திருட்டை விட்டுக் காக்க வேண்டிய தெய்வங்களே
திருட்டுப் போகின்றன. களவைத் தடுத்து நிறுத்தி, பக்தனைக் காக்க வேண்டிய
கடவுள்களே களவாடப்படுகின்றனர்; கடத்தப்படுகின்றனர்.
கடைசியில் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்படுகின்றனர். இப்படித் தம்மையே காக்க முடியாதவர்கள் நம்மை எப்படிக் காப்பார்கள் என்பது தான் இப்ராஹீம் நபியவர்கள் உலக மக்களுக்குஉணர்த்துகின்ற உன்னத, உயரிய பாடம்.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்!
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த
ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள். அல்குர்ஆன் 22:73

ஓர் ஈயைப் படைப்பது ஒரு புறமிருக்கட்டும். அது பறித்துச் சென்ற, அதன்
மயிர்க் கால்களில் ஒட்டியிருக்கின்ற அற்பப் பொருளை மீட்பதற்குக் கூட
இந்தச் சிலைகளுக்குச் சக்தியில்லை என்று
அதன் பலவீனத்தை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
இப்படி எந்தச் சக்தியும் இல்லாத இந்தக் கல் அல்லது மண் பாண்டம் நம்மை எப்படிக் காப்பாற்றும் என்ற சிந்தனை மனிதனுக்கு வேண்டும்.

பிறரால் கடத்தப்படும் போது தம்மையே காப்பாற்றிக் கொள்ளாத இந்தத்
தெய்வங்கள் நம்மை எப்படிக் காப்பாற்றும் என்று மனிதன் சிந்திப்பதில்லை.
மற்றவர்கள் சிந்திப்பது ஒருபுறமிருக்கட்டும்.
இந்தக் கடவுள்களை மீட்டுக் காப்பாற்றும் காவலர்களும் சிந்திப்பதில்லை. மத சார்பின்மையுடைய நாட்டில் தங்களுடைய காவல்துறை அலுவலகத்தில் இந்தக் கடவுள் சிலைகளை வைத்து, அவை தங்களைக் காப்பாற்றும் என்று இவர்கள் நம்புவது தான் வேடிக்கையான விஷயமாகும்.
அக்கடவுள்களுக்கு இவர்களே (இவ்வுலகில்) முதன்மைக் காவலர்களாக இருக்க அக்கடவுள்களோ இவர்களுக்கு உதவ இயலாது.
அல்குர்ஆன் 36:75

இந்த வசனம் கூறுவது போன்று இந்தச் சிலைகளுக்குத் தான் இவர்கள்
பாதுகாப்புக் கொடுக்கும் நிலையில் உள்ளார்களே தவிர இவை எப்படி நம்மைப்
பாதுகாக்கும் என்பதை யோசிப்பதில்லை.
இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிலைகளுக்கு இறைவன் சொல்கின்ற இந்த வாதங்கள் அனைத்தும் தர்ஹாக்களுக்கும் பொருந்தும்.
தர்ஹாக்களில் களவு போகும் போது, காவல்துறையைத் தான் தர்ஹா டிரஸ்டிகள் நாடுகின்றனர். கோயில் கொள்ளையை அதிலுள்ள கடவுள்கள் தடுத்து நிறுத்தாதது போல், தர்ஹாக்களில் நடைபெறும்
கொள்ளையை, தர்ஹாக்களின் சொத்துக்களை பிறர் அபகரிப்பதை இந்த அவ்லியாக்கள் தடுத்து நிறுத்துவதில்லை.

பள்ளிவாசல்களில் மவ்லிது ஓதுவதை தவ்ஹீது ஜமாஅத்தினர் தடுத்து
நிறுத்துவதால் காவல்துறையை அணுகி, அவர்களது பாதுகாப்புடன் சில இடங்களில்
மவ்லிது ஓதுகின்றனர். உலகக் காவல்துறைத்
தலைவராக (?) இவர்கள் கருதும் முஹ்யித்தீன் இருக்கும் போது எதற்காக இந்த லோக்கல் போலீஸை அணுக வேண்டும் என்பதை இவர்களும் சிந்திப்பதில்லை. இவர்களை ஆதரிக்கும் மக்களும் சிந்திப்பதில்லை.

இறந்து போன பிணங்களிடம் போய் தங்கள் கோரிக்கையைக் கேட்கும் ஜனங்கள் இதைச் சிந்திப்பார்களா?
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்