இன்று மதசார்ப்பற்ற எல்லா மதத்தவர்களும் கலந்து வாழும் ஒரு சூழலில் நாம்
வாழ்வதால் நம்மையும் அறியாமல் இஸ்லாத்தில் இல்லாத எத்தனையோ செயல்கள்
நம்மோடு சேர்ந்திருக்கின்றன. அதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம் ..அதை
நாம் இன்றுவரை உணர்ந்துகொள்ளவில்லை.
இதைத்தான் .இந்தியாவில்
எந்தளவு இஸ்லாம் வேகமாக பரவியதோ அதே அளவு இஸ்லாத்தில் மாற்றுமத
செயல்பாடுகளும் புகுந்தன. இதையே இந்தியாவிற்கு இஸ்லாம் second hand
ஆகத்தான் வந்தது என்று பண்முக சிந்தனையாளர் மெளலானா அபுல்ஹஸன் அலீ நத்வீ
(ரஹ்)கூறுகிறார்கள்.
அவர்களின் வார்த்தை எவ்வளவு நிதர்சனமானது என்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நம்மோடு இருக்ககூடிய இஸ்லாம் அனுமதிஅளிக்காத அந்த புதுமையான நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன ?
1 நம்முடைய கலாச்சாரம். பண்பாட்டை இழப்பது.
عن حسان بن عطية رحمه الله قال ما ابتدع قوم بدعة في دينهم ألا نزع الله
من سنتهم مثلها ثم لا يعيدها إليهم إلى يوم القيامة ( رواه الدارمي)
ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள,; மார்க்கத்தில் யார்
புதினங்களைப் (பித்அத்களை) புகுத்துகின்றார்களோ, அவர்கள் புகுத்திய அளவு
சுன்னாவை, மறுமை நாள் வரையில் அவர்களுக்கு திரும்பக் கிடைக்காமல் இறைவன்
செய்து விடுவான்.
سئل الإمام مالك رحمه الله تعالى : يا ابا عبد
الله ! من اين أحرم؟ قال : من ذى الحليفة من حيث أحرم رسول الله صلى الله
عليه وسلم فقال إني أريد أن أحرم من المسجد من عند القبر قال : لا تفعل
وإني أخشى عليك الفتنة فقال : وأي فتنة في هذه؟ إنما هى أميال أريدها قال :
واي فتنة أعظم من أن ترى أنك سبقت فضيلة قصر عنها رسول الله صلى الله عليه
وسلم؟ إني سمعت الله بقول : فـليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة
أو يصيبهم عذاب اليم. (رواه في الاعتصام الشاطبى)
இமாம் மாலிக்
(ரஹ்) அவர்களிடம் ஒருவர் கேட்டார், ஓ!!! அபூ அப்துல்லாஹ்!! எந்த
இடத்திலிருந்து நான் என்னுடைய இஹ்ராமைக் கட்ட வேண்டும் என்றார். அதற்கு
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள், துல் ஹுலைஃபா என்னும் இடத்தில் இருந்து தான்
முஹம்மது (ஸல்) அவர்கள் தங்களது இஹ்ராமைக் கட்டினார்கள் என்று பதில்
கூறினார்கள்.
அந்த மனிதர், முஹம்மது (ஸல்) அவர்களது
பள்ளியிலிருந்தும், அவர்களின் அடக்கத்தலத்திற்கு அருகில் இருந்தும நான்
இஹ்ராம் கட்ட விரும்புகின்றேன் எனக் கூறினார். இமாம் செய்யக் கூடாது. நீ
ஒரு தீங்கில் உன்னை உட்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றாய் என நான்
அஞ்சுகின்றேன் எனக் கூறினார்கள்.
