அப்படியானால்
தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றனவே? இதை நாங்கள் பார்த்திருக்கிறோமே
என்ற வாதத்துக்கு என்ன பதில்?
அற்புதங்கள்
நடக்கட்டுமே! அதனால் அவர்களிடம் பிரார்த்திக்கலாம்
என்று ஆகிவிடுமா? ஸாமிரியும் தான் அற்புதம் நிகழ்த்தினான்.
அற்புதத்தைப் பார்த்துத் தான் மக்கள் ஈமானைப்
பறிகொடுத்தார்கள்.
நாளை
தஜ்ஜால் வந்து அற்புதங்கள் நிகழ்த்திக்
காட்டும் போது அவனிடம் துஆச்
செய்வார்களா? துஆச் செய்யலாம் எனக்
கூறுவார்களா?
அற்புதங்கள்
தர்காக்களில் நடக்கின்றன எனக் கூறுகிறார்களே அது
கூட உண்மையில்லை. அற்புதங்கள் நிகழ்வதாகப் பரப்பப்படும் வதந்திகள் தான் அத்தகைய எண்ணத்தை
ஏற்படுத்தி வருகின்றன.
ஒரு
தர்காவுக்கு ஆயிரம் பேர் சென்று
பிரார்த்தித்து அதிகமான செல்வத்தை வேண்டுகிறார்கள்
என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் அல்லது இருவர்
சில நாட்களில் செல்வந்தராக ஆகி விடக் கூடும்.
ஆயிரத்தில் 998 பேர் ஆகவில்லையே அது
ஏன்? இதைத் தான் சிந்திக்க
மறுக்கின்றனர்.
செல்வந்தராகி
விட்ட அந்த இரண்டு பேர்,
998 பேருக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் காரியம் கை
கூடாத 998 பேர் வாயைத் திறப்பதில்லை.
‘இவரெல்லாம் ஒரு மகானா’ என்று
கூறிவிட்டால் ஏதேனும் கேடு விளைந்து
விடுமோ என அஞ்சி வாய்
திறப்பதில்லை.
இதன்
காரணமாகத் தான் தர்காக்களில் அற்புதங்கள்
நடக்கின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது.
எத்தனையோ பேர் தமக்குக் குழந்தை
இல்லை என்பதற்காக எல்லா தர்காக்களிலும் ஏறி
இறங்கி கடைசி வரை குழந்தை
பாக்கியம் கிடைக்காமல் உள்ளதை நாம் பார்க்கிறோம்.
ஆயிரத்தில்
இரண்டு என்ற கணக்கில் தர்காக்களில்
மட்டும் அற்புதங்கள் நடக்கவில்லை.
மாறாக
கோவில்களில்
நடக்கின்றன.
சர்ச்சுகளில்
நடக்கின்றன.
இன்னும்
பல வழிபாட்டுத் தலங்களில் நடக்கின்றன.
இவ்வாறு
நடப்பதால் தான் கோவில்களிலும், சர்ச்சுகளிலும்
தர்காக்களில் குவிவதை விட பல
மடங்கு அதிகமாக காணிக்கைகள் குவிகின்றன.
தங்கள் கோரிக்கை நிறைவேறிய பிறகு தான் காணிக்கைகள்
செலுத்துவர் என்பதை அனைவரும் அறிவோம்.
இவர்களின்
வாதப்படி கோவில்களிலும், சர்ச்சுகளிலும் போய் பிரார்த்திப்பது குற்றமில்லை
என்று ஆகிவிடும். ஏனெனில் தர்காக்களில் அற்புதங்கள்
நிகழ்கின்றனவே என்பது தான் இவர்களின்
வாதமாக இருக்கிறது.
ஆயிரத்தில்
இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றனவே இது எப்படி நடக்கின்றது
என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டால்
தெளிவு பிறக்கும்.
ஒவ்வொரு
காரியமும் நிகழ்வதற்கு அல்லாஹ் ஒரு நேரத்தை
நிர்ணயம் செய்துள்ளான். அந்த நேரம் வரும்
போது தானாக அந்தக் காரியம்
நிறைவேறும்.
அந்த
நேரம் வரும் போது தர்காவில்
இருப்பவர்கள் அடக்கம் செய்யப்பட்டவர் நிகழ்த்திய
அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.
அந்த
நேரம் வரும் போது கோவிலில்
இருப்பவர்கள் அந்த சாமியின் அற்புதம்
என நினைத்துக் கொள்கின்றனர்.
அந்த
நேரம் வரும் போது சர்ச்சுகளில்
இருப்பவர்கள் இயேசுவின் அல்லது மேயின் அற்புதம்
என்று நினைத்துக் கொள்கின்றனர்.
இவர்கள்
தர்காவுக்கோ, சர்ச்சுக்கோ, கோவிலுக்கோ செல்லாவிட்டாலும் உரிய நேரம் வந்ததும்
இவர்களது காரியம் கைகூடி இருக்கும்.
உரிய நேரம் வந்துவிட்டால் ஒரு
விநாடி முந்தவும், பிந்தவும் செய்யாது என்பது குர்ஆனின் போதனை.
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின்
கெடு வரும் போது சிறிது
நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள்.
பிந்தவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன்
7:34,
‘அல்லாஹ்
நாடியதைத் தவிர எனக்கே தீங்கு
செய்யவோ, நன்மை செய்யவோ நான்
அதிகாரம் பெற்றிருக்கவில்லை’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு
உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது
நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்.
முந்தவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன்
10:49
மனிதர்களுடைய
அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ்
தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயினத்தையும் அவன்
விட்டு வைக்க மாட்டான். மாறாக
குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான்.
அவர்களின் கெடு வந்ததும் சிறிது
நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன்
16:61
எனவே
அற்புதம் பற்றி தெளிவாக அறிந்து
கொண்டால் இந்தக் குழப்பத்திலிருந்து விடுபட
முடியும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்