"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

11/01/2013

அவ்லியா அவர்கள் ஷேவிங் செய்த இடம்...

புகைப்படத்தில் உள்ள இடம் தர்கா கிடையாது...
இது நாகூர் சில்லடி...
நாகூரில் அடங்கி இருக்கும் அவ்லியா(??) அவர்கள் ஷேவிங் (SHAVING) செய்த இடம்...

இதற்கு ஒரு கதை(கப்ஸா) இருக்கிறது...
நாகூர் தர்காவில் அடங்கி இருக்கும் சாஹுல் ஹமீத் அவ்லியா(?) அவர்கள் ஒருமுறை நாகூர் கடற்கரையில் அமர்ந்து முகசவரன் (SHAVING) செய்து கொண்டு இருந்தார்கள்..
அப்போது கடலில் ஒரு கப்பலை காண்கிறார்கள். அந்த கப்பலில் ஒரு ஓட்டை விழுந்த காரணத்தினால் அது கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிகொண்டு இருக்கிறது...
அதை கண்ட நம் அவ்லியா(?) தான் ஷேவிங் செய்ய பயன்படுத்திய கண்ணாடியை கப்பலில் ஏற்பட்ட ஓட்டையை நோக்கி குறிபார்த்து கடலில் விட்டெரிய அது சரியாக அந்த ஓட்டையை அடைதுவிடுகிறது...

உடனே அவ்ளியாவின் உதவியால் காப்பாற்றப்பட்ட அந்த கப்பலில் இருந்த மக்கள் அவ்ளியாவை சந்தித்து நன்றி கூறுகின்றனர்...

இன்னும் கதை போகும்.....
அவ்லியா அவர்கள் ஷேவிங் செய்த இடம் தான் இது... (கதை எப்புடி புள்ளரிக்குமே...!!!!)

நமது கேள்விகள்...
---------------------------------------
1.உங்கள் பார்வையில் அவ்லியா (அல்லாஹ்வின் நேசர்) இருக்கும் ஒருவர் யூதர்களுக்கு மாறு செய்யும் வகையில் தாடி வையுங்கள் என்று கூறும் நபிகளாரின் வார்த்தையை மதிக்காமல் ஷேவிங் செய்யலாமா????

2.முகம் பார்க்கும் கண்ணாடியை தூக்கி எரிந்தால் அது தானாக போய் ஓட்டையை அடைக்கும் வண்ணம் ஒட்டிக்கொல்லுமா???

இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற கதைகளை இஸ்லாம் அனுமதிப்பதில்லை...
எனவே , இந்த சம்பவம் நடைபெற்று இருக்க வாய்ப்பே இல்லை... நாகூர் தர்காவில் அடங்கி இருக்கும் சாகுல் ஹமீத் அவர்கள் நல்ல முறையில் மார்க்கத்தை எடுத்து சொன்னவர்கலாக தான் வாழ்ந்தார்கள் என்று தான் நாம் அவர்களை பற்றி கேள்விப்படுகிறோம்... அவர்கள் அவ்ளியாவா இல்லையா என்பது மனிதர்களுக்கு தெரியாது...

அதை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே...!!!!!

Thank You
Abdun Nasir Baqavi

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்