"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

6/03/2015

உமர் (ரலி) 20 ரக்அத் தொழுதார்களா?

நபித் தோழர்கள் 20 ரக்அத் தொழுதது நிரூபணமானால் கூட நபிவழி அதற்கு
மாற்றமாக இருந்தால் நபிவழியைத் தான் ஏற்க வேண்டும்.

ஆனால் உண்மை என்னவென்றால், உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத் களை உருவாக்கித் தந்தார்கள் என்ற இவர்களது வாதம் முற்றிலும் தவறானதாகும். உமர் (ரலி) அவர்கள் தொடர்பான செய்திகளை முழுமையான கவனத்துடன் ஆய்வு செய்யத் தவறியதால் இத்தகைய முடிவுக்குச் சிலர் வந்து விட்டனர். எனவே உமர் (ரலி) அவர்கள் தொடர்பான 20 ரக்அத் கள்  பற்றிய அறிவிப்புக்களை ஆய்வு செய்வோம்.

அறிவிப்பு 1

7682  حدثنا وكيع عن مالك بن أنس عن يحيى بن سعيد أن عمر بن الخطاب أمر رجلا يصلي بهم عشرين ركعة - مصنف ابن أبي شيبة - (ج 2 / ص 163)

மக்களுக்கு இருபது ரக்அத் தொழுகை நடத்துமாறு உமர் (ரலி) அவர்கள் ஒரு மனிதருக்குக் கட்டளையிட்டார்கள்.   நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா, பாகம்:2, பக்கம் :163

உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கட்டளையிட்டதாக அறிவிப்பவர் யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரியாவார். இவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல!

உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு மரணித்தார்கள். யஹ்யா பின் ஸயீத் அன்ஸாரி அவர்கள் ஹிஜ்ரி 139 அல்லது 144வது ஆண்டு மரணித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் மரணித்து 120 வருடங்களுக்குப் பின்னால் மரணித்தவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறந்திருக்க முடியாது.

உமர் (ரலி) 20 ரக்அத் தொழுமாறு கட்டளையிட்டதை அவரது காலத்தில் வாழ்ந்தவர் தான் அறிய முடியும். எனவே இந்தச் செய்தி ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் உமர் (ரலி) அவர்கள் இதற்கு மாற்றமாகக் கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.

 قال الشافعي : أخبرنا مالك ، عن محمد بن يوسف ، عن السائب بن يزيد قال : " أمر عمر بن الخطاب أبي بن كعب ، وتميما الداري ، أن يقوما بالناس بإحدى عشرة ركعة قال : وكان القارئ يقرأ بالمئين حتى كنا نعتمد على العصي من طول القيام ، وما كنا ننصرف إلا في فروع الفجر " - معرفة السنن والآثار للبيهقي  - كتاب الصلاة

நூல்: மஃரிஃபதுஸ் ஸுனன் வல் ஆஸார் - பைஹகீ

أنبأ أبو أحمد المهرجاني ، أنبأ أبو بكر بن جعفر المزكي ، ثنا محمد بن إبراهيم العبدي ، ثنا ابن بكير ، ثنا مالك ، عن محمد بن يوسف ابن أخت السائب ، عن السائب بن يزيد ، أنه قال : " أمر عمر بن الخطاب رضي الله عنه أبي بن كعب وتميما الداري أن يقوما للناس بإحدى عشرة ركعة ، وكان القارئ يقرأ بالمئين حتى كنا نعتمد على العصي من طول القيام ، وما كنا ننصرف إلا في فروع الفجر " هكذا في هذه الرواية *- السنن الكبرى للبيهقي  - كتاب الصلاة

நூல்: பைஹகீ

وحدثني عن مالك ، عن محمد بن يوسف ، عن السائب بن يزيد ، أنه قال : أمر عمر بن الخطاب أبي بن كعب وتميما الداري أن يقوما للناس بإحدى عشرة ركعة قال : وقد " كان القارئ يقرأ بالمئين ، حتى كنا نعتمد على العصي من طول القيام ، وما كنا ننصرف إلا في فروع الفجر " - موطأ مالك - (ج 2 / ص 159)

நூல்: முஅத்தா

 أخبرنا قتيبة بن سعيد ، عن مالك ، عن محمد بن يوسف ، عن السائب بن يزيد قال : أمر عمر بن الخطاب أبي بن كعب وتميما الداري أن " يقوما ، للناس بإحدى عشرة ركعة " *- السنن الكبرى للنسائي

நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா - நஸயீ

மக்களுக்குப் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ர-லி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

நூல்கள்: அஸ்ஸுனனுல் குப்ரா - நஸயீ, முஅத்தா, மஃரிஃபதுஸ் ஸுனன் வல் ஆஸார், பைஹகீ

உமர் (ர-லி) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டது ஆதாரப்பூர்வமானதாக இருப்பதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்பவும் அமைந்துள்ளது.

