"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

8/16/2015

சூபித்துவக் கொள்கைக்கு ஆதாரம் உள்ளதா??

ஹதீஸ் விளக்கம்
====================

1.\\நபிகள் நாயகத்தின் தோழர்களில் ஒருவரான அபூஹுரைரா, “இரண்டு விதமான கல்விகளை நபிகள் நாயகத்திடமிருந்து கற்றுக்கொண்டேன். ஒன்றை மட்டுமே வெளியில் சொன்னேன், மற்றதைக் கூறினால் என் தொண்டை வெட்டப்பட்டுவிடும்” என்பதாக (நூல் - புகாரி) உள்ளது. \\

இந்த ஹதீஸிலில் சூபிகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது.
காரணம் இந்த ஹதீஸ் நபிகளாரின் ஆண்மீக போதனைகள் பற்றியது கிடையாது கழுத்து விட்டுப் படும் என நபித்தோழர் அவர்கள் அஞ்சும் அளவுக்கு "அரசியல் குழப்ப நிலை " சம்பந்தப்பட்டவைகளே என்பதை நம்மால் சாதாரனமாகவே புரிந்து கொள்ள முடியுமாக உள்ளது.

இப்படிப் புரிந்து கொள்வது சரிதான் என்பதை அபூ ஹுரைரா (றழி) அவர்களே விளக்கும் கீழ் கீழ் வரும் அறிவிப்பு உறுதி செய்கிறது:

"மக்கள் அபூ ஹுரைரா அதிகமாக ஹதீஸ்களை அறிவிக்கின்றார் என(க் குறை) கூறுகின்றனர். அல்குர் ஆனில் இரண்டு வசனங்கள் மாத்திரம் இல்லையே நான் உங்களுக்கு எந்த ஹதீஸையும் அறிவித்திருக்க மாட்டேன் எனக் கூறி...

2:159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.

2:160. எவர்கள் பாவமன்னிப்புத் தேடி (தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.

வசனங்களை ஓதிக் காட்டினார்கள்"
ஆதாரம்: புஹாரி

இந்த ஹதீஸ் என்ன சொல்கிறது?? அல்குர் ஆனில் இவ்விரு வசனங்களும் இருப்பதன் காரனமாக அபூ ஹுறைறா (ரழி) அவர்கள் மார்க்கம் சம்பந்தப்பட்ட, தெளிவான அத்தாட்சிகள் மற்றும் நேர்வழி தொடர்பான சகல விடயங்களையும் மக்களுக்குத் தெளிவு படுத்தியே உள்ளார்கள் என்பதை ஆணித்தரமாக விளக்குகின்றது.

குறித்த ஹதீஸ் சொல்லும் விடயம் அரசியல் குழப்ப நிலை சம்பந்தப்பட்டவையே என்பதை இமாம் குர்துபி (ரஹ்), இமாம் தஹபி (ரஹ், இமாம் இப்னு ஹஜர் (ரஹ்), இப்னுல் முனீர் (ரஹ்) மற்றும் சம காலத்தில் தாஹிர் ஜஸா இரி போன்ற எக்கச் சக்கமான உலமாப் பெருமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பில் ஷேக் றஸீத் றிழா அவர்கள் இந்த ஹதீஸை "சூபிகளில் உள்ள அறிவீனர்கள்" தவறாகப் பயன் படுத்துகின்றனர் என்றும் குறித்த ஹதீஸ் அரசியல் குழப்ப நிலை சம்பந்தப் பட்டவைகளே என்பதையும் தப்ஸீர் அல் மனாரில் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

2.ஒரு வாதத்துக்கு இந்த ஹதீஸ் ஆண்மீக போதனைகள் சம்பந்தப்பட்டது என வைத்துக் கொண்டால் இது சூபித்துவவாதிகளுக்கு ஆதரவான ஹதீஸ் அல்ல எதிரான‌ ஹதீஸ் ஆகும்.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் நபிகளாரிடம் இருந்து பெற்ற போதனைகளை ((இந்த ஹதீஸில் உள்ளவாறு )) சொல்லவில்லை என்றால் சூபிகள் தங்கள் சூபிஸத்தை எங்கிருந்து பெற்றார்கள்??

சூபிஸத்துக்கும் நபிகளாரின் போதனைகளுக்கும் சம்பந்தமில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

3. சூபிஸத்தின் எந்த தரீக்காவும்.. அதன் ஷேகுமார்களின் ஸில்ஸிலா எனும் "தொடர் வழி" அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் வரை சென்று முடிவடைவதில்லை. மாறாக ஷீஆக்கள் புழுகுவது போல் அலி (ரழி) அவர்கள் வரைதான் சென்று முடிவதை தரீக்காகளின் ஸில்ஸிலாக்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

இதுவும் இந்த ஹதீஸுக்கும் சூபிஸத்தும் எந்த சம்பந்தமுமில்லை என்பதையே காட்டுகின்றது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்