"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

12/27/2019

ஷிர்க் என்றால் என்ன?

அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை. எதுவும் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படையைக் கொள்கையாகும்.


பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள், ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும் அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்த ஒன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் ஷிர்க் எனும் இணை கற்பித்தல் ஆகும்.
வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதோருக்குச் செய்தால் அது எந்த வடிவில் இருந்தாலும் அது 'ஷிர்க் ' என்று தான் கூறப்படும். உதாரணமாக பிரார்த்தனை செய்தல் என்பது ஓர் வணக்கமாகும்.

நம் வாழ்வில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களையும் இன்ன பிற தேவைகளையும் அல்லாஹ்விடம் மாத்திரம் தான் சொல்லி முறையிட வேண்டும். அல்லாஹ்விடம் முறையிடாமல் அல்லாஹ்வின் படைப்பாகிய மகான்களிடமோ அல்லது தர்ஹாக்களில் சென்று முறையிட்டாலோ அதற்கு 'ஷிர்க் ' என்று சொல்லப்படும்.

நேர்ச்சை செய்தல் ,
அறுத்துப் பலியிடுதல்,
சத்தியம் செய்தல்,
பாதுகாப்பு கோருதல்,
சிரம்பணிதல்,
போன்றவைகள் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யப்பட வேண்டும். இவைகளை அல்லாஹ் அல்லாத
அவ்லியா,
மகான்,
பெரியார்,
விக்கிரக சிலை,
கப்ரு,
கல் ,
மண்,
மரம் போன்றவற்றிற்கு யாராவது செய்தால் அதனை 'ஷிர்க்' என்று இஸ்லாம் சொல்கின்றது.
நம்முடைய சமூகத்தில் அவ்லியாக்களின் அடக்கஸ்தலத்திற்குச் சென்று , நேர்ச்சைகள் செய்து தமது தேவைகளை முறையிடுவோர் பெருந்திரளாக உள்ளதை மறுக்க முடியாது.

'ஷிர்க்' என்ற அரபி வார்த்தைக்கு 'இணை கற்பித்தல்' என்று பொருள். தமது கைகளால் சிலைகளை செய்து விட்டு பின்னர் அதனையே கடவுளாக வணங்கும் பிறமத மக்களின் கலாச்சாரத்தைத் தான் பலர் 'ஷிர்க்' என்று நம்புகிறார்கள். இதனை முஸ்லிம்கள் யாரும் செய்வதில்லை. பின்னர் எதற்காக, முஸ்லிம்கள் மத்தியில் 'ஷிர்க் ஒழிய வேண்டும்' எனப் பிரசாரம் செய்கின்றீர்கள் என பலரும் கேள்வி எழுப்பலாம். 'சிலைகளை வணங்குவது மாத்திரம் தான் ஷிர்க்' என்று நம்மில் அதிகமானோர் புரிந்து வைத்திருப்பதே இதற்கு அடிப்படைக் காரணமாகும்.
(நபியே)நீர் இணைகற்பித்தாலும் உம்முடைய நல்லறங்கள் அழிந்து விடும்.
திருக்குர்ஆன்-39:66

11/03/2017

இறைநேசர்களை இறைத்தூதரால் அறிய முடியுமா?


ஒருவரை நல்லடியார், மகான் என்று நபித்தோழர்களால் கூடக் கண்டுபிடிக்க முடியாது என்பதற்கு ஏராளமான ஆதாரங்களைக் கடந்த இதழில் பார்த்தோம். அதுபோல் நபி (ஸல்) அவர்களால் கூட, அல்லாஹ் அவர்களுக்கு இவர் நல்லவர், இவன் கெட்டவன், இவன் முனாஃபிக் (நயவஞ்சகன்) என்று வஹீ அறிவித்துக் கொடுத்தாலே தவிர ஒருவரை நல்லடியார் என்றும் மகான் இறைநேசர் என்றும் கண்டுபிடிக்க முடியாது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அதை ஒவ்வொன்றாக நாம் பார்க்கவிருக்கின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்கüல் ஒருவர் மற்றொருவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கக் கூடும். ஆகவே, எவரது (சாதுர்யமான) சொல்லை வைத்து அவரது சகோதரனின் உரிமையில் சிறிதை (அவருக்குரியது) என்று தீர்ப்பüத்து விடுகின்றேனோ அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத் தான் துண்டித்துக் கொடுக்கிறேன். ஆகவே, அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம். நூல்: புகாரி 2680

தம்மிடம் வழக்குகள் கொண்டு வரப்படும் போது வெளிப்படையான வாதங்களையும் ஆதாரங்களையும் வைத்துத் தீர்ப்பளிப்பதாகவும் சில நேரங்களில் அந்தத் தீர்ப்பு தவறாக அமைந்து விடும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

அதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரை நல்லவன் என்று கருதினார்களோ அவன் மறுமையில் கெட்டவானகவும், கெட்டவன் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் நல்லவர்களாகவும் இருப்பார்கள். தன் முன்னால் நின்று வழக்குரைக்கும் இருவரில் யார் உண்மையாளன் என்பதை நபியவர்களால் கண்டுபிடிக்கமுடியாது என்றால் மற்றவர்களுக்கு அது இயலுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்

நபியவர்கள் மனிதர்களின் உள்ளத்தில் இருப்பதை மட்டும் அறிபவர்களாக இருந்தால் அவ்விருவரில் யார் பொய் சொல்கிறார், யார் உண்மை சொல்கிறார் என்பதை அறிந்து அவர்களிடம் விசாரணை செய்யாமல் அந்தப் பொருள் யாருக்குரியதோ அவரிடம் கொடுத்திருப்பார்கள். எனவே நபியவர்களால் கூட நல்லவர் யார். கெட்டவர் யார் என்பதை அறிய முடியவில்லை என்பதற்கு இந்தச் செய்தி சான்றாகும்.

இப்படி நபிகள் தம்முடைய வாழ்நாளில் எத்தனையோ பேருக்கு இப்படி தீர்ப்பளித்திருப்பார்கள். எத்தனையோ நல்லவனை, கெட்டவன் என்று முடிவு செய்திருப்பார்கள். எத்தனையோ கெட்டவனை நல்லவன் என்று முடிவு செய்திருப்பார்கள். ஆக நபியவர்களாலேயே ஒரு மனிதரின் உள்ளத்தில் உள்ளதைக் கண்டறிய முடியவில்லை என்றால் நாம் எப்படி ஒருவரை இவர் அவ்லியா, இறைநேசர், மகான் என்று கண்டுபிடிக்க முடியும்? அவ்வாறு முடியும் என்று சொன்னால், நபியவர்களை விட நமக்கு அதிகமான அறிவு ஞானம் இருக்கிறது என்றாகிவிடும். நபிகள் நாயகத்துக்குத் தெரியாதது எங்களுக்குத் தெரியும். நபியவர்களுக்கு உள்ளத்தில் உள்ளதைக் கண்டுபிடிக்கத் தெரியாது; ஆனால் எங்களுக்கு உள்ளத்தில் உள்ளதைக் கண்டுபிடிக்கத் தெரியும் என்றாகிவிடும். இதை நாம் புரிந்து கொண்டால் நாம் யாரையும் அவ்லியா என்றோ மகான் என்றோ சொல்ல மாட்டோம்.

நபி (ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான்,  உஸய்யா,  பனூ  -ஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாகக் கூறினர். மேலும்,  தமது சமுதாயத்தினரை நோக்கி ஒரு படையனுப்பி உதவும்படியும் நபி (ஸல்) அவர்கüடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நபி  (ஸல்)  அவர்கள், அன்சாரிகளிலிருந்து எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள். அவர்களை நாங்கள் "காரீகள்' (குர்ஆனை மனனம் செய்து முறைப்படி ஓதுவோர்) என்று அழைத்து வந்தோம். அவர்கள் பகல் நேரத்தில் விறகு சேகரிப்பார்கள்; இரவு நேரத்தில் தொழுவார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர். இறுதியில், "பீரு மஊனா' என்னுமிடத்தை அவர்கள் அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக்  கொன்று விட்டனர். உடனே,  நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான் ஆகிய குலங்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்ட) அந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட) ஓர் இறை வசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதி வந்தோம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)  நூல்: புகாரி 3064

மேலும் இந்த ஹதீஸ் புகாரியில் 1002, 3170, 4088, 4090, 4096 ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளது.

இதில் நாம் பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நபியவர்களிடம் வந்த நான்கு கூட்டத்தாரும் மகா கெட்டவர்கள் என்று நபியவர்களுக்குத் தெரியவில்லை. 70 முஸ்லிம்களைக் கொன்ற பிறகு தான் அந்தக் கூட்டத்தினர் கெட்டவர்கள் என்பது தெரிய வருகிறது. முதலில் வரும்போதே அவர்கள் கெட்டவர்கள் என்று தெரிந்திருந்தால் நபியவர்கள் உஷாராக இருந்திருப்பார்கள். இவர்கள் 70 பேரையும் அழைத்துச் சென்று வஞ்சமாகக் கொலை செய்ய வந்திருக்கிறார்கள் என்பதை முதலிலேயே அறிந்திருந்தால், அந்தக் கூட்டத்தினரைக் கைது செய்திருப்பார்களா? இல்லையா?

ஒரு ஆள் இரண்டு ஆள் இல்லை. 70 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றால் சாதாரணமான விஷயம் அல்ல. மிகவும் பயங்கரமான விஷயம். கொல்லப்பட்ட 70 ஆட்களும் காரிகள், குர்ஆனை நன்கு மனனம் செய்தவர்கள். குர்ஆனை மிகவும் அறிந்த ஆலிம்கள். மார்க்க அறிஞர்களாக இருந்த ஸஹாபாக்கள்.

நபியவர்கள் அத்தகைய ஸஹாபாக்களை முத்துக்களைப் போல பொறுக்கி எடுத்து அவர்களுடன் அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் நல்லவர்கள் என்ற நம்பிக்கையுடன், பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் எதுவும் எடுக்காமல் வெறுங்கையுடன் சென்ற அந்த 70 பேரையும் நம்ப வைத்து கழுத்தை அறுத்திருக்கிறார்கள்.

இந்த இடத்தில் நபியவர்களுடைய கணிப்பு தவறாக இருந்திருக்கிறது. அதாவது நபியவர்களும், மற்ற ஸஹாபாக்களும் யாரை முஸ்லிம்கள், நல்லவர்கள் என நினைத்தார்களோ அவர்கள் கெட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய வெளிப்படையான தோற்றத்தை வைத்து நல்லவர்கள் என நம்பி ஏமாந்துள்ளார்கள். இது வஹீ வராததின் போது நடந்தது. அந்த 70 பேரும் கொல்லப்பட்டது வஹீயின் மூலம் வந்தபோது தான் அவர்களுக்குத் தெரிந்தது. அவர்கள் எங்கே கொல்லப்பட்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிந்தது. அவர்களுடைய கண்ணுக்கு முன்னால் கூட்டிச் சென்ற போது அவர்களுக்குத் தெரியவில்லை. இதிலிருந்தே அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அறிவித்து கொடுத்தால்தான் மறைவானதைக் கூறுவார்களே தவிர தாமாக அவர்களால் மறைவானதை அறிந்து கொள்ள முடியாது என்பது விளங்குகிறது.

