"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

5/15/2013

நல்லடியார் என்றால் விழா எடுக்கலாமா..?


பொதுவாக மனிதனின் செயல்பாடுகள் அனைத்தும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் உள்ளன. ஒருவரை நல்லவரா..? தீயவர..? என்பதினை அறிய அவரின் வெளிப்படையான செயல்களை வைத்துதான் தீர்மானிக்க முடியும். உதாரணத்திற்கு, ஒருவர் நற்செயலை வெளிப்படுத்தினால் நல்லவர். அது போல தீய செயலை வெளிப்படுத்தினால் தீயவர்.வெளிப்படையான செயல்களைத் தான் நாம் அறிய முடியுமே தவிர, அவரின் அந்தரங்கதையோ, மனதில் உள்ளதையோ நம்மால் அறிய முடியாது.
இவ்வாறிருக்கும் நிலையில் நாம் எப்படி ஒருவரை இறை நேசர் என தீர்மானிக்க முடியும் என்பதினை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒருவர் இறை நேசரா...? என்பதினை அல்லாஹுவே அறிவான் .அல்லாஹுவின் நேசர்களின் இறுதி பட்டியல் நாளை மறுமையில் தான் வெளியிடப்படும். ஆனால் இறைவன் தம்முடைய வேதத்தில் இறைத் தூதர்களையும், சில நல்லடியார்களையும் அவர்களின் தூய வாழ்கையை  நமக்கு கூறுகின்றான். அத்தகையவர்களை போல நாமும் தியாகம் செய்ய வேண்டும் என்று தான் கூருகின்றானே தவிர, அவர்களுக்கு தர்காக்கள் கட்டி வழிபாடுகள், வான வேடிக்கைகைகள், யானை, குதிரை, ஒட்டகம் ஊர்வலங்கள், ஆடல், பாடல்கள், என விழாக்கள் நடத்த எங்கும் சொல்லவில்லை.
உதாரணத்திற்கு மர்யம்(அலை) அவர்களைப் பற்றி பார்ப்போம்.
(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது, (19:16)
''மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண் களை விட உம்மைச் சிறப்பித்தான்'' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக! (3:42)
இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். (66:12)
நாம் இன்று யாரைலாமோ இறை நேசர் என்று கூறி கொள்கின்றோம். ஆனால் அல்லாஹுவோ நம்பிக்கை கொண்டோருக்கு உதாரணாமாக மர்யம்(அலை) அவர்களை நமக்கு கூறுகின்றான். நல்லடியார்களுக்கு கொடியேற்றி விழா எடுக்கணும் என்றிருந்தால் நாம் முதலில் இவர்களுக்கு தான் எடுக்கணும்.
யாராவது கூறுவார்களா...? மர்யம்(அலை) அவர்களை நினைவு கூறுவதற்காக அவர்களுக்கு ஆலயத்தை எழுப்பி, கொடியேற்றி விழாக்கள் எடுத்து வழிபாடு நடத்துவதற்கு. அவர்கள் கூறமாட்டார்கள் ஏன் என்றால் மர்யம்(அலை) அவர்களுக்கு வழிபாடு நடத்திய நஸரானிகளை தான் அல்லாஹ் வழிதவரியவர்கள் என்று கூறியுள்ளானே.
சூரத்துல் பாத்திஹாவில் நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. என்று ஒவ்வொரு தொழுகையிலும் பிரார்த்தனை செய்துவிட்டு, வழிதவரிய நஸரானிகளின் வழிமுறையை பின்பற்றி நடந்தால் என்ன என்று கூறுவது. பின்வரும் நபிமொழி
நம் நடைமுறையை ஊர்ஜீதப்படுத்துவதைப் பாருங்கள்.
"நீங்கள் உங்கள் முன்னோர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள். எதுவரை என்றால் அவர்கள் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் நீங்களும் அதனுள் நுழைவீர்கள்" என்று.அதற்கு நாங்கள் (நபித்தோழர்கள்) "அவர்கள் யகூதி, நஸரானிகளா? என்று கேட்டதற்கு, வேறு யார் என்று பதிலளித்தார்கள். நூல்: (புகாரி, முஸ்லிம்)மேற்கூறிய நபிமொழி நமக்கு தெரிவிக்கும் அடிப்படை செய்தி என்னவென்றால், யூத,கிருத்துவர்கள் எதை செய்தார்களோ அந்த செயலை முஸ்லிமும் வருங்காலங்களில் செய்பவனாக இருப்பான் என்பதை முன்னறிவிப்பாக சொல்லப்பட்டுள்ளது .

