"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

6/19/2015

இரண்டை விட்டுச் செல்கிறேன்

தெரிந்த செய்திகள். தெரியாத உண்மைகள்   

நபி (ஸல்) அவர்களைப் பற்றிய விசயங்களை நாம் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் வாயிலாக அறிந்துகொள்கிறோம். ஆனால் சில ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்களின் பெயரால் மக்களிடம் பரவியுள்ளன. அவற்றை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று நாம் நம்புவதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அறிவிப்பாளர் தொடர் சரியானதாக இல்லை. ஆனால் மக்கள் அவற்றைச் சரியான செய்தி என நம்பிக்கொண்டு இருக்கின்றனர். 

தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரத்தை தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் நமது ஆலிம்கள் சொன்ன ஹதீஸ்களிலும் சில பலவீனமான ஹதீஸ்கள் சொல்லப்பட்டன.

ஆனால் கம்ப்யூட்டர் யுகத்தில் நமக்கு கிடைத்துள்ள நவீன வசதிகள் காரணமாக அந்த ஹதீஸ்களை ஆராய்வது இன்று எளிதாகியுள்ளது. கடந்த காலங்களில் நாம் சொன்ன ஹதீஸ்களில் பலவீனமான செய்திகள் சிலவும் உள்ளன என்பது தெரியவருவதால் அதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் கடமை நமக்கு உள்ளது.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை தனது கருத்து தவறு என்று தெரிய வரும்போதும் மற்றவர்கள் சுட்டிக்காட்டும்போதும் அதை பகிரங்கமாக அறிவிப்பதை கொள்கையாகக் கொண்ட காரணத்தால் நம்மால் மக்கள் மத்தியில் எடுத்து வைக்கப்பட்ட பலவீனமான ஹதீஸ்கள் குறித்து இத்தொடரில் நாம் தெளிவுபடுத்துகிறோம்.

இரண்டை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப்பிடிக்கும் காலமெல்லாம் வழிதவறவே மாட்டீர்கள் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான செய்திகளும் உள்ளன. பலவீனமான செய்திகளும் உள்ளன. பலவீனமான செய்தி எது என்பதை அறிந்து அதைத்­ தவிர்த்துவிட்டு சரியான செய்திகளையே நாம் மக்களுக்குச் சொல்ல வேண்டு­ம்.

அதுபோல் அமைந்த பலவீனமான செய்திகளில் சிலவற்றை இப்போது பார்ப்போம் 

அறிவிப்பு : 1
மாலிக் அவர்கள் தொகுத்த ஹதீஸ் நூலான முவத்தா என்ற நூலில் பின்வரும் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

1395و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّهِ رواه مالك في الموطأ

நான் உங்களிடம் இரண்டை விட்டுச் சொல்கிறேன். அதை பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்).2. அவனுடைய நபியின் வழிமுறைகள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஅத்தா (1395)

இந்தச் செய்தியை அறிவிக்கும் மாலிக் அவர்கள் நபிகளார் கூறியதாக நேரடியாக அறிவிக்கிறார்கள். இவர் நபித்தோழர் அல்லர் . மாறாக தபஉத் தாபியீன்களில் உள்ளவராவார். அதாவது நபிகளாருக்குப் பின் இரண்டு தலைமுறைக்குப் பிறகு வந்தவர்.மாலிக் அவர்களுக்கும் நபிகளாருக்கும் இடையில் குறைந்த பட்சம் இரண்டு அறிவிப்பாளர்கள் இருக்க வேண்டும். அந்த இருவர் யார் என்ற விபரம் இல்லை என்பதால் இந்தச் செய்தி முஃளல் என்ற வகையைச் சார்ந்த தொடர்பு அறுந்த செய்தியாகும். இதன் காரணத்தால் இந்தத் தொடர் பலவீனமானதாக உள்ளது.

அறிவிப்பு : 2

இதே செய்தி இப்னு அப்தில் பர் அவர்களின் ஜாமிவு பயானில் இல்மி வ ஃபழ்லிஹி என்ற நூலில் முழுமையான அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இந்தத் தொடர் கூறுகின்றது.

