"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

3/24/2015

கொடிகளை வணங்கும் பரலேவிகள்

சந்தனம், கொடிக்களை, நெருப்பை வணங்கும் பரேலவிகள்

பரேலவி மதத்தினர் தங்களது வணக்கத்தலங்களாகிய தர்ஹாக்களில் அவர்கள் கடவுளாக வணங்கும் கப்ருகளுக்கு சந்தனத்தைப் பூசுகின்றனர். முஸ்லிம் அல்லாதவர்கள் கற்சிலைகளுக்குப் பாலை ஊற்றி அபிஷேகம் செய்கின்றனர். அது போன்று கற்சிலையை விடக் கீழ் நிலையில் உள்ள கப்ருகளுக்கு சந்தன அபிஷேகம் செய்தல், சந்தனம் பூசுதல் என்பது இணை கற்பிக்கின்ற காரியம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

அது போன்ற கப்ருகளில் பூசப்பட்ட சந்தனம் தங்களுக்கு பரக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அதனைக் கழுத்துகளில் பூசிக் கொள்கின்றனர். இறைவனல்லாத ஒரு பொருள் இறைவனைப் போன்று நமக்கு நன்மை ஏற்படுத்தும் என நம்பிக்கை வைப்பதால் இதுவும் இணை கற்பிக்கின்ற காரியமே!
அது போன்று தர்ஹாக்களில் விளக்குகளை ஏற்றி வைத்து   அந்த நெருப்பைத் தொட்டு முத்தமிடுகின்றனர். அதற்கு விளக்கு ராத்திரி என்றும் பெயர் வைத்துள்ளனர். இவ்வாறு செய்வதால் துன்பங்கள் நீங்கும் என நம்பிக்கை வைத்துள்ளனர். இதே நம்பிக்கையில் தான் கொடிக்களைகளையும் தொட்டு முத்தமிடுகின்றனர். நமக்கு துன்பத்தையும், இன்பத்தையும் ஏற்படுத்தக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான்.

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 10:107

சந்தனமும், நெருப்பும், கொடிக் களைகளும் இறைவனைப் போன்று இன்ப துன்பங்களைத் தரக் கூடியவை என பரேலவி மதத்தினர் நம்பிக்கை வைத்திருப்பதால் கொடி ஊர்வலமும், தர்ஹாக்களில் விளக்கேற்றுவதும் இணை கற்பிக்கின்ற காரியங்கள் தாம் என்பதில் சந்தேகமில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------------------


கொடியை  வணங்கும் ஒருவரின் கேள்வி
:
//// கொடியேற்றுவது வழிகேடு என்று கூரிய வஹாபிகளின் நிழை என்ன?
Sltj கொடியை பகிரங்கமாக ஏற்றியுள்ளார்கள் அதே போல் TNTJ கொடியை தெருவில் ஊர்வலத்தில் கைகளிள் கொடுக்கிறார்கள்
எல்லா கொடியையும் ஏற்றிவிட்டு கந்தூரியில் நாங்கள் கொடி ஏற்றினால் பித்அத்து ஷிர்கு முர்கு வழிகேடு என்று சொல்வது சரியா?////

கபுறு தர்கா வணங்கிகள் ஏற்றும் கொடியிட்கும் TNTJ ஏற்றும் கொடியிட்கும் வித்தியாசம் உள்ளது கேளுங்கள்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்