"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

3/11/2014

ஷிர்க் இல்லாமல் இருந்தால் தயாத்து அனியலாமா ??


ஷிர்க் இல்லாமல் இருந்தால் தாவீஸ் அனியலாமா ??
  பதில்.
அரபியர்கள் ஒரு எழும்பை எடுத்து அதை கட்டி தொங்க விட்டுக்கொள்வார்கள். அவர்களின் நம்பிக்கைப்படி அந்த எழும்பின் மூலம் கண்ணால் ஏற்படக்கூடிய தீங்கை விட்டு போக்கி கொள்வார்கள். இதுதான் தடுக்கப்பட்டுள்ளது. இவை அல்லாமல் குர்ஆன் வசனங்கள் அல்லது அல்லாஹ்வின் பெயர்கள் இருந்தால் அனியலாம் என்று   கூறுகிறீர்கள்.
குர்ஆன் வசனமாக இருந்தால் அல்லது அல்லாஹ்வின் பெயர்களாக இருந்தால் அவைகளை கட்டிக் கொள்ளலாம் என்று நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்றோ அல்லது கட்டிக் கொள்ளலாம் என்றோ சொன்னதாகவோ ஒரு ஆதாரத்தைக் கூட காட்டவில்லை.

இது ஒரு புறமிருக்க ஷிர்க் இல்லாமல் இருந்தால் அதைக்கட்டிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் ஏன் சொல்லவில்லை.?

நபி (ஸல்) அவர்கள் பொதுவாக ஒன்றை சொல்­ருந்தால் அதை பொதுவாகத்தானே, அனைத்துக்கும் தானே எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி இருக்க ஷிர்க் இல்லாமல் இருந்தால் அனியலாம் என்று   எப்படி சொல்ல முடியும்?
நபி (ஸல்) அவர்கள்  குர்ஆன் வசனங்களை கட்டிப்போடாமல் ஏன் ஓதிப்பார்த்தார்கள்.? அதற்கு மட்டும் ஏன் அனுமதி கொடுத்தார்கள்.?
இன்னும் சொல்லப்போனால் பொதுவான இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிராகவும் இந்த தாயத்துகள், தாவீஸ்கள் இருக்கின்றன.
குர்ஆன் சொல்கிறது.
மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், அருளும் வந்து விட்டன. அல் குர்ஆன் (10 : 57)
ஒருவர் குர்ஆன் வசனங்களை படிப்பதினால்தான் அவருக்கு நோய் நீங்கும் என்று இந்த திருக்குர்ஆன் சொல்கிறது. இதை விடுத்து ஒருவர் குர்ஆனை தனனுடைய கழுத்தில் கட்டித்தொங்க விட்டுக் கொண்டார் என்று சொன்னால் அவருக்கு நோய் நீங்குமா?

இதை விளங்க ஒரு உதாரணத்தை கூறுகிறேன்.
ஒருவர் மருத்துரிடம் சென்று அவடைய நோய்க்காக மருத்துவரிடம் காட்டி மருந்து சீட்டு வாங்கி வருகிறார். வாங்கி வந்தவர் அதைக்கட்டி தன்னுடைய கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டார். இப்போது அவருடைய நோய் குணமாகுமா? மருத்துவர் எழுதி தந்த சீட்டை மருந்து கடைகளிடம் காட்டி மருந்துகளை வாங்கி சாப்பிட்டதானே நோய் நீங்கும். இதே போல்தான் குர்ஆனும் குர்ஆனை ஓதினால்தான் நிவாரணம் கிடைக்கும்.
  அவர் மருத்துவ சீட்டை கழுத்தில் மாட்டிக் கொண்டால் அவருடைய நோய் தீர்ந்து விடும். இது அறிவுக்கு கொஞ்சமாவது பொருத்தமாக இருக்கிறதா?
அறிவுக்குப் பொருத்தமில்லாத காரணத்தினால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை செய்யவுமில்லை, செய்ய கட்டலையிடவுமில்லை.
அடுத்து ஸஹாபாக்கள் இதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்களே என்று   வாதத்தை எடுத்து வைக்கின்றீர்கள்.
ஸஹாபாக்களில் அப்துல்லாஹ் பின் அம்ரு (ர­) அவர்கள் செய்ததாக திர்மிதியில் (3451) ல் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் அய்யாஸ் என்பவர் இடம் பெருகிறார். இவர் ஷாம் வாசிகள் வழியாக அறிவித்தால் மட்டுமே ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்றுக்கொள்வாôர்கள். இங்கே இடம் பெற்றிருக்கூடிய இஸமாயீல் பின் அய்யாஸ் அவர்களுக்கு அறிவித்தவர் முஹம்மத் பின் இஸ்ஹாக் என்பவராகும்.  இவர் தங்கிய ஊர் மதினாவாகும். அவர் இறந்த ஊர் பக்தாத் ஆகும். இவருக்கும் ஷாம் என்ற ஊருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனவே இந்த செய்தியை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
அடுத்து ஒரு ஸஹாபி இந்த மாதிரி ஷிர்க்கான காரியங்கள் செய்திருப்பாரா? குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக செய்திருப்பாரா? என்ற எண்ணத்தின் அடிப்படையில் பார்த்தாலும் இந்த செய்தியை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
(சில நேரங்களில் நபித்தோழர்கள் குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக சில செயல்களை செய்தது உண்டு இது தனிவிஷயம்)

