"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

5/27/2015

மூசா நபி உயிருடன் உள்ளாரா ?

அல்குர்ஆனின் நேரிய வழி

அல்குர்ஆன் தெளிவாக, நேரடியாகச் சொல்வதும், கட்டளையிடுதும் என்ன?

உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். அல்குர்ஆன் 1:4

அல்லாஹ் தன்னிடமே நேரடியாக உதவி தேடும்படி நமக்கு  இந்த வசனத்தின் மூலம் கற்றுத் தருகின்றான்.

"என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.  அல்குர்ஆன் 40:60

இந்த வசனத்திலும் அல்லாஹ் தன்னிடமே கேட்க வேண்டும் என்று அடியார்களுக்கு உத்தரவிடுகின்றான்.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!) அல்குர்ஆன் 2:186

இதிலும் அடியார்கள் தன்னிடமே கேட்க வேண்டும் என்று கூறுகின்றான். தான் என்றென்றும் உயிருள்ளவன், நிர்வாகம் செய்து கொண்டிருப்பவன் என்று தன்னுடைய ஆற்றலையும் தெளிவுபடுத்துகின்றான். இப்படி உயிருள்ள ஒருவனிடம் நேரடியாகக் கேட்பதை விட்டு விட்டு இறந்து போனவர்களிடம் கேட்பதற்காக என்னென்ன குறுக்கு வழிகளை, கோணல்வழிகளைக் கையாளுகின்றார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கோணல் புத்தியும் குறுக்கு வழியும்

யூத, கிறித்தவர்கள் இப்படித்தான் குறுக்கு வழியைக் கையாண்டார்கள். நேரிய வழியை விட்டும் மக்களைத் தடுத்தார்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

"வேதமுடையோரே! நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ்வின் பாதையை விட்டும் ஏன் தடுக்கின்றீர்கள்? தெரிந்து கொண்டே அதைக் கோணலா(ன மார்க்கமா)கச் சித்தரிக்கின்றீர்கள்.  அல்குர்ஆன் 3:99

அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அதைக் கோணலாகச் சித்தரிக்கின்றனர். அவர்களே மறுமையை மறுப்பவர்கள். அல்குர்ஆன் 11:19

இந்த பரேலவிசப் பேர்வழிகள் இத்தகைய பிரிவைச் சார்ந்தவர்கள் தான். யூத, கிறித்தவர்கள் செய்த அதே வேலையைத் தான் இவர்களும் செய்கின்றார்கள். இவர்களின் இந்தக் குறுக்கு வழிகளில் உள்ள ஒன்று தான் மூஸா நபி உயிருடன் இருக்கின்றார் என்ற வாதமும், அதற்காக அவர்கள் சமர்ப்பிக்கின்ற ஆதாரமும். அந்த ஆதாரம் என்ன? முஸ்லிமில் இடம் பெறக்கூடிய பின்வரும் செய்திதான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)  முஸ்லிம் 4736

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணத்தின் போது நடந்த இந்த நிகழ்வை ஆதாரமாகக் காட்டி, மூஸா (அலை) அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள், எனவே நபிமார்களை, நல்லடியார்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்று கூறுகின்றார்கள்.

இவ்வாறு கூறுகின்ற இந்தப் பரேலவிகள் யாரும் மூஸா நபியை அழைத்துப் பிரார்த்திப்பதில்லை. அது போல நூஹ், ஹூத், ஸாலிஹ், இப்றாஹீம் போன்ற நபிமார்களை அழைப்பதில்லை. மாறாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறைந்து நீண்ட காலத்திற்குப் பிறகு தோன்றி மறைந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, காஜா முஹ்யித்தீன், ஷாகுல் ஹமீது போன்ற அடியார்களைத் தான் அழைக்கின்றார்கள். இவர்களின் நோக்கம் மூஸா நபியின் இந்த ஹதீஸை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு இவர்களாக நல்லடியார்கள் பட்டம் கொடுத்துக் கொண்டவர்களை அழைப்பது தான்.

நபிமார்களை அழைப்பது இவர்களது நோக்கமல்ல. குறைந்த பட்சம் அவர்கள் நபிமார்களை அழைத்தாலாவது ஓரளவுக்குத் தங்கள் வாதத்தில் சரியாக இருக்கின்றார்கள் என்று ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு இவர்கள் அழைப்பது கிடையாது. இதன் மூலம் அவர்கள் குறுக்கு வழியிலும் ஒரு குறுக்கு வழியைக் கையாள்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இப்போது அவர்கள் காட்டுகின்ற மூஸா நபியின் கப்ர் தொழுகை ஹதீஸைப் பார்ப்போம்.

மூஸா நபி தனது கப்ரில் தொழுது கொண்டிருப்பதை நபிகள் நாயகம் கண்டது உண்மை. அதை யாரும் மறுக்க முடியாது. மிஃராஜ் பயணத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூஸா நபியை அவர்களது கப்ரில் மட்டும் காணவில்லை. அவர்களைப் பல இடங்களில் காணுகின்றார்கள். அவற்றை இப்போது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

பைத்துல் முகத்தஸில் மூஸா நபி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள்.  அறிவிப்பவர் : அனஸ் (ரலி)நூல்: முஸ்லிம் 4736

மண்வெளியில் மூஸா நபி
நபிகள் நாயகம் அவர்களுக்கு இதற்கு முந்தைய சமுதாயங்கள் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது மூஸா அலை அவர்களும் கூட இருந்தனர். நூல்: முஸ்லிம் 3410

விண்வெளியில் மூஸா நபி

அங்கிருந்து விண்வெளிக்கு செல்லும் போது மூஸா அங்கேயும் நபியைப் பார்க்கின்றார்கள்.

அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்து வந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வாவனர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி(வந்து), என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை "ஸம்ஸம்'' தண்ணீரால் கழுவினார்கள். பிறகு நுண்ணறிவாலும் "ஈமான்'' எனும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத்தாலான கையலம்பும் பாத்திரம் ஒன்றைக் கொண்டுவந்து என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார்கள். பிறகு (பழையபடியே நெஞ்சை) மூடிவிட்டார்கள்.

பிறகு என் கையைப் பிடித்து என்னை அழைத்துக்கொண்டு வானத்திற்கு ஏறிச் சென்றார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்குச் சென்றபோது அந்த வானத்தின் காவலரிடம், "திறங்கள்'' என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர், "யார் இவர்?'' எனக் கேட்டார் ஜிப்ரீல் (அலை) அவர்கள், "ஜிப்ரீல்'' என்று பதிலüத்தார்கள். அதற்கு அவர், "உங்களுடன் வேறெவரேனும் இருக்கின்றனரா?'' எனக் கேட்டார். அவர்கள், "ஆம்; என்னுடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள்'' என்று பதிலüத்தார்கள். அதற்கு அவர், "(அவரை அழைத்துவரச் சொல்-) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா?'' என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் "ஆம்'' என்று கூறினார்கள்.

(முதல் வானத்தின் கதவை) அவர் திறந்து நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் அமர்ந்துகொண்டிருந்தார். அவரது வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) "நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!'' என்று கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்கüடம், "இவர் யார்?'' எனக் கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவர் தாம் ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் சந்ததிகள். அவர்கüல் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் இவர்கள் வலப் பக்கம் (சொர்க்க வாசிகளான தம்மக்களைப்) பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப் பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது வேதனைப்பட்டு அழுகிறார்கள்'' என்று பதிலüத்தார்கள்.

பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இன்னும் உயரத்திற்கு) ஏறிச் சென்றார்கள். இரண்டாம் வானத்தை அடைந்ததும் அதன் காவலரிடம் "திறங்கள்'' என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதிளலித்தபின்) அவர் கதவைத் திறந்தார்.

அனஸ் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:

"நபி (ஸல்) அவர்கள், வானங்களில் ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), மூசா (அலை), ஈசா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டதாக அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்களே தவிர அவர்கள் தங்கியிருந்த இடங்கள் எங்கெங்கே அமைந்திருந்தன?'' என்பது பற்றி அவர்கள் (என்னிடம்) குறிப்பிட்டுக் கூறவில்லை. நபி (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும்  இப்ராஹீம்  (அலை) அவர்களை ஆறாவது வானத்தில் கண்டதாகவும் மட்டுமே சொன்னார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் தொடர்கிறார்கள்:
"என்னுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது "நல்ல இறைத்தூதரே வருக! நல்ல சகோதரரே வருக!'' என்று இத்ரீஸ் (அலை) அவர்கள் கூறினார்கள். நான், "இவர் யார்?'' என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை)  அவர்கள், "இவர் தாம் இத்ரீஸ்'' என்று பதிலளித்தார்கள்.

பிறகு மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்களும், "நல்ல நபியே வருக! நல்ல  சகோதரரே வருக!'' என்று கூறினார்கள். நான், "இவர் யார்?'' என்று (ஜீப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவர்கள் தாம் மூசா'' என்று பதிலளித்தார்கள்.

நான் (அந்தப் பயணத்தில்) ஈசா (அலை) அவர்களையும் கடந்து சென்றேன். அவர்களும் "நல்ல சகோதரரே வருக! நல்ல இறைத்தூதரே வருக!'' என்று கூறினார்கள். நான், "இவர் யார்?'' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவர்தாம் ஈசா'' என்று பதிலளித்தார்கள்.

பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், "நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!'' என்று கூறினார்கள். நான், "இவர் யார்?'' என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவர் தாம் இப்ராஹீம்'' என்று கூறினார்கள்.'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹப்பா அல்அன்சாரி (ரலி) ஆகியோர் கூறிவந்ததாக இப்னு ஹஸ்ம் (அபூபக்ர் பின் முஹம்மத்- ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்ததாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (இன்னும்) மேலே ஏறிச் சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது (வானவர்கள் விதிகளை பதிவு செய்துகொண்டிருக்கும்) எழுது கோல்கüன் ஓசையைச் செவியுற்றேன்.   நூல்: புகாரி 349 (ஹதீஸின் ஒரு பகுதி)

திரும்பும் போது ஒரு சந்திப்பு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்போது (நான் உட்பட) என் சமுதாயத்தார் அனைவர் மீதும் (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளை அல்லாஹ் கடமையாக்கினான். அதைப் பெற்றுக்கொண்டு நான் திரும்பியபோது மூசா (அலை) அவர்களை கடந்தேன். அப்போது மூசா (அலை) அவர்கள், "உங்கüடம் உங்கள் சமுதாயத்தாருக்காக அல்லாஹ் என்ன கடமையாக்கினான்?'' என்று கேட்டார்கள். நான், (என் சமுதாயத்தார் மீது) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான்'' என்று பதிலüத்தேன். அவர்கள், "அப்படியானால் உங்கள் இறைவனிடம் திரும்பிச் செ(ன்று சற்று குறைத்துக் கடமையாக்கும்படி சொ)ல்லுங்கள்! ஏனெனில் உங்கள் சமுதாயத்தாரால் அதைத் தாங்க முடியாது'' என்று கூறினார்கள்.

உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்றேன். (தொழுகையின் எண்ணிக்கையை குறைத்துக் கேட்டபோது) இறைவன் ஐம்பதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூசா (அலை) அவர்கüடம் நான் திரும்பிச்சென்று "அதில் ஒரு பகுதியை இறைவன் குறைத்து விட்டான்'' என்று சொன்னபோது மீண்டும் அவர்கள், "உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள் (இன்னும் சிறிது குறைத்துத் தரும்படி கேளுங்கள்). ஏனெனில், இதையும் உங்கள் சமூதாயத்தாரால் தாங்க முடியாது'' என்று சொன்னார்கள். இவ்வாறாக நான் திரும்பிச் சென்று (இறுதியில்) "இவை ஐவேளைத் தொழுகைகள் ஆகும் (நற்பலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். என்னிடம் இந்த சொல் (இனி) மாற்றப்படாது'' என்று கூறிவிட்டான்.

உடனே நான் மூசா (அலை) அவர்கüடம் திரும்பிச் சென்றேன். அவர்கள், "உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்'' என்றார்கள். நான், "என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன்'' என்று சொன்னேன். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (வானுலகின் எல்லையான) "சித்ரத்துல் முன்தஹா''வுக்குச் சென்றார்கள். இனம் புரியாத பல வண்ணங்கள் அதைப் போர்த்தியிருந்தன. பிறகு என்னை சொர்க்கத்துக்குள் பிரவேசிக்கச் செய்யப்பட்டது. அங்கே முத்தாலான கழுத்தணிகளைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது.  நூல்: புகாரி 349 (ஹதீஸின் ஒரு பகுதி)

இது எதைக் காட்டுகின்றது? நபி மூஸா (அலை) அவர்கள் மண்ணுலகில் கப்ரில் மட்டும் தொழுது கொண்டிருக்கவில்லை. மாறாக விண்ணுலகில் நபி (ஸல்) அவர்கள் வரவேற்கவும் செய்கின்றார்கள், வழியனுப்பவும் செய்கின்றார்கள். மூஸா நபியின் பாத்திரம் கப்ரில் மாத்திரம் அடங்கி இருக்கவில்லை. விண்ணுலகு வரை விரிந்திருக்கின்றது என்பதையே இது காட்டுகின்றது.

ஈஸா நபியுடன் சந்திப்பு

மேலே இடம் பெற்ற ஹதீஸில் நபிகள் (ஸல்) அவர்கள் ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), மூசா (அலை), ஈசா (அலை), இப்ராஹீம் (அலை)  ஆகிய நபிமார்களைச் சந்திக்கின்றார்கள். இதில் ஈஸா நபியைத் தவிர மற்ற எல்லா நபிமார்களும் இறந்தவர்கள். ஈஸா நபியவர்கள் வானத்தில் தான் உயிருடன் இருக்கின்றார்கள். அவர்களையும் சேர்த்தே நபியவர்கள் பார்த்திருக்கின்றார்கள். சந்தித்திருக்கின்றார்கள்.

பிலால் (ரலி) அவர்களுடன் சந்திப்பு

நபி (ஸல்) அவர்கள் நபிமார்களை மட்டும் பார்க்கவில்லை. சுவனத்தில் பிலால் (ரலி) அவர்களின் நடமாட்டத்தையும் காண்கின்றார்கள்.

ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம், "பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில்  சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்'' என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "நான் இரவு பகல் எந்த நேரத்தில் உளூ)செய்தாலும் அந்த உளூவுக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருப்பதில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 1149

இங்கு நாம் கவனிக்க வேண்டியது நபி (ஸல்) அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும் போது, "நான் உலகில் தானே இருக்கின்றேன். சுவனத்திற்கு எப்படி வந்திப்பேன்' என்று பிலால் (ரலி) கேட்கவில்லை. அப்படியானால் இதன் பொருள் என்ன?

பிலால் (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களை அங்கு காட்டுகின்றான். இறந்தவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்று இந்தப் பரேலவிகள் நம்புவதைப் போன்று, உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்களாக ஆகிவிடுவார்களா? ஒரு போதும் இல்லை. இங்கு நாம் காணவேண்டியது அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலைத் தான். பிலால் (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை சுவனத்தில் நடமாட விடுவது போன்று, இறந்தவர்களை மிஃராஜின் போது எழுப்பிக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றான். அதாவது எடுத்துக் காட்டியிருக்கின்றான். இந்த அற்புதம் தான் இதிலிருந்து நாம் அறிய வேண்டிய விஷயமும் படிப்பினையுமாகும்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், ஒருவர் சுவனத்திற்குச் செல்ல வேண்டுமானால் அவர் இறந்து, மறுமை நாளில் அவர் எழுப்பப்பட்டு, விசாரணை முடிந்து தான் சுவனத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் பிலால் (ரலி) முந்தியே சென்றிருக்கின்றாரே! எப்படி? இது எடுத்துக்காட்டப்பட்ட நிகழ்வு!

சுவனத்தில் உளூச் செய்யும் உமர் (ரலி) மனைவி

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் இருந்த போது அவர்கள், "நான் தூங்கிக் கொண்டிருந்த பொழுது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனையொன்றின் பக்கத்தில் ஒரு பெண் உளூ செய்து கொண்டிருந்தாள். நான் (ஜிப்ரீலிடம்), "இந்த அரண்மனை யாருக்குரியது?' என்று கேட்டேன். அவர், "உமர் அவர்களுக்குரியது' என்று பதிலüத்தார். அப்போது (அதில் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்,) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. ஆகவே, (அதில் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்'' என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு, "தங்கüடமா நான் ரோஷம் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே!'' என்று சொன்னார்கள்.  நூல்: புகாரி 3680

கியாமத் நாள் ஏற்பட்டு சுவனத்தில் நுழைவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் சுவனத்து மனைவியைப் பார்த்தது எப்படி?