ஆக நபியவர்களைக் கூட ஒரு கூட்டம் ஏமாற்றியிருக்கிறது என்றால் நம்மை ஒருவன் ஏமாற்றுவது பெரிய விஷயமே அல்ல. பெரிய தலைப்பாகை, ஜுப்பா போட்டு வந்தால் அவரைப் பார்த்து நாம் ஏமாந்து விடுகிறோம். ஒருவன் பள்ளிவாசலே கதி என்று இருப்பான். நாள் முழுவதும் கையில் தஸ்பீஹ் மணியை உருட்டிக் கொண்டு இருப்பான். அடுத்தவனிடம் பேசாமல் இறைநினைவில் மூழ்கி இருப்பான். 24 மணி நேரமும் குர்ஆனையே ஓதிக் கொண்டிருப்பான். இவ்வாறு செய்பவரை நாம் பார்த்த உடனேயே யோசிக்காமல் நம் ஊருக்கு அவ்லியா வந்து விட்டார் என்று கூறிவிடுவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே ஒரு கூட்டம் ஏமாற்ற முடியும் என்றால், நம்மைப் போன்ற சாதாரண மக்களை ஏமாற்ற முடியாதா?

இதே போன்று, இன்னும் சில சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்துள்ளது.

"உக்ல்'' குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்தது. அவர்களுக்கு மதீனாவின் (தட்ப வெப்பச்) சூழல் (உடல் நலத்திற்கு) உகந்ததாக இல்லை. ஆகவே அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள்'' என்று கேட்டார்கள்.  அதற்கு  நபி  (ஸல்) அவர்கள், "நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை'' என்று பதிலüத்தார்கள். உடனே, (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும் பாலையும் குடித்தார்கள். (அதனால்)  உடல்  நலம் பெற்றுப் பருமனாக ஆனார்கள். மேலும், ஒட்டகம் மேய்ப்பவனைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்று விட்டார்கள்; இஸ்லாத்தை ஏற்ற பின் நிராகரித்து விட்டார்கள். ஒருவர் இரைந்து சத்தமிட்ட படி  நபி (ஸல்) அவர்கüடம் வந்தார். நபி  (ஸல்)  அவர்கள் "உக்ல்' குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பி வைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்)  கொண்டு வரப்பட்டனர். நபி (ஸல்) அவர்கள் அவர்களுடைய கைகளையும் கால்களையும் துண்டித்தார்கள். பிறகு, ஆணிகளைக்  கொண்டு வரச் சொல்- உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை (கொண்டு வரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களுடைய கண் இமைகüன் ஓரங்கüல் சூடிட்டார்கள். அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) "ஹர்ரா' எனுமிடத்தில் எறிந்து விட்டார்கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும் வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப் படவில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)  நூல்: புகாரி 3018

மேலும் இந்தச் செய்தி புகாரியில் 1051, 4192, 4610, 5685, 5686, 5728, 6802, 6804, 6805, 6899 ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியில், அந்தக் கூட்டத்தினர் வந்த நோக்கம் ஒட்டகத்தைத் திருடுவதற்காக தான். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக வரவில்லை. நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டோம் என்று பொய் சொல்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளத்தை அறிந்து, இவர்கள் நடிக்கிறார்கள் என்பதை அறியக் கூடியவர்களாக இருந்தால் ஏமாந்திருக்க மாட்டார்கள். ஒரு காவலரைப் பலி கொடுத்திருக்கவும் மாட்டார்கள். ஒட்டகத்தையும் இழந்திருக்க மாட்டார்கள். அவர்கள் துரோகம் செய்த பிறகுதான் இவர்கள் துரோகிகள் என்று நபியவர்களுக்குத் தெரிகிறது.

நாமும் இவ்வாறு தான் கண்டுபிடிக்க முடியும். நமக்கு ஒருவன் துரோகம் இழைக்க நினைக்கிறான் என்றால், கடைசி நிமிடம் வரைக்கும் நமக்கு இவன் துரோகம் இழைப்பான் என்று நம்மால் அறிய முடியாது. துரோகம் இழைத்த பிறகு தான் இவன் துரோகி என்று நம்மால் கண்டறிய முடிகிறது. அல்லாஹ்வுடைய தூதரையே இவ்வளவு எளிதாக ஏமாற்றி விடுகிறார்கள் என்றால், நம்மை ஏமாற்ற எவ்வளவு நேரம் ஆகும். அதிலும் குறிப்பாக அவர்கள் நபித்தோழர்களைப் போல் நடித்து ஏமாற்றியிருக்கிறார்கள்.

இதை நாம் எதற்காக இங்கே சுட்டிக்காட்டுகிறோம் என்றால் நாம் ஒருவரை அவ்லியா என்று நினைத்து, அவருக்கு விழா நடத்துகிறோம். கந்தூரி கொண்டாடுகிறோம். இவ்வாறு அவர் அவ்லியா என்பதற்கு என்ன ஆதாரம்? அவரை அவ்லியா என்று சொன்னது யார்? அவ்லியா என்ற ஒருவர் இந்த கப்ரில் அடங்கியிருக்கிறாரா? அப்படி ஒருவர் இந்த உலகத்தில் வாழ்ந்தாரா? அப்படியே வாழ்ந்து அவர் நல்ல செயல்களைத் தான் செய்தார் என்று நீங்கள் பார்த்தீர்களா? அப்படியே நல்ல செயல் செய்தாலும், அதை வெளிப்படையாகச் செய்திருக்கலாம். ஆனால் அது அவருடைய உள்ளத்தில் இருந்ததா? அல்லது நல்லவனைப் போல் நடிப்பதற்காகச் செய்தாரா? இது போன்ற ஏராளமான கேள்விக்கு இன்னும் பதிலைக் காணோம்.

இவ்வாறு ஒருவரை அவ்லியா என்று சொல்ல, அல்லாஹ்வுடைய அதிகாரத்தை நாம் கையில் எடுக்க வேண்டுமா? நாம் அல்லாஹ்விடம் பாவியாக வேண்டுமா? இப்படி நாம் சிந்திக்க வேண்டும். எனவே இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய விஷயம், யாராலும் அவ்லியாவை கண்டுபிடிக்க முடியாது என்பது தான்.

யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பüப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதி-ருந்து (சிறிது) உண்டார்கள். "அவளைக் கொன்று விடுவோமா?'' என்று (நபி (ஸல்) அவர்கüடம்) கேட்கப்பட்டது.  அவர்கள், "வேண்டாம்'' என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கüன் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)  நூல்: புகாரி 2617

இந்தச் செய்தியில், தன்னைக் கொல்வதற்காகத் திட்டம் தீட்டி வந்த ஆளையே நபியவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. நல்லவள் என நம்பித்தான் அந்த இறைச்சியை வாங்கிச் சாப்பிட்டார்கள். தன்னைக் கொல்வதற்காக இதைத் தருகிறாள் என அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. எனவே நம்மிடத்தில் வெளிப்படையாக எவன் நல்ல செயல் செய்கிறானோ அவன் நம்மிடம் நல்லவனாக முடியும். ஆனால் அல்லாஹ்விடத்தில் வெளிப்படையாகவும் நல்ல செயல்கள் இருந்து, உள்ளமும் பரிசுத்தமாக இருந்தால்தான் அவன் நல்லவனாக முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, "நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட நமது) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கின்றோம்'' (21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள். மறுமை நாüல் (நபிமார்கüல்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவர். என் தோழர்கüல் சிலர் இடப்பக்கம் (நரகத்தை நோக்கி) கொண்டு செல்லப்படுவார்கள். நான், "இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்'' என்று (அவர்களை விட்டுவிடும்படி) கூறுவேன். அப்போது, "தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகüன் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்'' என்று கூறுவார்கள். அப்போது, நல்லடியார் (ஈஸா நபி) கூறியதைப் போல், "நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், நீ (இப்போது) அவர்களுக்கு தண்டனை அüத்தால் அவர்கள் நிச்சயமாக உன் அடிமைகளே. நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்'' என்னும் (5:117-118) இறைவசனத்தை (பதிலாகக்) கூறுவேன்.
நூல்: புகாரி 3349

மேலும் இந்தச் செய்தி புகாரியில் 3447, 4740 ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், "என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டுவரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்தை நோக்கிக்) கொண்டு செல்லப்படுவர். அப்போது நான், "என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்'' என்று சொல்வேன். அதற்கு, "இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லப்படும். அப்போது நான், நல்லடியார் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போல் "நான் அவர்களிடையே (வாழ்ந்துகொண்டு) இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகிவிட்டாய்'' என்று பதிலளிப்பேன். அதற்கு, "இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்(சுவடு)கலின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்றுகொண்டே யிருந்தார்கள்'' என்று கூறப்படும். (புகாரி 4740) என்று இடம்பெற்றுள்ளது.

மற்றொரு அறிவிப்பில், "அவர்கள் என்னைச் சர்ந்தவர்கள்தாம்'' என்று நபியவர்கள் கூறியதற்கு, "உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிதாக உண்டாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லப்படும். உடனே நான், "எனக்குப் பிறகு (தமது மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையி-ருந்து அப்புறப்படுத்துவானாக! அப்புறப் படுத்துவானாக!'' என்று சொல்வேன். (புகாரி 7051) என்று இடம்பெற்றுள்ளது.

மேலே சொன்ன மூன்று ஹதீஸ்களிலும் மார்க்கத்தை விட்டுத் தடம்புரண்டு சென்றவர்களையெல்லாம்  நல்லடியார்கள் என்று நினைத்து, அதே நிலையில் நபியவர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள். நபியவர்கள் யாரை நல்லவர்கள் என்று நினைத்துக் கொண்டு, அதை மறுமையில் வெளிப்படுத்தும் போது அது பொய்யென்று ஆகிவிடுகின்றது.

அதே மாதிரி மூஸா (அலை) அவர்களுடைய சம்பவத்தையும் நாம் இதற்குச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம். மூஸா நபி அவர்கள் பிர்அவ்னிடத்தில் சென்று அழைப்பு பணி செய்கிறார்கள். அதைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறும்போது,

"மூஸாவே! உங்களிருவரின் இறைவன் யார்?'' என்று அவன் கேட்டான். "ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்'' என்று அவர் கூறினார். "முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?'' என்று அவன் கேட்டான். "அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார்.  அல்குர்ஆன் 20:49-52

இவ்வசனத்தில் ஃபிர்அவ்ன், மூஸா (அலை) அவர்களிடம், "நீ புதிய மார்க்கத்தைச் சொல்கிறாய். ஆனால் இதற்கு முன்னால் சென்ற நம்முடைய அப்பன், பாட்டன்மார்கள், முன்னோர்களுடைய நிலை என்ன? அவர்களெல்லாம் நீ சொன்ன மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லையே? அவர்களுடைய கதி என்ன?' என்று ஃபிர்அவ்ன் கேட்கிறான். அதற்கு மூஸா நபியவர்கள் "அதைப் பற்றி எனக்கு எந்த ஞானமும் கிடையாது. அது அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளதாகும். அது அவன் எடுக்க வேண்டிய முடிவு. அவனுடைய முடிவைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது' என்று கூறிவிடுகின்றார்கள். இதுதான் முஸ்லிம்களுடைய நிலைபாடாகவும் இருக்க வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

--- ஏகத்துவம் நவம்பர் 2012

9/15/2015

நபித்தோழர்கள் மூலம் தானே குர்ஆன் கிடைத்தது?

