"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

12/22/2013

சிறிய ஜிஹாதில் இருந்து பெரிய ஜிஹாதுக்கு

  ஆண்மீகத்தில் அளவு கடந்து வழி தவறிச் சென்ற ஸூபியாக்களால் நபியவர்களின் பெயரால் பரப்பப் பட்ட , இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக செய்யப்படும் மிக உன்னத செயலான ஜிஹாதை கொச்சைப் படுத்தும் விதத்தில் நபிகளாரின் பெயரில் கூறப்பட்டு வரும் மற்றொரு செய்தியை நோக்குவோம்.

செய்தி இதுதான்:
أولا :- التخريج

روى البيهقي في كتاب الزهد أخبرنا علي بن أحمد بن عبدان حدثنا أحمد بن عبيد حدثنا تمتام حدثنا عيسى بن إبراهيم حدثنا يحيى بن يعلي عن ليث عن عطاء عن جابر قال قدم على رسول الله {صلى الله عليه وسلم} قوم غزاة فقال عليه السلام قدمتم خير مقدم من الجهاد الأصغر إلى الجهاد الأكبر ) قيل وما الجهاد الأكبر قال مجاهدة العبد هواه )
قال البيهقي هذا إسناد فيه ضعف

هكذا وجدت
و لم أجد له أطرافا
و شيخ البيهقى ضعيف جدا

ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்களிடம் (அல்லாஹ்வின் பாதையில்) யுத்தம் புரியும் ஒரு கூட்டம் வந்த போது நபியவர்கள் "நல்வரவு.. நீங்கள் சிறிய ஜிஹாதில் இருந்து பெரிய ஜிஹாதுக்கு வந்திருக்கிறீர்கள்" எனக் கூறினார்கள். அதற்கவர்கள் "பெரிய ஜுஹாது எது?" எனக் கேட்டார்கள் அதற்கு நபியவர்கள் "ஒரு அடியான் தனது மனோ இச்சைக்கு எதிராக போராடுவதாகும்" எனக் கூறினார்கள்."


இச் செய்தி இமாம் பைஹகி அவர்களது "கிதாபுஸ் ஸுஹ்த்" என்ற நூலிலும் இமாம் அபூ பக்கர் அஷ் ஷாபி அவர்களது "அல் பவாஇதுல் முந்தகாத்" என்ற நூலிலும் இமாம் கதீப் அல் பக்தாதி அவர்களது "தாரீகு பக்தாத் என்ர நூலிலும் இடம் பெற்றுள்ளது.

درجة الحديث

ضعيف ( البيهقي )

لا أصل له (ابن تيمية ) ( 11/197 )

ضعفه العراقي في تخريج الإحياء
منكر ( الألباني ) السلسلة الضعيفة
2460
ضعيف :- ذكره الفتني في تذكرة الموضوعات

قال السيوطي لا أعرفه مرفوعا
غريب جدا ، الزيلعي (تخريج الكشاف 2/395 )

قيل لا أصل له أو بأصله موضوع ،على القاري الحنفي (الأسرار المرفوعة )

قال الشيخ ابن عثيمين عند ذكره في الشرح الممتع ( ولكنه حديث ضعيف غير صحيح )
وقال في احدى فتاواه _ ضعيف جدا أو موضوع (مجموع فتاوى ابن عثيمين 498/27 )

قال شيخ الإسلام ابن تيمية في " مجموع الفتاوي " ( 11/197 ) :
" لا أصل له ، ولم يروه أحد من أهل المعرفة بأقوال النبي صلى الله عليه وسلم
وأفعاله ، وجهاد الكفار من أعظم الأعمال ، بل هو أفضل ما تطوع به الإنسان .. "

غير بعيدٍ أن (يحيى بن يعلى) انقلبت على بعض الرواة مِن (يحيى بن العلاء)، وأن الحديث حديثه، وهو متروكٌ متهم بالكذب.
ويُحتمل أن الغالط فيه: تمتام؛ فقد "كان يخطئ"؛ كما قال الدارقطني.
وعليه؛ فأصل الحديث كلامٌ لبعض السلف -أخرجه النسائي في الكنى-، ورواه ذلك الواهي مرفوعًا.

இச் செய்தியை பதிவு செய்த இமாம் பைஹகி அவர்களே இதன் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானது எனக் கூறியுள்ளார்கள்.


இவ்வறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் லைஸ் இப்னு அபூ சுலைம் என்பவரும் யஹ்யா பின் யஃலா என்பவரும் பலவீனமானவர்களாவர்


லைஸ் இப்னு அபீ ஸுலைம் என்பவர் தொடர்பாக இமாம் அஹ்மத் அவர்கள் "மிகவும் பலவீனமானமானவர், அதிகம் தவறிழைக்கக் கூடியவர்" எனக் கூற, யஹ்யா அல் கத்தான். இப்னு ஈன், இப்னு மஹ்தி ஆகிய இமாம்கள் (இவரது ஹதீஸ்களை எடுக்காமல்) இவரை கைவிட்டுள்ளனர் என இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் உறுதி செய்கிறார்கள்.


எனவே ஸூபிய்யாக்கலால் பரப்பப் படும் இந்த செய்தியும் பலவீனமாக உள்ளதால் கண்டிப்பாக இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இதுபற்றிய அத்வைதிகளின் வாதங்களையும் அதற்கான பதில்களையும் கீழே உள்ளவிடியோவில் காணலாம்

  more............



 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தொழுகையின் எண்ணிக்கையை குறைத்து உதவி செய்த மூஸா நபி பற்றி காண இங்கே கிளிக் செய்யவும்

தர்காவிற்கும் இஸ்லாத்துக்கும் தொடர்பு உள்ளதா என அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்