"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

8/28/2015

நபியவர்களின் மத்ஹப்


ஒரு முறை மத்ஹப்வாதிகளுக்கும்
சுன்னத்தை பின்பற்றக்கூடிய ஏகத்துவ வாதிகளுக்கும் மத்தியில் விவாதம்
ஒன்று நடைபெற ஏற்பாடாகி இருந்தது.
குறித்த நேரத்தில் மத்ஹப்வாதிகளின்
பெரும் அறிஞர்கள் எல்லாம சங்கமித்துவிட்டனர்
ஆனால் ஏகத்துவகொள்கை
சார்பில் எவரும் வந்திருக்கவில்லை.

கொஞ்சம் தாமதித்து ஒரு இமாம் மாத்திரம் வந்தார்கள். சபையருகில்
வந்ததும் தமது செருப்பை எடுத்து
கமக்கட்டில் வைத்துக்கொண்டார்கள்.
இதைக்கண்ட மத்ஹபை பின்பற்றக்கூடிய அறிஞர்கள் ஏன்
செருப்பை கமக்கட்டில் வைக்கிறீர் என்று
கேட்ட போது..
இமாமவர்கள் கூறினார்கள்
" நான் கேள்விப்பட்டிருக்கிறேன்
நபியவர்களுடைய காலத்தில் மத்ஹப்வாதிகள்
செருப்பை திருடும் வழக்கமுள்ளவர்களாக
இருந்தார்கள் அதனால் தான் எனது
செருப்பை கமக்கட்டில் வைத்தேன் என்று"

இதைக்கேட்ட மத்ஹப் அறிஞர்கள் நபியவர்கள்
காலத்தில் "மத்ஹப்கள்" இருக்கவில்லையே
என்றனர்.
உடனே அந்த இமாம் அப்படியானால்
விவாதம் இப்போதே முடிந்து விட்டது
என்று கூறியவாறு " அப்படி நபியவர்கள்
காலத்தில் மத்ஹப்கள் இல்லா விட்டால்
உங்களுடைய மத்ஹப் வழக்கத்தை எங்கிருந்து
கொண்டு வந்தீர்கள்? என கேட்டார்கள்.
(இன்று வரை பதிலில்லை )...

----------------------------------------------------------------------------------------------------------------------------

மத்ஹபுக்கும் இமாமுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,  விரிவாக காண இங்கே கிளிக் செய்யவும்

உண்மையாக மத்ஹபுகள் என்ன சொல்லுகிறது., ?  அறிந்து கொள்ள  இங்கே கிளிக் செய்யவும் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்