جامع بيان العلم وفضله - مؤسسة الريان - (2 / 55(724- حدثنا سعيد بن عثمان، قال: حدثنا أحمد بن دحيم، قال: حدثنا محمد بن إبراهيم الدؤلي، قال: حدثنا علي بن زيد الفرائضي، قال: حدثنا الحنيني، عن كثير بن عبد الله بن عمرو بن عوف، عن أبيه، عن جده، قال: قال رسول الله, صلى الله عليه وسلم: "تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة نبيه, صلى الله عليه وسلم".

அறிவிப்பவர் : அவ்ப் பின் மாலிக் (ரலி) நூல் : ஜாமிஉ பயானில் இல்மி வபள்லிஹி (பாகம் 2 : பக்கம் : 55)

இதில் இடம்பெறும் இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்களாவர். இரண்டாவது அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஃப் என்பவரை இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் நம்பகமானவர் பட்டியலில் சேர்க்கவில்லை. இப்னு ஹிப்பான் எந்தக் குறையும் சொல்லப்படாத யாரெனத் தெரியாதவரை நம்பக்கமானவர் பட்டியலில் இணைக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் இதை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. மூன்றாவது அறிவிப்பாளர் கஸீர் பின் அப்துல்லாஹ் என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் துறை சார்ந்த அறிஞர்கள் கூறியுள்ளனர். சிலர் இவரை பொய்யர் என்றும் கூறியுள்ளார்கள்.

تهذيب التهذيب - (8 / 377( - ز د ت ق (البخاري في جزء القراءة وأبي داود والترمذي وابن ماجة) كثير بن عبدالله بن عمرو بن عوف بن زيد بن ملحة اليشكري المزني المدني... قال أبو طالب عن أحمد منكر الحديث ليس بشئ ...وقال الدارمي عن ابن معين أيضا ليس بشئ. وقال الآجري سئل أبو داود عنه فقال كان أحد الكذابين سمعت محمد بن الوزير المصري يقول سمعت الشافعي وذكر كثير ابن عبدالله بن عمرو بن عوف فقال ذاك أحد الكذابين أو أحد أركان الكذب. وقال ابن أبي حاتم سألت أبا زرعة عنه فقال واهي الحديث ليس بقوي ...وقال النسائي والدارقطني متروك الحديث... وقال ابن حبان روى عن أبيه عن جده نسخة موضوعة لا يحل ذكرها في الكتب ولا الرواية إلا على جهة التعجب.

கஸீர் பின் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அவ்ஃப் என்பார் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர், மதிப்பற்றவர் என்று அஹ்மத் அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் மதிப்பற்றவர் என்று இப்னு மயீன் அவர்களும் கூறியுள்ளார்கள். இவர் பொய்யர்களில் ஒருவர் என்று ஷாஃபி, அபூதாவூத் ஆகியோர் கூறியுள்ளனர். அபூஸுர்ஆ இவர் பலவீனமானவர் நம்பகமானவர் அல்லர் என்று கூறியுள்ளார். ஹதீஸ் துறையில் விடப்படவேண்டியவர் (பொய்யர்) என்று நஸாயீ, தாரகுத்னீ ஆகியோர் கூறியுள்ளனர். இவர் தன் தந்தை, பாட்டனார் வழியாக வைத்திருந்த ஒரு ஏட்டின் மூலம் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவித்தவர். இவருடைய செய்திகளை (உண்மையல்லாத) ஆச்சரியமான செய்திகளை தவிர (ஹதீஸ்) நூல்களில் குறிப்பிடுவது ஆகுமானதல்ல என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் : 8 பக்கம் : 377)

நான்காவது அறிவிப்பாளராக இஸ்ஹாக் பின் இப்ராஹீம் அல்ஹுனைனீ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவராவார்.

