"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

11/25/2013

பிஜே மத்ஹபா?



மத்ஹபை குறை சொல்லி நாம் விமர்சனம் செய்யும்போது, ஏன் நீங்களும் பிஜேவை பின்பற்றவில்லையா ? அவரை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் பிஜே மத்ஹப் என்று ஒன்றை உருவாக்கவில்லையா? என்ற ஒரு அற்புதமான (?) கேள்வியை சிலர் முன்வைக்கின்றனர்.

பிஜேயின் விளக்கங்களை மேற்கோள் காட்டுகின்றீர்களே, என்று அதை ஒரு குற்றமாக சொல்வது வடி கட்டிய அறியாமையே தவிர வேறில்லை.

மார்க்கத்தை பொறுத்தவரை, இரு சாரார் உள்ளனர். ஒன்று அறிந்தவர்கள்மற்றொன்று அறியாதவர்கள்.

மார்க்க மசாயில்களை அறிந்து வைத்திருக்காத ஒருவருடைய கடமைஎன்னவெனில், அதை அறிந்து வைதிருக்ககூடியவரிடம் கற்க வேண்டும். இதுவேஅல்லாஹ் சொல்லி தரும் பாடம்.
இறுதி பேருரையில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதையேவலுயுருதினார்கள்.
அனைவரும் சுயமாக குரான் ஹதீஸ்களை படித்து விளங்கிக்கொண்டால்போதும், அதை தாண்டிய கடமையோ பொறுப்போ நம்மீது சுமத்தப்படவில்லை என்று எண்ணுவது தவறான மதிப்பீடாகும்.

நன்மையை ஏவுங்கள் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமையாக்கப்பட்டஒன்றாக இருக்கின்றது.
அனைவரும் சுயமாக, பிறரது உதவியின்றி நன்மையை அடைய முடியாது, நன்மையை சொல்லி தரக்கூடிய கூட்டம் இருந்து கொண்டே இருக்கும், அவர்களை பின்பற்றக்கூடிய கூட்டமும் இருந்துக்கொண்டே தான் இருக்கும், இருக்க வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால், இறைவன் தனது திருமறையில் கூட, அறிவுள்ளவர்களை (மார்க்க அறிஞர்களை) சிலாகித்து சொல்கிறான். அவர்களுக்கு சமூகத்தில் கூடுதல் பொறுப்பு உள்ளது என்று கூறுகிறான்.

அந்த அடிப்படையில், மார்க்க சட்டங்களை, குர் ஆன் ஹதீசுக்கு உட்பட்டு நாம்அறிந்து கொள்ள விழையும் போது, அதை எளிதான முறையில் விளக்கித்தர , மார்க்க அறிஞர்களின் உதவியை நாடுவதில் எந்த தவறும் இல்லை என்பது மட்டும் இல்லை , அது மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒன்று என்பதை அறியலாம்.

அதே நேரம், வெறுமனே, கண்மூடித்தனமாக எவரையும் பின்பற்ற வேண்டும் என்றும் இஸ்லாம் சொல்லவில்லை.

ஏகத்துவத்தை உறுதியுடன் பின்பற்றக்கூடிய நாம், மார்க்க அறிஞர்களின்உதவியை நாடும்போது, அவர்களின் ஆய்வுகளும் விளக்கங்களும் மார்க்கத்திற்குஉட்பட்டதா இல்லையா என்பதை சிந்திக்கும் கடமையையும் சேர்த்தே தான்பெற்றுள்ளோம்.

இன்று மத்ஹப் மாயைகளில் வீழ்ந்து கிடப்போர் கோட்டை விட்டது இதில் தான்.

அறிஞர்களிடம் அறிவை தேடிக்கொள்ள இஸ்லாம் அளித்த அனுமதியை தவறான பயன்பாட்டின் மூலம் தங்களுக்கு தாங்களே தவரிழைதுக்கொண்டனர்.

