"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

8/26/2015

உளூஇன்றி குர்ஆனைத் தொடலாமா? ஜமாலி சாஹிபின் அறியாமை

கேள்வி
ஒரு இணையதளத்தில் உளூவின்றி குர்ஆனைத் தொடக்கூடாது என்ற கருத்தில் ஒரு கட்டுரையை ஷேக் அப்துல்லா ஜமாலி வெளியிட்டிருந்தார். அதற்கான சரியான விளக்கத்தை நீங்கள் தர வேண்டும்.
;ரோஷன்

அந்தக் கட்டுரை இதுதான்

உளூஇன்றி குர்ஆனைத் தொடலாமா?

விளக்கவுரை-1

குர்ஆனைத் தொடக்கூடாத நிலைகள்-

குர்ஆனைத் தொடக்கூடியவர் சிறுதொடக்கு மற்றும் பெருந்தொடக்கிலிருந்து தூய்மையானவராக இருக்க வேண்டும்.அதாவது உளூ இல்லதாவர், குளிப்பு கடமையானவர், மாதவிடாய் பெண்கள், மற்றும் பிள்ளைப் பேறு உதிரபோக்குள்ள பெண்கள் ஆகியோர் இறைவேதம் குர்ஆனைத் தொடக்கூடாது.

இவ்வாறு கூறிய சஹாபா பெருமக்கள்-

1. அலி ரலியல்லாஹு அன்ஹு

2. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு

3. சஃது இப்னு அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு

4. அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

5 சயீது இப்னு ஜைத் ரலியல்லாஹு அன்ஹு

6. சல்மானுல் ஃபாரிஸீ ரலியல்லாஹு அன்ஹு

இதே கருத்தை கூறிய தாபிஈன்கள்-

1. அதாவு இப்னு அபீ ரபாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

 2. இப்னு ஷிஹாப் ஜுஹ்ரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி

3. ஹஸன் பசரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி

4. தாவூஸ் இப்னு கய்சான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

5. ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் இப்னி உமர்  ரஹ்மத்துல்லாஹி அலைஹி

6. நக்யீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி

7. இப்னு முசய்யப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

8. உர்வா இப்னு ஜீபைர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

9. காஸிம் இப்னு முஹம்மத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

10.காரிஜா இப்னு ஜைத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

11. அபூபக்கர் இப்னு அப்திர்ரஹ்மான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

12. சுலைமான் இப்னு யஸார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

13.உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி (1*)இமாம்கள் :

ஹனபீ(2*), மாலிகீ(3*), ஷாபிஈ(4*),ஹன்பலீ(5*)

*1 இமாம்பைஹகீ அவர்களுக்குரிய மஃரிஃபதுஸ்ஸூனனீ வல் ஆஃதார்(1/185)

* இமாம் பைஹீ அவர்களுக்குரிய சுனனுல் குப்ரா (1/88)

இப்னுல்கய்யீம் அவர்களுக்குரிய இஃலாமுல் மூகியீன்(1/23)

*2 . ஹிதாயா (1/31) மஜ்மவுல் அன்ஹுர் (1/25)

அல்பஹ்ருர் ராயிக் (1/211)

*3 . மஊனா (1/160) அக்துல் ஜவாஹிர்(1/62)

*4 . முஹஃத்தப் (1/32) ரவ்ழதுத்தாலிபீன் (1/190)

முங்னில் முஹ்தாஜ் (1/36)

*5. முக்னிஃ (1/56) முன்தஹல் இராதாத் (1/27)

அர்ரவ்ழுல் முரப்பஃ (1/26)

ஆகிய நான்கு மத்ஹபுகளைச் சார்ந்த போற்றுதலுக்குரிய இமாம்களும்இக்கருத்தையே வலியுறுத்தியுள்ளார்கள்.