تهذيب التهذيب - (1 / 194(413 - د ق (أبي داود وابن ماجة) اسحاق بن ابراهيم الحنيني (1) أبو يعقوب المدني نزيل طرسوس ... تهذيب التهذيب - (1 / 195)وقال البخاري في حديثه نظر وقال النسائي ليس بثقة وقال أبو الفتح الازدي اخطأ في الحديث وقال ابن عدي ضعيف ومع ضعفه يكتب حديثه

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் அல்ஹுனைனீ என்வபரின் செய்தியில் ஆட்சேபனை உள்ளது என்று புகாரி கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் அல்லர் என்று நஸாயீ கூறியுள்ளார். இவர் ஹதீஸில் தவறிழைத்துள்ளார் என்று அஸ்தீ கூறியுள்ளார். இவர் பலவீனமானவர். இவரது பலவீனத்துடன் இவருடைய செய்திகளை எழுதிக் கொள்ளலாம் என்று இப்னு அதீ கூறியுள்ளார்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் : 1 பக்கம் : 194)

அறிவிப்பு : 3

இதே செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்களின் வழியாக அல்முஸ்தத்ரக் ஹாகிம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص - (1 / 172( 319  أخبرنا أبو بكر بن إسحاق الفقيه أنبأ محمد بن عيسى بن السكن الواسطي ثنا داود بن عمرو الضبي ثنا صالح بن موسى الطلحي عن عبد العزيز بن رفيع عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه و سلم : إني قد تركت فيكم شيئين لن تضلوا بعدهما : كتاب الله و سنتي و لن يتفرقا حتى يردا علي الحوض

நான் இரண்டை உங்களிடம் விட்டுச் சொல்கிறேன். இந்த இரண்டிற்கு பிறகு நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம். 2. என்னுடைய வழிமுறை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  நூல் : ஹாகிம், பாகம் :1, பக்கம்: 172

இதில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் ஸாலிஹ் பின் மூஸா என்பவர் பலவீனமானவராவார்.

تهذيب التهذيب - (4 / 354(700 ت ق (الترمذي وابن ماجة) صالح بن موسى بن اسحاق بن طلحة بن عبيدالله الطلحي الكوفي... قال ابن معين ليس بشئ ... وقال الجوزجاني ضعيف الحديث على حسنه ... وقال ابن أبي حاتم عن أبيه ضعيف الحديث منكر الحديث جدا كثير المناكير عن الثقات وقال البخاري منكر الحديث عن سهيل بن أبي صالح وقال النسائي لا يكتب حديثه ضعيف وقال في موضع آخر متروك الحديث وقال ابن عدي عامة ما يرويه لا يتابعه عليه أحد وهو عندي ممن لا يتعمد الكذب ولكن يشبه عليه ويخطئ وأكثر ما يرويه في جده من الفضائل ما لا يتابعه عليه أحد وقال الترمذي تكلم فيه بعض أهل العلم...وقال العقيلي لا يتابع على شئ من حديثه وقال ابن حبان كان يروي عن الثقات ما لا يشبه حديث الاثبات

ஸாலிஹ் பின் மூஸா என்பவர் மதிப்பற்றவர் என்று இப்னு மயீன் கூறியுள்ளார். இவர் பலவீனமானவர் என்று ஜவ்ஸஜானீ கூறியுள்ளார். இவர் பலவீனமானவர், ஹதீஸ் துறையில் முற்றிலும் மறுக்கப்படவேண்டியவர், நம்பகமானவர்களிடமிருந்து அதிகம் மறுக்கப்படவேண்டிய செய்திகளை அறிவிப்பவர் என்று அபூஹாத்திம் கூறியுள்ளார். இவருடைய பெரும்பாலான செய்திகளுக்கு ஒத்த செய்திகள் இருப்பதில்லை. என்றாலும் இவர் பொய் சொல்பவர்களில் உள்ளவர் இல்லை என்பது என் கருத்தாகும். எனினும் இவர் பொய் சொல்பவர் என்பதுபோல் கூறப்படுகின்றது. இவர் தவறிழைப்பார். இவர் தன் பாட்டனார் வழியாக யாரும் அறிவிக்காத சிறப்புக்குரிய செய்திகளை அறிவிப்பார். இவரை சில அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள் என்று திர்மிதீ கூறியுள்ளார். இவருடைய எந்தச் செய்திகளுக்கும் ஒப்பான செய்திகள் கிடையாது என்று உகைலீ கூறியுள்ளார். நம்பகமான செய்திகளுக்கு ஒப்பாகாத செய்திகளை நம்பகமானவர்களிடமிருந்து அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :4, பக்கம் : 354