மார்க்க அறிஞர் என்று இவர்களாகவே நம்பி வைத்துக்கொண்ட சிலரதுஆய்வுகளையும் விளக்கங்களையும் கண்ணை மூடி பின்பற்றலாம் என்றுஇவர்கள் செய்து கொண்ட முடிவினால், இன்று சமுதாயம் இஸ்லாத்தை விட்டும்வெகு தொலைவிற்கு சொன்று கொண்டிருப்பதை நிதர்சனமாக நம்மால் அறியமுடியும்.

இவ்வாறு நாம் விமர்சனம் செய்யும் போது, ஏன், நீங்கள் மட்டும் பிஜேவைபின்பற்றவில்லையா ? என்ற ஒரு அறிவுப்பூர்வமான (?) கேள்வியைஎழுப்புகிறார்கள்.

இவ்வாறு விமர்சனம் செய்யக்கூடியவர், முதலில் தங்களது நிலைபாட்டைவிளக்க வேண்டும்.
இவ்வாறு ஆதங்கப்படுபவர், வேறு எவரது விளக்கத்தை எடுத்து வைக்க வேண்டும் என்பதையும் இங்கு கூற வேண்டும்.

மார்க்க அறிஞர் எவருடைய விளக்கங்களையும் யாரும் பெறக்கூடாது, அனைவரும் சுயமாகவே ஆராய வேண்டும், என்பதைஇவர்களது நிலையா?

அல்லது, நான்கு இமாம்களை மட்டும் தான் அறிஞராக போற்றி பின்பற்றவேண்டும் என்பது இவர்களது நிலையா?

அல்லது அறிஞர்கள் என்று சொல்லப்படக்கூடிய அனைவரையும் பின்பற்றலாம்எனபது இவர்களது நிலையா?

அல்லது, எவரது விளக்கத்தை கேட்டறிந்தாலும், இறுதியில் நமது சிந்தனைக்குஇடம் அளித்த பின்பே அவற்றை பின்பற்றுவதா கூடாதா என்பதை முடிவு செய்யவேண்டும் என்பது இவர்களது நிலையா?

பிறரது குறையை சொல்பவர், அதை சரி செய்யும் வகையிலான அறிவுரையையும் சேர்த்தே அல்லவா சொல்ல வேண்டும்?

எதற்க்கெடுத்தாலும் பிஜேயின் விளக்கத்தை மட்டும் பிறருக்கு அனுப்புவது தவறு என்றால், வேறு எவரது விளக்கத்தை அனுப்ப வேண்டும் என்று சொல்வது இவர்களது தார்மீக கடமையாகி விட்டது.

நாம் மேலே எழுப்பியிருக்கும்இவர்களது நிலைப்பாடு சம்மந்தமான கேள்விகளுக்கு பதில் சொல்வதும் இவர்களது கடமையாகி விட்டது.

இதை இவர்கள் இங்கு தர மறுக்கும் பட்சத்தில்,
பிஜே என்ற அறிஞரின் ஆய்வுகளையும், அவரது விளக்கங்களையும் மிஞ்சும் அளவிற்கு வேறு எந்த அறிஞரது பேச்சோ, விளக்கமோ, ஆய்வோ இல்லை என்பதை மேற்படி நபர்களே ஒப்புக்கொண்டதாக தான் அர்த்தமாகும்.

தனி நபர் மீது இவர் போன்றவர்கள் கொண்ட காழ்ப்புணர்ச்சியே இவர்களை இவ்வாறு பேச தூண்டுகிறதே தவிர , இவர்களது சிந்தனையில் நேர்மையும், நடுநிலையும் ஒருகாலமும் இருந்ததில்லை என்பதையும், இவர்கள் எந்தக்கொள்கையும் அற்றவர்கள் என்பதையும் இதன் மூலம் நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

அல்லாஹ் நம்மை ஏகத்துவத்தில் என்றைக்கும் நிலை பெற செய்வானாக..

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்