3/25/2013

மக்கத்து காஃபிர்கள் ஏன் காஃபிரானார்கள்

வானம் பூமி மலைகள் இவற்றையெல்லாம் படைத்தது அல்லாஹ் தான் என்பதை மக்கத்து காஃபிர்கள் நன்கு விளங்கி வைத்திருந்தார்கள். அல்லாஹ் கடவுள் என்பதை அவர்கள் மறுக்கவில்லை. மாறாக அவனை இறைவனாக ஏற்றிருந்தார்கள். இவ்வாறு பின்வரும் வசனங்கள் கூறுகிறது.
”வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ”அல்லாஹ்” என்று கூறுவார்கள். அப்படியாயின் ”எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?” அல்குர்ஆன் (29 : 61)



”வானத்தி­ருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ”அல்லாஹ்” என்றே கூறுவார்கள். ”அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை. அல்குர்ஆன் (29 : 63)

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?அல்குர்ஆன் (44 : 87)

இந்த அளவிற்கு அல்லாஹ்வைப் பற்றி அவர்கள் நம்பியிருந்தும் முஸ்­ம்களாக அவர்கள் இருக்கவில்லை. ஏனென்றால் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனையை வேண்டுவதைப் போல் நல்லடியார்களிடத்திலும் வேண்டினார்கள். அவ்­யாக்களிடம் பிரார்த்தனை செய்தால் அந்த அவ்­லி யாக்கள் இவர்களுக்காக பரிந்துரை செய்வார்கள் என்று கூறினார். அல்லாஹ்விடத்தில் தங்களை அவ்லி­யாக்கள் நெருக்கிவைப்பார்கள் என்றும் நம்பினர். இதனால் அல்லாஹ் அவர்களை காஃபிர் என்று கூறினான்.
அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ”அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். ”வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்­க் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறுவீராக!அல்குர்ஆன் (10 : 18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ”அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அல்குர்ஆன் (39 : 3)
மக்கத்து காஃபிர்கள் எண்ணியதைப் போல் நாமும் இறந்துவிட்ட அவ்­லியாக்கள் நமக்காக பரிந்துரை செய்வார்கள் என்று எண்ணிக்கொண்டு இறந்தவர்களிடம் துஆ செய்தால் நமக்கும் அந்த மக்கா காஃபிர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்