"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

12/24/2013

மீலாத் விழா - ஐயமும் தெளிவும்:

ஐயமும் தெளிவும்:

ஐயம்: ஹஸ்ஸான் பின் தாபித் (ரலி) அவர்களிடம் இணைவப்பாளர்களை எதிர்த்துக் கவிபாட அனுமதித்தது மவ்லித் பாடலுக்கான அங்கீகாரம்தானே!

தெளிவு: குரைஷியர், முஷ்ரிகீன்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கவிதையால் நிந்திப்போராக இருந்தனர். அவர்களுக்கு கவிதையால் பதில் அளிக்க முடியாத நபி (ஸல்) அவர்கள் கவித்துறையில் சிறப்பு தேற்சி பெற்றிருந்த ஹஸ்ஸான் (ரலி) அவர்களை கவிதையிலேயே அவர்களுக்கு பதிலடி கொடுக்கும்படி பணித்தார்கள். அதனால் அவர்கள் நபியை உயர்த்தியும், எதிரிகளைத் இகழ்ந்தும் கவி பாடினார்கள்.

நபியின் அங்கீகாரம் பெற்ற ஹஸ்ஸான் (ரலி) அவர்களின் கவியை நாம் பிரதி வெள்ளிக் கிழமைகளில் "அல்கஹ்ஃப்" அத்தியாயத்தை ஓதி வருவது போன்று நபித்தோழர்கள் வருடா வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மஸ்ஜிதுன் நபவியில், அல்லது மதீனாவிலுள்ள வீடுகளில் ஓதி வந்தனரா? என்றால் இல்லை.

நபி (ஸல்) அவர்களை உலகப்பயங்கரவாதத்திற்கு வித்திட்டவர் என அமெரிக்காவில் உள்ள ஒருவன் நவீன காலத்தில் காழ்ப்புணர்வுடன் சாடிப் பேசியதை நீங்கள் அறிவீர்கள். இந்நிலையில் இவன் போன்ற ஷைய்த்தான்களை எதிர்த்தும், நமது நபியை உயர்த்தியும் பாடுவதையும், எழுதுவதையுமே இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

அது ஒரு புறமிருக்க "சுன்னத் வல் ஜமாஅத்" அறிஞர்கள் தாம் இந்த மவ்லிதை உருவாக்கினார்களா? என்றால் இல்லை. நபித்தோழர்களின் விரோதிகளான "ஷீஆ"க்களாளே இதனை உருவாக்கினர்.

ஷீஆக்களின் நம்பிக்கைகள் சில:

(1) நபிகள் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அலி (ரலி) அவர்களும், அவர்களின் பரம்பரையில் வந்த (ஷீஆக்களின் நம்பிக்கைப்படி) பன்னிரெண்டு இமாம்களுமே ஆட்சி செய்யத் தகுதியானோர் என்பதும்.

(2) அல்குர்ஆனில் அலி (ரலி) அவர்களின் ஆட்சியை அறிவுறுத்தும் வகையில் அமைந்த "அல்விலாயா" என்ற அத்தியாயத்தை? குர்ஆனை ஒன்று சேர்த்த போது நபித்தோழர்கள் -குறிப்பாக- அபூபகர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் திட்டமிட்டே இருட்டடிப்புச் செய்துள்ளனர் என்பதும்.

(3) பன்னிரெண்டு சொச்சம் நபித்தோழர்களைத் தவிர ஏனெய அனைவர்களும் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறினர். என்பதும்.

(4) அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தகாத நடத்தையுடைய பெண் என்பதும்.

(5) நபியின் மரணத்தின் பின்னால் அலி (ரலி) அவர்களுக்கு கைமாற வேண்டிய ஆட்சியை அபூபகர் (ரலி) உமர் (ரலி) ஆகியோர் தமது தந்திர புத்தியால் தமதாக்கிக் கொண்டனர் என்பதும்.

(6) நபித்தோழர்களும், அவர்கள் வழிவந்த இமாம்களும், நபிவழி நடக்கும் சுன்னத் வல்ஜமாஅத்தினரும், காபிர்கள் என்பதும். ஷீஆக்களின் நம்பிக்கை கோட்பாட்டு சாக்கடையில் இருந்து சில சொட்டுக்களாகும்.

