"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

4/19/2013

கடைசி காலத்தில் ஒரு கூட்டம் உண்டாகும்


''ஹதீஸின் அடிப்படையில் 'துல் குவைஸிரா' வின்  வாரிசுகள் யார் என்று விரிவாகபார்ப்போம்
 முதலில் அந்த  ஹதீஸை பார்ப்போம் ..........



وَيْلَكَ وَمَنْ يَعْدِلُ إِذَا لَمْ أَعْدِلْ قَدْ خِبْتَ وَخَسِرْتَ ، إِنْ لَمْ أَكُنْ أَعْدِلُ فَقَالَ عُمَرُ : يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ لِي فِيهِ فَأَضْرِبَ عُنُقَهُ ، فَقَالَ : دَعْهُ فَإِنَّ لَهُ أَصْحَابًا يَحْقِرُ أَحَدُكُمْ صَلَاتَهُ مَعَ صَلَاتِهِمْ وَصِيَامَهُ مَعَ صِيَامِهِمْ يَقْرَءُونَ الْقُرْآنَ لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ يُنْظَرُ إِلَى نَصْلِهِ فَلَا يُوجَدُ فِيهِ شَيْءٌ ، ثُمَّ يُنْظَرُ إِلَى رِصَافِهِ فَمَا يُوجَدُ فِيهِ شَيْءٌ ، ثُمَّ يُنْظَرُ إِلَى نَضِيِّهِ وَهُوَ قِدْحُهُ فَلَا يُوجَدُ فِيهِ شَيْءٌ ، ثُمَّ يُنْظَرُ إِلَى قُذَذِهِ فَلَا يُوجَدُ فِيهِ شَيْءٌ قَدْ سَبَقَ الْفَرْثَ وَالدَّمَ آيَتُهُمْ رَجُلٌ أَسْوَدُ إِحْدَى عَضُدَيْهِ مِثْلُ ثَدْيِ الْمَرْأَةِ أَوْ مِثْلُ الْبَضْعَةِ تَدَرْدَرُ وَيَخْرُجُونَ عَلَى حِينِ فُرْقَةٍ مِنَ النَّاسِ ، قَالَ أَبُو سَعِيدٍ : فَأَشْهَدُ أَنِّي سَمِعْتُ هَذَا الْحَدِيثَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَشْهَدُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ قَاتَلَهُمْ وَأَنَا مَعَهُ فَأَمَرَ بِذَلِكَ الرَّجُلِ فَالْتُمِسَ فَأُتِيَ بِهِ حَتَّى نَظَرْتُ إِلَيْهِ عَلَى نَعْتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي نَعَتَهُ

நாங்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது அவர்களின் அருகே இருந்தோம். அப்போது 'பனூ தமீம்' குலத்தைச் சேர்ந்த 'துல் குவைஸிரா' என்னும் மனிதர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்" என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'உனக்குக்
கேடுண்டாகட்டும்! நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் நீ இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்து விடுவாய்" என்று பதிலளித்தார்கள். உடனே, உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! எனக்கு இவர் விவகாரத்தில் அனுமதி கொடுங்கள். இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்" என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவரைவிட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் செல்வார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளி வந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும்) நாணைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக்கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. பிறகு, அம்பின் இறகைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்தியிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு கறுப்பு நிற மனிதராவார். அவரின் இரண்டு கொடுங்கைகளில் ஒன்று பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்... அல்லது துடிக்கும் இறைச்சித் துண்டு போன்றிருக்கும்... அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்" என்று கூறினார்கள்.
நான் இந்த நபிமொழியை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று சாட்சியம் அளிக்கிறேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ(ரலி) போர் புரிந்தார்கள். அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ(ரலி) (நபி - ஸல் - அவர்கள் அடையாளமாகக் கூறிய) அந்த மனிதரைக் கொண்டு வரும் படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டு கொண்டு வரப்பட்டார். நபி(ஸல்) அவர்களின் வர்ணணையின் படியே அவர் இருப்பதை பார்த்தேன்.( புகாரி 3610. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்)



இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்து விடுவது, நபி அவர்களின் மீது புனைந்து சொல்வதை விட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஒரு விவகாரத்தில் நான் உங்களிடம் பேசினால் போர் என்பது சூழ்ச்சிதான் (என்பதை நினைவில் கொள்ளவும்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்." என்று கூறினார்கள். (புகாரி 3611. அலீ(ரலி) அறிவித்தார்)


இனி இந்த ஹதீஸ் யாருக்கு பொருந்தும் என்று ஆராய்வோம்
///அவர்களுடைய தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களுடைய நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்கüன் வழிபாடு அதிகமாக இருக்கும்.) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறு பக்கம்) வெ
லிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெலி யேறிச் சென்று விடுவார்கள்.///
இப்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரித்து வைத்தாற்போல் (கபுர் பக்தர்களை) இவர்களைப் பற்றிக் கூறுகின்றார்கள். ஆனால் இவர்களோ இந்த ஹதீஸை நமக்கு எதிராகத் திருப்பி விடுகின்றனர்.
தவ்ஹீத்வாதிகளாக  அதிகமான இளைஞர்கள் உள்ளனர். அதிலும் இவர்களை விட்டு விலகி தௌஹீதை நோக்கி அணியணியாகப் படையெடுத்து இளைஞர்கள் வருகின்றனர். இதை வைத்துக் கொண்டு இந்த ஹதீஸை நமக்கு எதிராகத் திருப்புகின்றனர்.