அந்த மனிதர் மீண்டும் சில
மைல்களுக்கு அப்பால் நான் கட்டிக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றேன் என்று
கூறினார். இமாம் அவர்கள் என்ன கைசேதம் உனக்கு! முஹம்மது (ஸல்) அவர்கள்
காட்டித் தந்த நன்மையின் அளவு குறைவாக இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டு
அவரையே நீங்கள் மிஞ்சப் பார்க்கின்றீர்களா? அல்லாஹ் கூறியவற்றிலிருந்து
நான் ஞாபகப்படுத்திக் கொண்டதைச் சொல்கின்றேன்,
இறைவன்
கூறுகின்றான், யார் என்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது
கட்டளைகளுக்குப் புறம்பாக நடக்கின்றார்களோ அவர்கள் தங்களுக்கு
ஏற்படவிருக்கும் தீங்கைக் குறித்துப் பயந்து கொள்ளட்டும் அல்லது கடினமான
வேதனையைப் பயந்து கொள்ளட்டும் மாலிக்(ரஹ்) அவர்கள் அவரைப் பார்த்துக்
கூறினார்கள், நீ அந்த மாதிரி ஆகிவிடாதே
2. ஈமானை இழப்பது.
عن الفضيل بن عياض رحمه الله تعالى قال : إذا رأبت مبتدعاً فى طريق فخذ في
طريق اخر ولا يرفع لصاحب بدعة إلى الله عز وجل عمل ومن أعان صاحب بدعة فقد
أعان على هدم ادين . (رواه خصائص أهل السنة)
ஃபுதைல் பின் இயாழ்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது, உங்களை நோக்கி ஒரு பித்அத்-தைப் பின்பற்றக்
கூடியவன் வந்தால், அவன் வரும் வழியை விடுத்து நீங்கள் மாற்று வழியில்
சென்று விடுங்கள். பித்அத் செய்யக் இருந்து இறைவன் எந்த வித நல்ல
அமல்களையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். யார் ஒருவன் ஒரு பித்அத் செய்யக்
கூடியவனுக்கு உதவுகின்றானோ அவன் தன்னுடைய மார்க்கத்தையே அழிக்க உதவிக்
கொண்டிருக்கின்றான் என்பதாகும்.
قال سفيان الثوري رحمه الله تعالى : البدعة احب إلى إبليس منالمعصية المعصية يتاب منها والبدعة لايتاب منها (رواه في شرح السنة)
சுஃப்யான் தவ்ரி (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது , ஷைத்தானானவன் மனிதர்கள்
புரியும் பாவங்களைக் காட்டிலும், மார்க்கத்தில் பித்அத்-கள் அல்லது
புதினங்கள் ஏற்படுவதை அதிகம் விரும்புகின்றான். ஏனென்றால், மனிதர்கள்
தங்கள் பாவங்களுக்கு இறைவனிடம் பாவ மன்னிப்பைக் கோரிக் கொள்கின்றார்கள்.
ஆனால், அவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் பித்அதி-களுக்கு பாவமன்னிப்புக்
கோருவதில்லை, என்பது தான்.
(ஏனெனில் பித்அத்-ஆனது மக்களால்
நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியது என்றே செயல்படுத்தப்படுவதாலும், அவர்கள்
தாங்கள் செய்வது குற்றமல்ல என்றும் நினைப்பதாலும், அதற்காக அவர்கள்
இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவதில்லை)
யார் புதினங்களி (பித்
அத்) - ன் படி நடக்கின்றார்களோ, அவர்கள் பின்பற்றும் புதினங்களின் அளவுக்கு
அவர்களிடம் இருந்து இறைவன் முஹம்மது (ஸல்) அவர்களின் சுன்னாவைத் தூரமாக்கி
விடுவான்.
3 நம் நபியின் கோபத்துக்கு ஆளாகுவது.
عن سهل
ابن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم : إني فرطكم على الحوض من مر
علي شرب ومن شرب لم بظمأْ أبدا ليردن علي أقوام أعرفهم ويعرفوني ثم يحال
بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدرى ما أحدك فأقول سحقاً سحقاً
لمن غير بعدي
(متفق عليه)
1) கவ்தர் தடாகத்தின் முன்பாக நான்
தான் முதல் ஆளாக நின்று கொண்டிருப்பேன். யார் யாரெல்லாம் அங்கு வருகை
தருகின்றார்களோ அவர்களெல்லாம் அதில் நீர் அருந்துவார்கள்,
யாரெல்லாம் அங்கு ஒரு முறை வந்து நீர் அருந்தினார்களோ அவர்களுக்கு இனி
எப்பொழுதும் தாகம் எடுப்பதை உணரவே மாட்டார்கள். அப்பொழுது சில பேர் அங்கு
வருவார்கள். அவர்கள் என்னைப் பின்பற்றியவர்கள் என்பதையும் நான் கண்டு
கொள்வேன்.