இதன் பின்னரும் மவ்லித் ஓதப்பிரியப்படுவோர் ஷீஆக்களை மறைமுகமாக ஆதிப்போரா? என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஐயம்: மவ்லித் நபியின் காலத்தில் இல்லாததாக இருந்தாலும் சுன்னத்தான ஒன்றாகாதா?

தெளிவு: முஸ்லிம் உலகில் அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான இமாம் "இப்னுஸ்ஸலாஹ்" (ரஹ்) அவர்கள் சுன்னா(நபியின் வழி முறையை) ஹதீஸ்களின் துணை கொண்டு இரண்டாக வகுக்கின்றார்கள்.

(1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டியவை. உதாரணமாக: ஸிவாக் (மிஸ்வாக்) செய்தல், தர்மம் கொடுத்தல், உண்ணுதல், பருகுதல், சிகை அலங்காரம் செய்தல் போன்றவை.

(2) செய்யாது விட்டவை.

உதாரணமாக: ஐங்காலத் தொழுகை முடிந்ததும் கூட்டாகப்பிரார்த்திக்காது தனிமையாக திக்ர் செய்தமை, பெருநாள் தொழுகைகளை பாங்கு, இகாமத் இன்றி நடாத்தியமை, பாங்கின் முன் ஸலவாத் இன்றி பாங்கைக் கற்றுத்தந்தமை போன்றவற்றைக் குறிப்பிட முடியும். (ஆதார நூல்: ஸியானது ஸஹீஹ் முஸ்லிம். பக்கம்: 2-5)

அடுத்ததாக நபியின் காலத்தில் இல்லாத ஒரு வழி முறையை தொழுகை, மற்றும் இதர வணக்கங்கள் போலாக்கி ஓதி வருவதை, கொண்டாடுவதை உலகில் அங்கீகரித்தவர்கள் யார்? நபித்தோழர்கள் முதல் அவர்களின் வழி வந்த எந்த இமாம்மும் அதனை அங்கீகரிக்கவில்லையே! மவ்லிதைப் பாடுவோர் அறிவால் விளக்கத்தால் முன்னோர்களான நபித்தோழர்கள், இமாம்களை விடவும்சிறந்தவர்களா?

இதனால்தான் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்:

وما لم يكن يومئذ دينا فلا يكون اليوم دينا ( الاعتصام للشاطبي )

அந்தக்காலத்தில் மார்க்கமாக இல்லாமல் இருந்தது இந்தக்காலத்திலும் மார்க்கமாக இருக்க முடியாது. எனக் கூறினார்கள். (அல் இஃதிஸாம்).

அன்பான அழைப்பு:

மவ்லிதை ஓதி, மீலாத் விழா நடத்தும் சகோதரர்களே! முதலாவதாக உங்கள் நடைமுறையால் நபி (ஸல்) அவர்களை நேசியுங்கள். எப்படித் தொழுதார்கள்? எவ்வாறு திருமணம் செய்தார்கள்? அல்லது எப்படி திருமணம் செய்யச் சொன்னார்கள்? எவ்வாறு ஆடை அணியச் சொன்னார்கள்? எவ்வாறு இல்லற வாழ்வில் ஈடுபடும்படி கூறினார்கள்.? குழந்தைகளை எவ்வாறு வளர்த்தார்கள்? அண்டை அயலவர்கள், ஏழைகள் விருந்தினர்கள், எதிரிகள், குழந்தைகள், மனைவியர் ஆகியோருடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? தாடி எவ்வாறு வளர்த்தார்கள்? மீசை எவ்வாறு வைத்திருந்தார்கள்? எவ்வாறு உறங்கினார்கள்? உணவருந்தினார்கள்? நீர் பருகினார்கள்? காலை, மாலையில் என்ன ஃதிக்ர்" பிரார்த்தனை ஓதினார்கள். என்பன போன்ற நூற்றுக்கணக்கான நபியின் உண்ணத நடைமுறையை உங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடியுங்கள். அப்படி செய்தால், உங்கள் வாழ்வில் நடக்கும் பெரிய மீலாத் விழா வேறொன்றுமில்லை.

 மீலாத் விழா பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்