"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

2/05/2014

மரத்தை வணங்கும் பரளேவிகள்


படத்தில் உள்ள மரம் கோவிலில் உள்ள மரம் என்று யாரும் நினைக்க வேண்டாம். திருநெல்வேலி அருகில் உள்ள பொட்டல் புதூரில் உள்ள முஹையதீன் ஆண்டவர் தர்காவின் வெளியே வலது பக்கம் இருக்கிறது. மேலும் இந்த மரம் தெய்வத்தன்மை வாய்ந்த மரம் என்று இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். இந்த தர்காவிற்க்கு வருபவர்கள் அருகில் இருக்கும் குளத்தில் இருந்து சிறு கலயங்களில் தண்ணீர் எடுத்து வந்து இந்த மரத்தின் அடியில் ஊற்றி பின்பு இந்த மரத்தை தொட்டு முத்துவார்கள். இது போன்ற வணக்க செயல்களை அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் சொல்லியா இவர்கள் செய்கிறார்கள் இல்லவே இல்லை அவர்களுடைய மனோ இச்சையை பின் பற்றி செய்கிறார்கள். மனோ இச்சையை பின்பற்றி இவர்கள் செய்யும் இந்த செயல் தெளிவான இணை வைத்தலாகும். இந்த இணைவைத்தல் இவர்களை எங்குகொண்டு செல்லும் அதை இறைவனே தன் திருமறையில் தெளிவாக கூறுகிறான். "தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனைப் பார்த்தீரா? தெரிந்தே அவனை அல்லாஹ் வழி கெடுத்தான். அவனது செவியிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டான். அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான் . அல்லாவுக்குப் பின் அவனுக்கு வழி காட்டுபவன் யார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?". (45:23) "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம்". (5:72) அல்லாஹ் இவர்களையும் நம்மையும் இது போன்ற இணை வைப்பிலிருந்து காப்பாற்றுவானாக

படத்தை வணங்கும் பரலேவிகளை காண இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்