இதன் அடிப்படையில், இன்று முஸ்லிம் சமுதாயத்தில் உலாத்திவிடப்பட்டிருக்கும் காரியங்களை இஸ்லாமிய மார்க்க அடிப்படையோடு ஒப்பிட்டு நோக்கினால் நமக்கு இதற்கான விடைக் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.

தர்கா வழிபாடு
ம் யூத,கிருத்துவர்களின் செயல்களேயாகும் 

நல்லடியாரின் பெயரிலோ, அல்லது அவரின் அடக்கதலத்திலோ ஆலயத்தை எழுப்பி, வணக்க வழிபாடு நடத்துவது அதாவது அறுத்து பலியிடுவது, நேர்ச்சை செய்வது. பிரார்த்தனைகள் தேவை கேட்பது. விழாக்கள் எடுப்பது போன்ற காரியங்கள் யூத,கிருத்துவர்களின் செயல்கலேயாகும்

இன்று இதே காரியத்தை அதாவது (முஸ்லிம் ,அவ்லியாக்கள், நம்முன்னோர்கள்) மரணித்தவரின் கப்ரில் ஒரு ஆலயத்தை எழுப்பி யூத,கிருத்துவர்கள் செய்ததை போன்று முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் செய்துவருகின்றனர். 

1. ஒருவேளை   முஸ்லிம்கள் செய்வது சரிதான் என்று கூறினால் அதற்கு தகுந்த ஆதாரம் காட்டவேண்டும். அதாவது நபி(ஸல்) அவர்கள் மரணித்தவரின் கப்ரில் ஒரு ஆலயத்தை எழுப்லாம் என்று கூறியுள்ளார்கள். என்று கூற வேண்டும்

2. அல்லது முஸ்லிம்கள் செய்வது நபிமொழிகள் அடிப்படையில் தவறு தான் என்று   வெளிப்படையாக கூறுங்கள்.

 //நமக்கு நம்முன்னோர்கள் இருக்கும்போது அவர்களின் அழகிய வழிமுறையை பின்பற்றுவது ஒருபோதும் தவறியோர் வழியல்ல.////    என்று சிலர் நினைக்கலாம்

 ஒரு செயல் நபி(ஸல்) அவர்களால் தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டுவிட்டால் அது யாரு செய்தாலும் தவறு தான்.

இல்லை இல்லை யார் யகூதி, நஸரானிகளாக முன்னோர்களை கொண்டு அவர்களை பின்பற்றுகின்றார்களோ அதுதான் தவறு. அதுவே நமது முன்னோர்கள் வழியில் வந்தால் அது தவறில்லை என்று நினைக்கிறார்கள் போலும்
முன்னோர்கள் எதை செய்தாலும் சரி என்று நினைத்தால் இதற்கு அல்லாஹ் ஒருவசனத்தை குறிப்பிடுகின்றான் கவனித்து படியுங்கள்.

"அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்" என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் "(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்" என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?) (31:21)

அல்லாஹுவின் நேசத்தை பெற எளிய வழி இதோ பாருங்கள்..
.
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (3:31)
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவுவைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப் போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது". (அல்குர்ஆன் 33:21)
அன்பார்ந்த அல்லாஹுவின் நல்லடியார்களே! அல்லாஹுவின் நேசத்தை பெறுவதற்காக ஆண்டுக்கணக்கில் தவம் இருந்து சிரமப்பட தேவையில்லை. இரவு முழுக்க ஒற்றை காலில் நின்று வணங்கத் தேவையில்லை, முறையாக இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையை பின்பற்றி நடந்து அல்லாஹுவின் நேசத்தை பெற்று நாம் உயர்ந்த சுவனத்தை பெறுவோமாக!
எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.(3:8)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்