ருமைசாவின் பிரவேசம்

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "நான் என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்கüன் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடியோசையைச் செவியுற்றேன். உடனே, "யார் அது?' என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), "இவர் பிலால்' என்று பதிலüத்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், "இது யாருக்குரியது?' என்று கேட்டேன். அவர், (வானவர்), "இது உமருடையது' என்று சொன்னார். ஆகவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (ஆகவே, அதில் நுழையாமல் திரும்பி விட்டேன்)'' என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்கüடமா நான் ரோஷம் காட்டுவேன்'' என்று கேட்டார்கள். நூல்: புகாரி 3679

பூமியில் உள்ள அபூதல்ஹாவின் மனைவியை சுவனத்தில் எப்படிப் பார்க்க முடிந்தது?

நபி (ஸல்) கண்ட நரகக் காட்சிகள்

இதுபோல் நபி (ஸல்) அவர்கள் நரகத்திலும் சில காட்சிகளைக் கண்டார்கள். நரகம் எப்போது? மறுமை நாள் வந்து, கேள்வி கணக்கு விசாரணை முடிந்த பின்னர் தீயவர்கள் போய்ச் சேருமிடம் தான் நரகம். அந்த நரகத்தின் காட்சிகளை நபி (ஸல்) அவர்கள் முன்னரே கண்டார்கள்.

விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்குச் செம்பினால் ஆன நகங்கள் இருந்தன. அந்த நகங்களால் தங்களது முகங்களையும் மார்புகளையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். "ஜிப்ரயீலே! இவர்கள் யார்?'' என்று நான் கேட்டேன். "இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டும் அவர்களின் தன்மானங்களில் விளையாடிக் கொண்டும் இருந்தனர்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)  நூல்: அபூதாவூத் 4255

இந்தக் காட்சியும் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டது தான்.

பெண்கள் நிறைந்த நரகம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: புகாரி 3241

நபி (ஸல்) அவர்கள் சுவனத்தில் அதிகமான ஏழைகளைக் கண்டதாகவும், நரகத்தில் அதிகமான பெண்களைக் கண்டதாகவும் இந்த ஹதீஸில் பார்க்கிறோம். பின்னால் நடக்கப்போகும் ஓர் உண்மையை அல்லாஹ் தனது தூதருக்கு இங்கு காட்சியாகக் காட்டியிருக்கின்றான் என்பதையே இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.

தஜ்ஜாலின் காட்சி

இவை நபி (ஸல்) அவர்கள் சுவனத்திலும் நரகத்திலும் கண்ட சில காட்சிகளாகும். இவையல்லாமல் நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலையும் நரகத்தின் காவலர் மாலிக்கையும் பார்க்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூசா அவர்களை "ஷனூஆ' குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான, சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர்களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகüல் அடங்கியவை. நீங்கள் அவனை (தஜ்ஜாலை)ச் சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)  நூல்: புகாரி 3239

இவை அனைத்தும் பின்னால் நிகழவிருக்கும் நிகழ்வுகளையும், இந்த நிகழ்வுகளில் சம்பந்தப்படக்கூடிய ஆட்களையும் தன் திருத்தூதருக்கு அல்லாஹ் காட்சியாக எடுத்துக் காட்டியனவாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் தூதருக்கு இவ்வாறு மிஃராஜ் போன்று நேரிலும் எடுத்துக் காட்டுவான். கனவிலும் எடுத்துக் காட்டுவான். இது அவனுடைய மாபெரும் ஆற்றலுக்குரிய அத்தாட்சியாகும்.

ஆதம் நபி அவர்களைப் படைத்து, அவர்களிடமிருந்து தோன்றப் போகும் அனைத்து சந்ததிகளையும் அவர்களிடமே எடுத்துக் காட்டுகிறான்.

இதை அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். "நான் உங்கள் இறைவன் அல்லவா?'' (என்று கேட்டான்.) "ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர். "இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்'' என்றோ, "இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?'' என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.) அல்குர்ஆன் 7:172

ஆதம் நபி உருவானதிலிருந்து இறுதி நாளில் மரணிக்கவிருக்கும் மனித சந்ததி அத்தனை பேரும் அல்லாஹ்வின் முன்னிலையில் சாட்சியம் அளித்திருக்கின்றனர். நாமும் அளித்திருக்கின்றோம். ஆனால் இது நமக்கு நினைவில் இல்லை. இப்படி அல்லாஹ் பின்னால் நடக்கவுள்ளதை முன்னாலேயே தனது தூதர்களுக்கு ஒரு டிரையலாக எடுத்துக் காட்டுகிறான்.

ஒரு பொறியாளர் தான் கட்டவிருக்கும் மாபெரும் மாளிகையின் மாதிரியை முதலில் தனது ஆட்களுக்குச் செய்து காட்டி விடுகின்றார். எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை.

எனவே மிஃராஜ் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு நிகழ்வாகும். இதை வைத்துக் கொண்டு மூஸா நபியவர்கள், இவர்கள் சித்தரித்துக் காட்டுகின்ற அர்த்தத்தில் உயிருடன் உள்ளார்கள் என்பது தவறாகும்.

--- ஏகத்துவம் மே 2012

5/25/2015

இறைநேசர்களை மக்கள் தீர்மானிக்க முடியுமா?


மனிதர்களின் உள்ளத்தில் உள்ளதை நபிமார்களாலும் அறியமுடியாது என்பதற்கான ஆதாரங்களைப் பார்த்தோம். யூசுப் (அலை) அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் இதற்கு ஆதாரமாகக் கூறலாம்.

யஃகூப் (அலை) அவர்களுக்கு யூசுப் நபியைச் சேர்த்து மொத்தம் 12 பிள்ளைகள். இதில் 11 பேரும் திட்டம் போட்டு, தங்களுடைய தந்தையை ஏமாற்றி, "யூசுப் நபியை எங்களுடன் அனுப்பி வையுங்கள்; நாங்கள் பத்திரமாகத் திரும்ப அழைத்து வருகின்றோம்'' என்று கூறி அழைத்துச் சென்று அவரைக் கிணற்றில் தள்ளி விடுகின்றார்கள். இந்த விஷயம் அவர்களின் தந்தை யஃகூப் நபியவர்களுக்கு தெரியவில்லை.