பரிசுத்தமான்வார்கள் தான் குர்ஆனைத் தொடவேண்டுமென்பதற்கு அடிப்படை ஆதாரங்கள் மூன்று

1.இறைமறை வேதம் அல்குர்ஆன்

2.இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளான ஹதீஃத்

3.நபித் தோழ்ர்களின் ஏகோபித்த முடிவான இஜ்மாஃ

குர்ஆன்:

இறைவன் கூறினான் :

لايمسه الا الـمطهرون - الواقعة : 79

தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) குர்ஆனைத் தொட மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 56-79)

இச்செய்தியின் மூலம் இறைவன் குர்ஆனின் மாண்பை வெளிப்படுத்துகிறான்.தூய்மையானவர்கள் தான் என்று கூறி ஓரு வரைமுறையை இறைவன் விதித்துவிட்டதால் மற்றவர்கள் குர்ஆனைத் தொடகூடாது என்ற அழுத்தமான அர்த்தம் இவ்வசனத்தில் உள்ளடங்கியுள்ளது.
 நூல் - ஃதகீரா (1-238) ஆசிரியர்- கர்ராஃபீ

மனிதர்களில் தூய்மையானவர்கள் என்பதன் பொருள் :

* ஷிர்க் எனும் இணைவைப்பு, குஃப்ர் எனும் இறைமறுப்பு இவ்விரண்டை விட்டும் நீங்கி உளத்தூய்மையுடன் இருப்போர்.

 * புலன்களுக்குத் தெரிகின்ற நஜீஸ் எனும் அசுத்ததை விட்டும் உடல் தூய்மையாக இருப்போர்.

* ஹதஃத் எனும் சிறுதொடக்கு மற்றும் பெருந்தொடக்கைவிட்டும் நீங்கிஇருப்போர்.

மேற்கண்ட வசனத்திலுள்ள வாசகம் வெளித்தோற்றத்தில் செய்தி வடிவில் அமைந்திருந்தாலும் கட்டளை வாக்கியமாகவே இங்கே கருதப்படும்.

நூல்கள் - தஃப்ஸீர் பஙவீ (5-301) தஃப்ஸீர் இப்னு கஃதீர் 4-299)

ஹதீஃத்

1-  
 عن حكيم بن حزام رضي الله عنه قال : لـما بعثني رسول الله صلى الله عليه وسلم الى اليمن قال : لاتمس القرآن الا وانت طاهر

رواه الحاكم فى المسدرك وقال : صحيح الاسناد ووافقه الذهبيز ورواه الدار قطني في سننه والطبراني فى الـمعجم الكبير

1. ஹகீம் இப்னு ஹிஜாம் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிய சமயம் என்னிடம் கூறினார்கள். நீங்கள் தூய்மையாக இருக்கும் போதுதான் குர்ஆனைத் தொடவேண்டும்.
நூற்கள்: ஹாகிம்- எண்: 6066, தாரகுத்னீ - எண்: 386, தப்ரானி(கபீர்)- எண்:3067

இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் வரிசை நம்பகத்தன்மை வாய்ந்ததென்று இமாம் ஹாகிம் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் தொடர் அழகியதென்று இமாம் ஹாகிம் கூறுகின்ற கருத்தை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி தனது தல்கீஸ் ஹபீர் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

தல்கீஸ் ஹபீர் 1-131

2-
 عن عبد الله بن عمر رضي الله عنه قال : قال النبي صلى الله عليه وسلم : لايمس القرآن الا طاهر

رواه الدارقطني في سننه والطبراني فى الكبير والصغير والبيهقي فى السنن الكبرى

இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மொழிந்தார்கள்.  பரிசுத்தமானவர் தான் குர்ஆனைத் தொட வேண்டும்.

 அறிவிப்பாளர்- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
நூற்கள்: தாரகுத்னீ - எண்: 383, பைஹகீ/377 தப்ரானி (கபீர்)- எண்:13049, தப்ரானி(ஸஙீர்)- எண்:1160

இந்த ஹதீதின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள்.
நூல்; மஜ்மவு ஜவாயித் 1-276

3 -
 عن عثمان بن ابى العاص قال : وفدنا على رسول الله صلى الله عليه وسلم فوجدوني افضلهم اخذا للقرآن وقد فضلتهم بسورة البقرة فقال النبي صلى الله عليه وسلم : قد امرتك على اصحابك وانت اصغرهم ولا تمس القرآن الا وانت طاهر (رواه الطبراني فى الكبير)