தௌஹீத் வாதிகளாக அதிகமான இளைஞர்கள் இருப்பது உண்மை தான். ஆனால் அவர்கள் சிந்தனைத் தெளிவற்றவர்கள் கிடையாது. சிந்தனைத் தெளிவுள்ளவர்கள். இந்த ஆலிம்களைப் போன்று நட்சத்திரங்கள் வானில் பதிக்கப்பட்டுள்ளன  என்றோ மிஹ்ராஜின் போது முஹியத்தீன் அப்துல் காதர் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார் என்றும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் அல்ல.

இந்த இளைஞர்கள் சிந்தனைத் தெளிவுள்ளவர்கள். அதனால் தான் சமாதி வழிபாடு, இறந்தவர்களிடம் உதவி தேடுதல், சுய மரியாதையை இழந்து சக மனிதனின் காலில் விழுந்து வணங்குதல், தாயத்து, தகடு என்ற மவ்ட்டீகங்களை விட்டும் வெளியேறி சத்தியத்தின் பக்கம் வந்துள்ளனர்.

மேற்கண்ட புகாரி 3611 ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது போன்று சிந்தனையற்ற இளைஞர்களாக இருப்பவர்கள் இந்த ஆலிம்களிடம் பாடம் பயிலும் மதரஸா மாணவர்கள் தான். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மற்றொரு ஹதீஸில் இவர்களது அடையாளத்தையும் விளக்கியுள்ளார்கள். அது தான் மொட்டையடித்தல் ஆகும்.


''நபி (ஸல்) அவர்கள், "கிழக்குத் திசையிலிருந்து (-இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால், அது அவர்களுடைய நெஞ்செலும்புகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக் காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிருந்து (மறு பக்கமாக) வெ
லியேறி விடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெறியேறி விடுவார்கள். பிறகு அம்பானது வில்லின் நாண் உள்ள பகுதிக்குத் (தானாகத்) திரும்பாத வரை அவர்களும் மார்க்கத்திற்குத் திரும்பி வரவே மாட்டார்கள்'' என்று சொன்னார்கள். "அவர்கலின் அடையாளம் என்ன?'' என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "மொட்டை போடுவது தான் (அவர்கüன் அடையாளம்)'' என்று பதில் சொன்னார்கள். ''அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி 7562

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள இந்த அடையாளம் எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது என்று பாருங்கள். ஒருவன் மதரஸாவுக்குச் சென்றால் முதன் முதலாக அவன் தனது தலை முடியைத் தான் பலி கொடுத்தாக வேண்டும். இல்லையெனில் அவன் ஓதுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டான். மதரஸாவுக்கு ஓத வந்த பல மாணவர்கள் மொட்டையடிக்கும் கலாச்சாரத்தைக் கண்டு வெருண்டோடி யிருக்கின்றனர். இதனால் பல இளைஞர்கள் மதரஸா பக்கமே தலை காட்டாமல் இருந்திருக்கின்றார்கள். (மதரசாவில் ஏதாவது தவறு செய்தாலோ சொல் பேச்சு கேட்காமல் இருந்தாலோ பீடி குடித்து அகப்பட்டாலோ அல்லது விடுமுறையில் சென்று தாமதித்து வந்தாலோ மீண்டும் மொட்டையடித்து விடுவார்கள் )