பெற்ற பிள்ளைகளே தங்களுடைய மனதில் கெட்ட எண்ணம் கொண்டுள்ளார்கள் என்ற விஷயத்தை அவர்களால் அறிய முடியாமல் போய் விட்டது. இதன் முழு விபரத்தை திருக்குர்ஆனின் 12வது அத்தியாயமான சூரா யூசுப் என்ற அத்தியாயத்தில் காணலாம்.

ஆக, யாருடைய வெளித்தோற்றத்தை வைத்தும் நாம் அவரை நல்லவர், கெட்டவர் என்று தீர்மானித்துச் சொல்ல இயலாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இதையெல்லாம் விட்டு விட்டு, அவ்லியாக்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறது, அவர்கள் இறைநேசர்கள் தான் என்று சொல்லக் கூடியவர்கள் ஒரே ஒரு ஹதீஸை மட்டும் அதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். அந்த ஹதீஸ் பல வித்தியாசமான வார்த்தைகளால் பல நூல்களில் வந்திருக்கிறது.

ஒருமுறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உறுதியாகி விட்டது'' என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், "உறுதியாகி விட்டது'' எனக் கூறினார்கள். உமர் (ரலி) "எது உறுதியாகி விட்டது?'' எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள், "இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்'' எனக் கூறினார்கள்
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)  நூல்: புகாரி 1367

இந்த ஹதீஸை வைத்துப் பார்த்தால் நமக்கு என்ன விளங்குகிறது? நாம் எல்லாரும் சேர்ந்து ஒருவரைஅவ்லியா என்றால் அவர் அவ்லியாதான். சாகுல் ஹமீது அவ்லியா என்றும், அஜ்மீர் அவ்லியா என்றும் எத்தனையோ பேர் சொல்கிறார்கள். இப்படி ஏராளமான மக்கள் ஒருவரைப் பற்றி நற்சான்றிதழ் சொன்னார்களேயானால் அந்த மாதிரி அவர் அல்லாஹ்விடத்தில் இருப்பார் என்ற வாதத்தை வைக்கின்றனர்.

இந்த ஒரு ஹதீஸை மட்டும் வைத்துப் பார்க்கும் போது அவர்கள் சொல்கின்ற கருத்து சரி தான். அதை நாமும் மறுக்கவில்லை. ஆனால் இதுவரைக்கும் நாம் எடுத்து வைத்த ஹதீஸ்களுக்கு இவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? இதுவரை நாம் எடுத்து வைத்த அத்தனை ஆதாரங்களுமே யாரையும் நாம் இறைநேசர் என்றோ, அவ்லியா என்றோ, மகான் என்றோ கூறமுடியாது. ஸஹாபாக்கள் மட்டுமல்லாமல் இறைத்தூதர்களால் கூட ஒருவரை இறைநேசர் என்று கூறமுடியாது என்பது தான் இதுவரை கண்ட ஆதாரங்களிலிருந்து விளங்கும் உண்மை. அவ்வாறு இருக்கும் போது இந்த ஒரு ஹதீஸை மட்டும் ஏற்றுக் கொண்டு, தங்களுக்குச் சாதகமாக வைத்துக் கொண்டு மற்ற எல்லா ஹதீஸ்களையும் மறுப்பது சரியான வாதமல்ல.

நாம் நமது நடைமுறை வாழ்க்கையில் கூட இதைக் காணலாம். நம் கண்ணுக்கு முன்னால் அயோக்கியன், கெட்டவன் என்று தெரிந்த ஒருவனை எல்லாரும் சேர்ந்து கொண்டு நல்லவன் என்று சொல்கிறார்கள். அவனை நல்லவன் என்று பாராட்டுகிறார்கள். நமக்கு நல்லவன் என்று தெரிந்தவனை அயோக்கியன் என்று சொல்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் எத்தனையோ பேர் இறந்து போனதற்காக வேண்டி, இலட்சோப இலட்ச மக்கள் அவர்களுடைய அடக்கத்தலத்திற்குச் சென்று அவரை போற்றிப் புகழ்கிறார்கள்.

உதாரணமாக, ஒரு முஸ்லிம் தலைவரோ அல்லது அரசியல் தலைவரோ இறந்து விட்டால் எவ்வளவோ பேர் அதில் கலந்து கொள்கிறார்கள். அவருடைய ஜனாஸாவில் சேர்ந்து கொள்கிறார்கள். ஆனால் அவர் ஆன்மீக ரீதியாகவோ, மார்க்க ரீதியாகவோ எதையும் செய்திருக்கமாட்டார். அவர் ஒரு முஸ்லீம் லீக் தலைவராக இருந்து அவர் இறந்து விட்டால் அவருடைய அடக்கத்தலத்திற்கு சென்று அவர் அப்படி, இப்படி என்று நாம் புகழ்வதின் மூலமாக அவர் சொர்க்கவாசியாக ஆகிவிடுவாரா?

மேற்கண்ட ஹதீஸைப் பார்க்கும் போது அவர் சொர்க்கவாசியாக ஆகிவிடுவார் என்பது போன்று நமக்குத் தோன்றும். ஆனால் இதற்கு முன்னால் நாம் பார்த்த அனைத்து ஹதீஸ்களிலும் அவ்வாறு சொல்லக்கூடாது என்றும் வருகிறது. ஆனால் இந்த ஹதீஸில், உள்ளத்தில் உள்ளதை அறியமுடியும் என்று வருகின்றதே? என்ற குழப்பம் நம்முடைய மனதில் எழலாம்.