அறிவிப்பு : 4

இதே செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாக ஹாகிமில் பதிவாகியுள்ளது.   

المستدرك على الصحيحين للحاكم  - كتاب العلم

حدثنا أبو بكر أحمد بن إسحاق الفقيه ، أنبأ العباس بن الفضل الأسفاطي ، ثنا إسماعيل بن أبي أويس ، وأخبرني إسماعيل بن محمد بن الفضل الشعراني ، ثنا جدي ، ثنا ابن أبي أويس ، حدثني أبي ، عن ثور بن زيد الديلي ، عن عكرمة ، عن ابن عباس ، أن رسول الله صلى الله عليه وسلم خطب الناس في حجة الوداع ، فقال : " قد يئس الشيطان بأن يعبد بأرضكم ولكنه رضي أن يطاع فيما سوى ذلك مما تحاقرون من أعمالكم ، فاحذروا يا أيها الناس إني قد تركت فيكم ما إن اعتصمتم به فلن تضلوا أبدا كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم

மக்களே உங்களிடம் நான் ஒன்றை விட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொண்டால் ஒருக்காலும் வழிதவறவே மாட்டீர்கள். (அது) அல்லாஹ்வின் வேதமும் அவனுடைய நபியின் வழியுமாகும்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)  நூல் : ஹாகிம் (287)

ஹாகிம், இந்தச் செய்தியைப் பதிவு செய்துவிட்டு இது சரியானது என்று கூறுகிறார். ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானது என்று முடிவு செய்வதில் ஹாகிம் அலட்சியப் போக்குடையவர் என்பதால் இவருடைய கூற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது. இஸ்மாயீல் பின் அபீ உவைஸ் என்பவர் இந்தச் செய்தியை தனது தந்தை அபூ உவைஸ் என்பவரிடமிருந்து அறிவிக்கின்றார். அபூ உவைஸ் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.

تهذيب الكمال في أسماء الرجال (15/ 168(

وَقَال أَبُو بَكْر بْن أَبي خيثمة  ، عَن يحيى بْن مَعِين: صالح، ولكن حديثه لَيْسَ بذاك الجائز. وَقَال معاوية بْن صالح ، عَن يَحْيَى بْنِ مَعِين: لَيْسَ بقوي. وَقَال فِي موضع آخر  : أَبُو أويس ضعيف مثل فليح. قَال علي بن المديني  : كَانَ عند أصحابنا ضعيفا  . وَقَال عَمْرو بْن علي  : فيه ضعيف، وهو عندهم من أهل الصدق. وَقَال يعقوب بْن شَيْبَة  : صدوق، صالح الحديث، وإلى الضعف ما هو. وقَال البُخارِيُّ  : ما روى من أصل كتابه فهو أصح. وَقَال النَّسَائي  : مدني، لَيْسَ بالقوي  . وَقَال أَبُو أَحْمَد بْن عَدِيّ  : يكتب حديثه. وَقَال أبو زُرْعَة  : صالح، صدوق، كأنه لين . وَقَال أبو حاتم  : يكتب حديثه، ولا يحتج بِهِ، ولَيْسَ بالقوي.

