"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

9/29/2013

தர்காவிற்கும் இஸ்லாத்துக்கும் ஒரு எந்த தொடர்பும் இல்லை

தர்கா என்ற பெயரில் கபுறுவணங்குபவருக்கும்,,, இஸ்லாத்துக்கும் ஒரு எந்த தொடர்பும் இல்லை  

அல்லாஹ்வின் தூதர் காட்டிய மார்க்கத்தை சொல்லிய,செய்தமுறைப்படி நடக்கவேண்டும்..

நிச்சயமாக அதை கொண்டுவர ஒரே வழி ஏகத்துவத்தை இப்புவியில் நிலைநாட்ட பாடுபடல் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து அருளப்படாத வஹியில் இல்லாத மார்க்கமென்ற பெயரில் தோன்றிய அத்தனை வழிக் கேடுகளையும் கலைஎடுக்கப்படவேண்டும் இன்ஷால்லாஹ்

இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் சற்று சிந்தியுங்கள்.

இஸ்லாத்தைப் பற்றி நல்ல ஒரு முஸ்லிம், மாக்கப் பற்றுள்ள அறிஞரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுஙகள்
..
எவர்கள் தமது ஈமானில் அக்கிரமத்தைக் கலக்காத நிலையில் ஈமான் கொண்டவர்களாக இருக்கின்றனரோ அவர்களுக்கே (இம்மையிலும் மறுமையிலும்) அச்சமற்ற நிலை உண்டு, மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களுமாவர்’ (அல்குர்ஆன் 6:83)

என்ற இறைவசனம் இறங்கிய போது, நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், ‘(அல்லாஹ்வின் தூதரே!) எங்களில் யார் தான் அக்கிரமம் (பாவம்) புரியாதவர்களாக இருக்கிறோம்?’ எனக் கேட்டனர்.

அப்போது தான், ‘நிச்சயமாக (எனக்கு) எதையாவது இணையாக்குவது தான் மிகப் பெரும் அக்கிரமமாகும்’ (31:13) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான் என அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 32)

யா ரஹ்மானே! எங்கள்  பாவங்களையும், எங்கள் செயல்களில் வரம்பு மீறிய குற்றங்களையும் மன்னிப்பாயாக ...எங்கள் பாதங்களை யுத்தத்தில் நழுவாது உறுதி படுத்துவயாக, உன்னை நிராகரிக்கும் சமூகத்தார்கள் மீது வெற்றி பெற உதவி புரிவயாக..யா அல்லாஹ்! நீயே மிக்க மன்னிப்பவன், மிக்க இரக்கம்  உள்ளவன்.... ஆமீன்...!!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்