"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

2/17/2013

பிணக்குழியில் பிரார்த்தனை செய்யலாமா ?


பிணக்குழியில் பிரார்த்திக்கும் இந்த கேடுகெட்டவர்களை விட.. அறியாமையினால் கற்சிலைகளை வழிபடுபவர்கள் மேல்...........

பிணக்குழியில் பிரார்த்திக்கும் இவர்களிடம் நாம் இவ்வாறு பிரார்த்திப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? என்று கேட்டால் நாங்கள் இவர்களிடம் பிரார்த்தனை செய்ய வில்லை அல்லாஹ்விடம் தான் பிரார்த்திக்கிறோம் என்று கதைப்பார்கள்..

அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது உண்மை என்றால் அல்லாஹ் எங்கிருந்து அழைத்தாலும் யார் அழைத்தாலும் எப்படி அழைத்தாலும் பதிலளிக்கக்கூடியவன். அல்லாஹ்விடம் கேட்க பிணக்குழிகளுக்கு செல்லத்தேவையில்லையே பிறகு எதற்காக பிணக்குழிகளுக்கு செல்கிறீர்கள்?.. அப்படி என்றால் அல்லாஹ்வை எப்படி நம்ப வேண்டுமோ அப்படி நம்ப வில்லை...

அடுத்து, நாங்களேன் தெரியுமா? பிணக்குழிக்கு செல்கிறோம் அங்கு சென்று பிரார்த்திக்கிறோம்? அங்கே அடங்கி உள்ள நல்லடியார் நமக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைப்பார்கள், நாங்கள் அவ்லியாக்களிடம் கேட்கவில்லை நாங்கள் அவ்லியாவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுங்கள் என்றுதானே கேட்கிறோம் இது எப்படி தவறாகும்? என்று கேட்கிறார்கள்..

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் தன்னுடைய நபியை பார்த்து நபியே உம்மால் இறந்தவரைச்செவியேற்கச்செய்யமுடியாது என்று.. ந‌பிகள் நாயகம் ஸல் அவர்களுக்கே இறந்தவரை செவியேற்கச்செய்ய முடியாது அப்படி இருக்கும் போது நீங்கள் கேட்டால் அவர்கள் எப்படி செவியேற்பர்கள் என்று கேட்டால் அதி புத்திசாலி தனமாக பத்ரு போரில் கொல்லப்பட்ட உத்பா ஷைபா போன்றவர்களைப்பார்த்து நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பேசினார்களே... அப்போது அவர்கள் கேட்டார்களே.. என்று பதில் வரும் ..
சரி அப்படி வைத்துக்கொண்டாலும் உத்பா ஷைபா போன்றவர்களே இறந்தபின் கேட்கும் போது நல்லவர் கெட்டவர் யார் இறந்தாலும் இறந்த பிறகு கேட்பார்கள்தானே? பிறகு ஏன் ஒரு குறிப்பிட்ட பிணக்குழிகளுக்கு மட்டும் சென்று பிரார்த்திக்கிறீர்கள்? என்று கேட்டால், இவர்கள் நல்லடியார்கள் நாதாக்கள் சுகதாக்கள் அன்பியாக்கள் என்று கதை விடுவார்கள்...

அல்லாஹுத்தஆலா தனது திரு மறைக்குர்ஆனிலும், நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வஹி மூலம் குறிப்பிட்டு சொன்ன ஒரு சிலரைத்தவிர நாம் யாரையும் நல்லடியார்கள் என்று முடிவு செய்ய முடியாதே அப்படி செய்தால் அல்லாஹ்வின் அதிகாரத்தை நாம் கையில் எடுத்துக்கொண்டது போல் ஆகுமே என்று கேட்டால் சரியான பதில் வராது,,..

அங்கே அடங்கியிருப்பவர்கள் நல்லடியார்கள் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?அல்லாஹ் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு வஹி அறிவித்தது போல் உங்களுக்கு அல்லாஹ்விடம் இருந்து வஹி வந்ததா? என்று கேட்டால் அதற்கு தெளிவான பதில் இருக்காது இந்த தெளிவாக வழி கெட்ட கூட்டத்திடம்..

இறுதியாக அதிபுத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு ஒரு பதிலை எல்லோரும் அசந்து போகும்படி சொல்வார்கள்... இவர்கள் இறந்தவர்கள்தான் இவர்களை எங்களால் செவியேற்கச்செய்யமுடியாது.. ஆனால் அல்லாஹ்வால் முடியும் இவர்களுக்கு கேட்கும் சக்தியைதர... என்ன ஒரு அதி அற்புதமான பதில் அடேய்..கூமுட்டைகளா... அல்லாஹ் நாடினால் கற்களையும் கேட்கச்செய்வான்.. மண்ணையும் கேட்கச்செய்வான்.. எதையும் செய்ய ஆற்றல் மிக்கவன் அல்லாஹ் அது எங்களுக்கு தெரியும்... நீங்கள் போய் கேட்கிறீர்களே ஒரு சில பணக்குழிகளிடம் மட்டும் அவற்றிற்கு மட்டும் அல்லாஹ் கேட்கும் சக்தியை தந்திருக்கிறான் என்று எவ்வாறு கண்டுபிடித்தீர்கள்?