யஹ்யா பின் மயீன் அவர்கள் இவர் வலிமையானவர் அல்லர்; பலவீனமானவர் என்று கூறியுள்ளார். நம்முடைய தோழர்களிடத்தில் இவர் பலவீனமானவர் என்று அலீ பின் அல்மதீனீ கூறியுள்ளார். அம்ர் பின் அலீ யஃகூப் பின் அபீ ஷைபா, அபூ சுர்ஆ, இப்னு அதீ, நஸாயீ ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் தனது புத்தகத்திலிருந்து அறிவிப்பவை மட்டுமே மிகச் சரியானது என்று புகாரி கூறியுள்ளார். அபூஹாதிம், இவரை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது. இவர் பலமானவர் அல்லர் என்று கூறியுள்ளார்.
நூல் : தஹ்தீபுல் கமால் (பாகம் : 15 பக்கம் : 168)   அறிவிப்பு : 5

மேலும் இந்தச் செய்தி வேறு ஒரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து யஸீத் ருக்காஷி என்பவர் அறிவிக்கின்றார். யஸீதிடமிருந்து ஹிஷாம் பின் சுலைமான் என்பவர் அறிவிக்கின்றார். இந்த இருவரும் பலவீனமானவர்கள் ஆவார்கள். யஸீத் ருக்காஷி பலவீனமானவர் என ஏராளமான அறிஞர்கள் கூறியுள்ளனர்.

تاريخ أصبهان = أخبار أصبهان (1 / 138(حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، ثنا أَحْمَدُ بْنُ الْخَطَّابِ، ثنا طَالُوتُ بْنُ عَبَّادٍ، ثنا هِشَامُ بْنُ سُلَيْمَانَ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قَدْ تَرَكْتُ فِيكُمْ بَعْدِي مَا إِنْ أَخَذْتُمْ لَمْ تَضِلُّوا، كِتَابَ اللَّهِ، وَسُنَّةَ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَتهذيب التهذيب (11 / 309(

 قال بن سعد كان ضعيفا قدريا وقال عمرو بن علي كان يحيى بن سعيد لا يحدث عنه وكان عبد الرحمن يحدث عنه وقال كان رجلا صالحا وقد روى عنه الناس وليس بالقوي في الحديث وقال البخاري: تكلم فيه شعبة وقال إسحاق بن راهويه عن النضر بن شميل قال شعبة لأن أقطع الطريق أحب إلى من أن أروى عن يزيد وقال زكريا بن يحيى الحلواني سمعت سلمة بن شبيب يقول سمعته وقال يزيد بن هارون سمعت شعبة يقول لأن ازني أحب إلى من أن أحدث عن يزيد الرقاشي قال يزيد ما كان أهون عليه الزنا قال سلمة بن شبيب فذكرت ذلك لأحمد بن حنبل فقال كان بلغنا أنه قال ذلك في أبان فقال أبو داود السختياني وكان في مجلس سلمة قاله فيهما جميعا وقال عبد الله بن إدريس سمعت شعبة يقول لأن ازني أحب إلي من أن أروي عن يزيد وأبان وقال أبو داود عن أحمد لا يكتب حديث يزيد قلت: فلم ترك حديثه لهوى كان فيه قال لا ولكن كان منكر الحديث وكان شعبة يحمل عليه وكان قاصا وقال عبد الله بن أحمد عن أبيه هو فوق أبان وكان يضعف وقال إسحاق بن منصور عن بن معين هو خير من أبان وقال بن أبي خيثمة عن بن معين رجل صالح وليس حديثه بشيء وقال معاوية بن صالح والدوري عن بن معين ضعيف وكذا قال الدارقطني: والبرقاني وقال الآجري عن أبي داود رجل صالح سمعت يحيى يقول رجل صدق وقال يعقوب بن سفيان فيه ضعف وقال أبو حاتم: كان واعظا بكاء كثير الرواية عن أنس بما فيه نظر وفي حديثه ضعف وقال النسائي: والحاكم أبو أحمد متروك الحديث وقال النسائي: أيضا ليس بثقة وقال بن عدي له أحاديث صالحة عن أنس وغيره وأرجو أنه لا بأس به لرواية

