"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

3/15/2014

நாங்கள் கப்ருகளை வணங்கவில்லையே

'நாங்கள் கப்ருகளை வணங்கவில்லையே! எங்களை ஏன் ''கப்று வணங்கி'' என்று எங்களை திட்டுகிறீர்கள் என்று சிலர் கேட்கலாம்...!!! '''


ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்தவர்கள் நல்லடியார்களின் வடிவத்தில் இருந்த உருவச்சிலைகளை வலம் வந்து, அந்த சிலைகளுக்கு மரியாதை செலுத்தி அதன் மூலம் அந்த நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்தனர். அதனால் அவர்களை சிலை வணங்கிகள் என்கிறோம்.
மாற்று மதத்தவர்கள் தங்களின் கடவுள் உருவத்தில் இருப்பதாக அவர்கள் கருதுகின்ற அந்த சிலைகளுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து, அந்த சிலைகளுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் அந்த தெய்வங்களை வணங்குவதால் அவர்களையும் சிலை வணங்கிகள் என்கிறோம்.
ஆனால் இறைநேசர்கள் அடக்கமாகியிருக்கும் கப்ருகளை வலம் வந்து, அதற்கு பூசி, மெலுகி, போர்வை போர்த்தி, நெய் விளக்கு ஏற்றி, சந்தனம் பூசி, பத்தி கொழுத்தி, பூமாலை அணிவித்து அந்த சிலைகளை வணங்குவோர் என்னென்ன காரியங்களை அந்த சிலைகளுக்கு செய்கிறார்களோ அவையனைத்தையும் அந்த நல்லடியாரின் கப்றுகளுக்கு செய்பவரை கப்று வணங்கி என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது....?
{அவர்கள் நிறுத்தி வைத்து செய்வதை நீங்கள் படுக்கப்போட்டு செய்கிறீர்கள் }
அல்லாஹ்தான் கடவுள் என்று நம்பியிருந்த மக்கா காபிர்களை பாருங்கள்
அல்லாஹ்விடம் நேரடியாக கேட்பதை விட்டு விட்டு அந்த நல்லடியார்களின் சிலைகளிடம் இவர்கள் கேட்ட காரணத்தால் அவர்களை அல்லாஹ் “முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்)” என்றான். அதே செயல்களையே செய்யும் தற்காலத்தவர்களை என்ன சொல்வது?
"
இன்றைய காலத்தில் கப்ருகளை தரிசிப்பதாக சொல்லிக் கொண்டு நபி வழியில் இல்லாத பல (நூதனங்களை) இணைவைப்புகளை செய்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

அவர்கள் செய்து வரும் இச்செயல்கள் அனைத்தும் அன்றைய காபிர்கள் செய்து வந்த சிலை வணக்கத்துடன் ஒத்துப்போகிறன என்பதை அவர்கள் கவணிக்க தவறியது மட்டுமல்லாமல் தங்களின் செயல்களை சரிகாணவும் முயற்சிக்கின்றனர்.

ஆனாலும் அவர்களுக்கு தங்களின் செயற்பாடுகளை நியாயப்டுத்திக் கொள்ள ஆதாரமும் எதுவும் கிடையாது என்பதை திருமறை இவ்வாறு சுட்டிக் காட்டுகிறது.
'' மேலும், எவன் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கி றானோ அவனுக்கு அதற்காக எவ்வித ஆதாரமும் இல்லை அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடம்தான் இருக்கிறது நிச்சயமாக காஃபிர்கள் வெற்றி அடைய மாட்டார்கள்.23:117

ஆகவே இச்செயலை செய்பவர்கள் தங்களின் செயல்களை நியாயப்படுத்திக் கொள்ள அவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது தெளிவான விடயமாகும்.