உத்மான் இப்னு அபில் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறுகிறார்கள்;

நாங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்தோம்.எங்களில் குர்ஆனை நன்கு ஓதக்கூடியவனாக நானிருந்தேன். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் சொன்னார்கள்; நீர் சிறுவராக இருப்பினும் உம் கூட்டத்தினருக்கு தலைவராக உம்மை நியமிக்கிறேன். நீர் தூய்மையானவராக இருக்கும் போது தான் குர்ஆனைத் தொடவேண்டும்.   நூல்: தப்ரானி (கபீர்)- எண்: 8255

இந்த ஹதீதின் அறிவிப்பாளர் தொடரில் வருகின்ற இஸ்மாயில் இப்னு ராஃபிஃ என்பவர் பலவீனமானவர் என யஹ்யா இப்னு மயீன் தெரிவித்தாலும் இமாம் புகாரி அவர்கள் அவரை நம்பகமானவர் என உரைக்கிறார்கள்.
நூல்: மஜ்மவு ஜவாயித் 1-277

4
عن عبد الله بن ابي بكر بن محمد بن عمرو بن حزم عن ابيه عن جده قال: كان في كتاب النبي صلى الله عليه وسلم لعمرو بن حزم : لايمس القرآن الا على طهر. رواه مالك وابن حبان والدارمي والبيهقي والدارقطني

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்ரு இப்னு ஹஜ்ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு இருந்தது:

‘தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொடவேண்டும்.’

அறிவிப்பாளர்- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

நூற்கள்: முஅத்தா-எண்:466, தாரமீ- எண்:2195, பைஹகீ- எண்:376,

இமாம் தாரகுத்னீ அவர்களின் கூற்று:-
இதன் அறிவிப்பாளர்கள் நம்பகத்தன்மையுள்ளவர்கள்.

இமாம் பஙவீ அவர்களின் கூற்று:-

قال البغوي سمعت احمد بن حنبل وسئل عن هذا الحديث فقال : ارجو ان يكون صحيحا وقال ايضا : لا اشك ان رسول الله صلى الله عليه وسلم كتبه

இந்த ஹதீஃதின் நிலைபற்றி இமாம் அஹமத் இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் வினவப்பட்ட போது, இது ஆதாரபூர்வமானது என்றே கருதுகிறேன் என பதிலளித்த இமாம் அவர்கள் மேலும் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை எழுதினார்கள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

நூற்கள்- திப்யான்1-409 , இர்வாவுல் ஙலீல்1-161

இமாம் யஃகூப் இப்னு சுப்யான் அவர்களின் கூற்று:-

قال يعقوب بن سفيان : لا اعلم كتابا اصح من هذا الكتاب فان اصحاب رسول الله صلى الله عليه وسلم والتابعين يرجعون اليه ويدعون رأيهم

எனக்கு தெரிந்த இதைவிட சிறந்த கடிதம் எதுவுமில்லை. ஏனென்றால், நபித்தோழர்களும் மற்றும் தாபியீன்களும் தங்களுது சொந்த யூகங்ளைப் புறந்தள்ளிவிட்டு குர்ஆனைத் தொடுவதற்கு சுத்தம் அவசியம் என்ற நிலைப் பாட்டிலேயே இருந்தனர்.
நூல்: திப்யான் ஃபீ அக்ஸாமில் குர்ஆன்- பக்கம்:144

இமாம் ஹாகிம் அவர்களின் கூற்று:-

قال الحاكم : قد شهد عمر بن عبد العزيز والزهري لهذا الكتاب بالصحة

இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதிய இக்கடிதம் ஆதாரபூர்வமானது என்று உமர் இப்னு அப்தில் அஜிஸ் அவர்களும் ஜூஹ்ரீ அவர்களும் சாட்சி பகர்ந்துள்ளனர்.
நூல்: ஹாகிம்: 1-397

இமாம் இப்னு அப்திர் பர்ர் அவர்களின் கூற்று:-

قال الامام ابن عبد البر : وكتاب عمروبن حزم هذا تلقاه العلماء بالقبول والعمل وهم عندهم اشهر واظهر من الاسناد الواحد المتصل

இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அம்ரு இப்னு ஹஜ்ம் அவர்களுக்கு இக்கடிதத்தை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஏற்று அமல்படுத்தியுள்ளார்கள்.மேலும்,தொடர் வரிசையுள்ள ஒரு வழித் தொடர் ஹதீஃத்தைவிட கடிதம் சம்பந்தப்பட்ட இந்த ஹதீஃத் பிரபல்யமடைந்ததாகவும் மிகவும் ஏற்கத்தக்கதாகவும் அவ்வ்றிஞர்களிடம் கருதப்பட்டது.
நூல்: இஸ்திஃத்கார் 8-10

சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்ட இப்னு தைமியாவின் கூற்று:-

قال ابن تيمية : وهم كتاب مشهور عند اهل العلم.

இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதிய இக்கடிதம் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் பிரபல்யமுள்ளதாகும்.
நூல்: ஷரஹுல் உம்தா 1-38

பதில்
ஷேக் அப்துல்லா ஜமாலி அந்தக் கட்டுரையில் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று கூறியுள்ளதற்கு நாம் எந்த மதிப்பும் அளிக்கத் தேவை இல்லை. அவர்கள் அப்படி சொல்லி இருந்தாலும் சொல்லாமல் போனாலும் மார்க்கத்தில் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

அல்லாஹ்வும் அவனது தூதரும் என்ன சொன்னார்கள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியதாகும். எனவே  அந்தக் கட்டுரையில் கூறப்பட்ட குரான் வசனத்துக்கும் ஹதீஸ்கள் பற்றிய விளக்கத்தை தருகிறோம்..

நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரையில் உளூவின்றி குர்ஆனைத் தொடக்கூடாது என்ற கருத்துக்கு ஒரு குர்ஆன் வசனத்தையும் நான்கு அறிவிப்புகளையும் ஆதாரமாகக் காட்டியுள்ளார்கள்.

56 : 79 ஆவது வசனத்தைப் பொறுத்தவரை அதற்கான சரியான விளக்கத்தை இதற்கு முன்பே நமது இணையதளத்தில் பதிவுசெய்துள்ளோம். கீழ்க்கண்ட லிங்கை பார்க்கவும்.


உளூவின்றி குர்ஆனைத் தொடக்கூடாது என்பதற்கு அவர்கள் காட்டும் நான்கு அறிவிப்புகளும் பலவீனமானதாகும்.

முதல் அறிவிப்பு

المستدرك على الصحيحين للحاكم  - كتاب معرفة الصحابة رضي الله عنهم

 ذكر مناقب حكيم بن حزام القرشي رضي الله عنه - حديث : ‏6055

 أخبرنا أحمد بن سليمان بن الحسن الفقيه ببغداد ، ثنا جعفر بن أبي عثمان الطيالسي ، ثنا إسماعيل بن إبراهيم ، قال : سمعت أبي يحدث ، عن سويد بن أبي حاتم ، صاحب الطعام ، ثنا مطر الوراق ، عن حسان بن بلال ، عن حكيم بن حزام ، أن النبي صلى الله عليه وسلم لما بعثه واليا إلى اليمن قال : " لا تمس القرآن إلا وأنت طاهر " " هذا حديث صحيح الإسناد ، ولم يخرجاه " *

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பியபோது நீ தூய்மையான நிலையில் இருக்கும் போதே தவிர குர்ஆனைத் தொடதே என்று கூறினார்கள்.  நூல் : ஹாகிம்

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று ஹாகிம் கூறிவிட்டதால் இது ஆதாரப்பூர்வமானது என்று மேற்படி கட்டுரையாளர் கூறுகிறார். இதில் இருந்து இவரது அறியாமையை நாம் அறிந்து கொள்ளலாம். ஒரு ஹதீஸ் நம்பகமானது என்பதற்கும் அதைப் பதிவு செய்தவர் கொடுக்கும் நற்சாண்ரு போதுமானதாகாது. அதில் உள்ள ஒவ்வொரு அறிவிப்பாளர் குறித்தும் ஆய்வு செய்து அவர்கள் நம்பகாமானவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டால் தான் அது சரியான ஹதீஸாகும். இது பொதுவான விதியாகும்.