ஆனால் இந்த ஐயத்தை போக்கும் விதமாக நாம் இன்னும் வேறு ஹதீஸ்களை ஆராய்ந்து, சிந்தித்துப் பார்த்தால் இதற்கான விடை கிடைத்துவிடும். இந்த இரண்டு செய்திகளை மட்டும் வைத்துப் பார்க்காமல் இது சம்பந்தமாக வேறு என்னென்ன செய்திகள் வருகின்றதோ அத்தனை ஹதீஸ்களையும் ஆராய்ந்து பார்த்தோமென்றால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை எதற்குச் சொன்னார்கள்? அது நபிகளாருடைய காலத்துடன் முடிந்து விட்டதா? அல்லது இன்றைக்கும் அது இருக்கிறதா? என்ற விவரங்கள் நமக்குத் தெளிவாகி விடுகின்றது. அது என்ன செய்தியென்றால், நாம் மேற்கூறிய ஜனாஸா சம்பந்தப்பட்ட செய்தி தான்.

ஒரு செய்தியை அறிவிக்கின்ற அறிவிப்பாளர்களில் ஒருவர் ஒரு செய்தியை மட்டும் கூடுதலாக அறிவிப்பார். இன்னொருவர் குறைவாக அறிவிப்பார். ஆனால் நடந்த விஷயம் நிறைய இருக்கும். 10 விஷயம் நடந்திருக்கின்றது என்றால் ஒருவர் அதில் ஏழு விஷயங்களை மட்டும் அறிவிப்பார். இன்னொருவர் ஐந்தைச் சொல்லி ஐந்தை விட்டுவிடுவார். வேறொருவர் ஒன்பது செய்திகளைச் சொல்லி ஒன்றை மட்டும் விட்டுவிடுவார். இன்னொருவர் அந்தப் பத்து செய்திகளையும் முழுவதுமாகச் சொல்லி விடுவார்.

இதை நாம் நம்முடைய வாழ்க்கையில் கூடக் காணலாம். நாம் ஒரு மணி நேர சொற்பொழிவைக் கேட்கிறோம். நம்மில் சிலர் அந்த ஒரு மணி நேர பயானை அப்படியே கேட்டபடி சொல்லக் கூடியவர்கள் இருப்பார்கள். அதில் பாதியை விட்டுவிட்டு பாதியைச் சொல்லக் கூடியவர்களும் இருப்பார்கள். அல்லது நமக்கு அந்தச் சொற்பொழிவில் எது பிடித்தமானதாக இருக்கிறதோ அதை மட்டும் சொல்வோம். இப்படி நாமே நமக்குள் பலவிதமான கருத்தில் இருக்கிறோம்.

இதைப் போன்று தான் ஸஹாபாக்களில் சிலர் கூடுதலாகவும், வேறு சிலர் குறைவாகவும் அறிவிப்பார்கள். நாம் இப்போது மேற்கண்ட ஜனாஸா குறித்த செய்திக்கு வருவோம். மற்றொரு அறிவிப்பில் கூடுதலான வாசகம் இடம்பெற்றுள்ளது. அதை அந்த அறிவிப்பாளர் விட்டுவிட்டார். அது என்ன வாசகம் என்றால், முதலில் ஒரு ஜனாஸா கொண்டு வரப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறுதியாகி விட்டது என்று சொல்கிறார்கள். பிறகு இன்னொரு ஜனாஸா கொண்டு வரப்படுகிறது. அதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறுதியாகி விட்டது என்று சொல்கிறார்கள். இத்துடன் மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் முடித்து விடுகிறார். ஆனால் இன்னொரு அறிவிப்பாளர், இதற்குப் பின்னால் ஒரு செய்தியைக் கூடுதலாகக் கூறுகிறார்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் ஒரு தடவை நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு ஜனாஸா கடந்து சென்றது. அப்போது நபியவர்கள், "இது யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா என்றும் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிப்பவராக இருந்தார் என்றும் அல்லாஹ்விற்கு வழிப்பட்டு நல்லமல்கள் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபியவர்கள் "உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா என்றும் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் வெறுப்பவராக இருந்தார் என்றும் இறைவனுக்கு மாறு செய்யும் காரியங்களைச் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபியவர்கள், "உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது'' என்று கூறினார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! முதலாவது ஜனாஸாவை மக்கள் புகழ்ந்த போதும் உறுதியாகி விட்டது என்றீர்கள். மற்றொன்றை மக்கள் இகழ்ந்த போதும் உறுதியாகி விட்டது என்றீர்கள் (அதன் விளக்கம் என்ன?)'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், "பூமியில் அல்லாஹ்விற்கென்று மலக்குமார்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்பதில் மக்களின் நாவுகளில் பேசுகிறார்கள்'' என்று கூறினார்கள்.   நூல்: ஹாகிம், பாகம்: 1, பக்கம்: 533

இது ஆதாரப்பூர்வமான, அறிவிப்பாளர்களில் எந்தக் குறையும் இல்லாத செய்தியாகும்.

இப்போது நாம் ஒருவரை நல்லவர், அவ்லியா என்று சொல்கிறோம். அவரை  நாமாக அவ்லியா என்று  சொன்னோமா அல்லது மலக்குமார்கள் சொல்லி அவ்லியா என்று சொன்னோமா? என்றால் நமக்கு இது தெரியாது. ஆனால் நபியவர்களுக்கு மட்டும் எவ்வாறு தெரிந்தது என்றால் அல்லாஹ் அதை அறிவித்துக் கொடுப்பான்.

