"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

10/09/2013

தரீகத் + ஹகீகத் + மஃரிபத் = முசீபத்


---///ஸெய்யிதுனா அலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மற்றும் ஸஹாபாக்கள் இன்னும் வேறு பெரியார்களில் நின்றும் ஆரம்பமான ஆன்ம சந்ததியாகியஸில்ஸிலாவின் தொடர்பு கொண்டு, அனுபவ வழிகளைப் பற்றிய மார்க்கங்களைத் தெரிந்தொழுகிய காரணத்தால்இல்முல்லதுன்னீ எனும் இறைசார்பிலிருந்து அருளப்படும் மெய்ஞ்ஞான பாக்கியம் பெற்றார்கள்,///---

ஓர் அறிவுப்பூர்வமான மார்க்கத்தில் திட்டமிட்டு ஓர் இடைத்தரகை யூதச் சிந்தனை கொண்டு, ஷியாக்களின் திட்டப்படி, ஷரீஅத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பாதை - இரகசியப் பாதை - அந்தரங்கப் பாதை - ஆன்மீகப் பாதை என்றெல்லாம் புது சித்தாந்தத்தை, பொய் சித்தாந்தத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.
அதற்கு தரீகத் (பாதை), ஹகீகத், (உண்மை), மஃரிபத் (அறிதல்) பெயரிட்டுள்ளனர். இந்த அகமிய ஞானப் பாட்டை வழிவழியாகக் கொண்டு போய் அலீ (ரலி) அவர்களிடமிருந்து வந்ததாகக் கூறுவர். ஆனால் இது உண்மையா?
நிச்சயமாகக் கடைந்தெடுத்த பொய்! இது அலீ (ரலி) அவர்களின் காலத்திலேயே தலை தூக்கியது. இந்தப் பிரச்சனை அலீ (ரலி) அவர்களின் காதுகளுக்கு, கவனத்திற்கு வந்த மாத்திரத்திலேயே அதைக் களையெடுத்து விடுகின்றார்கள்.

அலீ (ரலி) அவர்கüடம், "உங்கலிடம் அல்லாஹ்வின் வேதத்திலிருப்பதைத் தவிர இறையறிவிப்புகலிருந்து (வேறு) ஏதும் இருக்கின்றதா?'' என்று கேட்டேன். அவர்கள், "இல்லை; விதையைப் பிளப்பவனும், உயிரைப் படைப்பவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவ்வாறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை; ஒரு மனிதருக்கு அல்லாஹ் திருக்குர்ஆனில் அலிக்கின்ற விளக்கத்தையும் இந்தத் தாலில் இருப்பதையும் தவிர'' என்று பதிலலித்தார்கள். நான், "இந்தத் தாலில் என்ன இருக்கிறது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உயிரீட்டுத் தொகை (பற்றிய சட்டம்), போர்க் கைதியை (பணம் கொடுத்தோ, கைதிகள் பரிவர்த்தனை செய்தோ எதிரிகலி டமிருந்து) விடுவிப்பது, மற்றும் நிராகரிப்பாளன் ஒருவனைக் கொன்றதற்காக எந்த முஸ்லிமை யும் கொல்லக் கூடாது (என்பது)'' என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி)நூல்: புகாரி 3047

இதன்படி அகமிய ஞானம் என்று பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த கிளை அறுந்து விடுகின்றது. இன்னும் போனால் இதற்கு அலீ (ரலி) அவர்களிடமிருந்தே செருப்படி விழுகின்றது. இந்தக் கிளை அறுந்தவுடன், அடுத்த கிளைக்கு இந்தக் குரங்குச் சிந்தனையாளர்கள் தாவுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு பைகளை மனனமிட்டேன். அவற்றில் ஒன்றை நான் (மக்களிடையே) பரப்பி விட்டேன்; மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் (என்) அடித் தொண்டை வெட்டப்பட்டிருக்கும். (அவையனைத்தும் அரசியல் குழப்பங்கள் தொடர்பானவை.)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 120


