"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

5/12/2015

நாம் யாமுஹ்யித்தீன் என்று அழைத்தால் கவ்துல் அஃலம் அவர்களுக்குக் கேட்கும்



///  என்பதைப் பின்வரும் சம்பவம் நிரூபிக்கின்றது.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் வாழ்ந்த காலத்தில் வழிப்பறிக் கொள்ளையர்கள் ஒரு பிரயாணக் கூட்டத்தை வழிமறித்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்பொழுது பிரயாணிகளில் ஒருவர் யா முஹ்யித்தீன் என்று சப்தமிட்டு அழைத்தார். பல மைல்களுக்கு அப்பாலிருந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காதில் விழுந்தவுடன் தாம் அணிந்திருந்த செருப்பில் ஒன்றை வேகமாக வீசினார்கள். அச்செருப்பு கொள்ளையர்களை அடிக்க ஆரம்பித்தவுடன் கொள்ளையடித்த பொருட்களை திருப்பிக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்கள். ///

இது மவ்லிதுக் கிதாபில் வருகின்ற ஒரு குப்பை சம்பவமாகும்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக வருகின்ற செய்தியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அது பலவீனமானதாக இருந்தால் ஆய்வில் அந்தச் செய்தி கண்ணுக்குத் தெரியாத கரைசலாகி விடும் எனும் போது இந்தக் குப்பை சம்பவம் எம்மாத்திரம்? இநதக் குப்பையை ஓர் ஆதாரமாகக் காட்ட இவர்கள் முன்வருகிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நன்கு விளங்கிக் கொள்ளலாம்.

இந்தக் கதையின் அடிப்படையில் முஹ்யித்தீனை அழைக்கலாம் என்றால், கல்லையும் மண்ணையும் கடவுளாக வழிபடும் மக்கள் இதை விட அற்புதக் கதைகளைச் சொல்கிறார்களே! அதை நம்பி, கல்லை வணங்கச் சொல்வார்களா?

பிள்ளையாரும் முருகனும் சிவனும் இதுபோன்று ஆபத்துக் காலங்களில் நேரில் வந்து உதவி செய்ததாக ஏராளமான கதைகள் உள்ளன. அவற்றையெல்லாம் நம்பி இவர்களை வணங்கப் போகிறார்களா?
சமாதியை வணங்கும் இவர்கள் அதையும் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பரேலவிகள் அறிவு மழுங்கிய சூன்யங்கள் என்பதற்கு அவர்களின் அர்த்தமற்ற இந்த வாதங்கள் ஆதாரமாக அமைந்துள்ளன

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்