அறிவிப்பு 2

உமர் (ரலி) அவர்களின் காலத்தில் நாங்கள் இருபது ரக்அத்கள் தொழுது வந்தோம் என்று ஸாயிப் பின் யஸீத் கூறுகிறார்.  நூல்: பைஹகீ ஸகீர்

இந்த அறிவிப்பில் அபூ உஸ்மான் அல் பஸரீ என்பவர் இடம் பெற்றுள்ளா. யாரென்று அறியப்படாதவர் என்ற நிலையில் இவர் இருக்கிறார். இதர். இவரது இயற்பெயர் அம்ரு பின் அப்துல்லாஹ். இவரது நம்பகத் தன்மையைக் குறித்து ஹதீஸ் கலை வல்லுனர்கள் யாரும் உறுதிப்படுத்தவில்லைன் காரணமாக இச்செய்தி பலவீனமடைகிறது.

மேலும் இந்தச் செய்தியில் உமர் (ரலி) அவர்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களின் காலத்தில் மக்கள் இவ்வாறு செய்ததாக இந்த அறிவிப்பு கூறுகிறது ஆனால் மேலே நாம் எடுத்துக் காட்டிய அறிவிப்பில் உமர் (ரலி) நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளனர்.

ஒருவர் எதைக் கட்டளையிடுகிறாரோ அதில் தான் அவருக்குச் சம்பந்தம் இருக்கும். அவரது காலத்தில் நடந்தவைகளில் அவருக்குச் சம்பந்தம் இருப்பது சந்தேகத்திற்கிடமானது.

மேலும் இதே ஸாயிப் பின் யஸீத் அவர்கள் உமர் (ரலி) அவர்கள் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டதாக அறிவிக்கிறார்.

وحدثني عن مالك ، عن محمد بن يوسف ، عن السائب بن يزيد ، أنه قال : أمر عمر بن الخطاب أبي بن كعب وتميما الداري أن يقوما للناس بإحدى عشرة ركعة قال : وقد " كان القارئ يقرأ بالمئين ، حتى كنا نعتمد على العصي من طول القيام ، وما كنا ننصرف إلا في فروع الفجر " *- موطأ مالك - (ج 2 / ص 159)

மக்களுக்குப் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.       நூல்: முஅத்தா

ரக்அத்களின் எண்ணிக்கை குறித்து ஸாயிப் பின் யஸீத் முரண்பட்டு அறிவித்துள்ளதால் 20 ரக்அத் தொழுதோம் என்ற அறிவிப்பு மேலும் பலவீனப்படுகிறது.

அறிவிப்பு 3


عن يزيد بن رومان قال : ( كَانَ النَّاسُ يَقُومُونَ فِي زَمَانِ عُمَرَ بنِ الخَطَّابِ فِي رَمَضَانَ بِثَلاثٍ وَعِشرِينَ رَكعةً )
رواه عنه مالك في "الموطأ" (1/115) ، وقال النووي في "المجموع" (4/33) : " مرسل ، فإن يزيد بن رومان لم يدرك عمر " انتهى .

உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ரமளான் மாதத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர் என்று யஸீத் பின் ரூமான் அறிவிக்கிறார்.
                       நூல்: பைஹகீ, முஅத்தா

இதை அறிவிக்கும் யஸீத் பின் ரூமான் உமர் (ரலி) காலத்தவர் அல்ல! உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23ல் மரணித்தார்கள். யஸீத் பின் ரூமான் ஹிஜ்ரி 130ல் மரணித்தார்கள். அதாவது உமர் (ரலி) அவர்கள் மரணித்து 107 ஆண்டுகளுக்குப் பின் இவர் மரணித்துள்ளார். இவர் நூறு வயதில் மரணித்திருந்தால் கூட உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறந்திருக்க மாட்டார்.