சஹாபாக்களைப் பின்பற்றக்கூடாது என்றால் குரானுக்கு CERTFICATE கொடுத்தது அவர்கள் தானே! அவர்களைப் பின்பற்றக்கூடாது என்றால் குரானின் மீது சந்தேகம் ஏற்படுமே!
முஹம்மது இஹ்ஸாஸ்

மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான கேள்வி போல் தோற்றம் அளிக்கலாம். ஆனால் இக்கேள்வி சிந்தனைக் குறைவினால் ஏற்பட்டதாகும். இதில் உண்மையும் இல்லை. எந்த லாஜிக்கும் இல்லை.

திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாகவும் திருக்குர்ஆனின் அற்புதநடை தெள்ளத் தெளிவான கொள்கை காரணமாகவும் இது இறைவேதம் தான் என்று நபித்தோழர்கள் நம்பினார்கள். அதை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சென்றார்கள்.

நபித்தோழர்கள் தான் அடுத்த தலைமுறையினருக்கு திருக்குர்ஆனைக் கொண்டு சேர்த்த காரணத்தால் அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?

 உதாரனத்திட்காக.....  நீதி மன்றத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையை அப்படியே கூட்டாமல் குறைக்காமல் ஒரு தபால் ஊழியர் உங்களிடம் கொண்டு வந்து தந்தால் அல்லது நீதி மன்ற ஊழியர் கொண்டு வந்தால் அதை இப்படித்தான் நீங்கள் புரிந்து கொள்வீர்களா?

நீதிமன்ற உத்தரவை இவர் தான் என்னிடம் கோண்டு வந்து தந்தார். இவர் நீதிமன்ற உத்தரவை நாணயமாக என்னிடம் கொண்டு வந்து தராமல் இருந்தால் அந்த உத்தரவு எனக்குக் கிடைக்காமல் போய் இருக்கும். எனவே இனிமேல் இந்த தபால்துறை ஊழியர் சொல்வதையெல்லாம் நான் பின்பற்றுவேன்; எனக்கு ஏதாவது வழக்கில் தீர்ப்பு தேவைப்பட்டால் இந்த ஊழியரிடமே தீர்ப்பு கோருவேன் என்று நீங்கள் சொல்வீர்களா? அல்லது உலகில் யாராவது இப்படி கூறுவார்கள் என்று கருதுகிறீர்களா?

உலகில் எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ளாத இந்த வாதத்துக்கும் உங்கள் வாதத்துக்கும் கடுகளவு வேறுபாடு கூட இல்லை.

குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்து தந்திருந்தும் நபித்தோழர்கள் தான் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்கிறீர்களே அதுவாவது உண்மையா? கேள்வி கேட்கும் உங்களுக்கும் எனக்கும் நபித்தோழர்கள் குர்ஆனைக் கொண்டு வந்து தரவில்லை. நமக்கு முந்திய தலைமுறையினர் தான் கொண்டு வந்து சேர்த்தனர். எனவே அவர்களைப் பின்பற்றலாம் என்று சொல்வோமா?

நமக்கு முந்தின தலைமுறையும் நபியிடம் நேரடியாகக் கேட்டு நமக்கு சொல்லவில்லை. அவர்கள் தமக்கு முந்திய தலைமுறையினர் சொன்னதைத் தான் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தனர். இப்படியே போய்க்கொண்டு இருந்தால் நபிகள் நாயகம் காலம் முதல் இன்று வரை உள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் பின்பற்ற வேண்டும் என்று ஆகாதா....?

இதையே இன்னும் தீவிரமாக சிந்தித்தால் நபித்தோழர்கள் தான் இதைக் கொண்டு வந்த சேர்த்தனர் என்றால் அவர்கள் நபித்தோழர்கள் என்று எப்படி அறிந்து கொண்டோம்? அவர்களுக்கு அடுத்த தலைமுறை தான் அவர்களை நபித்தோழர்கள் என்று நமக்கு அடையாளம் காட்டினார்கள்.

இப்படியெல்லாம் கூர்மையாக சிந்தித்தால் உங்கள் வாதம் பொருளற்றது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

இது போன்ற வாதங்களுக்கு பதிலாக நாம் பல ஆண்டுகளுக்கு முன்னா எழுதிய கருத்து வேறு தகவல் வேறு என்ற ஆய்வுக்கட்டுரை கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். இன்னும் தெளிவு கிடைக்கும்.

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என வாதிடுவோரின் தவறான வாதங்களுக்குப் பதில் அறிய நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற நூலை வாசிக்கவும்.

9/07/2015

நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல் 1

தொழுகையில் நிற்கும் போது இடது கையின் மீது வலது கையை வைத்து, இரு கைகளையும் நெஞ்சின் மீது வைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் நாம் கூறி வருகிறோம். இந்தியாவில் பெரும்பாலான முஸ்லிம்கள் தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டி தொழுது வருகின்றனர். இது தவறானது என்றும் இந்தக் கருத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஹதீஸ்களும் பலவீனமாக உள்ளன என்றும் நாம் கூறி வருகிறோம். அல்லாஹ்வின் பேரருளால் தவ்ஹீத் எழுச்சியின் விளைவாக அனேக முஸ்லிம்கள் நெஞ்சின் மீது கைகளைக் கட்டி தொழ ஆரம்பித்துள்ளனர், அல்ஹம்துலில்லாஹ்! தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்ட வேண்டும் என்ற கொள்கையுடைய மார்க்க அறிஞர்கள், இந்த எழுச்சியைச் சகித்துக் கொள்ள முடியாமல், தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்றால், நெஞ்சில் கை கட்டும் ஹதீஸும் பலவீனமானது தான் என்று எதிர்ப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். நெஞ்சில் கை கட்டுவது குறித்த ஹதீஸ் பலவீனமானது என்பதற்குச் சில காரணங்களையும் முன் வைக்கின்றனர். தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது பற்றிய ஹதீஸ்கள் பலவீனமானவை என்றாலும், இது பற்றி ஒரு ஹதீஸ் மட்டும் ஆதாரப்பூர்வமானது என்று இன்னும் சிலர் வாதிட்டு வருகின்றனர். எனவே நெஞ்சில் கை கட்டுவது குறித்த ஹதீஸ் உண்மையாகவே பலவீனமானது தானா? என்பதையும், தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதும் உண்டா? என்பது பற்றியும் மறு ஆய்வு செய்ய நாம் முன் வந்தோம். மறு ஆய்வுக்குப் பின்னரும் நமது முந்தைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்ற முடிவுக்கே மீண்டும் வருகிறோம். தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது குறித்த ஹதீஸ்கள் அனைத்துமே பலவீனமானவை என்பதையும், நெஞ்சில் கை கட்டுவது பற்றிய ஹதீஸ்களில் ஒரு ஹதீஸ் மட்டும் ஆதாரப்பூர்வமாக அமைந்துள்ளது என்பதையும் மீண்டும் நாம் உறுதி செய்கிறோம். இது பற்றி விபரமாக நாம் காண்போம்.
தொப்புளுக்குக் கீழே கை கட்டுதல் முதலாவது ஹதீஸ்
حدثنا محمد بن محبوب حدثنا حفص بن غياث عن عبد الرحمن بن إسحق عن زياد بن زيد عن أبي جحيفة أن عليا رضي الله عنه قال من السنة وضع الكف على الكف في الصلاة تحت السرة 
தொழுகையில் (இடது) முன் கை மீது (வலது) முன் கையை வைத்து இரண்டையும் தொப்புளுக்குக் கீழே வைப்பது நபிவழியாகும். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: அபூதாவூத் 645 
அலீ (ரலி) கூறியதாக இதை அறிவிப்பவர் அபூஜுஹைஃபா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் நமக்கு மறுப்பு இல்லை. அபூஜுஹைஃபா கூறியதாக இதை அறிவிப்பவர் ஸியாத் பின் ஸைத் ஆவார். இவரது நம்பகத் தன்மையிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஸியாத் பின் ஸைத் கூறியதாக இதை அறிவிப்பவர் கூஃபா நகரைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் ஆவார். இவரது நம்பகத் தன்மையில் நமக்கு மறுப்பு உள்ளது. இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம் அபூதாவூத் அவர்கள், இதற்கு இரண்டு ஹதீஸ்களுக்குப் பின்னர் (அபூதாவூத் 647ல்) இவரைப் பற்றி விமர்சிக்கும் போது, கூஃபாவைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என்று கூறியுள்ளனர்.
حدثنا مسدد حدثنا عبد الواحد بن زياد عن عبد الرحمن بن إسحق الكوفي عن سيار أبي الحكم عن أبي وائل قال قال أبو هريرة أخذ الأكف على الأكف في الصلاة تحت السرة قال أبو داود سمعت أحمد بن حنبل يضعف عبد الرحمن بن إسحق الكوفي
இந்த ஹதீஸ் அபூதாவூதில் மட்டுமின்றி அஹ்மத் 998, பைஹகீ 2170, 2171, தாரகுத்னீ 9 (பாகம்: 1, பக்கம்: 286), தாரகுத்னீ 10 (பாகம்: 1, பக்கம்: 286) ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நூல்கள் அனைத்திலுமே அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் வழியாக மட்டுமே இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
تهذيب التهذيب - ابن حجر - (ج 6 / ص 124) 284 - د ت أبي داود والترمذي عبد الرحمن بن إسحاق بن سعد بن الحارث أبو شيبة الواسطي الأنصاري ويقال الكوفي بن أخت النعمان بن سعد روى عن أبيه وخاله والقاسم بن عبد الرحمن بن عبد الله بن مسعود وسيار بن الحكم وزياد بن زيد الأعسم والشعبي وحفصة بنت أبي كثير وغيرهم وعنه حفص بن غياث وعبد الواحد بن زياد وأبو معاوية ومحمد بن فضيل وهشيم وعلي بن مسهر ويحيى ويحيى بن أبي زائدة وغيرهم قال أبو داود سمعت أحمد يضعفه وقال أبو طالب عن أحمد ليس بشيء منكر الحديث وقال الدوري عن بن معين ضعيف ليس بشيء وقال بن سعد ويعقوب بن سفيان وأبو داود والنسائي وابن حبان ضعيف وقال النسائي ليس بذاك وقال البخاري فيه نظر وقال أبو زرعة ليس بقوي وقال أبو حاتم ضعيف منكر الحديث يكتب حديثه ولا يحتج به وقال بن خزيمة لا يحتج بحديثه قلت وقال بن أبي خيثمة عن بن معين ليس بذاك القوي وقال عبد الله بن أحمد عن أبيه ليس بذاك وهو الذي يحدث عن النعمان بن سعد أحاديث مناكير والمدني أعجب إلى من الواسطي وقال البزار ليس حديثه حديث حافظ وذكره يعقوب بن سفيان في باب من يرغب عن الرواية عنهم وقال بن عدي وفي بعض ما يرويه لا يتابعه الثقات عليه وقال العقيلي ضعيف الحديث وقال الساجي كوفي أصله واسطي أحاديثه مناكير وقال العجلي ضعيف جائز الحديث يكتب حديثه 
அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் பலவீனமானவர் என்றும், நம்பகமான ஹதீஸ்களுக்கு முரணாக அறிவிப்பவர் என்றும் அஹ்மத் பின் ஹம்பல், இப்னு மயீன், இப்னு சஅத், யஃகூப் பின் சுஃப்யான், அபூதாவூத், நஸயீ, இப்னு ஹிப்பான்,புகாரி, அபூ ஸுர்ஆ, அபூ ஹாத்தம், இப்னு குஸைமா, பஸ்ஸார், இப்னு அதீ, உகைலீ, சாஜீ, அஜலீ ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர். ஹாஃபிழ் இப்னு ஹஜரின் தஹ்தீபுத் தஹ்தீப் இவரை நம்பகமானவர், நாணயமானவர் என்று யாருமே விமர்சனம் செய்யவில்லை. பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்ட இவர் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட அறிவிப்புக்கள் அனைத்தும் பலவீனமானவையே என்பதில் ஹதீஸ் கலை அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இல்லை. 
இரண்டாவது ஆதாரம் 
حدثنا مسدد حدثنا عبد الواحد بن زياد عن عبد الرحمن بن إسحق الكوفي عن سيار أبي الحكم عن أبي وائل قال قال أبو هريرة أخذ الأكف على الأكف في الصلاة تحت السرة قال أبو داود سمعت أحمد بن حنبل يضعف عبد الرحمن بن إسحق الكوفي 