மதரஸாக்களிலிருந்து ரமளானில் குர்ஆன் ஓத அனுப்பி வைக்கப்படும் இவர்கள் இள வயதினராகவும் மொட்டை அடித்துக் கொண்டும் தான் இருக்கின்றார்கள்.
இவர்கள் ஓதும் குர்ஆன் இவர்களது தொண்டைக் குழியைத் தாண்டவில்லை. அதாவது இதயத்திற்குள் சென்று எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அதனால் சமுதாயத்திலும் எவ்வித மாற்றமுமில்லை.
ஆண்டு தோறும் ரமளான் வருகின்றது; செல்கின்றது. மாதம் முழுவதும் குர்ஆன் ஓதப்படுகின்றது. ஆனால் சமாதி வழிபாடு, வரதட்சணை, வட்டி, சினிமா என சமுதாயத்தில் புரையோடி விட்ட தீமைகளில் எந்த மாற்றமும் இல்லை. அவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்த ஹதீஸ்களில் வருகின்ற அடையாளங்களும் அளவீடுகளும் எவ்வளவு துல்லியமாக இந்த ஆலிம்களுக்குப் பொருந்திப் போகின்றன என்று பாருங்கள். மேற்கண்ட ஹதீஸ்களில் இடம் பெறும் கூட்டத்தினர் கொல்லப்பட்டு விட்டனர் என்றாலும் அவர்களது அடையாளங்கள் அனைத்தும் இந்த 'சுன்னத் மட்டும் வைத்தஜமாஅத்'' ஆலிம்களுக்கும் பொருந்திப் போகின்றன என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கே இதை இங்கே குறிப்பிடுகின்றேன் .

/// கடைசி காலத்தில் ஒரு கூட்டம் உண்டாகும், அவர்கள் சிறியவர்களாகவும் அறிவில் அற்பமானவர்களாகவும் இருப்பார்கள், ஹதீதுகளை, பெரியோர்களின் பேச்சுக்களை பேசுவார்கள். .///


இது யாருக்குப் பொருந்தும்? மீலாது என்றும், மிஃராஜ் என்றும் பராஅத் இரவு என்றும் பல கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய வைத்து ரூ. 3000 ரூ. 5000 என்று பேரம் பேசிவிட்டு அழகான சொற்களால் பயான் செய்துவிட்டுக் வயிறு  நிறைய சோத்தையும் விழுங்கிவிட்டு  கூலி பெற்றுச் செல்பவர்களையா? அடி, உதைக்கும் வசைமொழிகளுக்கும் ஆளாக்கப்பட்டும் நெஞ்சுறுதியுடன் சத்தியத்தைச் சொன்ன தவ்ஹீத் வாதிகளையா ?


///முதிர்ச்சியற்ற புத்தியுடைய
(மடைய)ர்களாயிருப்பார்கள்...!
///

இன்று மதரஸாவில் படிக்கும் மாணவர்களைப் பார்த்தீர்கள் என்றால் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இவர்கள் இளம் வயதினர். எந்தச் சிந்தனைத் தெளிவும் இல்லாதவர்கள். இதற்கு ஒரே ஓர் எடுத்துக் காட்டு, இறந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று இவர்கள் நம்புவது தான்.

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.  அல்குர்ஆன் 35:22

இவ்வளவு தெளிவாக அல்லாஹ் விளக்கியிருந்தும் இறந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று இவர்கள் நம்புகின்றனர். இது போன்று அடுக்கடுக்கான எடுத்துக்காட்டுகளை கூறலாம்.
www.facebook.com/photo.php?fbid=308858549152590&set=a.100822823289498.1625.100000853430433&type=1&theater


///“குரானை ஓதுவார்கள். ஆனால் அவர்களுடைய ஈமான் அவர்களது தொண்டைக்குழிக்கு கீழே இறங்காது” ///என்ற சொல் யாரைக் குறிக்கும்? கத்தம் பாத்திஹா என்று மக்களை ஏமாற்றி, “யாசீன்” என்று உரத்த குரலில் முழங்கி, இடையில் சிறிது சிறிது நேரம் வாயசைத்துவிட்டு “இலைஹி துர்ஜஊன்” என்று முடிப்பதாகப் பாவனை செய்பவர்களையா? ஏழை, பணக்காரனுக்கு ஏற்றவாறு குர்ஆனையும் நீட்டிக் குறைத்து ஓதுபவர்களையா? சாவு வீட்டில் அனுதாபப்பட வேண்டியது இஸ்லாமியனின் பண்பாக அமைய வேண்டியிருக்க, குர்ஆனுக்கு ரூ.500 தருகிறாயா? ரூ. 1000 தருகிறாயா? என்று பேரம் பேசுபவர்களையா? தட்டு என்றும் நூல் என்றும் தாயத்து என்றும் குர்ஆன் வசனங்களை வியாபாரப் பொருளாக ஆக்கிக் கொண்டவர்களையா? அல்லது, குர்ஆன் போதனைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்காக அதன் போதனை அடிப்படையில் மக்களைத் தட்டி எழுப்பிய தவ்ஹீத் வாதியையா ? யாரைக் குறிக்கும் அந்தச் சொல்? எண்ணிப்பாருங்கள்!