இவர்களை நம்பி இவர்கள் சொல்வதை கண் மூடி பின்பற்றும் எனதருமை அப்பாவி இஸ்லாமிய சகோதரர்களே... அவர்கள் கூற்றில் உண்மை இருந்தால் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளாத மற்ற சகோதரர்கள் இவர்களை விட மேல்...

அவர்கள் தங்களுடைய கண்களுக்கு புலப்படாத கற்பனைகடவுள்களை சிலைகளாக கற்களிலும், தங்கத்திலும், இன்னும் மற்றவற்றிலும் வடித்து கோவில் கற்பகிரகத்தில் வைத்து கடவுள்கள் சாகவில்லை உயிருடன் இருப்பதாக நினைத்துக்கொண்டுதான் அதற்கு சிறப்பு செய்கிறார்கள். ஆனால் இவர்கள் தங்களின் கண்களுக்கு முன்னால் வாழ்ந்து தங்களின் உயிரைக்கூட காப்பாற்றிக்கொள்ள முடியாத மர‌ணித்துப்போய் மண்ணோடு மண்ணாகி மக்கிப்போனவர்களை கடவுளாக வணங்குகிறார்கள்....என்பதுதான் உண்மை. அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறுவது உண்மையல்ல என்பதை புரிந்து கொண்டு இவர்களை புறக்கணிக்க வேண்டும்.

எனவே தங்களின் அறியாமையினால் கற்சிலைகளை கடவுளாக கருதி வழிபடும் மக்கள்.. என்றென்றும் உயிருடன் இருக்கும் ஹைய்யுல் கைய்யூம் நித்திய ஜீவன் அல்லாஹ் வை ஈமான் கொண்டுள்ளோம் என்று கூறி பின் பிணக்குழியில் பிரார்த்திக்கும் இந்த கேடுகெட்டவர்களை விட மேல்... அல்லாஹ் அனைவருக்கும் நேர் வழி தருவானாக..

நன்றி: சகோ. a.abdul wahab. salem.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத் செய்யுமாறு கூறியுள்ளனர். அந்த அடிப்படையில் நல்லடியார்களின் அடக்கத்தலம் சென்று ஸியாரத் செய்வதும், அவர்களது துஆக்களை வேண்டுவதும் எப்படித் தவறாகும் என்று சிலறுக்கு சந்தேகம் வரலாம்  அப்படி சந்தேகம் வருபவர்கள் இங்கே கிளிக் செய்யவும்

2 comments:

  1. PRACTICE OF HOLY PROPHET (SAW) TO VISIT GRAVES :-

    Ibrahim bin Muhammad (ra) reported that Holy Prophet used to visit the graves of martyers of Ohud War in the beginning of year and said : السَّلاَمُ عَلَيْکُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَي الدَّارِ.
    Salaam on you ! As a result of your patience, what a nice place you got in Akhirah
    Abu Bakr, Umar and Usman (ra) also used to visit in the same way.

    ref :-
    1.. Abdur Razzaq al-musnaf : 3:573
    2.. Aini , Umdat-ul-Qari, 8:70
    3.. Tabri, Jami Al-Quran, 13:142
    4.. Imam Suyuti, Dur-ul-Mansoor, 4:641
    5.. Ibn-e-Kathir, tafseer-ul-Quran-ul-Azeem,

    After Having made clear from Quranic Verse, lets see this subject in the light of Hadith :-

    Holy Prophet (saw) said: “Do Visit the graves because this practice reminds the aakhirah (life hereafter)

    ref:
    1.. Muslim 2:671..976
    2.. Haakim al-mustadrak: 1:531..1390

    Blessings of Visiting Holy Prophet (saw)’s grave :-

    Holy Prophet (saw) said : The one who Visits my grave, My intercession (Shifa’ah) is due for him (Essentially the visitor will get Shifa’ah) of the Holy Prophet (saw) on the day of judgement)
    ref :
    1. (Dar Qutni, Al-Sunnan 2: 278)
    2. (Behaqui, Shohb-ul-Imaan 3: 490, and 4159 and 4160)
    3. (Hakeem Tirmazi, Nawadirul Usool, 2 : 67)

    ReplyDelete
  2. Java @ pls... visit
    http://silaiyumkaburum.blogspot.com/2013/02/ziyarath-seyya-quran-hadees-sollavillaya.html

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்