தொழுகையில் ஒரு முன் கையை மற்றொரு முன் கையால் பிடித்துக் கொண்டு, தொப்புளுக்குக் கீழே வைக்க வேண்டும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ வாயில் நூல்: அபூதாவூத் 647 

இந்தச் செய்தியும் பலவீனமானதாகும். இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரிலும் மேலே நாம் கூறிய அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பார் இடம் பெற்றுள்ளார். இதன் காரணமாக இச்செய்தியும் ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல. மேலும் இச்செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகத் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாகவோ, கூறியதாகவோ மேற்கண்ட செய்தியில் கூறப்படவில்லை. 
மூன்றாவது ஆதாரம்
ثلاث من أخلاق النبوة تعجيل الافطار وتأخير السحور ووضع اليد اليمنى على اليد اليسرى في الصلاة تحت السرة
மூன்று காரியங்கள் நுபுவ்வத்தின் அம்சங்களில் உள்ளவை. 1. நோன்பு துறப்பதை விரைவுபடுத்துதல், 2. ஸஹர் செய்வதைத் தாமதப்படுத்துதல், 3. தொழும் போது தொப்புளுக்குக் கீழே இடது கை மீது வலது கையை வைத்தல். அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக மேற்கண்ட செய்தியை இப்னு ஹஸ்ம் அவர்கள் பதிவு செய்துள்ளனர். இதற்கு அறிவிப்பாளர் தொடர் எதனையும் அவர்கள் குறிப்பிடவில்லை. அறிவிப்பாளர் தொடர் இல்லாமல் இது பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்திரிந்தும் ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்த சிலர் இதை ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது குறித்து துஹ்ஃபதுல் அஹ்வதீ நூலில் அறிவுப்பூர்வமான கேள்வியை எழுப்பியுள்ளார்.
تحفة الأحوذي - (ج 2 / ص 79) والحديث الرابع حديث أنس ذكره بن حزم في المحلى تعليقا بلفظ ثلاث من أخلاق النبوة تعجيل الافطار وتأخير السحور ووضع اليد اليمنى على اليد اليسرى في الصلاة تحت السرة قلت لم أقف على سند هذا الحديث والعلماء الحنفية يذكرونه في كتبهم ويحتجون به ولكنهم لا يذكرون إسناده فما لم يعلم إسناده لا يصلح للاحتجاج ولا للاستشهاد ولا للاعتبار قال صاحب الدرة وأما حديث أنس من أخلاق النبوة وضع اليمين والشمال تحت السرة الذي قال فيه العيني إنه رواه بن حزم فسنده غير معلوم لينظر فيه هل رجاله مقبولون أم لا 
இந்தச் செய்தியை இப்னு ஹஸ்மு அவர்கள் எவ்வித அறிவிப்பாளர் தொடருமின்றி குறிப்பிடுகிறார். இதன் அறிவிப்பாளர்கள் யார் என்பது பற்றி எந்த விபரத்தையும் அவர் கூறவில்லை. இதை அறிவித்த நபித்தோழர் யார்? அவரிடம் கேட்டவர் யார்? நூலாசிரியர் வரை உள்ள அறிவிப்பாளர் பட்டியல் என்ன? என்பதை ஹனபிகள் எடுத்துக் காட்டுவதில்லை. அறிவிப்பாளர் இல்லாமல் கூறப்படும் எந்தச் செய்தியும் ஆதாரமாகக் கொள்ளத் தக்கதல்ல என்பதில் ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர். துஹ்ஃபதுல் அஹ்வதீ அறிவிப்பாளர் தொடருடன் எடுத்துக் காட்டுங்கள் என்று கேட்ட பிறகும் ஹனஃபிகள் இது வரை எடுத்துக் காட்டவில்லை. 
நான்காவது ஆதாரம்
مصنف ابن أبي شيبة ج: 1 ص: 343 حدثنا وكيع عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم يضع يمينه على شماله تحت السرة
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலது கையை இடது கையின் மேல் வைத்து அதைத் தொப்புளுக்குக் கீழே வைத்ததை நான் பார்த்தேன். அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 1/343 
இதன் அறிவிப்பாளரான வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) நம்பகமானவர். அவர்கள் கூறியதாக அறிவிக்கும் அவர்களது மகன் அல்கமாவும் நம்பகமானவர். அல்கமா கூறியதாக அறிவிக்கும் மூஸா பின் உமைர் என்பாரும் நம்பகமானவர். அவர் கூறியதாக அறிவிக்கும் வகீவு என்பாரும் நம்பகமானவர். அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாக உள்ளதால் இதை ஆதாரமாகக் கொண்டு தொப்புளுக்குக் கீழே தான் கைகளைக் கட்ட வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். மேற்கண்ட அறிவிப்பாளர் வரிசையுடன் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த வாதம் ஏற்கத்தக்க வாதம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா எனும் நூலின் பழைய பிரதிகளில் தொப்புளுக்குக் கீழ் என்ற வாசகம் இல்லாமல் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொப்புளுக்குக் கீழ் என்ற வாசகம் புதிதாக அச்சிடப்பட்ட ஒரு பிரதியில் மட்டுமே உள்ளது. பழைய பிரதிகளில் இல்லாமல் புதிய பிரதிகளில் மட்டும் இப்படி அச்சிடப்பட்டால் நிச்சயம் அது பிழையாகவோ இடைச் செறுகலாகவோ தான் இருக்க முடியும். பழைய பிரதிகளில் இல்லாத ஒரு செய்தி புதிய பிரதிகளில் மட்டும் எப்படி இடம் பெற்றது என்று ஹனஃபி மத்ஹப் அறிஞர்களே ஆய்வு உண்மையைக் கண்டு பிடித்துள்ளனர். 
அந்த உண்மை இது தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலது கரத்தை இடது கரத்தின் மீது வைத்ததை நான் பார்த்தேன் என்று வாயில் பின் ஹுஜ்ர் கூறுகிறார். இப்ராஹீம் என்பார் தனது வலது கரத்தை இடது கரத்தின் மீது தொப்புளுக்குக் கீழே வைத்தார். இப்படித் தான் முஸன்னஃப் இப்னு அபீ ஷைபாவின் பழைய எல்லாப் பிரதிகளிலும் உள்ளது. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) தொடர்புடைய முதல் ஹதீஸில் தொப்புளுக்குக் கீழ் என்ற சொல் இல்லை. ஆனால் இப்ராஹீம் என்பார் தொடர்புடைய செய்தியில் தொப்புளுக்குக் கீழ் என்ற சொல் உள்ளது. எடுத்து எழுதியவர்கள் அல்லது கம்போஸ் செய்தவர்கள் இரண்டாவது செய்தியில் உள்ள எல்லா வார்த்தைகளையும் விட்டுவிட்டு தொப்புளுக்குக் கீழ் என்பதை மட்டும் முதல் செய்தியுடன் சேர்த்து இரண்டையும் ஒரு செய்தியாக்கி விட்டனர். அதாவது கீழ்க்கண்டவாறு தான் முஸன்னஃப் இப்னு அபீ ஷைபாவின் பழைய பிரதிகளில் உள்ளது.
 مصنف ابن أبي شيبة ج: 1 ص: 343 3938 حدثنا وكيع عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة 3939 حدثنا وكيع عن ربيع عن أبي معشر عن إبراهيم قال يضع يمينه على شماله في الصلاة تحت السرة 
இவ்வ்ரு செய்தியையும் சிலவார்த்தைகளை விட்டு விட்டு ஒரு செய்தியாக்கி பின்வருமாறு ஒரு புதிய பதிப்பில் அச்சிட்டு விட்டனர்.
مصنف ابن أبي شيبة ج: 1 ص: 343 حدثنا وكيع عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم يضع يمينه على شماله تحت السرة 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலது கையை இடது கையில் வைத்தர்ர்கள் என்பது மட்டுமே சரி. தொப்புளுக்குக் கீழ் என்ற வார்த்தை அடுத்த செய்தியில் உள்ளதாகும் என்பதை நேர்மையான பார்வையுடைய ஹனஃபி மத்ஹப் அறிஞர்களே கண்டு பிடித்து தெளிவுபடுத்தி விட்டனர். துஹ்ஃபதுல் அஹ்வதீ எனும் நூலில் ஹனஃபி மத்ஹப் அறிஞர்களின் கூற்றை எடுத்துக் காட்டுகிறார்.

