"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

3/24/2015

கப்ருக்கு அறுத்துப் பலியிட்டு நேர்ச்சை செய்தல்

உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!  அல்குர்ஆன் 108:2

இந்த வசனத்தில் இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும். அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். 

தொழுகை எப்படி வணக்கமோ அது போல் அறுத்துப் பலியிடுவதும் வணக்கமே! தொழுகைகளை எப்படி இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாதோ, அது போல் அறுத்துப் பலியிடுவதையும் இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாது என்று இங்கே தெளிவுபடுத்தப்படுகின்றது.

தொழுகையை வணக்கம் என்று அனைவரும் அறிந்திருப்பதால் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் தொழுவதில்லை. ஆனால், அறுத்துப் பலியிடுவதை வணக்கம் என்று அறியாத காரணத்தினால் இறைவனல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடுகின்றனர். இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான விளக்கம் அமைந்துள்ளது.

"யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் லஃனத் செய்கிறான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.   அறிவிப்பவர்: அலீ (ரலி)     நூல்: முஸ்லிம் 4001

"யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோ, அதை அவர் நிறைவு செய்யட்டும்! யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில் நேர்ச்சை செய்கிறாரோ, அதை நிறைவேற்றலாகாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)   நூல்: புகாரி 6696

'புவானா என்ற இடத்தில் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுவதாக நான் நேர்ச்சை செய்து விட்டேன். அதை நான் செய்யலாமா' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அந்த இடத்தில் மற்றவர்களால் வழிபாடு நடத்தப்படும் தெய்வங்கள் உள்ளனவா? என்று கேட்டார்கள். நான் 'இல்லை' என்றேன். 'அது மற்றவர்கள் திருவிழாக்கள் நடத்தும் இடமா?' என்று கேட்டார்கள். நான் 'இல்லை' என்றேன். 'அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி) நூல்கள்: அபூதாவூத், பைஹகீ. 

அல்லாஹ்வுக்கு அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்தால் கூட மற்ற வழிபாடுகள் நடக்கும் இடத்தில் அதைச் செய்யக் கூடாது. சந்தேகத்தின் சாயல் கூடப் படியக் கூடாது என்றால் சமாதிகளில் போய் கோழி, ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிடுவோர் தங்களின் நிலை என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் உயிரே போய் விடும் என்ற நிலை ஏற்பட்டாலும், எதனையும் பலியிடக் கூடாது. அற்ப ஈ போன்ற மதிப்பற்ற உயிரினங்களைக் கூட, அல்லாஹ் அல்லாதவர்களுக்குப் பலியிடக் கூடாது; நேர்ச்சை செய்யக் கூடாது  என்பதை இந்த ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

நேர்ச்சையும் அறுத்துப் பலியிடலும் ஒரு இபாதத் - வணக்கம் என்பதை எவர் அறியவில்லையோ, அதன் படி நடக்கவில்லையோ, அவர்கள் இறைவனல்லாதவர்களை வணங்கியவர்களாக ஆகி நிரந்தர நரகத்திற்குத் தகுதி பெறுகிறார்கள்.

எனவே கப்ருகளுக்கு அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல் என்ற வணக்கங்களைச் செய்யும் பரேலவி மதத்தினர் கப்ரு வணங்கிகளே!
நேர்ச்சையும் வணக்கமே! 

தங்களின் நோய் நீங்கி விட்டால், அல்லது கோரிக்கை நிறைவேறினால், அவ்லியாவே! உங்களுக்காக நான் அதைச் செய்வேன்; இதைச் செய்வேன்' என்று கூறுபவர்களும், அவ்வாறே செயல்படுத்துபவர்களும் நம்மவர்களில் உள்ளனர். நேர்ச்சை ஒரு வணக்கம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டால் இவ்வணக்கத்தை இறைவனல்லாத எவருக்கும் செய்ய மாட்டார்கள். 

நீங்கள் எதையேனும் (நல் வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை. (அல்குர்ஆன் 2:270) 

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும். (அல்குர்ஆன் 22:29) 

அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள். (அல்குர்ஆன் 76:7) 

நேர்ச்சைகள் இறைவனுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும், இறைவனுக்காகச் செய்த நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அல்லாஹ் இந்த வசனங்கள் மூலம் கற்றுத் தருகிறான். 

