"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

1/11/2014

நரகத்து ஸலவாத்து!

  சலாத்துன் நாரியா ?
சலாத்துன் நாரியா என்ற சொல் நம் தமிழக மற்றும் இலங்கை முஸ்லீம்களுக்கு ,மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒன்றாகும். நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். சலாத்துன் நாரியா என்றால் நரகத்து சலவாத்து என்று பொருளாகும்.அதாவது நரகம் செல்ல விரும்பக் கூடியவர்கள் இந்த சலவாத்தை ஓதினால் எந்த சிரமும் இன்றி நேரிடையாக நரகம் செல்லலாம் ஏன்னென்றால் இந்த நரகத்தின் ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ர வாசகங்கள் தான் .
இதனை 4444, தடவை ஓதினால் செல்வம் பெருகும், நோய் நீங்கும், திருடர்கள் பயம் இருக்காது இன்னும் பல நன்மைகள் உண்டு என்ர நம்பிக்கையில் இஸ்லாமிய ? பெருமக்கள் தாங்கள் வீடுகளில் ஹஜ்ரத்மார்கலை வைத்து மிக விமர்சியாக ஓதி வருகிறார்கள் ஓதியவருக்கு ரூபாய்   கிடைக்கும்.
இந்த சலவாத்தை நபிகள் நாயகம் (சல்) அவர்களோ ! ஸகாபாக்களோ, யாரும் ஓதியது இல்லை மாறாக இது பிற்காலத்தில் மார்க்கத்தை விற்று பிழைப்பு நடத்தக் கூடிய சில முல்லாக்கலால் பிழைப்புக்காக உருவாக்கப் பட்ட ஒன்றுதான் இதன் காரணமாகதான் 4444 தடவை ஓத வேண்டும் என்று சாதாரனமாக யாரும் என்ன இயலாத எண்ணிக்கையை உருவாக்கி வைத்துள்ளனர்.இந்த சலவாத்தின் கருத்துக்கள் எந்த அளவிற்கு மார்க்கத்துடன் மோதுகின்றன என்பதை பாருங்கள்,,,,,,,,,,
சலாத்துன் நாரியாவின் பொருள்;; அல்லாஹ்வே! எங்களுடைய தலைவரான முஹம்மது அவர்கள் மீதும், அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஸஹாபிகள் மீதும் ஒவ்வொரு கண் சிமிட்டும் மர்றும் சுவாசிக்கும் நேரமும் உன்னால் அறியப்பட்ட அனைத்து என்ணிக்கை அளவிற்குப் பரிபூரண அருளையும், முழுமையான சாந்தியையும் பொழிவாயாக ! அந்த முஹம்மது எப்படிப்பட்டவர் என்ரால் அவர் மூலமாகத்தான் சிக்கல்கள் அவிழ்கின்றன அவர் மூலம் தான் தேவைகள் நிறைவேறுகின்றன அவர் மூலம் தான் நாட்டங்களும் அழகிய இறுதி முடிவுகளும் பெற்றுக் கொள்ளப்படுகின்றன,அவருடைய திருமுகத்தின் மூலம் தான்மேகத்திலிருந்து மழை பெறப்படுகின்றது, மேற்கண்ட சலவாத்தில் நபி(ஸல்) அவர்கள் மூலம் தான் சிக்கல்கள் அவிழ்க்கப்படுகின்றன துன்பங்கள் நீங்குகிறது தேவைகள் நிரவேறுகிறது என்றும் வருகிறது.
உண்மையில் சிக்கல்கள், தேவைகள் நிறைவேற்றுவதும் இறைவனுக்கு மட்டுமே உள்ள ஆற்றலாகும் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டு இறந்தவர்களுக்கோ, அல்லது நல்லடியார்களுக்கோ இது போன்ற ஆற்றல் இருப்பதாக கூறுவது இணைகற்பிக்கின்ற காறியமாகும்.அனத்து துன்பங்களில் இருந்தும் காக்கக்கூடுயவன் அல்லாஹ் ஒருவன் தான் அவனைத்தவிர இந்த ஆற்ரல் வேறு யாருக்கும் அணுவின் முனை அலவு கூட கிடயாது.
ஒவொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்கலை காப்பாற்றுகிறான்.அல்குரான்; 6/64..
நபி(ஸல்) அவர்களாக இருந்தாலும் தமக்கோ, மற்றவர்களுக்கோ, எவ்வித உதவியும் செய்ய முடியாது என்பதை திருமரை குரான் தெளிவு படுத்துகின்றது, அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை
நான் மறைவானதை  அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகமாக அடைந்திருப்பேன். எந்த தீங்கும் எனக்கு ஏற்பட்டு இருக்காது நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும் நற்செய்தி சொல்பவனாகவும் இருக்கிறேன், என்று (முஹம்மதே)கூறுவீராக! அல்குரான்;7/188,,,
நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன் அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன் என (முஹம்மதே) கூறுவீராக, நான் உங்களுக்கு தீங்கு செய்யவும் நன்மைசெய்யவும் அதிகாரம் பெர்றிருக்க வில்லை, என்றும் கூறுவீராக அல்லாஹ்விடம் இருந்து எவரும் என்னை காப்பாற்ற மாட்டார் அவனின்றி ஒதுங்கும் இடத்தையும் காணமாட்டேன் என்றும் கூறுவீராக,,,அல்குரான் ;72/20,21,22.,,,,

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைதவிர அதை நீக்குபவன் யாருமில்லை உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளை தடுப்பவன் யாரும் கிடயாது தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான், அவன் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன்...அல்குரான்;10/107,,,