முஸன்னப் இப்னு அபீஷைபா என்று நூலின் பழைய பிரதிகளில் மேற்கண்டவாறு எந்த ஹதீஸும் இல்லை. ஒரே ஒரு அச்சுப் பிரதியில் மட்டுமே மேற்கண்டவாறு அச்சிடப்பட்டுள்ளது. முஸன்னப் இப்னு அபீஷைபாவின் பல்வேறு பிரதிகளில் இல்லாத இந்த ஹதீஸ் பிற்காலத்தில் அச்சிடப்பட்ட பிரதியில் மட்டும் எப்படி வந்தது என்பதை ஆராய்ந்த அறிஞர்கள் - குறிப்பாக ஹனபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் - இது இடைச் செருகல் என்பதைத் தக்க காரணத்துடன் விளக்கியுள்ளனர். முஹம்மத் ஹயாத் ஸின்தீ என்ற ஹனபி மத்ஹப் அறிஞர் இதற்காகவே ஒரு சிறு நூலை எழுதியுள்ளார். அந்த நூலை மேற்கோள் காட்டி துஹ்பதுல் அஹ்வதி என்ற நூலில் அதன் ஆசிரியர் விளக்கியுள்ளார். 
تحفة الأحوذي ج: 2 ص: 75 قال الحافظ القاسم بن قطلوبغا في تخريج أحاديث الاختيار شرح المختار هذا سند جيد وقال الشيخ أبو الطيب المدني في شرح الترمذي هذا حديث قوي من حيث السند وقال الشيخ عابد السندي في طوالع الأنوار رجاله ثقات قلت إسناد هذا الحديث وإن كان جيدا لكن في ثبوت لفظ تحت السرة في هذا الحديث نظرا قويا قال الشيخ محمد حياة السندي في رسالته فتح الغفور في زيادة تحت السرة نظر بل هي غلط منشؤه السهو فإني راجعت نسخة صحيحة من المصنف فرأيت فيها هذا الحديث بهذا السند وبهذه الألفاظ إلا أنه ليس فيها تحت السرة وذكر فيها بعد هذا الحديث أثر النخعي ولفظه قريب من لفظ هذا الحديث و في اخره في الصلاة تحت السرة فلعل بصر الكاتب زاغ من محل إلى محل اخر فأدرج لفظ الموقوف في المرفوع انتهى كلام الشيخ محمد حياة السندي وقال صاحب الرسالة المسماة بالدرة في إظهار غش نقد الصرة وأما ما استدل به من حديث وائل الذي رواه ابن أبي شيبة فهذا حديث فيه كلام كثير قال وروى هذا الحديث ابن أبي شيبة وروى بعده أثر النخعي ولفظهما قريب وفي اخر الأثر لفظ تحت السرة واختلف نسخه ففي بعضها ذكر الحديث من غير تعيين محل الوضع مع وجود الأثر المذكور وفي البعض وقع الحديث المرفوع بزيادة لفظ تحت السرة بدون أثر النخعي فيحمل أن هذه الزيادة منشؤها ترك الكاتب سهوا نحو سطر في الوسط وأدراج لفظ الأثر في المرفوع كما يحتمل سقوط لفظ تحت السرة في النسخة المتقدمة لكن اختلاف النسختين على هذا الوجه يؤذن بإدخال الأثر في المرفوع انتهى كلام صاحب الدرة قلت ما قاله هؤلاء الأعلام يؤيده أن هذا الحديث رواه أحمد في مسنده بعين سند ابن أبي شيبة وليست فيه هذه الزيادة ففي مسند أحمد حدثنا وكيع حدثنا موسى بن عمير العنبري عن علقمة بن وائل الحضرمي عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم واضعا يمينه على شماله في الصلاة انتهى ورواه الدارقطني أيضا بعين سند ابن أبي شيبة وليس فيه أيضا هذه الزيادة قال في سننه حدثنا الحسين بن إسمعيل وعثمان بن جعفر بن محمد الأحول قالا نا يوسف بن موسى نا وكيع نا موسى بن عمير العنبري عن علقمة بن وائل الحضرمي عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم واضعا يمينه على شماله في الصلاة انتهى ويؤيده أيضا أن ابن التركماني شيخ الحافظ الزيلعي ذكر في الجوهر النقي لتأييد مذهبه حديثين ضعيفين حيث قال قال ابن حزم وروينا عن أبي هريرة قال وضع الكف على الكف في الصلاة تحت السرة وعن أنس قال ثلاث من أخلاق النبوة تعجيل الافطار وتأخير السحور ووضع اليد اليمنى على اليسرى في الصلاة تحت السرة انتهى ونقل قبل هذين الحديثين أثر أبي مجلز عن مصنف ابن أبي شيبة حيث قال قال ابن أبي شيبة في مصنفه ثنا يزيد بن هارون نا الحجاج بن حسان سمعت أبا مجلز أو سألته قلت كيف أضع قال يضع باطن كف يمينه على ظاهر كف شماله ويجعلهما أسفل من السرة انتهى ولم ينقل ابن التركماني عن مصنف ابن أبي شيبة غير هذا الأثر فالظاهر أنه لم يكن في حديث وائل الذي أخرجه ابن أبي شيبة زيادة تحت السرة فإنه لو كان هذا الحديث فيه مع هذه الزيادة لنقله ابن التركماني إذ بعيد كل البعد أن يذكر ابن التركماني لتأييد مذهبه حديثين ضعيفين وينقل عن مصنف ابن أبي شيبة أثر أبي مجلز التابعي ولا ينقل عنه حديث وائل المرفوع مع وجوده فيه بهذه الزيادة ومع صحة إسناده 
முஸன்னப் இப்னு அபீஷைபா நூலின் சரியான மூலப் பிரதியை நான் பார்வையிட்டேன். அதில் கீழ்க்கண்டவாறு இரண்டு செய்திகள் அடுத்தடுத்து உள்ளன. இவ்விரு செய்திகளின் தமிழாக்கம்: 1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலது கையை இடது கையின் மீது வைத்ததை நான் பார்த்தேன் என்று வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) கூறுகிறார். 2. இப்ராஹீம் (நகயீ) அவர்கள் தமது வலது கையை இடது கையின் மீது வைத்து தொப்புளுக்குக் கீழே வைத்தார். மேற்கண்ட இரண்டு செய்திகளையும் கவனியுங்கள். முதல் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்புடையது. அச்செய்தியில் தொப்புளுக்குக் கீழே என்ற வார்த்தை இல்லை. இரண்டாவது செய்தியில் தொப்புளுக்குக் கீழே என்ற வார்த்தை உள்ளது. ஆயினும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொடர்புடையது அல்ல. இப்ராஹீம் நகயீ என்பார் தொப்புளுக்குக் கீழே கை வைத்தார் என்று தான் கூறப்பட்டுள்ளது. இவர் நபித்தோழர் கூட அல்லர். முஸன்னப் இப்னு அபீஷைபாவில் மேற்கண்டவாறு தான் உள்ளது. ஆயினும் பிரதி எடுத்த யாரோ ஒருவர், ஒரு வரியை விட்டு விட்டு, இரண்டாவது அறிவிப்பில் உள்ள தொப்புளுக்குக் கீழ் என்பதை முதல் செய்தியுடன் சேர்த்து எழுதி விட்டார். இப்ராஹீம் நகயீயின் செயல் நபிகள் நாயகத்தின் செயலாகக் காட்டப்பட்டு விட்டது. இது, எடுத்து எழுதியவரின் தவறுதலால் ஏற்பட்டது என்று ஹயாத் ஸின்தீ விளக்கியுள்ளார். அத்துர்ரா என்று நூலாசிரியர் தனது நூலில் கீழ்க்கண்டவாறு கூறுவதாகவும் துஹ்பதுல் அஹ்வதி நூலாசிரியர் விளக்குகிறார். முஸன்னப் இப்னு அபீ ஷைபா நூலின் எந்தப் பிரதியில், தொப்புளுக்குக் கீழேஎன்ற வார்த்தை நபிகள் நாயகத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதோ அந்தப் பிரதியில் இப்ராஹீம் நகயீ தொடர்பான செய்தி இல்லை. எந்தப் பிரதியில் இப்ராஹீம் நகயீ தொடர்பான செய்தி உள்ளதோ அதில், தொப்புளுக்குக் கீழேஎன்ற வார்த்தை நபிகள் நாயகத்துடன் தொடர்புபடுத்தப்படவில்லை.

இப்ராஹீம் நகயீயின் செயலாகத் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு செய்திகளை வெட்டி ஒட்டியதால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்று அத்துர்ரா நூலாசிரியர் விளக்குகிறார். இது தவிர முஸன்னப் இப்னு அபீஷைபாவில் உள்ள செய்தி அதே அறிவிப்பாளர் தொடருடன் முஸ்னத் அஹ்மதிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
مسند أحمد بن حنبل - (ج 4 / ص 316) 18866 - حدثنا عبد الله حدثني أبي ثنا وكيع ثنا موسى بن عمير العنبري عن علقمة بن وائل الحضرمي عن أبيه قال : رأيت رسول الله صلى الله عليه و سلم واضعا يمينه على شماله في الصلاة 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இடது கை மீது வலது கையை வைத்தார்கள் என்று மட்டும் தான் உள்ளது. தொப்புளுக்குக் கீழே என்ற வாசகம் முஸ்னத் அஹ்மதில் இல்லை. மேற்கண்ட இதே செய்தி, இதே அறிவிப்பாளர் வரிசையுடன் தாரகுத்னீயிலும் பதிவாகியுள்ளது. 
سنن الدارقطنى - (ج 3 / ص 224) 1111 - حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ وَعُثْمَانُ بْنُ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ الأَحْوَلُ قَالاَ حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا مُوسَى بْنُ عُمَيْرٍ الْعَنْبَرِىُّ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ الْحَضْرَمِىِّ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَاضِعًا يَمِينَهُ عَلَى شِمَالِهِ فِى الصَّلاَةِ. 
தாரகுத்னீயிலும் தொப்புளுக்குக் கீழேஎன்ற வாசகம் இல்லை. மேலும் ஹனபி மத்ஹபின் நிலைபாடுகளை ஆதரித்து எழுதுவதில் வல்லவரான இப்னுத் துர்குமானி என்பார், தமது அல்ஜவ்ஹருன்னகீ என்ற நூலில் தொப்புளுக்குக் கீழே கையைக் கட்ட வேண்டும் என்பதையும் ஆதரித்து எழுதியுள்ளார். அதில் நாம் மேலே சுட்டிக்காட்டிய அபூஹுரைரா (ரலி) அவர்கள் தொடர்பான செய்தியையும், மூன்றாவது ஆதாரமாக நாம் குறிப்பிட்டுள்ள செய்தியையும் அடிப்படையாக வைத்து, தொப்புளுக்குக் கீழே கை கட்டுவதை நியாயப்படுத்தியுள்ளார். மேலும் தொப்புளுக்குக் கீழே கை கட்ட வேண்டும் என்று அபூமிஜ்லஸ் என்பார் (தாபியீ) கூறியதாக முஸன்னப் இப்னு அபீஷைபாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் தொடர்பில்லாத அந்தச் செய்தியையும் இப்னுத் துர்குமானி ஆதாரமாகக் காட்டியுள்ளார். முஸன்னப் இப்னு அபீஷைபாவின் பழைய பிரதிகளில், தொப்புளுக்குக் கீழே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளைக் கட்டியதாக ஹதீஸ் இருந்தால் அதை விட்டு விட்டு, பலவீனமான இரண்டு செய்திகளை இப்னுத் துர்குமானி ஆதாரமாகக் காட்டி தமது மத்ஹபை நிலைநாட்டி இருக்க மாட்டார். மேலும் முஸன்னப் இப்னு அபீஷைபா நூலில் தனக்கு ஆதாரமாக ஏதாவது கிடைக்கிறதா? என்று தேடிப் பார்த்தவருக்கு, அபூமிஜ்லஸ் என்பாரின் சொந்தக் கூற்று தான் கிடைத்தது.
எனவே அதை எடுத்துக் காட்டியுள்ளார். எனவே, தொப்புளுக்குக் கீழே என்ற வார்த்தை முஸன்னப் இப்னு அபீஷைபாவின் மூலப் பிரதிகளிலும், பழைய பிரதிகளிலும் இல்லை. அது பிற்காலத்தில் வெட்டி ஒட்டி தயாரிக்கப்பட்டுள்ளது என்பது மேலும் உறுதியாகின்றது. மேற்கண்ட அந்த நான்கு ஆதாரங்களைத் தான் தொப்புளுக்குக் கீழே கை கட்ட வேண்டும் என்போர் கூறுகின்றனர். 1. முதல் ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸ் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் மூலம் அறிவிக்கப்படுவதால் அது ஆதாரமாகாது. 2. இரண்டாவது ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸ் அதே நபர் மூலம் அறிவிக்கப்படுவதாலும், அபூஹுரைராவின் சொந்தக் கூற்று என்பதாலும் அதுவும் ஆதாரமாகாது. 4. மூன்றாவது ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸ் எந்த அறிவிப்பாளர் தொடரும் இல்லாததால் அதுவும் ஆதாரமாக ஆகாது. 3. நான்காவது ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸ் வெட்டி ஒட்டி உருவாக்கப்பட்ட கற்பனைச் செய்தியாக உள்ளதால் இதுவும் ஆதாரமாக ஆகாது.