யஸீத் ருகாஷி பலவீனமானவர் என்று இப்னு சஅத் கூறியுள்ளார். யஹ்யா பின் சயீத் இவரிடமிருந்து ஹதீஸை அறிவிக்க மாட்டார். ஷுஅபா இவரை விமர்சனம் செய்துள்ளார். இவரிடமிருந்து அறிவிப்பது விபச்சாரம் செய்வதை விட எனக்கு வெறுப்பானது என்று கூறியுள்ளார். ஹதீஸ்களில் தவறிழைப்பவர் என அஹ்மது பின் ஹம்பல் கூறியுள்ளார். யஹ்யா பின் மயீன், யஃகூப் பின் அபீ ஷைபா, அபூ ஹாதிம், தாரகுத்னீ, புர்கானி ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். ஹாகிம், நஸாயீ ஆகிய இருவரும் இவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று கூறியுள்ளனர். இவரிடமிருந்து அறிவிப்பது ஆகுமானதில்லை என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் : 11 பக்கம் : 309)

இப்னு ஹஜர், தஹபீ ஆகியோரும் இவரை பலவீனமானவர் என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த செய்தியை யஸீத் பின் ருக்காஷியிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர் ஹிஷாம் பின் சுலைமான் என்பவரையும் அறிஞர்கள் பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர்.

الجرح والتعديل لابن أبي حاتم (9 / 62(هو هكذا عندي، وهشام أحب إلى من محمد بن سحاق.

242 هشام بن سلمان المجاشعى روى عن يزيد الرقاشى وبركة المجاشعى روى عنه أبو الربيع الزهراني والقاسم بن سلام بن مسكين وعبد الواحد بن غياث وهشام بن عبيد الله الرازي والليث بن خالد البلخى سمعت أبي يقول ذلك. نا عبد الرحمن أنا أبو بكر بن أبي خيثمة فيما كتب إلى قال حدثنا موسى بن اسماعيل نا هشام بن - سلمان المجاشعى وكان ضعيفا.

الضعفاء والمتروكون لابن الجوزي (3 / 175(3598 هِشَام بن سُلَيْمَان أَبُو يحيى الْمُجَاشِعِي يروي عَن يزِيد الرقاشِي قَالَ مُوسَى بن إِسْمَاعِيل ضَعِيف وَقَالَ ابْن حبَان ينْفَرد عَن الثِّقَات بِالْمَنَاكِيرِ لَا يجوز الِاحْتِجَاج بِهِ

இவர் பலவீனமானவர் என மூசா பின் இஸ்மாயீல் கூறியுள்ளார். இவர் நம்பகமானவர்களிடமிருந்து தவறான செய்தியை தனித்து அறிவிப்பவர் எனவும் இவரை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது எனவும் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.
நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல் (பாகம் : 9 பக்கம் : 62) ளுஅபாஉ வல் மத்ரூகீன் (பாகம் : 3 பக்கம் : 175)

மேலே நாம் குறிப்பிட்டுள்ள இந்தத் தொடர்கள் வழியாக மட்டுமே இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர்கள் அனைத்தும் பலவீனமாக இருப்பதால் இந்தச் செய்தி பலவீனமான செய்தியாகும்.

எனவே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இந்தச் செய்தியை நாம் கூறக்கூடாது. இதே கருத்தைத் தரக்கூடிய குர்ஆன் வசனங்களும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் உள்ளன. அவற்றை எடுத்துச் சொல்லலாம். உதாரணமாக ஒரு செய்தியை இங்கே சுட்டிக்காட்டுகிறோம்.

ஆதாரப்பூர்வமான செய்தி

மேலே நாம் சுட்டிக்காட்டிய செய்தி பலவீனமானதாக இருந்தாலும் அதன் கருத்து உண்மையானது என்பதில் நமக்கு எள் முனையளவு கூட மாற்றுக் கருத்தில்லை.

குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கமாகும் என வலியுறுத்தும் சில திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளை இங்கே தருகிறோம்.