இது அல்லாமல் ஹாகிம் அவர்கள் நம்பகமான ஹதீஸ் என்று முடிவு செய்வதில் அலட்சியப் போக்கு உடயவர் எனப் பெயரெடுத்தவர். ஹாகிம் ஒரு ஹதீஸை நம்பகாமானது எனக் கூறினால் கூடுதல் கவனத்துடன் அந்த ஹதீஸை ஆராய வேண்டும்.

ஹதீஸ் கலையின் இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் மேற்படி கட்டுரையாளர் வாதிடுகிறார்.

மேலும் ஹாகிம் சொன்னதை இப்னு ஹஜர் எடுத்துக் காட்டுகிறார் எனவும் இவர் வாதம் செய்கிறார். இதுவும் அவரது அறியாமையைக் காட்டுகிறது. ஒருவரது கூற்றை எடுத்துக் காட்டுவதால் அதை ஆதரிக்கிறார் என்ற கருத்தை தராது. இதிலும்  மேற்படி கட்டுரையாளர் ஜமாலி என்பவர் தனது அறியாமையை வெளிப்படுத்திக் கொள்கிறார்.

ميزان الاعتدال - الذهبي (2/ 247)

[ سويد ] 3619 - سويد بن إبراهيم البصري العطار، أبو حاتم صاحب الطعام. عن الحسن وقتادة. قال عثمان، عن ابن معين: أرجو ألا يكون به بأس.وروى أبو يعلى عن ابن معين: ليس به بأس.وقال النسائي: ضعيف.وقال أبو زرعة: ليس بالقوى، حديثه حديث أهل الصدق.وقال البخاري: قال يحيى القطان /: قالوا: إن سويدا [ 160 / 2 ] أبا حاتم سمع من أبى المليح، وهو سويد بن إبراهيم الحناط (2)، أراه العطار.ويقال الهذلى.سمع منه صفوان بن عيسى، وموسى بن إسماعيل.وساق ابن عدى في ترجمته أربعة عشر حديثا، ثم قال: بعضها لا يتابعه عليها أحد، وهو إلى الضعف أقرب.وقال ابن حبان - فأسرف: يروى الموضوعات عن الاثبات، وهو صاحب حديث البرغوث.وروى قتادة، عن أنس: أن رسول الله صلى الله عليه وسلم سمع رجلا سب برغوثا فقال: لا تسبه، فإنه نبه نبيا من الانبياء لصلاة الصبح.حدثناه الحسن بن سفيان، حدثنا النضر بن طاهر، سمعت سويدا أبا حاتم فذكره.قلت: رواه طالوت بن عبادة عنه.وقال ابن أبى حاتم - في العلل: سألت أبى عن حديث سويد بن أبى حاتم، عن سليمان التميمي، عن أبى عثمان أن أبا هريرة قال: من قرأ يس مرة فكأنما قرأ القرآن عشر مرار - فقال: هذا حديث منكر.

இந்த ஹதீஸை சுவைத் பின் அபீ ஹாதிம் என்பவர் அறிவிக்கின்றார். இவர் பலவீனமானவராவார். இவர் பலவீனமானவர் என்று இமாம் நஸாயீ, இமாம் அபூ சுர்ஆ ஆகியோர் கூறியுள்ளனர். இவர் மோசமான மனனத்தன்மை கொண்டவர். பல தவறுகள் இவரிடம் ஏற்பட்டுள்ளன என்று இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் இமாம் நவவீ அவர்கள் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று அல்குலாஸா என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் ஹாகிம் ஹதீஸை நம்பகமானது என்று முடிவு செய்வதில் அலட்சியப்போக்குள்ளவர். பலவீனமான பல செய்திகளை அவர் தவறுதலாக நம்பகமானவை என்று கூறிவிடுவார்.