இன்னொரு ஹதீசையும் பாருங்கள் ..............!!
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: கடைசி காலத்தில் பொய்யர்களும்,
எமாற்றுக்காரர்களும் வருவார்கள். நீங்களும், உங்களின் மூதாதையர்களும் கேட்டிராத விஷயங்களையெல்லாம் உங்களிடத்தில் கொண்டு வருவார்கள். அவர்களைப் பற்றி (உங்களிடம்)எச்சரிக்கை செய்கிறேன். (எனது எச்சரிக்கையின் படி அவர்களிடம் கவனமாக நடந்து கொண்டீர்களானால்) அவர்கள்
உங்களை வழி கெடுத்துவிட முடியாது. உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தவும் முடியாது
. முஸ்லிம் 07, முஸ்னத் அஹ்மத் 2-349, மிஷ்காத் 28


உண்மைதான்....! 
நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறும்போது, கேட்டுக்கொண்டிருந்த (நமது முன்னோர்களான) நபித்தோழர்கள், அன்று குர்ஆன் ஹதீஸ் இரண்டைப் பற்றி மட்டுந்தான் கேட்டிருந்தார்கள், தர்கா .கொடியேற்றம் மவ்லூது மீலாது விழா, பாத்திஹா, ஹுஸைன் (ரலி) நோன்பு, கந்தூரி விழா   பஞ்சா எடுத்தல் சேகு முரீது   மத்ஹபுகள், இமாம்கள்,  ,  இஸ்மா, கியாஸ் இவற்றைப் பற்றி, நபித்தோழர்கள் கேள்விப்பட்டதே இல்லை.
 நமது மூதாதையர்களான
நபித்தோழர்கள் கேள்விப்பட்டிராத புதுமை விஷயங்களான இவற்றை மக்களிடையே புகுத்துபவர்கள் தான் குழப்பக்காரர்கள் , பொய்யர்கள் என்று தெளிவாக நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள் என்பதையும், குர்ஆன், ஹதீஸை விட்டு விட்டு இவற்றை மக்களுக்குப் போதிப்பவர்களே, மக்களைக் குழப்பத்திலும் வழி கேட்டிலும், ஆழ்த்தி வருபவர்கள் என்பதையும் மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்
''உதாரணத்துக்கு இவர்கள் கொண்டாடும் மீலாதை பாருங்கள் ''

நபிகளாரின் ஒட்டுமொத்த வாழ்நாளின் 63 வருட காலத்திலும் நபித்துவத்தின் 23 வருட காலத்திலும் ஒரு நாளேனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடியது கிடையாது மற்ற நபிமார்களுக்கு கூட பிறந்த நாள் கொண்டாடவில்லை
நபிகலாருக்காக சஹாபாக்களோ சஹாபாக்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ கொண்டாடவில்லை
நாற்பெரும் கலீபாக்களோ கொண்டாடவில்லை

சிறந்த தலைமுறையினர் என்று நபிகளார் صلى الله عليه وسلم அவர்களால் சிலாகித்து கூறப்பட்ட நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினராவது நபிகளாருக்கு பிறந்த நாள் கொண்டாடினார்களா? என்றால், அவர்களும் பிறந்தநாள் கொண்டாடவேயில்லை.
(இஸ்லாம் தோன்றி) 400 வருடங்களாக வாழ்ந்த மூதாதையர்கள் கேள்விப்படாத, கேட்டிராத ,ஒன்றையல்லவா இவர்கள் கொண்டாடுகிறார்கள், கொண்டு வந்து தந்திருக்கிறார்கள்

பாத்த்திமியாக்கள் எனும் பொய்யர்களும், எமாற்றுக்காரர்களும் தந்த மீலாத் விழாவை அல்லவா கொண்டாடுகிறார்கள்
யாருக்கு பொருந்தும் இந்த ஹதீஸ்
--------------------------------------------------------------------------------------------------------------------------

எட்டு வருடங்கள் மதரஸாவில் கற்று குல்லாவும் ஜிப்பாவும் போட்டு வந்து விட்டதற்காகவெல்லாம் அவருக்கு நேர்வழியை அல்லாஹ் கையில் தூக்கி தந்து விட மாட்டான் ;
மாறாக, நேர்வழி என்பது அவன் நாடியோருக்கே கிடைக்கும்.

அல்லாஹ்வின் ஆற்றலோடு வேறு எவனையும் இணைக்க கூடாது என்கிற இஸ்லாத்தின் ஆரம்பப் பாடம் எம்போன்ற பாமரர்களுக்கு தெரிவதற்கும்

மெத்தம் படித்த அறிவாளிகளுக்கு தெரியாமல் போவதற்கும் அது தான் காரணம் !
நேர்வழி என்பது அவன் அதிகாரத்தில் உள்ளது!

நேர்வழி கிடைத்தால் அறிவு விசாலமாகும் !
அல்லாஹ்வை புரிய வேண்டிய விதத்தில் புரிய அது உதவும் !;
நேர்வழி கிடைக்காதவனுக்கோ, நாயும் கழுதையும் கூட கடவுள் தான் !!


செய்த்தானின் கொம்பு யார் என்பதை காண இங்கே கிளிக் செய்யவும் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்