நபியவர்களை இறைவனுக்கு நிகராக ஆக்குகின்ர இந்த சலவாத்தை நாம் ஓதலாமா ?? மேற்கண்ட ஸலவாத்தில் நபியவர்கள் மூலம் தான் நாட்டங்கள் நிரைவேறுகின்றன என்று வருகிறது, இதுவும் இணைகற்பிக்கின்ற வரிகளாகும்..... நபி(ஸல்) அவர்கள் எத்தனையோ நாட்டங்கள் நிறைவேறாமல் போய் இருக்கின்றது, நாட்டங்கள் நிறை வேற்றுகின்ற ஆற்றல் அவர்களுக்கு இருந்திருக்குமேயானால் அவர்கள் முதலில் தம்முடைய நாட்டங்களை நிறைவேற்றி இருக்க வேண்டும்,,,,, நபி(ஸல்) அவர்கல் முனாபிக்குகளின் தலைவனாகிய அப்துல்லாஹ் பின் ஸலூல் என்பவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்கள் ஆனால் அது நிரைவேறவில்லை.அது மட்டும் அல்ல அல்லாஹ் அதை மன்னிக்கவே மாட்டேன் என்று திருமறை வசனத்தையும் அருளினான். (முஹம்மதே) அவர்களுக்காக பவமன்னிப்புக் கேளும் அல்லது கேட்காமல் இரும் ! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமண்ணிப்பு கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவேமாட்டான், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்கு காரணம் குற்றம் புரியும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். அல்குரான் ,,,,9/80...
நபி(ஸல்) அவர்கள் தம்முடைய சிறிய தந்தையாகிய அபுதாலிப் ஏகத்துவ கொள்கையை ஏற்க வேண்டும் என விரும்பினார்கள் அவருடைய மரனத்தருவாயில் அவர்களிடம் லாயிலாக இல்லல்லாஹ் என்ற கலிமாவை கூறுமாறு மன்ராடினார்கள். அவர்கள் கலிமாவை மொழியாமல் மரணித்த பிறகும் அல்லாஹ் தடுக்கின்ர வரை பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்பேன் என்றார்கள், ஆனால், அவர்களின் இந்த மாபெரும் நாட்டத்தை அல்லாஹ் நிறை வேற்றிவில்லை மாறாக, நபிக்கு தான் நாடியதை செய்யும் ஆற்றல் கிடயாது என்பதை இது தொடர்பாக இறங்கிய வசனத்தின் மூலம் தெளிவு படுத்துகிறான்,, முஹம்மதே !நீர் விரும்பியோரைஉம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது,! மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.அவன் நேர்வழி பெற்றோரை நன்கறிந்தவன்...அல்குரான்;; 28/56,,
மேலும் மக்காவில் வாழ்ந்த அபுஜஹல், உத்பா, ஷைபா போன்ர காபிர்களும் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என பேராவல் கொண்டிருந்தார்கள்.  இதனை பின் வரும் வசனத்தின் மூலம் விளங்கி கொள்ளலாம் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்க்காக உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்..அல்குரான் 26/3,,,,,, நபியவர்கள் தம்மை அழித்துக் கொள்ளும் அளவிற்கு ஒன்றை விரும்பியும் அந்த நாட்டம் நிறைவேர வில்லை நாட்டங்கலை நிரைவேற்றக் கூடியவன்அல்லாஹ் ஒருவன் தான் நபியவர்கள் மூலம் நாட்டங்கள் நிறைவேறுகிறது என்ற இந்த சலவாத்தில் வரக்கூடிய வரிகல் நிரந்தர நரகத்தை தரக்கூடிய வரிகளே அழகிய இறுதி முடிவை தருபவன் யார் ??? நபியவர்கள் மூலம் தான் அழகிய இறுதி முடிவு நமக்குக் கிடைக்கிரது என சலாத்துன் நாரியாவில்வருகிறது இதுவும் நிறந்தர நரகத்தில் சேர்க்கின்ர இனைகற்பிக்கின்ற வரிகளாகும் ஒருவன் மரணிக்கும் போது ,,, சொர்க்கவாசியாக மரணிப்பதும் நரகவாசியாக மரணிப்பதும் இரைவனின் நாட்டமே !!ஆக இப்படிப்பட்ட வரிகல் கொண்டு சலாத்துன் நாரியா எழுதப்பட்டது,,,
ஒருமனிதன் இயற்றிய வார்த்தை இதை ஓதுவது என்று ஏமாற்றி சம்பாத்தியம் செய்யும் முல்லாக்களுக்கு எச்சரிக்கை

அல்லாஹ்வை பயந்து கொள் நபி(ஸல்) அவர்கள் சொல்லி தந்த சலவாது அல்லாஹும்ம ஸல்லிஅலாமுஹம்மதின் கமாசல்லைத்த அலாஇப்றாஹீம வாலாஆலி இபுறாகீம இன்னக்க ஹமீதுன் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலாமுஹம்மதின் வலா முஹம்மதின் காமா பாரக்த்த அலாஇப்ராஹீம வாலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத்,
,,,,,இந்த சலவாத் ஓதினால் நன்மை

நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹும்ம ஸல்- அலா முஹம்மதின் வ அலா ஆ- முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆ- இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆ- முஹம்மதின் கமா பாரக்த அலா ஆ- இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று சொல்லுங்கள்'' என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி) நூல் : புகாரி 4797


புர்தா கவிதையை பாடலாமா ??
  இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்