"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

8/18/2015

நான் அறிப்படாத பொக்கிஷமாக இருந்தேன்....

இஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கமாகும். அது நம்பிக்கை, வனக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல், ஆண்மீகம், பண்பாடு என சகல துறைகளுக்கும் சீரிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.

நாம் எவ்வாறு எமது நம்பிக்கை (அகீதா) சார்ந்த விடயங்களை, வனக்க வழிபாடு (இபாதத்) சார்ந்த விடயங்களை அல் குர் ஆனில் இருந்தும் ஆதாரபூர்வமான நபி மொழிகளில் இருந்தும் எடுத்துக் கொள்கிறோமோ அவ்வாறே ஆண்மீகம் சார்ந்த வழிகாட்டல்களையும் பண்பாடு விழுமியங்கள் தொடர்பான போதனைகளையும் அல்குர் ஆன், ஆதாரபூர்வமான நபி மொழிகளில் இருந்து மாத்திரமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வகையில் இஸ்லாம் காட்டித் தந்த ஆண்மீக போதனைகளின் வரையறைகளைத் தாண்டி இஸ்லாத்தில் இல்லாத தூதன அனுஷ்டானங்களை ஆண்மீகத்தின் பெயரால் புகுத்திய ஸூபிகளால் பல் வேறு ஆதாரமில்லாத செய்திகள் நபி(ஸல்) அவர்களின் பெயரால் கட்டவிழ்து விடப்பட்டுள்ளன.

அவற்றுல் மிகவும் பிரபல்யமான செய்தி ஒன்றை இப்போது நோக்குவோம்

செய்தி இதுதான்:

"நான் அறிப்படாத பொக்கிஷமாக இருந்தேன்,என்னை (படைப்புகள்) அறிய வேண்டும் என விரும்பி படைப்புகளைப் படைத்து என்னை அறிமுகப்படுத்தினேன் ,படைப்புகள் என்னை அறிந்து கொண்டன."

குறித்த செய்தியை பிரபல்யமான, எல்லாம் அல்லாஹ் என்ற நச்சுக்கருத்தை போதித்த ஸூபி இப்னு அறபி ஏன்பவர் தனது புதூஹாதுல் மக்கிய்யா" என்ற நூலிலும் அப்துல் கரீம் ஜீலி என்ற ஸூபி தனது "லிஸானுல் கத்ர் என்ற நூலிலும் மற்றுமொரு ஸூபியான அஷ் ஷஅறானி என்பவர் தனது தபகாத் என்ற நூலிலும் எழுதியுள்ளனர்.

பலவீனமான அறிவிப்பாளர் வரிசை கூட இல்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ள இச் செய்தி ஆதாரமற்றது, இட்டுக்கட்டப்பட்டது என இமாம் இப்னு தைமிய்யாஹ் (ரஹ்) ,இமாம் இப்னு ஹஜர் (ரஹ்), இமாம் ஸர்கஸி (ரஹ்) , இமாம் ஸுயூதி (ரஹ்), இமாம் ஸகாவி (ரஹ்) ,இமாம் முல்லா அலி காரி (ரஹ்) ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.

எனினும் இச்செய்தியைப் பதிவு செய்த இப்னு அறபி எனும் அத்வைதி தனது புதூஹாதுல் மக்கிய்யா என்ற நூலில் இச்செய்திக்கு அறிவிப்பாளர் வரிசை இல்லாவிட்டாலுங்கூட "கஷ்ப்" (இறை நேசருக்கும் அல்லாஹ்வுக்குமிடையில்  ஏற்படும் திரை நீக்கம் ) மூலம் உறுதியானது!!!?? எனக் கூறியுள்ளார்.

ஸூபிகள் தங்களது வழிகெட்ட கொள்கைகளை நிலை நிறுத்த பிழையான செய்திகளை நபிகளாரின் பெயரில் கட்டவிழ்த்து விட்டு பின்பு இது கஷ்ப் அடிப்படையில் உறுதியானது எனக் கூறுவது மிகப் பிழையான அடிப்படையும் ஹதீஸ்கலையையே தகர்த்துவிடும் கூற்றுமாகும்.

குறித்த செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பது "கஷ்ப்" மூலம் எமக்கு அறியக்கிடைத்தது என ஒரு வாதத்திற்காக நாம் கூறினால் இத்தகையவர்கள் என்ன பதில் கூறுவார்களோ அதுவே இத்தகைய பிழையான அடிப்படையில் பொய்யை உன்மைப்படுத்த முயற்சிப்பவர்களுக்கான பதிலாகும்.

நன்றி ; Nowfer Moulavi

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்