"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

12/31/2013

பித்அத் குறித்த ஒரு மாறுபட்ட கேள்வி.

அஸ்ஸலாமு அலைக்கும்..

நாம் பித் அத் என்று கூறுகிற பல விஷயங்களை மார்க்கம் என்ற பெயரில் பலர் செய்து வருகிறார்கள்.

மத்ஹப் என்கிற பெயரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்திற்கு பின்னர் வந்த சிலரின் நூலை மார்க்கம் என்கிறீர்களே, இது அப்பட்டமான பித் அத் இல்லையா? என்று கேட்கும் போது, இல்லை என்று மறுக்கிறார்கள்.
தரீக்காக்கள் என்ற பெயரில் மார்க்கத்தை கேலிக்கூதாக்குகிறீர்களே என்று சொல்லும் போது அதையும் மறுக்கிறீர்கள்.
மிலாதுன்நபி என்று கொண்டாடுகிறார்கள், அது பித் அத் என்றால் இல்லை, அது தான் மார்க்கம் என்கிறார்கள்.
பரா அத் இரவு என்று கொண்டாடுகிறார்கள். அது பித் அத் என்று சொன்னால் இல்லை என்று கூறுகிறார்கள்.
மௌலூத் ஓதுவது பித் அத் என்றால் இல்லை என்கிறார்கள்.
மிஹ்ராஜ் அன்று நோன்பு வைக்க வேண்டும் என்கிறார்கள். இது பித் அத் என்று சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.
ஜும்மாவுக்கு இரண்டு பாங்கு சொல்கிறார்கள். இது பித் அத் இல்லையா என்று கேட்டால் இல்லை என்கிறார்கள்.
தொப்பி போட்டு தான் தொழ வேண்டும் என்று கட்டாயபடுதுவது பித் அத் இல்லையா? என்று கேட்டால் அதையும் மறுக்கிறார்கள்.
எந்த நல்ல காரியத்திற்கும் பாத்திஹா என்ற பெயரில் சடங்கு செய்கிறீர்களே அது பித் அத் இல்லையா? என்று கேட்டல் அதற்கும் இல்லை என்கிறார்கள்.

இது போன்று, இன்னும் எண்ணற்ற விஷயங்களை குர் ஆன், ஹதீஸ் ஆதாரம் இல்லாமலேயே பின்பற்றிக்கொண்டு அதுவெல்லாம் பித் அத் கிடையாது என்று கூறி வருபவர்களை நோக்கி ஒரு கேள்வி..

"எனக்கு பின் வரக்கூடிய ஒவ்வொன்றும் பித் அத்!
ஒவ்வொரு பித் அத்தும வழிகேடு
ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும்"

என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லி விட்டு சென்றிருக்கிறார்களே, இதற்குரிய பொருள் என்ன?

நபிகளார் சொன்ன பித்அத் என்பது எதை குறிக்கிறது?

பொதுவாக, பித்அத் என்கிற வார்த்தையின் பொருள் / விளக்கம் என்ன?
என்ன செய்தால் / எப்படி செய்தால் அது பித்அத்தின் பட்டியலில் வரும்?

பித் அத்தான செயல்களாக நாம் ஏற்கனவே பட்டியலிட்டவைகளுக்கு பதில் சொல்ல தெரியாதவர்கள் குறைந்த பட்சம் இந்த கேள்விக்காவது பதில் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்