யானைக்கு ஒரு தர்ஹா!
குதிரைக்கு ஒ(இ)ரு தர்ஹா!!
கழுதைக்கு ஒரு தர்ஹா!!!
பச்சை கிளியிட்கு ஒரு தர்கா !!!
கழிப்பறைக்கு ஒரு தர்ஹா!!!!
வியப்பாக இருக்கிறதா?
ஆம். இவையெல்லாம் உண்மை தான்!
நெல்லை மாவட்டம் பொட்டல் புதூரில் ‘மைதீன் பிச்சை’ யென்ற யானைக்கு தர்ஹாகட்டி வழி படுகிறார்கள். பாக்கியம் பெற்ற யானை!
மேற்கொண்டு படியுங்கள் !
எழுபது வருடங்களாக ‘பள்ளிவாசல் யானை’ என்ற பெருமையோடு நெல்லை மாவட்டத்தின் மூலை முடுக்குளில் எல்லாம் பவனி வந்து கொண்டிருந்த பொட்டல்புதூர் மொய்தீன் பிச்சையை (ஹபீப் ராஜா) காலன் பறித்தபோது சுற்று வட்டடாரங்களில் இருந்து பெருமூச்சோடும், கண்ணீரோடும் பல்லாயிரம் மக்கள் செலுத்திய இறுதி அஞ்சலி, ஏட்டில் எழுத இயலாத பாசம் கலந்த நிகழ்ச்சியாகும்.
மைசு10ர் மகாராஜா தனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததற்காக
நேர்ச்சைக் கடனாக இந்தப் பள்ளிவாசலுக்கு இந்த யானையை வழங்கியபோது இதன் வயது 15. இப்போது 85 என்று சொன்ன மாவுத்தர் செய்யது முஹம்மது மைதீன் மேலும் சொன்னார்.

முக்கூடல்
பீடிச்சக்கரவர்த்தி த.பி. சொக்கலால் அவர்களின் மகன் காலஞ்சென்ற
அரிராம்சேட், சொந்தமாக 3 யானைகள் வைத்திருந்தார். ஆனாலும் ஹபீப்ராஜா மீது
அவருக்கு தனிப்பாசம். இதற்கு மட்டும்தான் ஹல்வா கிண்டி போட்டார். அவர்
தரும் ஹல்வான்னா இதுக்கும் உசிரு. அதுமட்டுமா? இந்த யானையின் 4
கால்களுக்கும் செருப்பும் தச்சி கொடுத்தாரு. அவர் கார் சத்தத்தை கேட்டுட்டா
ஹபீப்ராஜா பின்னாலேயே ஓடும்.
தமிழ்நாட்டில் பெரிய தலைவர்களுக்கெல்லாம் (காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்) இது மாலை போட்டிருக்கு. கடைசியா சேரன்மகாதேவியிலே வச்சு ஜெயலலிதாவுக்கு மாலை போட்டுச்சு.
இந்த யானை நாக்குமேல வச்ச பழத்தை பிள்ளை இல்லாதவங்க சாப்பிட்டா கண்டிப்பா கொழந்தை பொறக்குமுங்க. ‘என் அனுபவத்துல 30 பேர்களை நான் பார்த்திருக்கேன்’ என்றார் யானைப்பாகன்.
பள்ளிவாசல் முன்னால் 25அடி சதுரத்தில் 15அடி ஆழத்தில் தோண்டப்பட்ட புதை குழியினுள் 2 டிராக்டர்களின் உதவியுடன் யானையை பொதுமக்களில் சுமார் 50 பேர் இழுத்து வந்து தள்ளியபோது பல்லாயிரம் மக்கள் கூட்டம் ‘ஹோ’ என்று அழுத காட்சியும் ‘நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்ற இறைவனை போற்றும் பாங்கொலியும்’ ‘முருகா முருகா’, ‘கர்த்தரே கர்த்தரே’ என்று அவரவர் வணங்கும் தெய்வங்களின் பெயர்களை உரக்கக் கூவும் ஓசைகளும் ஒருவிதமான சோகத்தின் கனத்தை உள்ளங்களிலே நிறைத்தது.
குழியில் வைத்த பின்னும் பால் ஊற்றுதல், காசுகளை போடுதல், புத்தம் புது கைத்தறி துண்டுகளை வீசுதல் என்று சுமார் 5 மணிநேரம் இறுதி அஞ்சலிக்கு பிறகு பொங்கிய வேதனையுடன் குழியில் மண்ணை தள்ளி நிரப்பினார்கள். இப்போதும் யானையின் சமாதிக்கு மக்கள் அஞ்சலி செலுத்த, வந்து கொண்டேதான் இருக்கின்றார்கள்.
நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.
நன்றி 20-08-86 ‘தேவி’
குறிப்பு: ‘ஜனாஸாத் தொழுகை நடைபெற்றதா’? என்பதும் கராமத்துகள் நடப்பதாக கதை விடப்படுமா என்பதும் தெரியவில்லை எப்படியோ தமிழகத்துக்குப் புதியதாக மேலும் ஒரு தர்ஹா கிடைத்துவிட்டது.
குதிரைக்கு ஒரு தர்ஹா! அல்ல இரு தர்காக்கள்