அவர்களும் என்னை (நபி என) க் கண்டு கொள்வார்கள். ஆனால்
அவர்கள் என்னை நெருங்கி வருவதனின்றும் (மலக்குகளால்) தடுக்கப்படுவார்கள்.
(இதன் தொடர்ச்சி அடுத்த பக்கத்தில்)
அப்பொழுது நான் அவர்கள் என்னுடைய
சமுதாயத்தவர்கள் அல்லவா! என்னைப் பின்பற்றியவர்கள் அல்லவா! எனக் கூறுவேன்.
நபி முஹம்மது (ஸல்) அவர்களே உங்களுக்குப் (மரணித்த) பின்பு இவர்கள்
என்னென்ன புதினங்களை உருவாக்கினார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்,
என்று எனக்கு அறிவித்துக் கொடுக்கப்படும்.
அதன் பிறகு நான்
கூறுவேன், தூரப் போய் விடுங்கள் !! எனக்குப் பின்பு மார்க்கத்தில்
புதினங்களைப் புகுத்தியவர்களுக்கும் எனக்கும் தூரம் இருப்பதே சிறந்தது எனக்
கூறுவேன், என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக சஹ்ல் பின் சாத் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்
2) ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் பெருநாள்
தொழுகைக்கு முன் ஈத்காவில் ஒருவர் நஃபில் தொழக்கண்டார்கள்.அலி(ரலி) அவர்கள்
அவரை நஃபில் தொழவேண்டாம் என்று தடுத்தார்கள்..அதற்கு அவர் அமீருல்
முஃமினீன் அவர்களே நீங்கள் தொழவேண்டாம் என்று தடுக்கின்றீர்கள் நான் என்ன
கெட்ட செயலா செய்கின்றேன் தொழுதற்காக அல்லாஹ் என்னை தண்டிக்கமாட்டான் என்று
நான் நம்புகிறேன் என்றார்.
இந்த துடுக்கான வார்த்தையைக்கேட்ட
அலி(ரலி) அவர்கள் சகோதரரே நபி(ஸல்) அவர்கள் செய்யுமாறு தூண்டாத ஒரு
செயலுக்கு அல்லாஹ் எப்படி கூலிதரப்போகிறான் .எனவே இந்த தொழுகை வீண் செயல்
.வீண் செயல் ஹராமாகும்.ஆகவே இந்த தொழுகை நற்செயலாக கருதி நீர் நபி(ஸல்)
அவர்களுக்கு மாற்றம் செய்ததின் காரணமாக அல்லாஹ் உம்மை தண்டிக்க கூடும்
என்று கூறினார்கள்.
நூல் : நள்முல் பயான்..பக்கம் 73
4 பாவ மன்னிப்பை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை :
عن أنس بن مالك رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم : إن
الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع تدعته ( رواه اطبراني)
(மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை) யார் புகுத்தினாரோ அவரது அந்தச்
செயலிலிருந்து அவர் விடுபடாதவரை அவரது பாவ இறைஞ்சுதலை இறைவன் ஏற்றுக்
கொள்வதில்லை, என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக்
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இது போன்ற தீமைகளை பயந்துதான் ஸஹாபாக்கள் புதுமையான விஷயங்களில் கண்டிப்பாக நடந்துள்ளார்கள்.
عَنْ نَافِعٍ أَنَّ
رَجُلًا عَطَسَ إِلَى جَنْبِ ابْنِ عُمَرَ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ
وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ قَالَ ابْنُ عُمَرَ وَأَنَا أَقُولُ
الْحَمْدُ لِلَّهِ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ وَلَيْسَ هَكَذَا
عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَنَا
أَنْ نَقُولَ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ
ஹஜ்ரத் இப்னு
உமர்(ரலி) அவர்களின் மாணவர் நாபிஃ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஹஜ்ரத்
இப்னு உமர் (ரலி) அவர்களின் அருகில் தும்மிய ஒருவர் அல்ஹம்துலில்லாஹ்
வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் என்று கூறினார்.
