யூதர்களும், கிறித்தவர்களும் அல்லாஹ்விடமிருந்து வேதங்கள் கொடுக்கப்பட்டிடிருந்தனர். அந்த வேதங்கள் அவர்களுக்கு சரியான வழி காட்டிட போதுமானவைகளாக இருந்தும், அவர்கள் வழி கெட்டதற்கான காரணம் இந்த தவறான வாதம் தான். திருக்குர்ஆன் மிக அழகாக இதனைச் சொல்லி காட்டுகின்றது.
வேதமுடையவர்களே! தவ்ராத்தையும், இஞ்சீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையும் நிலைநாட்டும் வரை, நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களில்லை” என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 5 : 68)
அவர்களிடம் வேதங்களிலிருந்தும், அதனை அவர்கள் நிலைநாட்டாமல். அதன்வழி செல்லாமல், முன்னோர் வழி என்று கண்முடிச் சென்றதே அவர்கள் வழி கெட்டுப் போனதற்கான காரணமாகும். அதனால்தான் யூத, கிறித்தவர்களிடம் நேரடியாக பின்வருமாறு சொல்லி விடும்படி தனது தாதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிடுகிறான்.
வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில், ஆதாரமற்றவைகளைக்(கூறி) வரம்பு மீறாதீர்கள்! (உங்களுக்கு) முன்னர், தாங்களும் வழி கெட்டுப் பிறரையும் வழிகெடுத்த கூட்டத்தினரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்!” என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 5 : 77)
தாங்களும் வழி கெட்டுப் பிறரையும் வழி கெடுத்து விட்ட முன்னோர்களைப் பின்பற்ற வேண்டாம் என்று வேதமுடையோருக்கு அல்லாஹ் உணர்த்துகின்றான்.
“நீங்கள் செய்கின்ற காரியங்களுக்கு குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் ஆதாரம் காட்டுங்கள்!” என்று நாம் அவர்களிடம் கூறும்போது “முன்னோர்கள் சொன்னார்கள்” என்று பல்லவியைப் பாடுகின்றனரே, அப்படியானால் முன்னோர்கள்தான் இவர்களுக்கு சட்டமியற்றும்் அதிகாரம் படைத்த இறைவனா? முன்னோர்கள்தான் இவர்களுக்கு இறைதூதர்களா? யூத, கிறித்தவ சமுதாயம் தான் தங்கள் முன்னோர்களைப்பற்றி , மத குருமார்களைப் பற்றி இத்தகைய நம்பிக்கை வைத்திருந்தனர். அதனால் வழி தவறினர் என்பதை அல்லாஹ் தெளிவாகச் சொல்லி காட்டுகிறான்.
“அவர்கள் தங்களின் பாதிரிளையும், மத குருமார்களையும் கடவுள்களாக கரதிக் கொண்டனர்”. (அல்குர்ஆன் 9 : 31)
இந்தத் திருவசனத்திற்கு விளக்கம் தரப் புகுற்த அலலாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், மத குருக்கள் ஒன்றைக் “கூடும்” என்றால் அதனைக் கூடும் என்று கருதுவதும், ஒன்றை மதகுருக்கள் “கூடாது” என்றால் கூடாது என்று கருதிக் கொள்வதும், அவர்களைக் கடவுள்களாக ஆக்கியதாகும்” என்றனர். அறிவிப்பவர் : அதீ இப்னு ஹாதம்(ரழி) நூல் : அஹ்மத்
மார்க்கத்தில் ஒன்றை ஆகுமானது என்று ஆக்கவும், வேறொன்றை ஆகாது என்று தடுக்கவும் அல்லாஹ்வுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. அல்லாஹ்வின் அனுமதியோடு அல்லாஹ்வின் தூதருக்கும் உரிமையுண்டு. வேறு எவரும் ஒரு காரியத்தை நம்மீது கடமையாக்க அல்லது ஹராமாக்க (தடை செய்ய) அதிகாரம் படைத்தவர்கள் அல்ல. அவ்வாறு அதிகாரம் இருப்பதாக நம்புவது அவர்களை வணங்கியதற்கு நிகராகும். இதைத்தான் முன்பு வேதம் கொடுக்கப்பட்டவர்கள் செய்தனர். அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளாயினர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்