அவர்கள் தங்களுடைய வணக்கங்களை முழுமையாக அல்லாஹ் அல்லாதவர்களுக்காக செய்து விட்டு அந்த இணைவைப்பை இணைவைப்பு என்று சொல்லமாட்டார்கள் ஏனெனில் இணை வைப்பானது ஹராம் என்பது அவர்களுக்குத் தெரியும், அல்லாஹ் அல்லாதவற்றை இலாஹ் கடவுள் என்று சொல்லமாட்டார்கள் ஏனெனில் அல்லாஹ் மாத்திரமே கடவுள் என்பது அவர்களுக்கு தெரியும் அவர்களுடைய செயல்களை (இபாதத்) வணக்கம் என்று சொல்லமாட்டார்கள் காரணம் வணக்கம் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரமே என்பதும் அவர்களுக்கு தெரியும்.

அவ்வாறு சொல்லிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் இணை வைப்பாளர்களே அல்லாஹ் அல்லாதவற்றையே வணங்குகிறார்கள், அல்லாஹ்வோடு வேறு கடவுள்களை ஆக்கிக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.
ஆக (கப்ர் வணங்கிகளான) நீங்கள் (அந்த விடயங்களின்) கருத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு அதன் வார்தைகளை விட்டு விட்டீர்கள் முன்னைய இணை வைப்பாளர்களுக்கும் உங்களுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை பின்வருமாறு விளங்கிக் கொள்ளலாம்.

அன்றைய இணை வைப்பாளர்கள் உங்களைப் போல் அல்லாமல் அவர்கள் வணங்கி வந்தவைகளை தங்களின் கடவுள் என்றார்கள், தங்களின் செயற்பாடுகளை (இபாதத்) வணக்கம் என்றும் தெளிவாக சொன்னார்கள்.
நீங்களோ: அல்லாஹ் அல்லாது அழைப்பவர்களை இறை நேசர்கள் மற்றும் தலைவர்கள் மகான்கள் என்றும் உங்களின் வணக்கங்களை வசீலா என்றும் சொல்கிறீர்கள்.

இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டுமே ஒன்றுதான். கருத்தில் ஒன்றுபட்டு சொற்களில் வேறுபட்டிருக்கின்றீர்கள்.

தங்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்த நீங்கள் என்னதான் சொல்லிக் கொண்டாலும் பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியத்;தில் உள்ளீர்கள்.

1- அவர்கள் தங்களின் தெய்வங்களுக்காக அறுத்துப்பழியிடவில் லையா ? அது போலவே
நீங்களும் உங்களின் வலிமார்களுக்காக அறுத்துப்பழியிடுகிறீர்கள்.

2- அவர்கள் அந்த தெய்வங்களை 'யா உஸ்ஸா'' '' யா ஹுபல்'' '' யா அல் லாத்'' என்ற பெயர் கொண்டு அழைக்கவில்லையா ? அது போல
நீங்களும் உங்களின் வலிமார்களை 'யா தாஜ்'' ''யா ஜெயிலானி'' என்று அழைக்கிறீர்கள்

3- இவைகள் வணக்கமாகவும் துஆவாகவும் இல்லையா?
வணக்கமும் துஆக்களும் இறைவனுக்கு மாத்திரம் உள்ளதல்லவா அதனை அவனையன்றி உள்ளவர்களுக்கு செலுத்துவது ஷிர்க் அல்லவா ?
நிச்சயமாக அவ்வாறுதான் அவை ஷிர்க்கான விடயங்களாகவே உள்ளன, அவை இரண்டிற்க்கும் எவ்வித வேறுபாகளும் இல்லை

4- அவ்வாறிருக்க ஒன்றை ஷிர்க் என்றும் மற்றுமொன்றை வணக்கம் (ஷிர்க் இல்லை) என்றும் சொல்வதன் காரணம் என்ன?

சிந்திப்பீர்களாக அல்லாஹ் உங்களுக்கும் அனைவருக்கும் மார்க்கத்தில் நல்ல தெளிவைத்தருவானாக!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்