுத்தளித்த கொள்கையில் இருக்கிறோம் என்பதற்கு அவர்களே சாட்சியாளர்களாக இருக்கிறார்கள். அப்படியானால் அவர்கள் ஷைத்தான் வகுத்தளித்த கொள்கையில் இருப்பதாக அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். அப்படியானால் அவர்கள் தோல்வியைத் தழுவும் கூட்டம் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் தர்கா கூடாது கபுறு வணக்கம் கூடாது என்று சொல்லும் எங்களை நீங்கள் வஹாபி (அல்லாஹ்வை சார்ந்த்தவன் )என்று அழைப்பதானது.. எங்களை உங்கள் வாயினாலே அல்லாஹ் கவுரவப்ப்டுத்துகிறான் என்று கூட இருக்கலாம்

அதேபோல நாம் உங்களை பார்த்து 'கபுறு வணங்கி' என்று அழைக்கிறோம்
'கபுறு வணக்கம் 'புரியும் உங்களை 'அல்லாஹ்' எங்கள் வாயினால் இழிவு படுத்துகிரான் என்று கூட இருக்கலாம்

-அல்லாஹ் மிக அறிந்தவன் -


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்