மேற்கண்ட அறிஞர்களின் கூற்றுக்களைக் கவனிக்கையில் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று தெளிவாகத் தெரிகின்றது. எனவே இதற்கு மாற்றமாக இமாம் ஹாகிம் அவர்கள் கூறியதை ஏற்க முடியாது. ஹாகிம் கூறியதை சரிகண்ட இமாம் தஹபீ அவர்களின் கூற்றையும் ஏற்க முடியாது.

இரண்டாவது அறிவிப்பு

المعجم الصغير للطبراني  - من اسمه يحيى

 حديث : ‏1159‏

 حدثنا يحيى بن عبد الله أبو زكريا الدينوري ، بالبصرة , حدثنا سعيد بن محمد بن ثواب الحصري ، حدثنا أبو عاصم ، حدثنا ابن جريج ، عن سليمان بن موسى ، سمعت سالم بن عبد الله بن عمر يحدث , عن أبيه ، قال : قال رسول الله صلى الله عليه وآله وسلم : " لا يمس القرآن إلا طاهر " لم يروه عن سليمان بن موسى إلا ابن جريج , ولا عنه إلا أبو عاصم ، تفرد به سعيد بن محمد *

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
தூய்மையானவரைத் தவிர குர்ஆனை தொடக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல் : தப்ரானி

இந்தச் செய்தியில் சயீத் பின் முஹம்மத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. மேலும் இந்த அறிவிப்பில் இப்னு ஜுரைஜ் என்வரும் இடம்பெற்றுள்ளார்.

இவர் நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ் என்ற இருட்டடிப்பு வேலையை செய்யக்கூடியவர். இவரைப் போன்றவர்கள் நான் கேட்டேன். எனக்கு அறிவித்தார் என்று நேரடியாகக் கேட்டதை தெளிவுபடுத்தக்கூடிய வாசகத்தை கூறினாலே இவர்களின் அறிவிப்பு ஏற்கப்படும். இல்லையென்றால் ஏற்கப்படாது. மேற்கண்ட அறிவிப்பில் சுலைமான் பின் மூசா என்வரிடம் இவர் நேரடியாக கேட்டதாக எந்த வாசகத்தையும் குறிப்பிடவில்லை. இதன் காரணத்தாலும் இது பலவீனமான செய்தியாகும்.

இமாம் ஹைஸமீ அவர்கள் இந்த அறிவிப்பில் உள்ள அனைவரும் நம்பகமானவர்கள் என்று கூறியதாக ஜமாலி வாதிடுகின்றார். ஆனால் இமாம் ஹைஸமீ இவர்கள் கூறுவது போல் சொல்லவில்லை. மாறாக இதில் உள்ள அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் என்றே கூறியுள்ளார்.

இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத நபர்களை நம்பகமானவர் என்று கூறும் வழமையுடையவர். இந்த அடிப்படையில் இப்னு ஹிப்பான் ஒரு அறிவிப்பாளரை நம்பகமானவர் என்று கூறி இருந்தால் அந்த நபரைப் பற்றி இமாம் ஹைஸமீ அவர்கள் நம்பகமானவர் என்று சொல்லப்பட்டுள்ளார் என்று குறிப்பிடுவார். இப்னு ஹிப்பானிடத்தில் இவர் நம்பகமானவர் என்பது இதன் பொருளாகும். ஹைஸமீ அவர்களின் இந்தச் சொல் வழக்கையும் கட்டுரையாளர் அறியாததால் ஹைஸமீ நம்பகமானவர் எனக் கூறியதாக வாதிடுகிறார்

மூன்றாவது அறிவிப்பு

المعجم الكبير للطبراني  - باب من اسمه عمر
 ما أسند عثمان بن أبي العاص -  المغيرة بن شعبة
 حديث : ‏8212‏