திருக்குர்ஆன் வசனங்கள்

وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.  (அல்குர்ஆன் 6:153)


وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.  (அல்குர்ஆன் 3:132)

---------------------------------------------------------------------------------

يَسْأَلُونَكَ عَنْ الْأَنْفَالِ قُلْ الْأَنْفَالُ لِلَّهِ وَالرَّسُولِ فَاتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِنْ كُنتُمْ مُؤْمِنِينَ

நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! (அல்குர்ஆன் 8:1)
------------------------------------------------------------------------------------------------------------------


يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!  (அல்குர்ஆன் 8:20)
---------------------------------------------------------------------------------------------------------------------


يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُوْلِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.  (அல்குர்ஆன் 4:59)
--------------------------------------------------------------------------------------------------------------------


يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.  (அல்குர்ஆன் 33:71)

இது போன்ற கருத்தில் இன்னும் எராளமான திருக்குர்ஆன் வசனங்கள் உள்ளன.

நபிமொழிகள்

ٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَأْبَى قَالَ مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்'' என்று பதிலித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  நூல் : புகாரி (7280)
---------------------------------------------------------------------


عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ وَعَلَا صَوْتُهُ وَاشْتَدَّ غَضَبُهُ حَتَّى كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ يَقُولُ صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ وَيَقُولُ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ وَيَقْرُنُ بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى وَيَقُولُ أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ ثُمَّ يَقُولُ أَنَا أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ مَنْ تَرَكَ مَالًا فَلِأَهْلِهِ وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَإِلَيَّ وَعَلَيَّ و حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ كَانَتْ خُطْبَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ ثُمَّ يَقُولُ عَلَى إِثْرِ ذَلِكَ وَقَدْ عَلَا صَوْتُهُ ثُمَّ سَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ جَابِرٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ يَقُولُ مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَخَيْرُ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ ثُمَّ سَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ الثَّقَفِيِّ

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  (ஏதேனும் முக்கிய விஷயம் குறித்து எச்சரிக்கை செய்து) உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்து விடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப்போவது குறித்து "எதிரிகள் காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்' என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள். "அம்மா பஅத் (இறைவாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்'' என்று கூறுவார்கள்.  நூல் : முஸ்லிம் (1573)
-----------------------------------------------------------------------------------------------------------


أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ جَاءَ ثَلَاثَةُ رَهْطٍ إِلَى بُيُوتِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا أُخْبِرُوا كَأَنَّهُمْ تَقَالُّوهَا فَقَالُوا وَأَيْنَ نَحْنُ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ قَالَ أَحَدُهُمْ أَمَّا أَنَا فَإِنِّي أُصَلِّي اللَّيْلَ أَبَدًا وَقَالَ آخَرُ أَنَا أَصُومُ الدَّهْرَ وَلَا أُفْطِرُ وَقَالَ آخَرُ أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلَا أَتَزَوَّجُ أَبَدًا فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمْ فَقَالَ أَنْتُمْ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا أَمَا وَاللَّهِ إِنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ وَأُصَلِّي وَأَرْقُدُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், "(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், "நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் "நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்கஜடம்) வந்து, "இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),  நூல் : புகாரி (5063)
---------------------------------------------------------------------------------------------------

قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرِي وَأَعْتِقِي فَإِنَّمَا الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ ثُمَّ قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْعَشِيِّ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ مَا بَالُ أُنَاسٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ مَنْ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهُوَ بَاطِلٌ وَإِنْ اشْتَرَطَ مِائَةَ شَرْطٍ شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ

 “அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களுடைய அந்த நிபந்தனை வீணானது; (செல்லாதது;) அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே!  அல்லாஹ்வின் நிபந்தனைதான் நிறைவேற்றத் தக்கதும், உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்!” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி),   நூல்: புகாரி (2155)

----------------------------------------------------------------------------------------------------------------------

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவார் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் (3541)

இது போன்ற கருத்துள்ள நபிமொழிகள் ஏராளம் நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்