உமர் (லி) அவர்கள் காலத்தில் பிறக்காத யஸீத் பின் ரூமான் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் நடந்ததை அறிவிப்பதால் இதை ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஆதாரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்காத ஒருவர் அவர்கள் காலத்தில் நடந்த செய்தியை எவ்வாறு கூற முடியும்? எனவே இந்த செய்தியும் பலவீனமானதாகிறது,


மேலும் இதற்கு மாற்றமாக உமர் (ரலி) அவர்கள் 8+3 ரக்அத்கள் தொழுமாறு கட்டளûயிட்டாத ஆதாரப்பூர்வமான செய்தி இமாம் மாலிக் அவர்களின் அல்முஅத்தா என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

وحدثني عن مالك عن محمد بن يوسف عن السائب بن يزيد أنه قال ثم أمر عمر بن الخطاب أبي بن كعب وتميما الداري أن يقوما للناس بإحدى عشرة ركعة قال وقد كان القارئ يقرأ بالمئين حتى كنا نعتمد على العصي من طول القيام وما كنا ننصرف إلا في فروع الفجر 

உபை பின் கஅப் (ரலி), தமீமுத்தாரீ (ரலி) ஆகிய இருவரையும் (8+3) 11 ரக்அத்கள் மக்களுக்கு தொழுவிக்குமாறு உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.   அறிவிப்பவர் : ஸாயிப் பின் யஸீத், நூல் : முஅத்தா (251)

உமர் (ரலி) காலத்தில் மக்கள் தொழுதார்கள் என்பதிலும் உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று செய்தியில் உமர் (ரலி) அவர்கள் எதில் தொடர்பு உடையவர்களாக இருக்கிறார்கள்? மக்கள் செய்தார்கள் என்பதில் உமர் (ரலி) அவர்களுக்கு எங்கே தொடர்பு உள்ளது? உமர் (ரலி) அவர்கள் 8+3 கட்டளையிட்டார்கள் என்பதில் நேரடியாக அவர்களின் தொடர்பு உள்ளது என்பதோடு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கும் ஒத்துப்போகிறது. எனவே இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் என்பதற்கு ஆதாரப்பூர்மான எந்த செய்தியும் இல்லை
உமர் (ரலி) அவர்களின் வழிமுறையைத் தான் ஏற்போம் என்று கூறுவதில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதினொரு ரக்அத் தான் தொழ வேண்டும்.



20 ரக்ஆத் என்பதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் இன்னொரு ஆதாரத்தையும் பார்ப்போம் :

இரவுத் தொழுகை அதாவது மக்களால் தராவீஹ் என்று அழைக்கப்படும் தொழுகை 20 ரக்அத்கள் என்று சிலர் வாதிடுகின்றனர்.அதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக காட்டுகின்றனர்.

1.நபி (ஸல்)அவர்கள் தொழுதாக வரும் ஹதீஸ்

أنبأ أبو سعيد الماليني ثنا أبو أحمد بن عدي الحافظ ثنا عبد الله بن محمد بن عبد العزيز ثنا منصور بن أبي مزاحم ثنا أبو شيبه عن
الحكم عن مقسم عن بن عباس قال ثم كان النبي صلى الله عليه وسلم يصلي في شهر رمضان جماعة بعشرين ركعة والوتر
 
تفرد به أبو شيبه إبراهيم بن عثمان العبسي الكوفي وهو ضعيف 


நபி (ஸல்) அவர்கள் இரமலான் மாதத்தில் ஜமாத்துடன் அல்லாமல் இருபது ரக்அத்களும் வித்ரும் தொழுதார்கள்.  அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் (ரலி), (நூல் : பைஹகீ (4391)  அஸ்ஸுனனுல் குப்ரா-4799, தப்ரானி-அல்முஃஜமுல் கபீர்-10ஃ86, தப்ரானி-அல்முஃஜமுல் அவ்ஸத்-2ஃ309, 12ஃ176, முஸன்னப் இப்னு அபீஷைபா-2ஃ164, முஸ்னத் அப்து பின் ஹமீத்-1ஃ218)