நீங்கள் எந்த செய்தியை வைத்து தாவீஸ் அனியக்கூடாது என்று சொன்னீர்களளோ அதே செய்தியில் ஓதிப்பார்ப்பதையும் தடை செய்தார்கள் என்று வருகிறதே அதை தடை என்று சொல்வீர்களா? என்று   ஒரு கேள்வியையும் எடுத்து வைத்துள்ளீர்கள்.
உன்மையில் நீங்கள் சொல்வதைப் போன்று ஷிர்க் இருந்தால் ஓதிப்பார்க்ககூடாது. ஷிர்க் இல்லாமல் இருந்தால் ஓதிப்பார்க்காமல் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்களே கூறியிருக்கிறார்கள்.
அவ்ஃப் பின் மா­ரிக் அல்அஷ்ஜஈ (ரரி­) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்துவந்தோம். எனவே (நபியவர்களிடம்), ”அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), ”நீங்கள் ஓதிப்பார்ப்பதை என்னிடம் சொல்ரி­க்காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பிக்கும் வாசகம் இல்லையானால் ஓதிப்பார்த்தரில் எந்தக் குற்றமும் இல்லை” என்று கூறினார்கள். நூல்: முஸ்­ம் (4427)

இந்த செய்தியை வைத்துதான் நாம் ஷிர்க் இல்லாமல் இருந்தால் ஓதிப்பார்க்கலாம் என்று சொல்லி­ வருகிறோம். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட தாயத்தில் இப்படி இணைவைப்பு இல்லாமல் இருந்தால் போட்டுக் கொள்ளலாம் என்று எந்த முன்மாதிரியும் இல்லை.

ரசூல் (ஸல்) அவர்கள் ஓதிப்பார்த்தார்கள் என்று வந்துள்ளதால் தடை செய்தது அறியாமைக்காலத்தில் உள்ளதைதான் என்று உறுதியாக சொல்லலாம். ஆனால் தாயத் அனிவது தடை என்று சொல்­விட்டு அதற்கு அனுமதி கொடுத்ததாகவோ, அதை செய்ததாகவோ எந்த செய்தியும் இல்லை. எனவே குர்ஆன் ஆயத்துக்களை வைத்தோ அல்லது நபி மொழியில் உள்ள துஆக்களை வைத்தோ ஓதிப்பார்ப்பதை  தடை செய்ய முடியாது.
அடுத்து உங்களது நம்பிக்கை படி பாத்ரூமில் குர்ஆன் வசனங்களை கொண்டு செல்ல கூடாது அப்படி இருக்கையில் நீங்கள் குர்ஆன் ஆயத்துகள் உள்ள தாவீஸை அனிந்து கொண்டு பாத்ரூம் செல்லலாம் என்று கூற வருகிறீர்களா? நீங்கள் சொல்வது உங்கள் நம்பிக்கைக்கு மாற்றமாக இருக்கிறதே இதற்கு நீங்கள் பதில் சொல்ல கடமை பட்டிருக்கின்றீர்கள்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் உண்மையை விளங்க செய்வானக.

 நன்றி   http://abusameeha.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்