இதிலிருந்து என்ன விளங்குகிறது? இந்தச் சம்பவம் நபியவர்களுடைய காலத்திலேயே முற்றுப் பெற்றுவிட்டது. இந்தக் காலத்திற்கு இது பொருந்தாது. நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் யாரேனும் ஒருவரை நல்லவர் என்று பாராட்டிச் சொன்னால் அல்லாஹ்  மலக்குமார்களை அனுப்பி பாராட்டிச் சொன்னானா? அல்லது இவர்களாகத் தங்களது குருட்டு பக்தியின் காரணமாகப் பாராட்டிச் சொல்கிறார்களா? என்பதை நபியவர்கள், மலக்குமார்களை பார்க்கக் கூடியவர்களாக இருந்ததால் கண்டுபிடித்து விடுவார்கள்.

ஆனால் நாம் ஒருவரை நல்லவர் என்று சொன்னால் அது நம்முடைய வார்த்தையா? மலக்குகளுடைய வார்த்தையா? என்பதைக் கண்டறிய நம்மால் முடியாது. காரணம், இறைச் செய்தி முற்றுப் பெற்றுவிட்டது.

இது நம்முடைய காலத்திற்குப் பொருந்தாது என்று விளங்கிக் கொண்டால் நம்மிடம் இது போன்ற தவறுகள் வராது. நாமும் யாரையும் நல்லவர் என்று சொல்லவும் மாட்டோம்.

அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் யாருடைய பெயரைக் குறிப்பிட்டு இவர் நல்லவர் என்று சொன்னானோ, அல்லது நபியவர்கள் ஒரு குறிப்பிட்ட பெயரைச் சொல்லி, அல்லது குறிப்பிட்ட பண்புகளை, தன்மைகளைச் சொல்லி இவர் நல்லவர் என்று அடையாளம் காட்டினார்களோ அவர்களை அவ்லியா, நல்லவர் என்று சொல்லலாம்.

நாம் ஒருவரை அவ்லியா என்று தீர்மானிப்பதாக இருந்தால் குர்ஆனில் அவர்கள் அவ்லியா என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும். அல்லது நபியவர்கள் வஹீயின் அடிப்படையில் ஒருவரை நல்லவர் என்று சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு சொல்லியிருந்தால் மட்டுமே அவர்களை அவ்லியா என்று சொல்லலாம்.

நபியவர்களுடைய காலத்திற்கு பிந்தி உள்ளவர்களை நாம் அவ்லியா என்று தீர்மானிக்கக்கூடாது. யாரெல்லாம் அவ்லியா, இறைநேசர் என்பதை நபியவர்கள் நமக்கு சொல்லித் தந்து விட்டார்கள். நபியவர்களுடைய காலத்திற்குப் பின்னால் ஒருவர் இறைநேசராக இருந்தாலும் அது நமக்கு தெரியாது என்பதை தெளிவாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இறுதித் தீர்ப்பு நாளில், மக்களில் முதல் முதலில் (இறைவழியில் உயிர் துறந்த) ஷஹீதுக்கே தீர்ப்பு வழங்கப்படும். அல்லாஹ்வின் முன்னால் அவர் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒத்துக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் "நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?'' என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர், "நான் உனக்காக (வீர) மரணம் அடையும் வரை போராடினேன்'' என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் "நீ பொய் சொல்கிறாய்: வீரன் என்று கூறப்படுவதற்காகவே போரிட்டாய். இவ்வாறே (மக்களாலும் உலகில்) பேசப்பட்டு விட்டது'' என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதர் முகங்குப்புறவிழ இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும். பின்னர் (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுத்து, குர்ஆன் ஓதும் வழக்கமுடைய அறிஞர் அல்லாஹ்வின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ், தான் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் "நான் கொடுத்த அருட்கொடைகளை என்ன செய்தாய்?'' என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர் "நான் உனக்காக (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனை (பிறருக்கும்) கற்றுக் கொடுத்து, குர்ஆனை உனக்காக ஓதி வந்தேன்'' என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் "நீ பொய் சொல்கிறாய், அறிவாளி என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டுமென்பதற்காகவே இஸ்லாமிய அறிவைக் கற்றாய். குர்ஆனை (நன்றாக) ஓதக்கூடியவர்கள் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே குர்ஆனை ஓதினாய். அவ்வாறே (மக்களாலும்) பேசப்பட்டு விட்டது'' என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும் வரை அம்மனிதரை முகங்குப்புறவிழ இழுத்துச் செல்லும் படி ஆணையிடப்படும். அதன் பின்னர் செல்வந்தர் ஒருவர் அழைக்கப்படுவார். அவருக்கு (உலகில்) அல்லாஹ் தன் அருட்கொடைகளைத் தாராளமாக வழங்கி அனைத்து விதமான செல்வங்களையும் அளித்திருந்தான். அவருக்கு அல்லாஹ் தான் அளித்துள்ள அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம், "நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?'' என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர் "நீ எந்த வழிகளிலெல்லாம் செலவிடப்பட வேண்டும் என்று விரும்பினாயோ அவ்வழிகளில் எதிலும் நான் செலவு செய்யாமல் விட்டதில்லை'' என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் "நீ பொய் சொல்கிறாய். வாரி வாரி வழங்குபவர் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே நீ அவ்வாறு செய்தாய். அவ்வாறே (உலகில்) சொல்லப்பட்டு விட்டது'' எனக் கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை இம்மனிதரை முகங்குப்புற விழ இழுத்துச் செல்லுமாறு ஆணையிடப்படும். நூல்: முஸ்லிம் 3527

உயிர்த் தியாகம் செய்தவரை சொர்க்கவாசி என்று நாம் அனைவரும் நினைத்திருப்போம். அவரும் நாம் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டிருக்கிறோம்; அல்லாஹ்விற்காகத் தான் உயிரைத் தியாகம் செய்திருக்கிறோம் என்று நினைத்திருப்பார். ஆனால் அல்லாஹ், "உன்னுடைய உள்ளம் தூய்மையாக இல்லை. நாம் கொல்லப்பட்டால் வரலாற்றில் இடம்பிடிப்போம், நமது பெயர் நிலைத்து நிற்கும், நம்மை தியாகி என்று மக்கள் பாராட்டுவார்கள் என்பதற்காகத் தான் இதை செய்தாய்' என்று அவரை நிராகரிதத்து விடுவான்.