இந்த செய்தி மட்டும்தான் தராவீஹ் 20 ரக்அத்கள் என்பதற்கு நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புபடுத்தி வரும் ஹதீஸாகும். ஆனால் இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல! என்று இதை பதிவு செய்த இமாம் பைஹிகீ அவர்களே பின்வருமாறு தௌவிவுபடுத்தியுள்ளார்கள்.
تفرد به أبو شيبه إبراهيم بن عثمان العبسي الكوفي وهو ضعيف 
இந்த செய்தியில் இடம் பெறும் அபூஷைபா என்பவர் பலவீனமானவர் என்று அந்த ஹதீஸின் அடிக்குறிப்பிலேயே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

 அபூஷைபா எனப்படும் உஸ்மானின் மகன் இப்றாஹீம் என்பவரைப்பற்றி அறிஞர்கள் செய்த விமர்சனத்தைப் பற்றி, ஷாபி மத்ஹபின் மிகப்பிரபல்ய மான இமாமான அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

‘இமாம் அஹ்மத் பின் ஹன்பல், யஹ்யா பின் மயீன், அபூதாவுத் போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் நம்பகமானவர் கிடையாது எனவும் இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். இவரைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது என்று இமாம் புஹாரி கூறியுள்ளார். இவர் நிராகரிக்கப்படும் செய்திகளை அறிவிப்பவர் என்று திர்மிதி கூறுகிறார்.

இவர் பொய்யர் என சந்தேகிக்கப்பட்டுள்ளதால் இவரை விட்டுவிட வேண்டுமென நஸாயி, தவ்லாபி போன்றோர் கூறுகின்றனர். இவர் பலவீனமானவர். யாரும் இவர் குறித்து பேசுவதில்லை. இவரது செய்திகளை விட்டுவிட்டனர் என அபூஹாத்தம் கூறியுள்ளார். இவர் மதிக்கத்தக்கவரல்ல என ஜவ்ஸஜானி கூறியுள்ளார்.

இவரது செய்திகளை பதிவு செய்யக் கூடாதெனவும், இவர் ஹகம் என்பவர் வழியாக நிராகரிக்கத்தக்க பல்வேறு செய்திகளை அறிவித்துள்ளார் எனவும் ஸாலிஹ் ஜஸ்ரா கூறியுள்ளார். இவர் பலவீனமானவர் என அபூஅலீ நைஸாபூரி கூறியுள்ளார். இவர் ஷுஹ்பா அவர்களின் பலவீனமான ஆசிரியர்களில் ஒருவர் என அல்அஹ்வஸ் கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்: பாகம்-01, பக்கம்-125) எனவே, இது ஆதாரபூர்மற்ற செய்தியாகும்.

மேலும் அறிந்து கொள்ள ... இங்கே கிளிக் செய்யவும் 

மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரமில் 23 ரக்அத்கள் தொழுவிக்கப்படுகின்றதே?


நாம் மார்க்க விடயத்தில் முன்மாதிரியாக கொள்ள வேண்டியது அருள்மறைக் குர்ஆனையும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான பொன்மொழிகளையும் மாத்திரமே. மாறாக, அழ்ழாஹ்வோ, அவனது தூதர் (ஸல்) அவர்களோ மக்காவை முன்மாதிரியாகக் கொள்ளுமாறு கட்டளையிட்டது கிடையாது. இதனையே அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

‘உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து  (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!'(அல்குர்ஆன் 07:03) இதில் ஆச்சரியம் என்னவென்றால், மக்காவில் கப்ரு வணக்கம், மௌலூத், ஸஹீஹுல் புஹாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் பாராயண நிகழ்வு, கத்தம், பாத்திஹா, தகடு, தாயத்து, தரீக்கா போன்ற வழிகேடுகள் கிடையாது.

மேலும், தப்லீக் ஜமாஅத் பகிரங்கமாக செயற்பட அனுமதி கூட கிடையாது.  இவற்றிலெல்லாம் மக்காவை முன்மாதிரியாகக் கொள்ளாத இவர்கள் இரவுத் தொழுகை விடயத்தில் மாத்திரம் மக்காவை முன்னுதாரணமாகக் காட்டுவது இவர்களின் இரட்டை நிலையை தெளிவாகப் படம்பிடித்துக்காட்டுகின்றது.



நபிகள் நாயகம் (ஸல்) காட்டித் தந்த வழியில் இரவுத் தொழுகை உள்ளிட்ட அனைத்து வணக்கங்களையும் நிறைவேற்றி மறுமையில் வெற்றி பெற இறைவனை இறைஞ்சுகிறாம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்