"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

9/29/2013

ஷேஹுமார்கள் காலில் விழலாமா?

ஷேஹுமார்கள். ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின் கால்களைக் கழுவி, கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் தமது வாழ்நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லை. அறியாத சிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத் தடுக்காமலும் இருந்ததில்லை.

















நபிகள் நாயகம் صلى الله عليه وسلم காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி:


நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். "இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்'' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து "நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்'' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் "(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?'' எனக் கேட்டார்கள். "மாட்டேன்'' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் "ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் رضي الله عنه நூல்: அபூதாவூத் 1828

தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது ""எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது'' என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் காரணம் காட்டுகிறார்கள். காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.

உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத்தலத்தில் விழுந்து பணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள். எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத்தலத்தில் கும்பிடாதீர்கள் என்று வாழும் போதே எச்சரித்துச் சென்றனர்.

அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது

'எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்' என்று கூறுகின்றனர். 'அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவமாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?' என்று கேட்பீராக! (07:28)

அறிவீனர்கலான மக்கத்து காபிர்கள் வெட்கக்கேடான ஒரு காரியத்தை செய்து விட்டு 'இதை எங்கள் அப்பன் பாட்டன் செய்தார்' எனக் கூறியும் “அல்லாஹ்தான் இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்” என இறைவன் மீது அவதூறு சொல்லியும் வெட்கக்கேடுகளை நியாயப்படுத்தி வந்தனர். இப்போக்கை மறுத்தே மேற்குறித்த இறைவசனம் அருளப்பட்டது.

இன்று எம்மில் சிலர் ஷெய்கு நாயகத்தின் பாதங்களைக் கழுவிக் குடிக்கும் பக்த கோடிகளாக உலா வருவதை நாம் காணுகிறோம்.
“ஒருவரின் காலைக் கழுவிக் குடிப்பது அருவருக்கத்தக்கது” என்ற சாதாரண உண்மையைக் கூட இந்த மூடர்கள் உணர்வதில்லை!
ஷெய்கு நாயகம் உண்டு பருகினால் மலஜல கூடத்திற்குப் போவார் என்ற யதார்த்தமும் இந்த அறிவு ஜீவிகளுக்குப் (?) புரிவதில்லை! தனிமனிதன் மீது கொண்ட குருட்டு பக்தியால் எந்த வெட்கக்கேடையும் செய்ய சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் தயங்குவதில்லை.
வாப்பா நாயகம் (?) கைகழுவிய தண்ணீரை போத்தல்களில் அடைத்து வைத்து ஸம்ஸம் நீரை அருந்துவது போன்று அருந்தும் அப்பாவிப் பெண்கள் எமது சமூகத்தில் இருக்கிறார்கள். “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” எனக் கேட்டு விட்டால் “எங்கள் மூத்தவாப்பா இப்படித்தான் செய்வார்” என பொருப்பில்லாமல் பதில் சொல்லுகின்றனர். “மூத்தவாப்பா என்ன? மூத்தம்மா என்ன?” அவர்கள் இருவரையும் படைத்த ரப்புல் ஆலமீன் இப்படி அசிங்கத்தைச் செய்யும் படி எம்மைப் பணித்திருக்கின்றானா? எனக் கேட்டால் 'நாம் முன்னோர்களைத் திட்டுவதாகக்' கூறி எம்மோடுள்ள தொடர்புகளைத் துண்டித்து விடுகின்றனர். இந்த முட்டாள்தனத்திற்கும் அடிப்படைக் காரணம் மார்க்கத்தை அதன் தூயவடிவில் கற்காமல் இருப்பதுதான்!

பெரியார் கால்களை முத்தமிட  மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது என்று கூறி சில ஆதாரங்களை எடுத்துரைக்கின்றனர். இந்த ஆதாரங்கள் செயல்படுத்துவதற்கு ஏற்றவையா? அதன் தரம் என்ன? என்பதை காண இங்கே கிளிக் செய்யவும்

 அல்லாஹ் மிக அறிந்தவன் ...............

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்