நெஞ்சில் கைகளைக் கட்டுதல் தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டுதல் பற்றிய ஹதீஸ்கள் எதுவுமே ஆதாரமாக இல்லாததால் அதை நாம் நடைமுறைப்படுத்தக் கூடாது. அப்படியானால் நெஞ்சில் கைகளைக் கட்டுவது தொடர்பான ஹதீஸ்கள் மட்டும் ஆதாரமாகவுள்ளதா? என்று மாற்றுக் கருத்துடையவர்கள் கேட்கின்றனர். நெஞ்சில் கை கட்டுவது பற்றிய ஹதீஸிலும் பலவீனங்கள் உள்ளதாக அவர்கள் பட்டியல் போட்டுள்ளனர். அந்த ஹதீஸையும் அது குறித்து மாற்றுக் கருத்துடையோர் எழுப்பும் விமர்சனங்களையும் நாம் விரிவாக ஆய்வு செய்வோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும் ....         
----- onlinepj.com ----

9/05/2015

சஜ்தா ஓர் விளக்கம்

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள்! என்று சொன்ன போது இப்லீஸித் தவிர மற்ற அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அவன் மறுத்து அகந்தை பேசினான். நிராகரிப்பவர்களில் ஒருவனாக அவன் ஆனான். (அல்குர்ஆன்2:34)
இந்த வசனத்தில் கூறப்படும் செய்தி எல்லா  முஸ்லிம்களுக்கும்  தெரிந்த ஒன்றே. மலக்குகள் எனும் வானவர்கள் முதல் மனிதராகிய  ஆதம் (அலை)  அவர்களுக்கும்  ஸஜ்தா செய்ததாக இந்த வசனம் கூறுகின்றது. இந்தக் கருத்து திருகுரானிலும் இன்னும் அனேக இடங்களில் கூறப்படுகின்றது.

15:30, 37:73, 7:11, 17:61. 18:50, 20:11 ஆகிய வசனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த வசனங்கள் பற்றி ஏகத்துவவாதிகளுக்கு இடையே ஒரு குழப்பம். இறைவனுக்கு மட்டுமே ஸஜ்தா செய்ய வேண்டும் எனும் போது வானவர்களும் கூட இறைவனுக்கு மட்டுமே ஸஜ்தா செய்ய கடமைப்பட்டு இருக்கும் போது அவர்கள் ஏன் ஆதமுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும்? அவ்வாறு செய்யுமாறு இறைவன் ஏன் கட்டளையிட வேண்டும்? இந்தக் கேள்விகளால் அவர்களுக்கிடையே குழப்பம்.

ஏகத்துவத்துக்கு எதிரானவர்களுக்கோ இந்த வசனம் ஒரு வரப்பிரசாதம். ஆதம் அவர்களுக்கு மலக்குகள் ஸஜ்தா செய்ததால் பெரியவர்களுக்கு மகான்களுக்கு சாதாரணமானவர்கள் ஸஜ்தா செய்யலாம் என வாதிடுவோருக்கு இந்த வசனமும் இந்தக் கருத்திலமைந்த  ஏனைய வசனங்களும் மிகப் பெரும் சான்றுகளாகத்  தெரிகின்றன.

இரண்டிலும் சேராதவர்களுக்கோ தடுமாற்றம்! எங்கே சாய்வது என்று தீர்மானிக்க முடியாதது அவர்களது நிலைமை. இஸ்லாத்திலேயே முரண்பாடுகள் உள்ளனவோ என்ற எண்ணத்தைக் கூட சிலர் இதனால் தங்கள் அடி மனதில் புதைத்து வைத்திருக்கின்றார்கள். இதன் காரணமாக இந்த வசனம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகி விடுகின்றது.
ஆதம்(அலை) அவர்களுக்கு வானவர்கள் ஸஜ்தா செய்தனர்” என இங்கே கூறப்படுகின்றது. ‘ஸஜ்தா’ என்றதும் நெற்றியைத் தரையில் வைத்து பணிவது தான் நமது நினைவுக்கு வரும். ஸஜ்தா என்பதை இந்த ஒரு பொருளில் தான் நாம் பயன்படுத்தி வருகின்றோம் என்பது தான் இதற்குக் காரணம்.
‘ஸஜ்தா’ என்பதற்கு நாம் நினைக்கின்றது போல் நெற்றி தரையில் படுமாறு பணிதல், என்று அர்த்தம் இருப்பது போலவே அதற்கு வேறு சில அர்த்தங்களும் உள்ளன. இதற்கான சான்றுகளும் திருக்குர் ஆனிலிருந்தே நமக்கு கிடைக்கின்றன. முதலில் ‘ஸஜ்தா’வுக்குரிய ஏனைய அர்த்தங்களை அறிந்துவிட்டு இந்த இடத்தில் எது பொருத்தமான பொருள் என்பதையும் தக்க சான்றுகளுடன் விளங்குவோம்.
மூசா(அலை)  அவர்களின்  சமுதாயத்தை  ஒரு  நகருக்குள்  பிரவேசிக்குமாறு  இறைவன்  கூறும் போது, “ஸஜ்தா செய்தவர்களாக இந்த வாசல் வழியாக நுழையுங்கள்” என்று இறைவன் கட்டளையிட்டான். இந்தக் கட்டளை 2:58,4:154,7:161 ஆகிய வசனங்களில் கூறப்படுகின்றது.

இந்த இடத்தில் பரவலாக நாம் விளங்கி வைத்திருக்கின்றவாறு பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் இந்தப் பொருளின்படி ஸஜ்தா செய்தால் உள்ளே செல்லுங்கள் என்றே இதற்கு பொருள் கொள்ள முடியும். பணிவுக்கும், அடக்கத்துக்கும் ‘ஸஜ்தா’ எனும் பதத்தை  இறைவன் இங்கே       பயன்படுத்தியிருக்கிறான்.
மரங்களும், செடி கொடிகளும் (அவனுக்கு) ஸஜ்தா செய்கின்றன”. (அல்குர்ஆன் 55:6)
இந்த வசனத்தில் மரம் செடிகள் ஸஜ்தா செய்கின்றன என்று இறைவன் கூறுகிறான். இந்த இடத்தில் முதலாவது அர்த்தமும் இரண்டாவது அர்த்தமும் கொள்ள முடியாது. ஏனெனில் மரம் செடிகளுக்கு நெற்றி கிடையாது அதை தரையில் வைப்பதென்பதும் கிடையாது.முதலாவது அர்த்தம் கொள்ள இந்த இடத்தில் வழியே இல்லை. இரண்டாம் அர்த்தம் செய்யவும் வழியில்லை. ஏனெனில் மரம் செடிகளிடம் பெருமையையும்,பணிவையும் கற்பனை செய்ய முடியாது, அவை எவ்வாறு இருக்க வேண்டுமென இறைவன் விதித்திருக்கின்றானோ அவ்வாறு அவை நடக்கின்றன என்பதே இதன் பொருளாக இருக்க முடியும். அவை ஸஜ்தா செய்கின்றன என்றால் இறைவன் என்ன நோக்கத்தில் அதை படைத்துள்ளானோ அதன்படி அவை இயங்குகின்றன என்பதே பொருள்.

அல்லாஹ் படைத்திருப்பவைகளை அவர்கள் உற்று நோக்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும்,இடமுமாக இறைவனுக்காக ஸஜ்தா செய்தவையாக சாய்கின்றன. மேலும் அவை அல்லாஹ்வுக்கு பணிகின்றன. (அல்குர் ஆன் 16:48) வலமும் இடமுமாக பொருள்களின் நிழல்கள் சாய்வதை இங்கே இறைவன் ஸஜ்தா என்று குறிப்பிடுகிறான்.அதை தொடர்ந்து
வானங்களிலிலுள்ளவையும், பூமியில் உள்ளவையும், ஜீவராசிகளூம் மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்கின்றனர். (அல்குர்ஆன் 16:49)
வானம், பூமியில் உள்ள யாவும்,சகல ஜீவராசிகளூம் இறைவனுக்கு ஸஜ்தா செய்கின்றன என்று இறைவன் இங்கே குறிப்பிடுகின்றான்.நெற்றியை நிலத்தில் வைத்துப் பணிவது என்ற அர்த்தத்தை இங்கே இடம் பெற்ற ஸஜ்தா எனும் சொல்லுக்கு கொடுக்க முடியாது.

பதினோரு நட்சத்திரங்களூம், சூரியனும் சந்திரனும் எனக்கு ஸஜ்தா செய்யக் கூடியவையாக நான் கனவு கண்டேன். (அல்குர்ஆன் 12:4)
யூசுப் நபியவர்கள் இவ்வாறு கனவு கண்டதாக அல்லாஹ் கூறுகிறான். சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களூம் நாம் நினைக்கின்ற அர்த்தத்தில் ஸஜ்தா செய்திருக்க முடியாது. எனெனில் ஸஜ்தாவுக்குரிய உறுப்புகள் அவற்றுக்குக் கிடையாது இந்தச் சான்றுகளிலிருந்து ஸஜ்தாவுக்குப் பல பொருள்கள் இருப்பதை நாம் அறிய முடிகின்றது.
அப்படியானால் இந்த இடத்தில் ஆதம் [அலை] அவர்களூக்கு மலக்குகள் ஸஜ்தா செய்ததாகக் கூறப்படும் இடத்தில் ஸஜ்தாவுக்கு எந்தப் பொருள் கொள்ள வேண்டும்.தொழுகையில் நாம் செய்கின்ற இந்த ஸஜ்தாவையே அவர்கள் செய்தார்களா? அவ்வாறு பொருள் கொள்ள முடியுமா?
நிச்சயமாக அவ்வாறு பொருள் கொள்ள முடியாது. இந்த ஸஜ்தாவை மலக்குகள் இறைவனைத் தவிர வேறு எவருக்கும் செய்ய மாட்டார்கள் என்று திருக்குர்ஆனே தெளிவுபடுத்தி விடுகின்றது.
உம்முடைய இறைவனிடத்தில் இருப்பவர்கள் (வானவர்கள்) அவனை வணங்குவதைவிட்டும் பெருமையடிப்பதில்லை. அவனைத் துதிக்கின்றனர். மேலும் அவனுக்கே ஸஜ்தா செய்கின்றனர். (அல்குர்ஆன் 7:206)
இந்த வசனத்தில் ‘லஹுயஸ்ஜுதூன்’ என்று இறைவன்  குறிப்பிடுகிறான். ‘யஸ்ஜுதூன லஹு’ என்பதற்கும் ‘லஹுயஸ்ஜுதூன்’ என்பதற்க்கும் வித்தியாசம் உள்ளது. ‘யஸ்ஜுதூன லஹு’ என்று சொன்னால் ‘அவனுக்கு ஸஜ்தா செய்கின்றனர்’ என்பது பொருள் என்று சொன்னால்  ‘அவனுக்கே ஸஜ்தா செய்கின்றனர்’ என்பது பொருள்.அதாவது வேறு எவருக்கும் ஸஜ்தா செய்ய மாட்டார்கள் என்பது இதன் கருத்து.

மலக்குகள் இறைவனுக்கு ஸஜ்தா செய்வதுடன் வேறு எவருக்கும் ஸஜ்தா செய்யாமலிருப்பார்கள் என்று அவர்களைப் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான். இதிலிருந்து அவர்கள் இறைவனுக்குச்  செய்யப்படும் ஸஜ்தாவை ஆதமுக்கு செய்திருக்க மாட்டார்கள் என்பதைத் தெளிவாக விளங்கலாம் இந்த வசனத்திற்கு முரண்படாத வகையிலேயே 2:34 வசனத்தையும் நாம் விளங்க வேண்டும்.
அப்படியானால் மலக்குகள் ஸஜ்தா செய்தனர் என்ற அந்த வசனத்தின் பொருள் என்ன? ஆதம்  (அலை)அவர்களைப் படைக்க இறைவன் விரும்பி மலக்குகளிடம் சொன்ன போது அவர்கள் அதை ஆட்சேபித்தார்கள். அவரைவிட தாங்களே உயர்ந்தவர்கள் எனவும் கூறினார்கள்.அல்குர்ஆனின் 2:30 வசனத்திலிருந்து இதை அறியலாம். மனிதனைவிடத் தங்களை உயர்ந்தவர்கள் என்று அவர்கள் கருதியிருந்ததை தவறென்று காட்டுவதற்காக அவர்களைவிட ஆதம்(அலை) அவர்கள் தமது ஞானத்தை வெளிப்படுத்தியபின், அவருடைய உயர்வை அவருக்கு இருக்கும் சிறப்பை மலக்குகள் ஒப்புக் கொண்டனர்.
மலக்குகள் ஸஜ்தா செய்தனர் என்றால் ஆதம்(அலை) தங்களை விட அறிவில் சிறந்தவர் என்று அவரது உயர்வை ஒப்புக் கொண்டார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் பொருள் கொள்ளக் காரணம் அல்குர்ஆன் 7:20ம் வசனத்தில் மலக்குகள் இறைவனைத்தவிர வேறு எவருக்கும் (சிரம்பணியும்)ஸஜ்தாவை செய்ய மாட்டார்கள் என்று இறைவன் குறிப்பிடுவதானாலேயே.
மலக்குகள் ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்தார்கள் என்பதற்கு தவறான அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டு போலி ஷைகுகள் தங்கள் முரீதுகளைக் காலடியில் விழச் செய்வதற்கும், ஸஜ்தா செய்ய வைப்பதற்கும் இந்த வசனத்தில் எந்தச் சான்றுமே கிடையாது.
ஸஜ்தா என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் கொள்ள வேண்டும் என்பது இப்போது தெளிவாகி விட்டது. ஒரு வாதத்துக்காக மலக்குகள் ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்தது நாம் தொழுகையில் ஸஜ்தா செய்வது போன்றதே என்பதை எற்றுக் கொண்டாலும் அவர்களுக்கு சாதகமாக இதில் எந்தச் சான்றும் இல்லை என்பதை உணர வேண்டும். அவர்கள் செய்யும் அர்த்தம் சரி என்று வைத்துக் கொண்டாலும் அதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
மலக்குகளும், மனிதர்களும் வெவ்வேறானவர்கள். மனிதர்களுக்கு இருப்பது போன்ற சட்டதிட்டங்கள் மலக்குகளுக்குக் கிடையாது. மலக்குகள் செயததை எல்லாம் மனிதர்களும் செய்ய முடியாது. இது முதலாவது வித்தியாசம்.

ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு அல்லாஹ் கட்டளை யிட்டதனாலேயே மலக்குகள் ஸஜ்தாச் செய்தனர். சுயமாக அவர்கள் செய்யவில்லை. ஆனால் அல்லாஹ், ஷைகுகளுக்கும், பெரியார்களுக்கும் ஸஜ்தாச் செய்யுமாறு நமக்குக் கட்டளையிடவில்லை. மாறாக அவனது திருத்தூதர் மூலமாக இதற்கு இறைவன் தடையும் விதிக்கின்றான்.
நான் ‘ஹியாரா’ எனும் பகுதிக்குச் சென்றேன். அங்குள்ள மக்கள் தங்கள் தலைவர்களுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன்”. நபி(ஸல்) அவர்கள்தாம் ஸஜ்தா செய்யப்பட மிகவும் தகுதி வாய்ந்தவர்கள் என்று (எனக்குள்) சொல்லிக் கொண்டேன். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்கு ஸஜ்தாச் செய்ய உங்களுக்கு மிகவும் தகுதி உண்டு என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் என் அடக்கஸ்தலத்தின் அருகே சென்றால் நீ அதற்கு ஸஜ்தா செய்வாயா? என்று கேட்டார்கள். நான் ‘மாட்டேன்’ என்றேன். (அதே போல் உயிருடன் இருக்கும் போதும்) செய்யாதே! ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்யுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளது கணவனுக்கு அவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்; என்று நபி(ஸல்) கூறினார்கள்”. கைஸ் இப்னு ஸஃது(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபுதாவுத், தாரிமீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இதே கருத்து முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவிப்பதாக இப்னு மாஜாவிலும் இடம் பெற்றுள்ளது. அல்லாஹ்வின் தூதருக்கு கூட ஸஜ்தா செய்ய அனுமதியில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

ஆதம்(அலை) அவர்கள் மலக்குகளுக்கு கற்றுத்தரும் ஆசானாக ஆனதால் அவர்கள் ஸஜ்தாச் செய்தனர். எனவே இந்த அடிப்படையில் ஞானத்தை கற்றுத்தரும் ஷைகுகளுக்கு ஸஜ்தா செய்யலாம் என்ற இந்த ஷைகுகளில் வாதத்திற்கு இந்த ஹதீஸ் மறுப்பாக அமைந்துள்ளதை உணரலாம்.

நபி(ஸல்) அவர்கள் தாம் அஞ்ஞானத்தில் இருந்த மக்களுக்கு சரியான ஞானத்தைப் போதித்தவர்கள். அவர்களை விட சிறப்பாக உலகில் எவருமே போதிக்க அனுமதி கேட்ட நபித்தோழருக்கு அனுமதி மறுக்கின்றார்கள்.இந்த ஷைகுமார்கள் நபி(ஸல்) அவர்களை விடவும் தங்களை உயர்ந்தவர்களாக கருதுகின்றார்கள் என்பதைத்தான் இவர்களின் போக்கு காட்டுகின்றது.
நபி(ஸல்) அவர்கள் கைஸர், கிஸ்ரா,அலெக்ஸான்ரிய மன்னர் ஆகியோரிடம் தூதர்களை அனுப்பினார்கள். என்னை நஜ்ஜாஷி மன்னரிடம் அனுப்பினார்கள். நான் நஜ்ஜாஷி மன்னரிடம் வந்தபோது சிறிய வாசல் வழியாக குனிந்தவர்களாக மக்கள் உள்ளே செல்வதைக் கண்டேன். (அரசரைச் சந்திக்க செல்லும்) அந்த வாசல் குனிந்து செல்லும் அளவுக்கு உயரம் குறைந்ததாகவே அமைக்கப்பட்டிருந்தது.
“நான் உள்ளே நுழையும் போது முதுகுபக்கம் திரும்பிக் குனிந்தவனாக உள்ளே சென்று நிமிர்ந்தேன். அபீஸீனிய மக்கள் இதைக் கண்டு திடுக்குற்றனர். என்னைக் கொல்ல அவர்கள் நாடினார்கள். நாங்கள் நுழைந்தது போலவே நீரும் ஏன் நுழையவில்லை? என்று என்னிடம் கேட்டனர்” நாங்கள் எங்கள் நபிக்கே இவ்வாறு (மரியாதை) செய்ய மாட்டோம். இவ்வாறு செய்வது (கூடுமென்றால்) நபி(ஸல்) அவர்களுக்கே தகுமாகும் என்று நான் கூறினேன்” என்று அம்ரு இப்னு உமய்யா அள்ளமீர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் தப்ரானியின் அவ்ஸத் நூலில் நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது
அரசரை நோக்கிச் செல்லும் வாசல் உயரம் குறைவாக அமைக்கப்பட்டிருந்தால் அதில் குனிந்து தான் செல்லவேண்டும். அரசருக்காக் குனிந்ததாக ஆகிவிடுமோ என்று அம்ரு அவர்கள் முதுகைக்காட்டிக் குனிந்து உள்ளே சென்று நிமிர்ந்தார் என்றால் நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தவர் எவ்வாறு சுயமரியாதை மிக்கவர்களாக உருவாக்கப் பட்டிருந்தார்கள் என்பதை விளங்கலாம்.
தனி மனிதனுக்காக குனிவதும் கூட கூடாது என்றால் ஒரு மனிதரின் காலில் விழுந்து ஸஜ்தா செய்வது எப்படி அனுமதிக்கப்படும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்கே இவ்வாறு குனிந்து மரியாதை செய்யமாட்டோம் என்ற அம்ரு(ரலி) அவர்களின் கூற்றும் சிந்திக்கத்தக்கது.
ஆக ஆதம்(அலை) அவர்களுக்கு மலக்குகள் செய்த ஸஜ்தாவுக்கு நாம் சாதாரணமாக நினைக்கும் அர்த்தம் அல்ல. அதுதான் அர்த்தம் என்று வைத்து கொண்டாலும் மனிதர்களின் கால்களில் விழவோ அவர்களுக்காக குணிந்து மரியாதை செய்யவோ நமக்கு அனுமதி இல்லை என்பதையாவது சம்பந்தப் பட்டவர்கள் உணர வேண்டும். இந்த வசனத்தை கொண்டு மக்களை ஏமாற்றி அடிமைப் படுத்த நினைக்கும் முரீது வியாபாரிகளிடம் ஜாக்கிரிதையாக நாம் இருக்க வேண்டும்.
--- readislam.net----

இதுபற்றிய மேலும் சில தலைப்புகள் 






பெரியார் கால்களை முத்தமிட  மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது என்று கூறி சில ஆதாரங்களை எடுத்துரைக்கின்றனர். இந்த ஆதாரங்கள் செயல்படுத்துவதற்கு ஏற்றவையா? அதன் தரம் என்ன?
என்பதை காண --இங்கே கிளிக்-- செய்யவும்

ஷேஹுமார்கள் காலில் விழலாமா? என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும் 

8/30/2015

கப்ரில் நபி(ஸல்)அவர்களின் நிலை

ஜும்ஆவின் தினத்தில் என்மீது அதிகமாக ஸலவாத் ஓதுங்கள் அது எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கப்ரில் மடிந்தவர்களாயிருக்கும் போது எங்களின் ஸலவாத்தை உங்களுக்கு எவ்வாறு எடுத்துக் காட்டப்படும்? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி தின்பதை விட்டும் தடை செய்துள்ளான் என்றார்கள். (அறி: ஷத்தாத்பின் அவ்ஸ் (ரலி) நூல்: அபூதாவூத், இப்னு மாஜ்ஜா, நஸயீ, தாரமீ, அஹ்மத், இப்னுஹிப்பான்)

நிச்சயமாக பூமியில் உலா வந்து கொண்டிருக்கும் சில மலக்குகள் அல்லாஹ்வுக்கு உள்ளனர். அவர்கள் எனது உம்மத்துகளிடமிருந்து எனக்கு ஸலவாத்தைச் சேர்ப்பித்துக் கொண்டிருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
. (அறி: இப்னு மஸ்ஊத்(ரலி) நூல்: நஸயீ, தாரமீ)

மேற்காணும் ஹதீஸின் மூலம் நபிமார்களின் உடலை மண் தின்பதை விட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம்.

இப்பாதுகாப்பு நபிமார்களின் உடலுக்கு உண்டு என்பதாகத்தான் ஹதீஸில் வந்துள்ளதே தவிர, சிலர் கூறுவது போல் குர்ஆன் மனனம் செய்த ஹாபிழ்கள் மற்றும் இறை நேசச் செல்வர்களுக்கும் உண்டு என்பதற்கான சரியான ஆதாரம் ஹதீஸ்களில் கிடையாது. அவ்வாறு உண்டு கூறப்படும் அனைத்து ஹதீஸ்களும் பலகீனமாகவும், இட்டுக்கட்டப்பட்டவையாகவும் உள்ளன.