இறைவா! நீ இந்தக் காரியத்தை நிறைவேற்றினால் உனக்காகத்தொழுகிறேன்; நோன்பு வைக்கிறேன்; உனக்காக ஆட்டை அறுத்துப் பலியிடுகிறேன்; உனக்காக அவற்றை ஏழைகளுக்கு வழங்குகிறேன் என்பது போல் தான் நேர்ச்சை செய்ய வேண்டுமே தவிர இறைவனல்லாத எவருக்கும் நேர்ச்சை செய்யலாகாது. 

அறியாத காலத்தில் அவ்வாறு நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறைவேற்றவும் கூடாது. 'யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோ, அதை அவர் நிறைவு செய்யட்டும்! யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில் நேர்ச்சை செய்கிறாரோ, அதை நிறைவேற்றலாகாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 6696.

மத்ஹபின் பார்வையில் நேர்ச்சையும் மவ்லூதும் !!

அறிந்து கொள் பெரும்பாலான பாமரர்கள் இறந்தவர்களுக்காக செய்யும் நேர்ச்சையும், அவு­யாக்களுக்கு காணிக்கையாக அவர்களின் அடக்கஸ்தலங்களுக்கு காசுகளையும், மெழுவர்த்திகளையும், என்னெய் மற்றும் இது போன்றவைகளைக் கொண்டு செல்வதும் ஏகோபித்த முடிவுகளின் படி ஹராமாகும். ஏழைகளுக்கு தர்மம் செய்வதை நோக்கமாக கொண்டால் தவிர.
ரத்துல் முக்தார் பாகம் 2 பக்கம் 139


மேற்கண்ட காரியங்கள் கூடாததாகும் ஹராமானதாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இது போன்ற காரியங்கள் படைப்பினங்களுக்கு நேர்சசை செய்வதாக அமைந்துள்ளது. படைப்பினங்களுக்கு நேர்ச்சை செய்வது கூடாததாகும். ஏனெனில் நேர்ச்சை ஒரு வணக்கமாகும். எந்த வணக்கத்தையும் படைப்பினங்களுக்கு செய்யக்கூடாது இது முதல் காரணமாகும். யாருக்காக நேர்ச்சை செய்வது நோச்சை செய்யப்படுகிறதோ அவர் உயிரற்ற சடலமாகும். உயிரற்ற சடலம் எதையும் சொந்தமாக்கி கொள்ள முடியாது. இது இரண்டாவது காரணம்.
உயிரற்ற சடலம் காரியங்களை செய்யும் என்று எண்ணினால் அவ்வாறு நம்புவது குப்பர் ஆகும்.
அதே நூல் அதே பக்கம்.


படைப்பினங்களுக்கு நேர்சசை செய்வது ஹராம் என்பது அறிஞர்களின் ஒரு மித்த முடிவாகும் எனவே அது செல்லாது அதை நிறைவேற்றும் பொருப்புல் இல்லை. அது ஹராம் மற்றும் அது மாறாக லஞ்சமாகும்.
அதே நுல் அதே பக்கம்


அப்துல் காதிரிருக்காக பெண்கள் எண்னெய் நேர்ச்சை செய்கின்றனர். அது மினாராவில் விளக்கெரிக்கப்படுகிறது. இது போல் ஒரு பெயரில் அடக்கத்தலத்தில் மீது வினளக்கெரிய செய்வதற்காக என்னெய்யை நேர்சசை செய்தால் அதுவும் கூடாததாகும்.
அதே நுல் அதே பக்கம்


மவ்லீது ஓதுவதற்காக நேர்ச்சை செய்வது அதை விட அருவறுக்கத்தக்க காரியமாகும். குறிப்பாக ராகமும், விளையாட்டும் இதன் நன்மையை நபி ஸல் அவர்களுக்கு வாங்குவதாக நேர்ச்சை செய்வது மிகவும் அருவறுக்கத்தக்கதாகும்.
அதே நூல் அதே பக்கம்

மவ்லூத் ஓதலாம் என்பதற்கு ஆதாரம், குரான், சுன்னாவிலும் இல்லை, மத்ஹபிலும் இல்லை !!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்