 حدثنا أحمد بن عمرو الخلال المكي ، ثنا يعقوب بن حميد ، ثنا هشام بن سليمان ، عن إسماعيل بن رافع ، عن محمد بن سعيد بن عبد الملك ، عن المغيرة بن شعبة ، قال : قال عثمان بن أبي العاص - وكان شابا - : وفدنا على النبي صلى الله عليه وسلم فوجدني أفضلهم أخذا للقرآن ، وقد فضلتهم بسورة البقرة ، فقال النبي صلى الله عليه وسلم : " قد أمرتك على أصحابك ، وأنت أصغرهم ، فإذا أممت قوما فأمهم بأضعفهم ، فإن وراءك الكبير والصغير والضعيف وذا الحاجة ، وإذا كنت مصدقا فلا تأخذ الشافع - وهي الماخض - ولا الربى ولا فحل الغنم ، وحزرة الرجل هو أحق بها منك ، ولا تمس القرآن إلا وأنت طاهر ، واعلم أن العمرة هي الحج الأصغر ، وأن عمرة خير من الدنيا وما فيها ، وحجة خير من عمرة " *

உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நீ தூய்மையான நிலையில் இருந்தாலே தவிர குர்ஆனைத் தொட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : தப்ரானி

இந்தச் செய்தியில் இஸ்மாயீல் பின் ராஃபிஉ என்பவர் இடம்பெற்றுள்ளார். இமாம் இப்னு ஹஜர், இமாம் யஹ்யா பின் மயீன், இமாம் நஸாயீ, இமாம் தஹபீ, இமாம் அஹ்மது பின் ஹம்பள், இமாம் யஃகூப் பின் சுப்யான், இமாம் இப்னு அதீ, இமாம் தாரகுத்னீ, இமாம் இப்னு கராஷ், இமாம் அபூ ஹாதிம் மற்றும் முஹம்மது பின் சஅத் ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

இமாம் புகாரி மட்டுமே இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இமாம் புகாரி அல்லாத மற்ற ஏராளமான அறிஞர்கள் ஒன்றுபட்டு இவரை பலவீனமானவர் என்று கூறுவதாலும் இவர் மனனத்தன்மை சரியில்லாதவர் என்று குறைக்கான காரணம் தெளிவாக சொல்லப்பட்டிருப்பதாலும் இவர் பலவீனமானவர் என்றே நியாய உணர்வு உள்ளவர்கள் கருதுவார்கள். இவரிடத்தில் உள்ள குறையை இமாம் புகாரி அவர்கள் அறியாத காரணத்தால் தவறுதலாக நம்பகமானவர் என்று கூறியுள்ளார். எனவே இந்த அறிவிப்பும் பலவீனமானதாகும்.

நான்காவது அறிவிப்பு

مراسيل أبي داود  - جامع الصلاة
 حديث : ‏90‏  

 حدثنا القعنبي ، عن مالك ، عن عبد الله بن أبي بكر بن محمد بن عمرو بن حزم ، " أن الكتاب الذي ، كتبه رسول الله صلى الله عليه وسلم لعمرو بن حزم أن " لا يمس القرآن إلا طاهر " حدثنا محمد بن يحيى ، حدثنا أبو اليمان ، أخبرنا شعيب ، عن الزهري ، قال : قرأت صحيفة عند آل أبي بكر بن محمد بن عمرو بن حزم ذكر أن رسول الله صلى الله عليه وسلم كتبها لعمرو بن حزم ، حين أمره على نجران ، وساق الحديث فيه : " الحج الأصغر العمرة ، ولا يمس القرآن إلا طاهر " قال : أبو داود : روي هذا الحديث ، مسندا ولا يصح *

அப்துல்லாஹ் பின் அபீபக்ர் பின் முஹம்மது பின் அம்ர் பின் ஹஸ்ம் கூறுகிறார் :  தூய்மையானவரைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொடக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இருந்தது.  நூல் : மராசீலு அபீ தாவுத் (90)

இந்த செய்தி முழுமையான அறிவிப்பாளர் தொடரின்றி உள்ளது. இதை ஆதாரமாக காட்டக்கூடியவர்கள் இதில் உள்ள அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்கள் என இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு தொடர்பாக இமாம் தாரகுத்னீ கூறிய வாசகத்தில் தங்களுக்குச் சாதாகமானதை மட்டும் கூறிவிட்டு எதிரானதை வசதியாக வெட்டியுள்ளனர்.

இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்தச் செய்தி தொடர்பாக கூறுகையில் இது தொடர்பு அறுந்த முர்சல் என்ற வகையைச் சார்ந்த செய்தியாகும். இதில் உள்ள அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி முர்சல் என்று இமாம் தாரகுத்னீ கூறியை திட்டமிட்டு மறைத்துள்ளனர்.

تنقيح التحقيق لابن عبد الهادي (1 / 231):

قال الدَّارَقُطْنيُ: هو مرسلٌ، ورواته ثقات (1)

இந்த செய்தியை அப்துல்லாஹ் பின் அபீபக்ர் என்பவர் அறிவிக்கின்றார். இவர் நபித்தோழரில்லை. நபித்தோழர் காலத்தில் வாழ்நதவருமில்லை. இப்படிப்பட்டவர் நபியுடன் தொடர்புடைய செய்தியை அறிவிப்பதால் இது முர்சல் (தொடர்பு அறுந்த செய்தி) ஆகும் என்று தாரகுத்னீ தெளிவுபடுத்தியுள்ளார். இமாம் அபூதாவுத் அவர்களும் இந்த செய்தியை தொடர்பு அறுந்த முர்சலான செய்திகளில் ஒன்றாக பதிவு செய்துள்ளார். மேலும் இதே செய்தி முழுமையான அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தொடர் சரியானதல்ல என்பதையும் மேலே இமாம் அபூதாவூத் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இமாம் அபூதாவுத் அவர்கள் மராசீலு அபீதாவுத் என்ற நூலின் வேறொரு இடத்தில் முறிவில்லாமல் வரும் அறிவிப்பாளர் தொடர் எதன் காரணத்தால் பலவீனமாக உள்ளது என்ற விபரத்தை கூறுகிறார்.

مراسيل أبي داود  - باب كم الدية
 حديث : ‏238‏ 

قال أبو داود : أسند هذا ولا يصح . رواه يحيى بن حمزة ، عن سليمان بن أرقم ، عن الزهري ، عن أبي بكر بن محمد بن عمرو بن حزم ، عن أبيه ، عن جده . حدثنا أبو هبيرة قال : قرأته في أصل يحيى بن حمزة ، حدثني سليمان بن أرقم ، وحدثنا هارون بن محمد بن بكار ، حدثني أبي ، وعمي ، قالا : يحيى بن حمزة ، عن سليمان بن أرقم ، مثله قال أبو داود : والذي قال : سليمان بن داود وهم فيه . حدثنا الحكم بن موسى ، حدثنا يحيى بن حمزة ، عن سليمان بن داود الخولاني ، - ثقة - عن الزهري ، عن أبي بكر بن محمد بن عمرو بن حزم ، عن أبيه ، عن جده ، وهم فيه الحكم *

முறிவில்லாமல் வரும் அறிவிப்பாளர் தொடரில் சுலைமான் பின் அர்கம் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் முற்றிலும் பலவீனமானவர் என்று அறிஞர் பெருமக்களால் ஒதுக்கப்பட்டவர்.

தங்களுடைய கருத்துக்கு இவர்கள் ஆதாரமாக சுட்டிக்காட்டிய குர்ஆன் வசனம் இவர்கள் சொல்லும் அர்தத்தைத் தரவில்லை. அடுத்து இவர்கள் ஆதாரமாக கூறிய மேற்கண்ட நான்கு அறிவிப்புகளும் தெளிவான பலவீனமான செய்திகளாகும்.

எனவே உளூவின்றி குர்ஆனைத் தொடக்கூடாது என்ற கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

---- http://www.onlinepj.com -----

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இது குறித்து வெளியிடப்பட்ட வீடியோக்களைக் காண்க

வீடியோ1-        வீடியோ2       விடியோ 3    விடியோ 4
 ------------------------------------------------------------------------------------------------------------------------

இது சம்பந்தமான இன்னும் சில பதிவுகள்  ;-
சுத்தமானவர்களே அண்றி குர்ஆனை தொடமாட்டார்கள் http://silaiyumkaburum.blogspot.com/2015/01/letter-to-yemen.html

திருக்குர்ஆனை தொடலாமா  ;- http://silaiyumkaburum.blogspot.com/2015/01/vulu-illamal-kuranai-thodalaama.html

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்