இதை கேட்ட இப்னு உமர்
(ரலி) அவர்கள் இந்த முபாரக்கான அழகான கண் குளிர்ச்சியான மனநிறைவான இந்த
வாசகத்தை நானும்தான் மொழிகிறேன் எனினும் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு நமக்கு
கற்பிக்கவில்லை. நீர் சொன்னவாறு இச்சந்தப்பத்திற்கு நபு(ஸல்) அவர்கள்
கற்றுத்தரவில்லை. மாறாக எல்லா நிலையிலும் அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்ல
கற்றுத்தந்தார்கள். நூல் : திர்மிதி. 2662
عَنِ الْحَسَنِ قَالَ
دُعِيَ عُثْمَانُ بْنُ أَبِي الْعَاصِ إِلَى خِتَانٍ فَأَبَى أَنْ يُجِيبَ
فَقِيلَ لَهُ فَقَالَ إِنَّا كُنَّا لَا نَأْتِي الْخِتَانَ عَلَى عَهْدِ
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا نُدْعَى لَهُ
ஹஜ்ரத் உஸ்மானிப்னு அபில் ஆஸ் (ரலி) அவர்களை ஒருவர் கத்னாவிற்காக
அழைத்தார். அதை ஏற்க மறுத்துவிட்டு கூறினார்கள். நபி(ஸல்) காலத்தில்
கத்னாவிற்காக அழைப்பு கொடுக்கப்பட்டதுமில்லை. அதிலே நாங்கள் கலந்து
கொள்ளவுமில்லை.
நூல் : அஹ்மத் ஹதீஸ் எண். 17232
عن
(محمد) ابن سيرين قال لم يكويوا يسألون عن الإسناد فلما وقعت الفتنة قالوا
سموا لنا رجالكم فينظر إلى أهل السنة فيؤخد حديثهم وينظر إلى أهل البدع فلا
يؤخد حديثهم (رواه مسلم)
முஹம்மது பின் சிரீன் (ரஹ்) அவர்கள்
கூறுவதாவது, இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் சுன்னாவைப்
பற்றி எந்தக் கேள்விகளையும் கேட்காமல், சுன்னாவைப் பின்பற்றினார்கள்.
பிற்காலத்தில், சுன்னாவில் ஏகப்பட்ட பித்அத்-கள் புதிதாகப் பரவ
ஆரம்பித்தவுடன் மக்கள், அந்த சுன்னாவின் அறிவிப்பாளர்களின் வரிசையைப்
பற்றிக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். முதலில் அவர்கள் அந்த சுன்னாவை
அறிவித்தவர் சுன்னாவைப் பின்பற்றக் கூடியவரா என்பதை அறிந்து கொண்ட பின்பு
தான் அவர்கள் அந்த சுன்னாவைப் பின்பற்ற ஆரம்பிப்பார்கள்.
அதுவல்லாமல், அந்த அறிவிப்பாளர் தொடரில் ஒருவர் பித்அத் அல்லது
புதினங்களைப் புகுத்துபவர் அல்லது அவற்றைப் பின்பற்றுபவர் எனத் தெரிந்தால்
அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்து விடுவார்கள்.
ما رواه البخاري عن طارقِ بنِ عبدِ الرّحمنِ قال:
انْطَلَقْتُ حَاجًّا، فَمَرَرْتُ بِقَوْمٍ يُصَلُّونَ، قُلْتُ: مَا هَذَا
الْمَسْجِدُ ؟ قَالُوا: هَذِهِ الشَّجَرَةُ حَيْثُ بَايَعَ رَسُولُ اللَّهِ
صلّى الله عليه وسلّم بَيْعَةَ الرِّضْوَانِ ! فَأَتَيْتُ سَعِيدَ بْنَ
الْمُسَيَّبِ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ سَعِيدٌ: حَدَّثَنِي أَبِي أَنَّهُ
كَانَ فِيمَنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صلّى الله عليه وسلّم تَحْتَ
الشَّجَرَةِ، قَالَ: فَلَمَّا خَرَجْنَا مِنْ الْعَامِ الْمُقْبِلِ
نَسِينَاهَا، فَلَمْ نَقْدِرْ عَلَيْهَا، فَقَالَ سَعِيدٌ: إِنَّ أَصْحَابَ
مُحَمَّدٍ صلّى الله عليه وسلّم لَمْ يَعْلَمُوهَا وَعَلِمْتُمُوهَا
أَنْتُمْ ؟! فَأَنْتُمْ أَعْلَمُ.
