"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

3/07/2014

தாபிஈன்களில் சிறந்தவர் உவைஸ் என்ற மனிதராகும்

அவுலியாக்களின் கபுருகளை வணங்க கூடாது .
இறந்து போனவர்களிடம் உதவிதேடக்கூடாது என்று நாம் கூறும்போது .........
/// கண்மணி நாயகம் (ஸல்)  அன்னவர்கள் கூறினார்கள்:
தாபிஈன்களில் சிறந்தவர் உவைஸ் என்ற மனிதராகும். அவர்களிடம் சென்று உங்களுக்காக பிழை பொறுக்கத் தேடிக்கொள்ளுங்கள்.  முஸ்லிம், மிஷ்காத் 582
/// என்று இந்த ஹதீசை காட்டுவார்கள்,   உண்மையில் இவர்கள் கபுரை வணங்குவதற்கு ஆதாரமாக காட்டுவது ஒரு நீண்ட ஹதீஸின் சிறு பகுதியேயாகும், அந்த நீண்ட ஹதீஸில்  (இறந்து போன) அவுலியாக்களின் கபுர்களை அலங்கரிக்கவோ கட்டவோ அங்கே சென்று தமது தேவைகளை கேட்கவோ பிரார்த்திட்கவோ எந்த ஆதாரமும் இல்லை மாறாக உயிரோடு இருப்பவர்களிடத்தில் எமக்காக அல்லாஹ்விடத்தில் துவா செய்யுங்கள் என்று கூறலாம் அப்படித்தான் சஹாபாக்களும் செய்து இருக்கிறார்கள் 
 இனி அந்த ஹதீஸை முழுமையாக பார்ப்போம்
 
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் உதவிப் படைகள் வந்தால், அவர்களிடம் "உங்களிடையே உவைஸ் பின் ஆமிர் (எனப்படும் மனிதர் ஒருவர்) இருக்கிறாரா?'' என்று கேட்பார்கள். இந்நிலையில் (ஒரு முறை) உவைஸ் (ரஹ்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் வந்து, "நீர்தான் உவைஸ் பின் ஆமிரா?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்' என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "முராத் (மூலக்) கோத்திரத்தையும் பிறகு "கரன்' (கிளைக்) குலத்தையும் சேர்ந்தவரா (நீங்கள்)?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்' என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "உங்களுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, அதில் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றது (உமது பிரார்த்தனை மூலம்) குணமாகிவிட்டதா?'' என்று கேட்டார்கள். அதற்கும் உவைஸ் அவர்கள் "ஆம்' என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "உமக்குத் தாயார் ஒருவர் இருக்கிறாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்' என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யமன்வாசிகளின் உதவிப் படையினருடன் "முராத்' (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் "கரன்' (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, பின்னர் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றவை குணமாயிருக்கும். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின் மீது சத்திய மிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றிவைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்க வாய்ப்புக் கிட்டினால் அவரைப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். ஆகவே, எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள். அவ்வாறே உவைஸ் (ரஹ்) அவர்களும் உமருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித் தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், "கூஃபாவிற்கு' என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "கூஃபாவின் ஆளுநரிடம் உமக்காகப் (பரிந்துரைத்து) கடிதம் எழுதட்டுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், "சாதாரண மக்களில் ஒருவனாக நான் இருப்பதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும்'' என்று கூறிவிட்டார்கள். அடுத்த ஆண்டில் "கரன்' குலத்தைச் சேர்ந்த பிரமுகர்களில் ஒருவர் ஹஜ்ஜுக்காகச் சென்றிருந்த போது உமர் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தார். அப்போது அவரிடம் உமர் (ரலி) அவர்கள் உவைஸ் (ரஹ்) அவர்களைப் பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர், "மிக எளிய குடிலில் (நெருக்கடியான வாழ்விலும்) மிகக் குறைவான வாழ்க்கைச் சாதனங்களிலுமே அவரை விட்டுவந்துள்ளேன்'' என்று கூறினார். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யமன் வாசிகளின் உதவிப் படையினருடன் "முராத்' (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் "கரன்' (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு (மேனியில்) வெண்குஷ்டம் ஏற் பட்டுப் பின்னர் ஒரு திர்ஹம் அளவு இடத்தைத் தவிர மற்றவை குணமாகியிருக்கும். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்தால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவ மன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்கும் வாய்ப்புக் கிட்டினால் அவரிடம் பிரார்த்திக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள்'' என்றார்கள். ஆகவே, அப்பிரமுகர் உவைஸ் (ரஹ்) அவர்களிடம் சென்று, "எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தியுங்கள்'' என்று கூறினார். அப்போது உவைஸ் அவர்கள், "நீர்தான் இப்போது புனிதப் பயணம் ஒன்றை முடித்து வந்துள்ளீர். ஆகவே, நீர்தான் எனக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டும்'' என்றார்கள். "நீர் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தீரா?'' என்று கேட்டார்கள். அவர் "ஆம்' என்றார். பிறகு அவருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அப்போதுதான் மக்களும் உவைஸ் அவர்களை அறிந்துகொண்டனர். பிறகு உவைஸ் அவர்கள் தமது திசையில் நடக்கலானார்கள். தொடர்ந்து (உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) நான் உவைஸ் அவர்களுக்கு (நல்ல) போர்வையொன்றை அணியக் கொடுத்தேன். அவரை யாரேனும் ஒருவர் காணும்போதெல் லாம் "உவைஸ் அவர்களுக்கு இந்தப் போர்வை எப்படிக் கிடைத்தது?'' என்று கேட்பார்கள்.
முஸ்லிம் 4971   Book : 44   உசைர் பின் ஜாபிர் (ரலி

கபுர் வணங்கிகள்  நினைப்பதுபோல  யாரும் அவருக்கு கபுர்கட்டி பச்சை பிடவை போர்த்தி அங்கே பிரார்த்திக்கவில்லை மாறாக   எனக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள் என்று உயிரோடுள்ள அவரிடம் கேட்டிருக்கிறார்கள் ,
நல்லோர்களுக்கு தர்கா கட்டலாம் என்றிருந்தால் உவைஸ் (ரஹ் )மரணித்ததன் பின்னால் இவர்களுக்கு பென்னாம்பெரிய தர்காவை கட்டியிருப்பார்கள்.   ஆனால் அக்காலத்தில் தர்கா கட்டியதாகவோ அங்கே போய் தமது தேவைகளை கேட்டார்களோ என்று எந்த தகவலும் நாமறிந்தவரை கிடைக்கவில்லை

 இங்கே இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும்  உவைஸ் அல் கர்ணி ரஹ் அவர்கள் 100% நல்லடியார் என்று தெரிந்தும் சஹாபாக்களோ தாபிஈன்களோ  அவரின் கைகால்களை முத்தமிடவில்லை காலில் விழவில்லை  அவரின் எச்சிலை மேனியில் பூசிக்கொள்ளவில்லை  ஆனால் இன்று சிலர் ஷேக் என்று சொல்லக்கூடிய வர்களின் காலில் விழுவதும் அவர்களை முத்தமிடுவதையும் வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர்