"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

8/18/2015

நான் அறிப்படாத பொக்கிஷமாக இருந்தேன்....

இஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கமாகும். அது நம்பிக்கை, வனக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல், ஆண்மீகம், பண்பாடு என சகல துறைகளுக்கும் சீரிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.

நாம் எவ்வாறு எமது நம்பிக்கை (அகீதா) சார்ந்த விடயங்களை, வனக்க வழிபாடு (இபாதத்) சார்ந்த விடயங்களை அல் குர் ஆனில் இருந்தும் ஆதாரபூர்வமான நபி மொழிகளில் இருந்தும் எடுத்துக் கொள்கிறோமோ அவ்வாறே ஆண்மீகம் சார்ந்த வழிகாட்டல்களையும் பண்பாடு விழுமியங்கள் தொடர்பான போதனைகளையும் அல்குர் ஆன், ஆதாரபூர்வமான நபி மொழிகளில் இருந்து மாத்திரமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வகையில் இஸ்லாம் காட்டித் தந்த ஆண்மீக போதனைகளின் வரையறைகளைத் தாண்டி இஸ்லாத்தில் இல்லாத தூதன அனுஷ்டானங்களை ஆண்மீகத்தின் பெயரால் புகுத்திய ஸூபிகளால் பல் வேறு ஆதாரமில்லாத செய்திகள் நபி(ஸல்) அவர்களின் பெயரால் கட்டவிழ்து விடப்பட்டுள்ளன.

அவற்றுல் மிகவும் பிரபல்யமான செய்தி ஒன்றை இப்போது நோக்குவோம்

செய்தி இதுதான்:

"நான் அறிப்படாத பொக்கிஷமாக இருந்தேன்,என்னை (படைப்புகள்) அறிய வேண்டும் என விரும்பி படைப்புகளைப் படைத்து என்னை அறிமுகப்படுத்தினேன் ,படைப்புகள் என்னை அறிந்து கொண்டன."

குறித்த செய்தியை பிரபல்யமான, எல்லாம் அல்லாஹ் என்ற நச்சுக்கருத்தை போதித்த ஸூபி இப்னு அறபி ஏன்பவர் தனது புதூஹாதுல் மக்கிய்யா" என்ற நூலிலும் அப்துல் கரீம் ஜீலி என்ற ஸூபி தனது "லிஸானுல் கத்ர் என்ற நூலிலும் மற்றுமொரு ஸூபியான அஷ் ஷஅறானி என்பவர் தனது தபகாத் என்ற நூலிலும் எழுதியுள்ளனர்.

பலவீனமான அறிவிப்பாளர் வரிசை கூட இல்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ள இச் செய்தி ஆதாரமற்றது, இட்டுக்கட்டப்பட்டது என இமாம் இப்னு தைமிய்யாஹ் (ரஹ்) ,இமாம் இப்னு ஹஜர் (ரஹ்), இமாம் ஸர்கஸி (ரஹ்) , இமாம் ஸுயூதி (ரஹ்), இமாம் ஸகாவி (ரஹ்) ,இமாம் முல்லா அலி காரி (ரஹ்) ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.

எனினும் இச்செய்தியைப் பதிவு செய்த இப்னு அறபி எனும் அத்வைதி தனது புதூஹாதுல் மக்கிய்யா என்ற நூலில் இச்செய்திக்கு அறிவிப்பாளர் வரிசை இல்லாவிட்டாலுங்கூட "கஷ்ப்" (இறை நேசருக்கும் அல்லாஹ்வுக்குமிடையில்  ஏற்படும் திரை நீக்கம் ) மூலம் உறுதியானது!!!?? எனக் கூறியுள்ளார்.

ஸூபிகள் தங்களது வழிகெட்ட கொள்கைகளை நிலை நிறுத்த பிழையான செய்திகளை நபிகளாரின் பெயரில் கட்டவிழ்த்து விட்டு பின்பு இது கஷ்ப் அடிப்படையில் உறுதியானது எனக் கூறுவது மிகப் பிழையான அடிப்படையும் ஹதீஸ்கலையையே தகர்த்துவிடும் கூற்றுமாகும்.

குறித்த செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பது "கஷ்ப்" மூலம் எமக்கு அறியக்கிடைத்தது என ஒரு வாதத்திற்காக நாம் கூறினால் இத்தகையவர்கள் என்ன பதில் கூறுவார்களோ அதுவே இத்தகைய பிழையான அடிப்படையில் பொய்யை உன்மைப்படுத்த முயற்சிப்பவர்களுக்கான பதிலாகும்.

நன்றி ; Nowfer Moulavi

8/16/2015

சூபித்துவக் கொள்கைக்கு ஆதாரம் உள்ளதா??

ஹதீஸ் விளக்கம்
====================

1.\\நபிகள் நாயகத்தின் தோழர்களில் ஒருவரான அபூஹுரைரா, “இரண்டு விதமான கல்விகளை நபிகள் நாயகத்திடமிருந்து கற்றுக்கொண்டேன். ஒன்றை மட்டுமே வெளியில் சொன்னேன், மற்றதைக் கூறினால் என் தொண்டை வெட்டப்பட்டுவிடும்” என்பதாக (நூல் - புகாரி) உள்ளது. \\

இந்த ஹதீஸிலில் சூபிகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது.
காரணம் இந்த ஹதீஸ் நபிகளாரின் ஆண்மீக போதனைகள் பற்றியது கிடையாது கழுத்து விட்டுப் படும் என நபித்தோழர் அவர்கள் அஞ்சும் அளவுக்கு "அரசியல் குழப்ப நிலை " சம்பந்தப்பட்டவைகளே என்பதை நம்மால் சாதாரனமாகவே புரிந்து கொள்ள முடியுமாக உள்ளது.

இப்படிப் புரிந்து கொள்வது சரிதான் என்பதை அபூ ஹுரைரா (றழி) அவர்களே விளக்கும் கீழ் கீழ் வரும் அறிவிப்பு உறுதி செய்கிறது:

"மக்கள் அபூ ஹுரைரா அதிகமாக ஹதீஸ்களை அறிவிக்கின்றார் என(க் குறை) கூறுகின்றனர். அல்குர் ஆனில் இரண்டு வசனங்கள் மாத்திரம் இல்லையே நான் உங்களுக்கு எந்த ஹதீஸையும் அறிவித்திருக்க மாட்டேன் எனக் கூறி...

2:159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.

2:160. எவர்கள் பாவமன்னிப்புத் தேடி (தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.

வசனங்களை ஓதிக் காட்டினார்கள்"
ஆதாரம்: புஹாரி

இந்த ஹதீஸ் என்ன சொல்கிறது?? அல்குர் ஆனில் இவ்விரு வசனங்களும் இருப்பதன் காரனமாக அபூ ஹுறைறா (ரழி) அவர்கள் மார்க்கம் சம்பந்தப்பட்ட, தெளிவான அத்தாட்சிகள் மற்றும் நேர்வழி தொடர்பான சகல விடயங்களையும் மக்களுக்குத் தெளிவு படுத்தியே உள்ளார்கள் என்பதை ஆணித்தரமாக விளக்குகின்றது.

குறித்த ஹதீஸ் சொல்லும் விடயம் அரசியல் குழப்ப நிலை சம்பந்தப்பட்டவையே என்பதை இமாம் குர்துபி (ரஹ்), இமாம் தஹபி (ரஹ், இமாம் இப்னு ஹஜர் (ரஹ்), இப்னுல் முனீர் (ரஹ்) மற்றும் சம காலத்தில் தாஹிர் ஜஸா இரி போன்ற எக்கச் சக்கமான உலமாப் பெருமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பில் ஷேக் றஸீத் றிழா அவர்கள் இந்த ஹதீஸை "சூபிகளில் உள்ள அறிவீனர்கள்" தவறாகப் பயன் படுத்துகின்றனர் என்றும் குறித்த ஹதீஸ் அரசியல் குழப்ப நிலை சம்பந்தப் பட்டவைகளே என்பதையும் தப்ஸீர் அல் மனாரில் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

2.ஒரு வாதத்துக்கு இந்த ஹதீஸ் ஆண்மீக போதனைகள் சம்பந்தப்பட்டது என வைத்துக் கொண்டால் இது சூபித்துவவாதிகளுக்கு ஆதரவான ஹதீஸ் அல்ல எதிரான‌ ஹதீஸ் ஆகும்.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் நபிகளாரிடம் இருந்து பெற்ற போதனைகளை ((இந்த ஹதீஸில் உள்ளவாறு )) சொல்லவில்லை என்றால் சூபிகள் தங்கள் சூபிஸத்தை எங்கிருந்து பெற்றார்கள்??

சூபிஸத்துக்கும் நபிகளாரின் போதனைகளுக்கும் சம்பந்தமில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

3. சூபிஸத்தின் எந்த தரீக்காவும்.. அதன் ஷேகுமார்களின் ஸில்ஸிலா எனும் "தொடர் வழி" அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் வரை சென்று முடிவடைவதில்லை. மாறாக ஷீஆக்கள் புழுகுவது போல் அலி (ரழி) அவர்கள் வரைதான் சென்று முடிவதை தரீக்காகளின் ஸில்ஸிலாக்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

இதுவும் இந்த ஹதீஸுக்கும் சூபிஸத்தும் எந்த சம்பந்தமுமில்லை என்பதையே காட்டுகின்றது.

7/22/2015

அபூஜஹீலின் வாரிசுகள் நாங்கள் ..!!

இஸ்லாம் தடைசெய்துள்ள பெரும்பாவமான வட்டித்தொழில் செய்யும் இஸ்லாமியர்களை தவறு என்று தட்டுக்கேட்க மாட்டோம் ..காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

மஹர் கொடுத்து திருமணம் செய்ய சொல்லும் இறைவனின் போதனையை தூக்கி எறிந்துவிட்டு வரதட்சணை என்றபெயரில் கைக்கூலி வாங்கும் திருமணத்திற்கு சென்று பிரியாணிக்காக பிராத்தனையும் செய்வோம் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

நபிகள் நாயகம் சுன்னத் என்று என்று வலியுறுத்தியுள்ள தாடியை மழித்துக்கொண்டு வரும் இளைஞர்களை பார்த்தால் எங்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

தட்டு தர்கா தாயத்து தரீக்கா என்று அனைத்து இணைவைப்பு காரியங்களையும் நாங்களும் செய்வோம் பிறரையும் செய்ய தூண்டுவோம் .... காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

இறைவனிடமிருந்து வந்த வஹிச்செய்தி மட்டுமே இஸ்லாம் என்றாலும் வஹி மட்டுமே இஸ்லாமா ? இல்லை இல்லை கண்ட கண்ட கழிசடைகளின் வழி காட்டுதலும் இஸ்லாமே என்போம் ... காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஒற்றுமை ஏற்படுத்தலாம் வாருங்கள் என்றால் இல்லை இல்லை நாங்கள் ஷாஃபி ஹனஃபி என்று பிரிந்தே கிடப்போம் என்று நெஞ்சுயர்த்தி சொல்வோம் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

குப்பைகளை கூட நபி மொழி என்று ஏற்று செயல்படுவோம் ஆதாரப்பூர்வமான நபிமொழி என்று நீங்கள் ஆதாரம் காட்டிலும் அதை குப்பை என்றே தூக்கி எறிவோம் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

உலகமக்களுக்கான பொது மறை என்று குர்ஆன் பிரகடனம் செய்தாலும் மாற்று மதத்தவர் குர்ஆனை தொட அனுமதி இல்லை என மறுத்து இறைவனுக்கே மாறு செய்வோம் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

பள்ளிவாசலுக்கு வரும் பெண்களை தடை செய்யாதீர்கள் என நபிகள் நாயகம் சொன்னதற்கு மாறாக எந்த பள்ளிகளுக்கும் பெண்கள் வரக்கூடாது என சட்டம் போடுவோம் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

இதற்கு மாற்றமாக ..

வட்டி வாங்குவது பெரும்பாவம் அதில் வீழ்ந்து விடாதீர்கள் என்று அவர்களை நன்மையின் பால் அழைப்பவர்களை காஃபிர் என ஃபத்வா கொடுப்போம் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

வரதட்சணை ஒரு சமூக்கேடு பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று சொல்லி மஹர் கொடுத்து திருமணம் செய்பவர்களை காஃபிர் என ஃபத்வா கொடுப்போம் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

தாடியை மழிக்காதீர்கள் இளைஞர்களே ..தாடி என்பது நபிகள் நாயகத்தின் அடையாளம் என்று சொல்லி தாடி வைத்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்குனால் காஃபிர் என ஃபத்வா கொடுப்போம் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

நரகப்படுகுழியின் விளிம்பில் இருந்த சமுதாயத்தை தர்கா தட்டு தாயத்து தரீக்கா இதெல்லாம் இணைவைப்பு காரியங்கள் என்பதை காரண காரியத்தோடு விளக்கி நேர் வழி காட்டயவர்களை காஃபிர் என ஃபத்வா கொடுப்போம் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

மக்கள் மறுமையில் வெற்றி பெற ஒரே வழி இறைவனின் வஹி மட்டுமே என்று உண்மையை உரக்கச்சொன்னால் காஃபிர் என கொடுப்போம் ஃபத்வா .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

குர்ஆன் ஹதீஸ் மட்டுமே ஒற்றுமைக்கான வழி என்று பிரிந்து கிடக்கும் சமுதாயத்தை ஒற்றுமை படுத்த முயன்றால் கொடுப்போம் காஃபிர் என ஃபத்வா ... காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

நபிமொழிகள் என்ற பெயரில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை பின்பற்றாதீர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டுமே பின்பற்றுங்கள் என சொன்னால் தருவோம் காஃபிர் ஃபத்வா .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

உலகப்பொதுமறையாம் குர்ஆனை இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று எடுத்துச்சொல்லி மாற்று மதத்தவர்களுக்கு கொடுத்து ஆயிரக்கணக்கில் இஸ்லாத்தில் இணைத்தால் கொடுப்போம் ஃபத்வா காஃபிர் என்று ... காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

ஒரு குடும்பத்தில் பெண் மார்க்கத்தை தெரிந்து கொண்டால் அந்த குடும்பமே நேர் வழிக்கு வரலாம் என்ற அடிப்படையில் நபிகள் நாயகம் வழியில் பெண்களை பள்ளியில் அனுமதித்தால் தருவோம் காஃபிர் என்ற ஃபத்வா ... காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

இப்படிக்கு ..

தமிழ் மாநில ஜமாஅத்துல் உல(மா)க்கள் சபை ..
இப்படி நாங்கள் பெயர் வைத்துக்கொள்ள .... காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!