இதில் இரண்டாவது செய்தி அந்த அகமியஞானம் தான் என்று கதையளந்தனர். இதிலும் இவர்களது அறியாமைத்தனம் பகிரங்கமாக வெளிப்படுகின்றது.
ஏனெனில், "மற்றொன்றை வெளியிட்டால் எனது குரல்வளை துண்டிக்கப்படும்' என்று கூறி அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்ல மறுக்கிறார்கள். அபூஹுரைரா (ரலி) சொல்லாமல் விட்டுச் சென்ற அந்தக் கருத்து இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது? என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு இவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை.
அபூஹுரைரா (ரலி) வாழ்ந்த காலத்தில், ஒருவரையொருவர் மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. அந்தச் சமயத்தில் உள்ள அரசியல் குழப்பத்தைப் பற்றித் தான் அபூஹுரைரா (ரலி) குறிப்பிடுகிறார்கள்.
அராஜக ஆட்சியாளர்கள் பற்றிய விபரம் அபூஹுரைராவிடம் இருந்தது என்று அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர். இது ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலும் அமைந்திருக்கின்றது. ஏனென்றால், அதை வெளியிட்டால் கழுத்து துண்டிக்கப்படும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுவதால் நிச்சயமாக இது ஆட்சியாளர்கள் குறித்த செய்தியாகத் தான் இருக்க வேண்டும். இதை விட்டு விட்டு ஏதோ ஒரு மறைமுக ஞானம், ரகசிய ஞானம் என்று இந்த ஹதீஸிலிருந்து நிறுவும் முயற்சி படுதோல்வியைச் சந்திக்கின்றது. இதன்படி இவர்கள் தாவிய இந்த இரண்டாவது கிளையும் முறிந்து விடுகின்றது.
ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில், மாநில ஜமாஅத்துல் உலமாவின் தலைவராக இருந்த எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா அவர்களைச் சந்தித்து, தரீகத் பற்றிய ஆதாரத்தைக் கேட்கையில் ஷம்சுல்ஹுதா அவர்கள் ஒரு ஹதீஸைக் கூறினார்.
"குர்ஆன் ஏழு எழுத்துக்களில் அருளப்பட்டுள்ளது. அதில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் வெளிப்படையும் உண்டு. அந்தரங்கமும் உண்டு. ஒவ்வொரு எல்லைக்கும் ஓர் உதயம் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்கள்: ஜாமிவுஸ்ஸகீர், தப்ரானி

இந்த ஹதீலைச் சான்றாகக் காட்டிய போது உடனே பி.ஜே., "அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' இதற்கு வெளிப்படை என்ன? அந்தரங்கம் என்ன?'' என்று கேட்டதும் அவர் வாயடைத்துப் போனார்.
இதையடுத்து அவரிடம் பி.ஜே. விளக்கமும் கூறினார். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கே என்பது தான் அதன் அர்த்தம். அது தான் வெளிப்படை! அல்லாஹ்விடமிருந்து நமக்குக் கிடைக்கும் அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்தும் வகையில் அவனைப் புகழ வேண்டும். இது அந்தரங்கம்.
இந்த விளக்கத்தை ஷம்சுல் ஹுதாவிடம் தெரிவித்தார். இந்த ஹதீஸில் உள்ள அந்தரங்கத்திற்கும் வெளிரங்கத்திற்கும் உரிய விளக்கம் தெரியாமலேயே இதை அகமிய ஞானம் என்று கூறியுள்ளனர். இப்படியொரு கானலை, ஞானம் என்று சொல்லி நம்மை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பது அந்த உரையாடலின் போது வெளிச்சத்திற்கு வந்தது.
(அத்துடன் ஜாமிவுஸ்ஸகீர், தப்ரானி போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸ் பலவீனமானது. தற்கால அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள், பலவீனமான ஹதீஸ்கள் பட்டியலில் இதைப் பதிவு செய்து விளக்குகிறார்கள்.)
ஷம்சுல்ஹுதா அவர்களிடம் பேசும் போது இந்த ஹதீஸ் பலவீனமானது என்ற விபரம் தெரியாது. இல்லையெனில் அப்போதே இது பலவீனம் என்பதைச் சுட்டிக் காட்டி நெற்றியடியாக அடித்திருக்கலாம்.
எனவே இந்த ஹதீஸிலும் இவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை
##################********************##################****************##########

ما هو العلم الذي أسره أبو هريرة رضي الله عنه ، وخاف من نشره ؟!


السؤال : هل يمكنكم أن تشرحوا بشيء من التفصيل أي أنواع العلم لم يكن أبو هريرة ينشره ، هذا الحديث مأخوذ من الجزء الأول كتاب 3 الحديث 121 من صحيح البخاري . رواه أبو هريرة : ( حفظت عن رسول الله وعاءين ، فأما الأول فبثثته ، وأما الآخر وأما الآخر لو بثثته قطع هذا البلعوم ) . جزاكم الله خيرا.

الجواب :
الحمد لله
روى البخاري (120) عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : " حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وِعَاءَيْنِ : فَأَمَّا أَحَدُهُمَا فَبَثَثْتُهُ ، وَأَمَّا الْآخَرُ فَلَوْ بَثَثْتُهُ قُطِعَ هَذَا الْبُلْعُومُ " .
 