1)பார்வதிபுரத்தில்
இருந்து பாறையடி மலையடிவாரம் நோக்கி செல்லும் வழியில் கால்வாய் ஓரமாக ஒரு
தர்ஹா உள்ளது. அங்கே நடந்த ஒரு போரில் தலைமையேற்று இறந்த ஒரு அரபு வீரரின்
நினைவுக்காக உருவாக்கப்பட்ட தர்ஹா அது. அந்த தர்ஹாவுக்குச் செல்லும்
வழியில் கால்வாய்க்கரையிலேயே இன்னொரு தர்ஹா உள்ளது. அது போரில் இறந்துபோன
ஒரு குதிரையின் கல்லறை கூரையோ கட்டிடமோ இல்லை. வெறும் ஒரு கல்லறை மட்டுமே
உள்ளது. வருடத்தில் ஒருமுறை மட்டும் அதன்மேல் பச்சைப்போர்வை விரித்து
ஊதுபத்தி ஏற்றி வணங்குவார்கள்.
2) கன்னியா குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் முஹ்யித்தீன் பள்ளிவாசல் எதிரிலுள்ள கப்ருஸ்தானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கப்ரடி அவ்லியாவின் பக்கத்து கப்ரு,அவர்; பயணம் செய்த குதிரையின் சமாதி! இதற்கும் ஆண்டு தோறும் விழாக்கள் எடுக்கின்றனர். கொடுத்து வைத்த குதிரை!
ஒருவேள கபுரடி அவுலியா (?) நாய் வளர்த்திருந்தால்.......... நாயிற்கும் தர்கா இருந்திருக்கும்
நல்லவேள அவர் நாய் வழக்கவில்லை
பச்சைக்கிளியிட்கு ஒரு தர்கா ..... !!! வை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும் இந்த கிளி திருச்சியில் சமாதி கொண்டிருக்கும் பாதுஷா தபல் நாயகம்(?) அவர்களுக்கு பக்கத்தில் அடங்கப்பட்டுள்ளதாம், முழு குர் ஆணை யும் மனனம் இட்டுள்ளதாம்
பாதுஷா அவிளியா(?) கபுரை தரிசித்து விட்டு இந்த கிளியின் கபுரையும் தரிசிப்பார்கலாம்
கழுதைக்கு ஒரு தர்ஹா!
திருநெல்வேலி பேட்டையிலிருந்து சேரன்மாதேவி செல்லும் வழியில் ஓரிடத்தில் பெயர் தெரியாத அவ்லியா ஒருவர் கழுதையில் பயணம் செய்து வந்தார். திடீரென்று ஒருநாள் அது இறந்து விடவே அங்கேயே அடக்கம் செய்துவிட்டார்கள்.இன்று அதற்கும் வழிபாடு நடக்கிறது. அதிர்ஷ;டக்காரக் கழுதை!
கழிப்பிடத்திற்கு ஒரு தர்ஹா!
கேரளாவில் கொல்லம் முல்லக்கல் அருகே ஒருகழிப்பிடம் (டாய்லெட் கட்டிடம்) இருக்கிறது. அது இன்று ஒரு தர்ஹாவாக ஆராதனை செய்யப்பட்டுவருகிறது. அங்கே சென்ற கப்ரு பக்தரான மதபோதகர் ஒருவர் மக்கள் கூட்டமாகச் செல்வதைப் பார்த்து தானும் சென்று தமது ஸியாரத்தை மிகவும் பக்தியோடு முடித்துக்கொண்டு திரும்பினார். பின்னர் அது பற்றி விசாரித்த போது தான் ‘அது அவ்லியாவின் கப்ரல்ல. அது மக்கள் செல்லும் ஒரு பொதுக் கழிப்பறை’ எனத் தெரிய வந்தது. தரிசனத்துக்குரிய தர்ஹா! என்னே மக்களின் மதியீனம்.
இதில் படித்தவர்களும் பலியாகிறார்களே! பரிதாபமாக இருக்கிறது. பக்திப்போதையில் எதையுமே விசாரிக்காமல் கண்மூடித்தனமாக செய்யும் வழிபாடுகளின் இலட்சணத்தைப் பாருங்கள்!

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்