"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

11/01/2013

வெட்கக்கேட்டிற்கு முன்னோரை முன்மாதிரியாக்கியோர்!



அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது

'எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்' என்று கூறுகின்றனர். 'அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவமாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?' என்று கேட்பீராக! (07:28)

அறிவீனர்கலான மக்கத்து காபிர்கள் வெட்கக்கேடான ஒரு காரியத்தை செய்து விட்டு 'இதை எங்கள் அப்பன் பாட்டன் செய்தார்' எனக் கூறியும் “அல்லாஹ்தான் இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்” என இறைவன் மீது அவதூறு சொல்லியும் வெட்கக்கேடுகளை நியாயப்படுத்தி வந்தனர். இப்போக்கை மறுத்தே மேற்குறித்த இறைவசனம் அருளப்பட்டது.

இன்று எம்மில் சிலர் ஷெய்கு நாயகத்தின் பாதங்களைக் கழுவிக் குடிக்கும் பக்த கோடிகளாக உலா வருவதை நாம் காணுகிறோம்.
“ஒருவரின் காலைக் கழுவிக் குடிப்பது அருவருக்கத்தக்கது” என்ற சாதாரண உண்மையைக் கூட இந்த மூடர்கள் உணர்வதில்லை!
ஷெய்கு நாயகம் உண்டு பருகினால் மலஜல கூடத்திற்குப் போவார் என்ற யதார்த்தமும் இந்த அறிவு ஜீவிகளுக்குப் (?) புரிவதில்லை! தனிமனிதன் மீது கொண்ட குருட்டு பக்தியால் எந்த வெட்கக்கேடையும் செய்ய சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் தயங்குவதில்லை.
வாப்பா நாயகம் (?) கைகழுவிய தண்ணீரை போத்தல்களில் அடைத்து வைத்து ஸம்ஸம் நீரை அருந்துவது போன்று அருந்தும் அப்பாவிப் பெண்கள் எமது சமூகத்தில் இருக்கிறார்கள். “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” எனக் கேட்டு விட்டால் “எங்கள் மூத்தவாப்பா இப்படித்தான் செய்வார்” என பொருப்பில்லாமல் பதில் சொல்லுகின்றனர். “மூத்தவாப்பா என்ன? மூத்தம்மா என்ன?” அவர்கள் இருவரையும் படைத்த ரப்புல் ஆலமீன் இப்படி அசிங்கத்தைச் செய்யும் படி எம்மைப் பணித்திருக்கின்றானா? எனக் கேட்டால் 'நாம் முன்னோர்களைத் திட்டுவதாகக்' கூறி எம்மோடுள்ள தொடர்புகளைத் துண்டித்து விடுகின்றனர். இந்த முட்டாள்தனத்திற்கும் அடிப்படைக் காரணம் மார்க்கத்தை அதன் தூயவடிவில் கற்காமல் இருப்பதுதான்!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்