"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

3/17/2015

யானையைக் கடவுளாக்கிய கப்ரு வணங்கிகள்

யானையைக் கடவுளாக்கிய கப்ரு வணங்கிகள்

கப்ரு வணக்கத்தை கப்ரு ஸியாரத் என்று பெயர் மாற்றம் செய்யும் பரேலவிகள் தங்களுடைய வணக்கத் தலங்களாகிய தர்ஹாக்களில் யானையைக் கட்டி வைத்து தீனி போடுகின்றனர். ஆண்களும் பெண்களும் கலர்ஃபுல்லாகக் காட்சி தந்து ஒருவரை ஒருவர் பார்த்து ரசிப்பதற்காவும், சினிமாப் பாட்டுப் பாடி பக்தர்களைக் குஷிப்படுத்தவும், கோயில்களில் சிலைகளுக்காக பாடப்படும் பஜனைகளை தங்களது கோயில்களாகிய தர்ஹாக்களில் பாடுவதற்காவும் இன்னும்  மார்க்கத்திற்கு புறம்பான பல அனாச்சாரங்களை அரங்கேற்றுவதற்காகவும் கந்தூரி விழா என்று ஏற்பாடு செய்வர். 

இதற்குக் கூட்டம் சேர்ப்பதற்காக யானையைத் தெருத் தெருவாக அழைத்து வருவர். இந்த யானையைப் பார்க்கும் போது தான் மக்களுக்கு அவுலியாவின் ஞாபகம் வந்து இவர்களின் வணக்கத் தலங்களாகிய தர்ஹாவில் நடக்கும் லீலைகளில் கலந்து கொள்வார்கள் என்பதற்காவே இவ்வாறு செய்கிறோம் என பரேலவிகள் கூறுகின்றனர். 

நபியவர்கள் இவ்வாறு தான் கப்ரு ஸியாரத் செய்தார்களா? என்றெல்லாம் இவர்களிடம் கேள்வி கேட்கக் கூடாது. ஏனென்றால் இவர்கள் பரேலவி மதத்தினர்.

இந்தப் பரேலவி மதத்தினர், யானை தனது தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி ஒரு பக்தனின் மீது சிந்தினால் அவன் பாக்கியம் பெற்றவனாகி விடுவான் என நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த யானை தண்ணீரை உறிஞ்சி அடிப்பதின் மூலமே தர்ஹாக்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் வருமானம் வருகிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மேலும் இந்தப் பரேலவி மதத்தினர் யானை ஊர்வலம் வரும் போது அதன் முதுகிலிருக்கும் கொடிக்களையின் பூக்களைப் பெறுவதையும், தங்கள் குழந்தைகளை அதன் முதுகில் ஏற்றி இறக்குவதையும் பெரும் பாக்கியமாகவே கருதுகின்றனர்.இவர்கள் யானையைக் கடவுளாகக் கருவதுவதாலேயே இது போன்ற வணக்கங்களைத் தங்களுடைய யானைக் கடவுளுக்குச் செய்கின்றனர் என்பதை உண்மையான முஸ்லிம்கள் நன்றாக விளங்கியே வைத்துள்ளனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்