قال الحافظ ابن حجر رحمه الله في "الفتح" (1/216) :
" حَمَلَ الْعُلَمَاء الْوِعَاء الَّذِي لَمْ يَبُثّهُ عَلَى الْأَحَادِيث الَّتِي فِيهَا تَبْيِين أَسَامِي أُمَرَاء السُّوء ، وَأَحْوَالهمْ وَزَمَنهمْ , وَقَدْ كَانَ أَبُو هُرَيْرَة يَكُنِّي عَنْ بَعْضه وَلَا يُصَرِّح بِهِ ، خَوْفًا عَلَى نَفْسه مِنْهُمْ , كَقَوْلِهِ : أَعُوذ بِاَللَّهِ مِنْ رَأْس السِّتِّينَ وَإِمَارَة الصِّبْيَان ؛ يُشِير إِلَى خِلَافَة يَزِيد بْن مُعَاوِيَة لِأَنَّهَا كَانَتْ سَنَة سِتِّينَ مِنْ الْهِجْرَة . وَاسْتَجَابَ اللَّه دُعَاء أَبِي هُرَيْرَة فَمَاتَ قَبْلهَا بِسَنَةٍ .
 قَالَ اِبْن الْمُنِير : وَإِنَّمَا أَرَادَ أَبُو هُرَيْرَة بِقَوْلِهِ : " قُطِعَ " أَيْ : قَطَعَ أَهْل الْجَوْر رَأْسه إِذَا سَمِعُوا عَيْبه لِفِعْلِهِمْ وَتَضْلِيله لِسَعْيِهِمْ , وَيُؤَيِّد ذَلِكَ أَنَّ الْأَحَادِيث الْمَكْتُوبَة لَوْ كَانَتْ مِنْ الْأَحْكَام الشَّرْعِيَّة مَا وَسِعَهُ كِتْمَانهَا . وَقَالَ غَيْره : يَحْتَمِل أَنْ يَكُون أَرَادَ مَعَ الصِّنْف الْمَذْكُور مَا يَتَعَلَّق بِأَشْرَاطِ السَّاعَة وَتَغَيُّر الْأَحْوَال وَالْمَلَاحِم فِي آخِر الزَّمَان , فَيُنْكِر ذَلِكَ مَنْ لَمْ يَأْلَفهُ , وَيَعْتَرِض عَلَيْهِ مَنْ لَا شُعُور لَهُ بِهِ " انتهى ملخصا .

وقال العيني في العمدة :
" أراد به نوعين من العلم ، وأراد بالأول : الذي حفظه من السنن المذاعة ، لو كتبت لاحتمل أن يملأ منها وعاء ، وبالثاني : ما كتمه من أخبار الفتن كذلك .
ويقال : حمل الوعاء الثاني على الأحاديث التي فيها تبيين أسامي أمراء الجور وأحوالهم وذمهم " انتهى . "عمدة القاري" (3 / 364)
وقال القرطبي رحمه الله : " حُمل على ما يتعلق بالفتن من أسماء المنافقين ونحوه ، أما كتمه عن غير أهله فمطلوب بل واجب " انتهى .
"التيسير بشرح الجامع الصغير" (2 / 852)

وقال ابن بطال رحمه الله :
" قال المهلب ، وأبو الزناد : يعنى أنها كانت أحاديث أشراط الساعة ، وما عرف به صلى الله عليه وسلم من فساد الدين ، وتغيير الأحوال ، والتضييع لحقوق الله تعالى ، كقوله صلى الله عليه وسلم : ( يكون فساد هذا الدين على يدى أغيلمة سفهاء من قريش ) ، وكان أبو هريرة يقول : لو شئت أن أسميهم بأسمائهم ، فخشى على نفسه ، فلم يُصَرِّح . وكذلك ينبغى لكل من أمر بمعروف إذا خاف على نفسه في التصريح أن يُعَرِّض . ولو كانت الأحاديث التي لم يحدث بها من الحلال والحرام ما وَسِعَهُ تركها ، لأنه قال : " لولا آيتان في كتاب الله ما حدثتكم ، ثم يتلو : ( إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى ) البقرة / 159 .
"شرح صحيح البخارى" لابن بطال (1 / 195) .
 
وقال ابن الجوزي رحمه الله :
" ولقائل أن يقول : كيف استجاز كتم الحديث عن رسول الله صلى الله عليه وسلم وقد قال :
( بلغوا عني ) ؟ وكيف يقول رسول الله صلى الله عليه وسلم ما إذا ذكر قتل راويه ؟ وكيف يستجيز المسلمون من الصحابة الأخيار والتابعين قتل من يروي عن رسول الله صلى الله عليه وسلم ؟
فالجواب أن هذا الذي كتمه ليس من أمر الشريعة ؛ فإنه لا يجوز كتمانها ، وقد كان أبو هريرة يقول : " لولا آية في كتاب الله ما حدثتكم " وهي قوله ( إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى ) فكيف يظن به أن يكتم شيئا من الشريعة بعد هذه الآية ، وبعد أمر رسول الله صلى الله عليه وسلم أن يبلغ عنه ؟ وقد كان يقول لهم : ( ليبلغ الشاهد منكم الغائب ) وإنما هذا المكتوم مثل أن يقول : فلان منافق ، وستقتلون عثمان ، و( هلاك أمتي على يدي أغيلمة من قريش ) بنو فلان ، فلو صرح بأسمائهم لكذبوه وقتلوه " انتهى .
"كشف المشكل من حديث الصحيحين" (ص / 1014)
 
فقد تبين أن الأحاديث التي ترك أبو هريرة رضي الله عنها نشرها وإذاعتها بين عموم الناس ، ليست مما يتعلق بالحلال والحرام ، ولا مما يترتب عليه عمل أو تكليف ، وإنما هي أحاديث عن بعض الفتن ، وأحوال الملوك والأمراء ، مما لا ينبغي أن ينشغل به ، أو يخوض فيه إلا خاصة أهل العلم والرأي .
وينظر إجابة السؤال رقم : (126377) .
 
والله أعلم .