தாரிக் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
நான் ஹஜ்ஜுக்கு சென்றபோது ஒரு இடத்துக்கு அருகே ஒரு கூட்டம் தொழுது
கொண்டிருந்தனர்-இது என்ன இடம்?என்று நான் கேட்டேன் –இது ஹுதைபிய்யாவில் நபி
ஸல் அவர்களிடம் அருமை தோழர்கள் பைஅத் செய்த புனித மரம் இருந்த இடம் என்று
கூறினர் –
இந்த செய்தியை ஸஈத் இப்னுல் முஸய்யப் ரஹ் அவர்களிடம்
கூறினேன்-அதை கேட்ட அவர்கள்-என் தந்தை நபியுடன் அந்த பைஅத்தில் கலந்து
கொண்டவர்,அவருடன் மறு ஆண்டு ஹஜ்ஜுக்கு சென்றபோது-அந்த இடத்தை நாங்கள்
மறந்து விட்டோம் என்று கூறினார்.
இதை கூறிய ஸஈத் ரஹ் அவர்கள் –நபித்தோழர்களுக்கு தெரியாத இடம் உங்களுக்கு தெரிந்துவிட்டதா?என்றார்கள்.
فقد أخرجه ابن سعد في الطّبقات (2/100) عن نافع قال: كان النّاس يأتون
الشّجرة الّتي يقال لها شجرة الرضوان فيصلّون عندها، قال: فبلغ ذلك عمر بن
الخطّاب رضي الله عنه، فأوعدهم فيها وأمر بها فقطعت.
உமர் ரலி
அவர்களின் ஆட்சிக்காலத்தில் அந்த மரத்திற்கு அருகே மக்கள் தொழ ஆரம்பித்து
விட்டனர் என்று கேள்விப்பட்ட உமர் ரலி அவர்கள்-அதை வேறுடன் வெட்ட
உத்தரவிட்டார்கள்.
இஸ்லாத்தில் புதினங்களைப் புகுத்துபவர்களின் ஸலாமிற்கு அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் பதில் ஸலாம் கூற மாட்டார்கள் :
عن نافع أن ابن عمر رضى الله عنهما جاءهُ رجل فقال إن فلانا يقرأُ عليك
السلام فقال له إنه بلغني أنه قد أحدث فإن كان قدْ أحدث فلا تقرءْهُ مني
السلام (رواه الترمذيى)
நாபிஊ என்பவர் அறிவிக்கும் இந்த ஹதீஸில்
அவர் கூறுவதாவது நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் இன்னார்
உங்களுக்கு ஸலாம் தெரிவித்தார்கள் என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின்
உமர் (ரலி) அவர்கள், அவர் மார்க்கத்தில் புதினங்களை உண்டாக்குவதாக நான்
கேள்விப்படுகின்றேன். அது உண்மையாக இருக்குமானால் என்னுடைய பதில் ஸலாத்தை
அவருக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டாம் , என்று என்னிடம் கூறினார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
நல்ல பித்அத் இருக்கிறதா ? என்பதை காண இங்கே கிளிக் செய்யவும்
பித்அத்’ ஓரு ஆய்வு காண இங்கே கிளிக் செய்யவும்
பித்அத் குறித்த ஒரு மாறுபட்ட கேள்வியை காண இங்கே கிளிக் செய்யவும்
குர் ஆணை தொகுத்தது பித்அத் இல்லையா ? என்பதை காண இங்கே கிளிக் செய்யவும்
நல்ல பித்அத் இருக்கிறதா ? என்பதை காண இங்கே கிளிக் செய்யவும்
பித்அத்’ ஓரு ஆய்வு காண இங்கே கிளிக் செய்யவும்
பித்அத் குறித்த ஒரு மாறுபட்ட கேள்வியை காண இங்கே கிளிக் செய்யவும்
குர் ஆணை தொகுத்தது பித்அத் இல்லையா ? என்பதை காண இங்கே கிளிக் செய்யவும்
பித்அத்’ ஓரு ஆய்வு காண இங்கே கிளிக் செய்யவும்
பித்அத் குறித்த ஒரு மாறுபட்ட கேள்வியை காண இங்கே கிளிக் செய்யவும்
குர் ஆணை தொகுத்தது பித்அத் இல்லையா ? என்பதை காண இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்