உயிரைத் தியாகம் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதை நாம் ஒவ்வொருவரும் விளங்கி வைத்திருக்கிறோம். இந்த உலகத்தில் மனிதன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சொத்து, சுகம் என்று எதையும் இழப்பதற்குத் தயாராக இருக்கிறான். உயிரை விடுவதற்கு யாரும் அவ்வளவு எளிதாக முன்வரமாட்டார்கள்.

ஆனால் தன்னுடைய உயிரையும் தியாகம் செய்த ஒருவருடைய நிலை மறுமையில் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. உள்ளம் தூய்மையாக இல்லாத காரணத்தினால் இவர் அல்லாஹ்விடத்தில் இறைநேசர் என்னும் சிறப்பை அடைய முடியாதவராக ஆகிவிட்டார். நம்முடைய பார்வையில், நபிமார்களுக்கு அடுத்த அந்தஸ்து, பதவி இவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்காமல் போய்விட்டது. இன்று நாம் யாரையெல்லாம் அவ்லியா, இறைநேசர் என்று சொல்கிறோமோ அவர்கள் இந்த உயிர்த் தியாகிக்குச் சமமாவார்களா?

ஆக, உலகத்தில் நாம் நல்லவர், அறிஞர், மகான் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் அவர்களுடைய உள்ளத்தில் எண்ணம் சரியாக இருக்கிறதா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. மறுமை நாளில் தாம் செய்த செயலுக்கு நற்பேறு கிடைக்குமா என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. நாம் உயிர்த் தியாகம் செய்து விட்டோம். கற்றறிந்த கல்வியின் மூலமாக மக்களை நேர்வழிப்படுத்தினோம். பிறருக்கும் கற்றுக் கொடுத்தோம். நல்லவற்றிற்காக தான, தர்மங்கள் வழங்கினோம். அதனால் நமக்கு அல்லாஹ்விடத்தில் பரிசு கிடைக்கும் என்று நினைத்தவர்களுக்கு என்ன நிலை என்பதை இந்தச் செய்தியின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

இறைநேசர்களை நாமே தீர்மானிக்கலாமா? http://silaiyumkaburum.blogspot.com/2015/05/irainesarai-name-theermanikkalama.html

நபியின் சிறுநீர் நரகைத் தடுப்பதா?

நபி (ஸல்) அவர்களின் சிறுநீரை தோழர்கள் பருகினர். நபி (ஸல்) அவர்களின் இரத்தத்தை தோழர்கள் சாப்பிட்டனர். அவ்வாறு சாப்பிட்டவர்களை நரகம் தீண்டாது என்ற செய்திகள் தான் இந்தப் பரேலவிகளின் சொற்பொழிவுகளில் ஆக்கிரமிப்பு செய்யும்.

சாதாரண ஓர் அடிப்படை அறிவு கூட இல்லாத அறிவீனர்கள் இவர்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு! நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்ததும் தண்ணீரால் சுத்தம் செய்திருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (புறநகர்ப் பகுதியிலுள்ள) கழிப்பிடத்திற்குச் செல்லும்போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தையும் ஒரு கைத்தடியையும் (-அனஸா) எடுத்துச் செல்வோம். (தம் தேவையை முடித்துவிட்டு) தண்ணீரால் அவர்கள் துப்புரவு செய்துகொள்வார்கள்.   அறிவிப்பவர்: அனஸ் (ரலி),   நூல்: புகாரி 152

மற்றவர்களின் சிறுநீரைப் போலவே தனது சிறுநீரும் அசுத்தம் என்பதால் தான் சுத்தம் செய்திருக்கின்றார்கள். இந்த அசுத்தத்தை அடுத்தவர் சாப்பிடச் சொல்வார்களா? அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் பண்பைப் பற்றிக் குறிப்பிடுகின்றான்.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையான வற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.  (அல்குர்ஆன் 7:157)

உங்களுக்குக்கு நல்லவை அனுமதிக்கப்பட்டுள்ளன என்று பின்வரும் வசனத்தில் கூறுகின்றான்.

தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன் 5:5)

இப்படியிருக்கையில் அசுத்தம் என்று அவர்களே கருதிய தமது சிறுநீரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடிக்கச் சொல்வார்களா? என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை.

அறிவியல் அடிப்படையில் இவை உடலுக்குத் தேவையில்லாத கழிவுகள். இந்தக் கழிவு உடலுக்குள் இருந்தால் உபாதையும் உபத்திரமும் ஆகும். இப்படி உடலுக்குத் தீங்கிழைக்கும் ஓர் அசுத்தத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடுத்தவரை, அதிலும் தனது தோழர்களைக் குடிக்கச் சொல்வார்களா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 13

இவ்வாறு இறை நம்பிக்கையாளரின் இலக்கணத்தைக் கூறும் நபி (ஸல்) அவர்கள் அதற்கு மாற்றமாக எப்படி நடந்திருப்பார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இது தொடர்பாக அவர்கள் சில ஹதீஸ்களைக் கூறுகின்றார்களே என்று கேட்கலாம். இந்த ஹதீஸ்களின் லட்சணம் என்ன என்பதைக் கடந்த   இதழ் தோலுரித்துக் காட்டியது. எனவே இது பரேலவிகளின் பயங்கர அசுத்தமான, அசிங்கமான, அபத்தமிகு வாதமாகும்.