'அவ்லியாக்களின் தரிசனம் பெற்றால்
ஆன்மாவுக்கே சுகம்சுகம் '
'எவருக்குமிதிலே சந்தேகம் வேண்டாம் '
'ஏற்றுக்கொண்டோர்க்கே ஜெயம் ஜெயம்'
'ஏற்றுக்கொண்டோர்க்கே ஜெயம் ஜெயம் '
இப்பாடலும்......
பாடாத முஸ்லிம் வீடுகளே 80-களில் இல்லை எனலாம். வெள்ளிக்கிழமை காலை கட்டாயம் டேப் ரிக்கார்டர் மேற்படி பாடல்கள் காயல் ஷேக் முஹம்மத் குரலில் ஒலித்தே தீரும்..!
"அடடே... இப்படி எல்லாம் பாடல்கள் இருந்ததே எங்களுக்கு தெரியாதே, கேட்டதே இல்லையே" ...என்று இன்று 90-களில் பிறந்தவர்கள் சொல்வீர்களாயின்.... அதற்கு காரணமானவர்களில் மிக முக்கியமானவர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள்தான்..!
தமிழகத்தில் திரு.ஈ.வே.ரா.பெரியார் அவர்களுக்கு இந்துக்கள் மத்தியில் மூட நம்பிக்கை ஒழிப்பில் எந்த அளவுக்கு பங்கு உள்ளதோ அதை விட அதிக மடங்குப்பங்கு, சகோ.பிஜே அவர்களுக்கு முஸ்லிம்கள் மத்தியில் குர்ஆன் ஹதீஸை எடுத்து சொல்லி தர்கா வழிபாடு போன்ற எண்ணற்ற மூட நம்பிக்கைகளை ஒழித்ததில் உள்ளது என்றால் அது மிகை அல்ல; வரலாறு..!
நான் அறிந்து தமிழ்கூறும் நல்லுலகம் முழுமைக்கும் தெரியும்படி, முதன் முதலில் தர்ஹாவை அதி தீவிரமாக 'ஷிர்க்' என்று பகிரங்கமாக எதிர்த்தவர் அவர்தான். அவர், ஒரு சிலருடன் சேர்ந்து... அப்போது தமிழகத்தின் மிகப்பெரும் மார்க்க அறிஞர்களின் ஒன்று திரண்ட தலைமையில் நடந்த மாபெரும் தஞ்சை வலிமார்கள் மாநாட்டை எதிர்த்து துண்டு பிரசுரம் வெளியிட்டதில் 86-ல் ஆரம்பித்த இந்த தர்கா மூட நம்பிக்கை ஒழிப்பு சீர்திருத்தம்... அல்ஹம்துலில்லாஹ்... இன்று 'தர்ஹா' 'அவுலியா' 'ஹத்தம்' 'ஃபாத்திஹா' 'சந்தனக்கூடு' 'கந்தூரி' 'உரூஸ்' 'கொடியேத்தம்' என்று வாயை திறக்கவே, அந்த பக்கமாக திரும்பக்கூட பெரும்பாலானோர் இன்று நாணுகிறார்கள்.
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால்... மக்களின் மூடநம்பிக்கையை மூலதனமாக்கி இன்றைய தேதியில் உழைக்காமல் குறுக்கு வழியில் தர்கா கட்டி ஆங்கே ஓர் உண்டியல் வைத்து விளம்பரம் செய்து வருஷத்துக்கு பல விழா நடத்தி அதன் மூலம் எல்லா வகையிலும் பணம் பண்ண துடிப்போரின் 'ச்சீப் பிஸினஸ் செண்டர்கள்'தான் தர்கா..!
இன்று தமிழகத்தில் பல இஸ்லாமிய இயக்கங்கள் மிக தீவிரமாக செய்து வரும் 'தர்காஹ் வழிபாடு எதிர்ப்பு' இந்த நிலையில் வீரியமாக தொடர்ந்தால் நம் தலைமுறை காலத்திலேயே தர்காஹ் என்பதே என்னவென்று தெரியாத நிலை உருவாகும்... இன்ஷாஅல்லாஹ்...!..

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்