"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

6/04/2013

மன்னிப்பு கோருதல் அல்லாஹுவிடமா...? அல்லது அவனுடைய தூதரிடமா..?

மன்னிப்பு கோருதல் அல்லாஹுவிடமா...? அல்லது அவனுடைய தூதரிடமா..?

وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ
فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًاِ
(முஹம்மதே) அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்து விட்டு உம்மிடம் வந்து, அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடி, அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால் மன்னிப்பை ஏற்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அல்லாஹ்வைக் காண்பார்கள். 4:64

///மன்னிப்பு அல்லாஹ்விடம் தான் கேட்க வேண்டும் மற்றவர்களிடம் கேட்கக்கூடாது என்றால்///////
////நாம் முதலில் அவர்களிடம் மன்னிப்பு தேடி விட்டு///
 4:64 மேற்கூறிய வசனத்தை சுட்டிக்காட்டி மன்னிப்பை மற்றவர்களிடமும் கேட்க(செல்ல)லாம் என்ற தோரணையில் கருத்தைப் பதித்துள்ளீர்கள்(அதாவது நபியவர்களிடம், நல்லடியார்களிடம் பாவமன்னிப்பு தேடலாம் என்று கூறவருகின்றீர்கள் என எண்ணுகின்றேன்.)
4:64 வசனத்தில் அல்லாஹ் கூறியபடி தமக்குத் தாமே தீங்கிழைத்தவர்கள் நபி(ஸல்) அவர்கள் உயிரோடு வாழ்ந்த காலத்தில் நபியவர்களிடம் நேரில் வந்து தாம் செய்து விட்ட பாவத்திற்கு தாமும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு, நபி(ஸல்) அவர்களும் அல்லாஹ்விடம் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பான் என்று தான் இவ்வசனம் கூறுகிறதே தவிர நபி(ஸல்) அவர்களிடம் பாவ மன்னிப்புக் நேரடியாக கோருமாறு கூறவில்லை.

அதாவது இந்த வசனத்தில் فَاسْتَغْفَرُوا اللَّهَ அவர்கள் அல்லாஹுவிடம் பாவ மன்னிப்பு கோரவேண்டும் என்று தான் கட்டளையிடுகின்றது, மாறாக (மவ்லித் வரிகளில் நபி(ஸல்) அவர்களை "பாவங்களை மன்னிப்பவரே" என்று  கூறுவது போன்று ) 'தூதரிடம் பாவ மன்னிப்பு கோரவேண்டும்' என்று கூறப்படவில்லை.

///தன் ஆத்மாவிற்கு அநீதம் இழைத்தவன் என்னிடம் தான் வரவேண்டும் என்று சொல்லாமல் என் ரசூலிடம் போகவேண்டும் என்று சொல்கிறானே////
///அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடுகிறோம் எங்களுக்காக நீங்களும் இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடுங்கள் என்று கேட்கிறோம்.///

அநீதம் இழைத்தவன் நபி(ஸல்) அவர்களிடம் வருவதின் நோக்கம் நபியுடைய மன்னிப்பை பெறுவதற்காக அல்ல, மாறாக அல்லாஹுவின் மன்னிப்பை பெற்றுக்கொள்ள. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு வாழும் போது, அவர்களே அல்லாஹ்விடம் அம்மக்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும் போது(وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ ) இறைவன் மன்னிக்க அதிக வாய்ப்பு உண்டு.

அதுவும் நபி(ஸல்) அவர்கள் உயிரோடு வாழும் போது தான். நபி(ஸல்) அவர்கள் மரணித்த பிறகு பாவ மன்னிப்பு கேட்பார்கள் என்று இந்த வசனம் கூறவில்லை.

4:64 வசனத்தை போன்று மேலும் இரு வசனங்களில் 4:110, 3:135 அல்லாஹ் என்ன கூறுகின்றான் என்பதை பாருங்கள் ..

யாரேனும் தீமையைச் செய்து, அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார். 4:110

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். 3:135

மவ்லித் வரிகளில் நபி(ஸல்) அவர்களை பாவங்களை மன்னிப்பவரே என்று நேரடியாக கேட்கின்றீர்கள். ஆனால்
அல்லாஹுவோ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்?
என்று கேட்கின்றான். 3:135

மன்னிப்பு கோருதல் அல்லாஹுவிடம் தான் என்பதை பல வசனங்கள் குறிப்பிடுகின்றன அது போல இந்தவசனம் குறிப்பிடுகின்றன. அல்லாஹுவின் தூதரும் அல்லாஹுவிடம் தினமும் 100 முறை பாவமன்னிப்பு தேடியுள்ளார்கள் நீங்களும் தேடுங்கள் என்று கட்டளையும் இட்டுள்ள செய்தி நபிமொழிகளில் மூலம் பார்க்கின்றோம் அதன்படி நம் வாழ்கையை அமைத்து கொள்ள அல்லாஹ் நம் யாவருக்கும் உதவி செய்வானாக.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்..
--------------------------------------------------------------------------------------------------------------
அல்லாஹ் மன்னிப்பதட்கும்   மனிதன்  மன்னிப்பதட்கும்   வித்தியாசம் உள்ளன கேளுங்கள்

அல்லாஹ் மன்னிப்பதும் மனிதன் மன்னிப்பதும் ? from on .

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்