"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

8/28/2014

கந்தூரி என்பது என்ன

கந்தூரி என்பது என்ன?
மரணித்தவர்களை கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று, பள்ளிவாயில்களை உட்சவம், திருவிழாக்கள் கொண்டாடி, பொதுமக்களை வருடத்தில் ஒரு முறை இஸ்லாத்தின் பெயரால் இவைக்கத் தூண்டும் செயலே கந்தூரி. இதனை இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் என்றும் ஆதரிக்கவில்லை. ஷீஆக்களில் வழித் தோன்றல்களே செத்துப்போகும் இந்த மூடப்பழக்கத்தை உயிர்ப்பிக்க களம் இறங்கி காப்பாற்றத் துடிக்கின்றனர்.
கந்தூரி பலவிதம்
இந்தக் கந்தூரி பலவிதம். புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களை அரபியில் குறிப்பிட்ட மாதங்கள் வாசித்து அதை விளங்காது, மக்களுக்கு விளக்காது தமாம் செய்து ஆடு, மாடுகளை அறுத்து மக்களை அழைத்து கந்தூரி கொடுத்தல், புர்தா, மௌலிது, ராதிபுகள் போன்ற அரபுப் பாடல்கள்பாடி, அதை தமாம் செய்து, அதற்காக கந்தூரி நடத்துதல், அல்லது குறிப்பிட்ட சில மகான்களின் புகழ் மலையைப்பாடி கொடிகள் ஏற்றி, அவர்கள் பேரில் கால்நடைகளை அறுத்துப்பலியிட்டு நார்ஸா விநியோகித்தல், இப்படி பல வடிவங்களில் அரங்கேற்றப்படும் இந்தக்கந்தூரிகள் மொத்தத்தில் அவை அனைத்தும் அல்லாஹ் அல்லாதவர்களைப் புகழ்ந்தும், பாடியும், அவனது தன்மைகைளை மரணித்து மண்ணோடு மண்ணாவிட்ட மகான்களுக்கு வழங்கியும்தான் அவை நடத்தேறுகின்றன.
இது நமது பரம்பரையான பழக்கம், வழக்கம், இதை நாம் தொன்று தொட்டு செய்து வருகின்றோம், புதிதாக நீங்கள்தான் சொல்கின்றீர்கள் என்று மக்கா காபிர்களின் வழிநின்று உளரும் இந்தக் கூட்டம் 1400 வருடங்களுக்கு முன் நபி (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்ட இது போன்ற ஷிர்க்கான காரியங்கைள தவ்ஹீத்வாதிகள்தான் உலகில் முதலாவது தடை செய்வது போல போர்கொடி தொடுப்பார்கள்.

நாகூர் ஹனீபா என்பவர் பாடி உள்ள தமிழில் பாடிய இஸ்லாமிய கீதங்களில் மார்க்கத்தில் ஹரமாக்கப்பட்ட இசையும், ஷிர்க்கும் இணைந்துள்ளது போன்று புர்தாவில் இணைவைப்பும், பொய்யும் கலந்திருக்கின்றது. மக்கள் இவற்றை பரகத் வேண்டி ஓதித் தமாம் செய்யும் வழக்கம் சவக்குழிக்குச் செல்லும் நிலையை எட்டியுள்ள நிலையில், அதை வலிந்து உயிர்ப்பிக்கும் ஊர்களும், வெட்கம் கெட்ட மௌலவிகளும், மக்களும் இல்லாமல் இல்லை.

ஷிர்க்குடன் தொடர்புடைய ஓரிரு வரிகளை அதிலிருந்து இங்கு மாதிரிக்காக எடுத்தெழுகின்றோம். எனவே பரவசம் கொள்ளாது படியுங்கள். சிந்தியுங்கள், திருந்துங்கள். சீர்பெறுங்கள். அதை ஓதுவதால் பரகத் அதிகரிக்கும் என குருட்டுத்தத்துவம் பேசி மக்களை வழிகெடுக்காதீர்கள்.
1- يا أكرم الخلق ما لي من ألوذ به
سواك عند حلول الحادث العَمِمِ
பொருள்: படைப்புக்களில் சங்கையானவரே! பெரும் துன்பமான நிகழ்வுகள் ஏற்படும் போது, பாதுகாப்புத் தேட உங்களைத் தவிர வேறு யாரிடமும் செல்ல எனக்கென்ன நேர்ந்ததது!


மறுப்பு: இருபத்தி மூன்று ஆண்டுகள் நபி (ஸல்) அவர்கள் போதித்த போதனையை அப்படியே தகர்த்தெறியும் வரிகளா இல்லையா என்று கொஞ்சம் சிந்தியுங்கள்.
நிர்க்கதியான நிலையில் இருப்பவன் தன்னை அழைக்கின்ற போது அவனுக்கு பதில் அளித்து, கஷ்டத்தை அகற்றி, உங்களை பூமியின் வழித்தோன்றல்களாக ஆக்குபவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு கடவுளர் உண்டா? நீங்கள் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள். (அத்:அந்நம்ல். வசனம்:62) என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கும், இன்னும் பல அல்குர்ஆனிய வசனங்களுக்கும் இது நேர்முரணானதாக இல்லையா?
2- فإن من جودك الدنيا وضرتها + ومن علومك علم اللوح والقلم
(நபியே!) இந்த உலகும், மறுமையும் உமது கொடையில் உள்ளதாகும். லவ்ஹுல் மஹ்பூழினதும், எழுதுகோலான போனாவினதும் அறிவு உமது ஞானங்களில் இருந்தும் உள்ளதாகும்.
மறுப்பு: ‘லவ்ஹுல் மஹ்பூழ்’ என்றால் பாதுகாக்கப்பட்ட பலகை என்பது பொருள். இதில் உலகில் நடக்கும் சகல நிகழ்வுகளையும் அல்லாஹ் பதிவு செய்து வைத்துள்ளான். இது அவனது அபரிமிதமான அறிவின் வெளிப்பாட்டால் அவன் ஏற்படுத்தியாகும்.
இதற்கும் நபி (ஸல்) அவர்களின் அறிவு ஞானத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்பதை சிறுபிள்ளைக்கும் கூட தெரியும். இந்தப் பாடல்களை ஏதோ நபி (ஸல்) அவர்கள் கனவில் தோன்றி அங்கீரத்திதாக நினைத்துக் கொண்டு அவைகளைத் தமாமும் செய்து கந்தூரியும் நடத்தும் மார்க்க அறிவற்ற மௌலவிகள் இது பற்றி கொஞ்சம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்