அடுத்து நாம் நபி(ஸல்) அவர்களுக்குக் கூறும் ஸலாமும், அவர்கள் மீது ஓதும் ஸலவாத்தும் தமக்கு சேர்ப்பிக்கப்படுவதாக அவர்கள் கூறி இருப்பதை காணுகிறோம். அவர்களின் பால் சேர்ப்பிக்கப்படும் ஸலவாத்தையும், ஸலாமையும் எவ்வாறு அவர்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது என்பதப் பின்வரும் அறிவிப்பு விளக்குகிறது.
உங்களில் ஒருவர் எனக்கு ஸலாம் கூறினால், அல்லாஹ் எனது உயிரை என்னில் மீண்டும் கொண்டு வந்து சேர்க்கிறான். அதன் பயனாக அவருக்கு பதில் ஸலாம் அளிக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறி:அபூஹுரைரா(ரலி) நூல்; அபூதாவூத், பைஹகீ, அஹ்மத்)

இவ்வறிப்பின் மூலம் நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறும்போதும், அவர்கள் மீது ஸலவாத்தோதும் போதும், அவற்றை அவர்களுக்கு சேர்ப்பிக்கக் கூடிய அந்த சந்தர்ப்பத்தில் மட்டும் அவர்களின் உயிரை அவர்களுக்கு மீண்டும் கொண்டு வரப்படுகின்றது என்பதானது, அவர்கள் எப்போதும் கப்ரில் ஹயாத்தாக உயிரோடு இல்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது.

ஆகவே, நபி(ஸல்) அவர்களுக்கு கூறப்படும் ஸலவாத்தையும், அவர்கள் மீது  ஓதப்படும் ஸலவாத்தையும் மலக்குகளின் வாயிலாக சேர்ப்பிக்கப்படுகின்றது. அல்லது எடுத்துக் காட்டப்படுகின்றது என்ற  பொருளுள்ள வாசகமே இடம் பெற்றுள்ளது. மலக்குகளின் வாயிலாக தமக்கு சேர்ப்பிக்கப்படும் ஸலவாத், ஸலாம் முதலியவற்றைத்தவிர மற்றவர் பேசுவதையும் செவியுருகிறார்கள், கப்ரில்  உயிருடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கும் சரியான சான்று எதுவுமில்லை என்று ஹதீஸ்கலா வல்லுனர்கள்  குறிப்பிடுகின்றார்கள்.

8/28/2015

இறுதி நபி இறப்பில்லாதவர்களா?

கப்ரை வணங்கும் பரேலவிகளுக்கு எதிரானவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் தேவ்பந்திகளிலும் வழிகெட்ட பரேலவிகள் அதிகமதிகம் ஊடுறுவியுள்ளனர். அதற்குத் தெளிவான சான்றுதான் "மனாருல் ஹுதா மே 2015'' மாத இதழில் "ரவ்ளா கஅபாவை விட புனிதமானது'' என்றும், நபியவர்கள் மரணிக்க வில்லை. அவர்கள் மண்ணறையில் உயிரோடு தான் உள்ளார்கள் என்றும் எழுதியுள்ளனர். இது மிகப்பெரும் வழிகேடும், நிரந்தர நரகத்தில் தள்ளும் இணைவைப்புக் கொள்கையுமாகும்.
"நபியவர்களின் மண்ணறை கஅபாவை விடப் புனிதமானது'' என்ற வழிகெட்ட கருத்திற்குரிய தெளிவான மறுப்பை ஜூன் 2015 ஏகத்துவம் மாத இதழில் நாம் தெளிவு படுத்தியிருந்தோம்.
"நபியவர்கள் மரணிக்கவில்லை. அவர்கள் கப்ரில் உயிரோடுதான் உள்ளார்கள்'' என்ற இணைவைப்புக் கொள்கைக்கு எதிரான நபிவழிச் சான்றுகளை நாம் இந்த இதழில் விரிவாகக் காண உள்ளோம்.

நபியவர்கள் மரணிக்கவில்லை என்ற வழிகெட்ட கொள்கையைத் திணிப்பதற்காக மனாருல் ஹுதா மாத இதழ் பல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையும், தவறான வாதங்களையும் முன்வைத்துள்ளது. சில சரியான ஹதீஸ்களின் கருத்தைத் திரித்துக் கூறியுள்ளனர்.
அவர்கள் எடுத்து வைத்துள்ள வாதங்களுக்குரிய பதில்களைக் காண்பதற்கு முன்னால் நம் உயிரினும் மேலான உத்தம நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்குரிய சான்றையும், அவர்கள் கியாமத் நாளில் தான் உயிர் கொடுத்து எழுப்பப் படுவார்கள் என்பதற்குரிய சான்றுகளையும் காண்போம்.
நபியும் மரணிப்பவரே! திருக்குர்ஆன் பிரகடனம் 
(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே. பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் கியாமத் நாளில் வழக்குரைப்பீர்கள்.  (அல்குர்ஆன் 39:30)
இந்த இறைவசனம் நபியவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை நோக்கிப் பேசுகின்ற இறைவசனம் ஆகும்.
இவ்வுலகில் படைத்த அனைத்து மனிதர்களும் எவ்வாறு மரணத்தைத் தழுவக்கூடியவர்களோ அது போன்றே முஹம்மது (ஸல்) அவர்களும் மரணத்தைத் தழுவக்கூடியவர்கள் என்பதை மேற்கண்ட இறைவசனம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
மரணம் என்பதில் பிற மனிதர்களுக்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதே இஸ்லாத்தின் அடிப்படை என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
இறைத்தூதர் இறந்தாலும் இஸ்லாம் நிலைத்திருக்கும்
முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (அல்குர்ஆன் 3:144)
உஹது யுத்தக் களத்தில் நபியவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற வதந்தி பரவிய போது சிலர் இஸ்லாத்தை விட்டே வெளியேற நினைத்தனர். நபியவர்கள் கொல்லப் பட்ட பிறகு நாம் எதற்காகப் போர் செய்ய வேண்டும் என்று எண்ணினர். அந்த நேரத்தில்தான் அல்லாஹ் மேற்கண்ட இறைவசனத்தை அருளினான்.
முஹம்மது (ஸல்) அவர்கள் மரணித்தாலும் இஸ்லாம் நிலைத் திருக்கும். எனவே முஹம்மது நபி இறந்து விட்டாலும் நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவீர்களா? அப்படி வெளியேறினால் அது உங்களுக்குத்தான் நஷ்டம் என்பதை நபித்தோழர்களுக்குத் திருக்குர்ஆன் தெளிவுபடுத்தியது.
நபியவர்கள் உயிருடன் வாழும் காலகட்டத்திலேயே அவர்கள் மரணிக்கக் கூடியவர்கள் தான் என்பதை இந்த இறைவசனம் நபித்தோழர்களுக்கு முன்னறிவிப்புச் செய்தது.
உண்மையை உணர்த்திய உண்மையாளர் அபூபக்கர்
"எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந் தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்'' என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிவிட்டுப் பின்வரும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.
"(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே.'' (39:30)
முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான் (3:144)    (நூல்: புகாரி 3668)
மேற்கண்ட வார்த்தைகள் நபியவர்கள் மரணித்த நேரத்தில் உண்மையாளர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் கூறிய அற்புத வார்த்தைகளாகும். திருக்குர்ஆன் போதிக்கும் அற்புத உண்மையை நபியவர்கள் மரணித்த வேளையிலே அன்புத்தோழர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
மற்றொரு முறையிலும் நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை அபூபக்கர் (ரலி) நயமாக மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, "தங்களுக்கு என் தந்தையும், என் தாயும் அர்ப்பண மாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை உங்களைச் சுவைக்கச் செய்ய  மாட்டான்'' என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள்.  (நூல்: புகாரி 3667)
"நபி (ஸல்) அவர்கள் இறக்க வில்லை என்று தான் தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும், கால்களையும் துண்டிப்பார்கள்'' (புகாரி 3667) என்று உமர் (ரலி) அவர்கள் நபி மீது கொண்ட பாசத்தினால் நிலை தவறிப் பேசிய பொழுதான் அபூபக்கர் (ரலி) மேற்கண்ட உண்மையை ஓங்கி உரைத்தார்கள்.
நபியவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. அவர்கள் மரணிக்கவில்லை என்றுரைப்பது இணைவைப்புக் கொள்கை என்பதனை இறைத்தூதர் இறந்த நேரத்தில் குகைத்தோழர் ஆற்றிய உரையிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
இறப்பு நெருங்கியதை உணர்த்திய இறைவசனம்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், என்னைத் தமக்கு அருகிலேயே (எப்போதும்) அமர்த்திக் கொள்வது வழக்கம். ஆகவே, (ஒருநாள்) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம், "எங்களுக்கு இப்னு அப்பாஸைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்கின்றனர்'' என்று சொன்னார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அவரது (கல்வித்) தகுதி உங்களுக்கே தெரியும்'' என்று (என்னைக் குறித்துச்) சொன்னார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தம் சகாக்களின் மத்தியில் வைத்து) என்னிடம், "(நபியே!) அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீங்கள் பார்க்கும் போது...'' எனும் (110:1, 2) இறைவசனத்தைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். அதற்கு நான், "(இவ்வசனத்தின் வாயிலாக) அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களின் ஆயுள் முடிந்து (இறப்பு நெருங்கி) விட்டதை அறிவித்தான்'' என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் இந்த வசனத்திலிருந்து அறிந்து கொண்டதையே நானும் அறிந்து கொண்டேன்'' என்று சொன்னார்கள்  (நூல்: புகாரி 4430)
இறைத்தூதர் இறந்துவிட்டார்கள் என்பதுதான் நபித்தோழர்களின் கொள்கையாக இருந்தது என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இறைத் தூதர் இறக்கவில்லை என்று நம்புவது இஸ்லாத்திற்கு எதிரான கொள்கை என்பதும் தெளிவாகி விட்டது.
மரணம் நெருங்கிவிட்டதை மகளுக்கு உணர்த்திய இறைத்தூதர்
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயில் தம்முடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து, எதையோ இரகசியமாக அவர்களிடம் சொன்னார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு அவர்களை அழைத்து மீண்டும் ஏதோ இரகசியமாகக் கூற அவர்கள் சிரித்தார்கள். நான் அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியமாக, (அப்போது) தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப் பதாகத் தெரிவித்தார்கள். அதனால், நான் (துக்கம் தாளாமல்) அழுதேன். பிறகு அவர்களின் வீட்டாரில் முதலா வதாக அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லவிருப்பது நான் தான்' என்று இரகசியமாக எனக்குத் தெரிவித்தார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியடைந்து) சிரித்தேன் என்று பதிலளித்தார்கள். நூல்: புகாரி (3625, 3626)
நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழியும் மிகத் தெளிவாக உரைக்கின்றது. இவ்வளவு தெளிவான சான்றுகளைக் கண்ட பின்னரும் அவர்கள் மரணிக்கவில்லை என்றுரைப்பவர்கள் உண்மையான முஃமின்களாக இருக்க முடியுமா? மக்களே சிந்தித்துப் பாருங்கள்.
மரணம் நெருங்கிவிட்டதை மக்களுக்கு உணர்த்துதல்
நபி (ஸல்) அவர்கள் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் தாம் மரணிக்கப் போகிறோம் என்பதையும் தன்னுடைய இறப்பிற்குப் பிறகு நபித்தோழர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள்.
உஹுதுப் போர் தியாகிகளுக்குத் தொழுகை நடத்தி விட்டு, தாம் மரணிக்கப் போவதையும் அடுத்த சந்திப்பு மஹ்ஷரில்தான் என்பதையும் நபியவர்கள் தமது தோழர்களுக்கு உணர்த்தினார்கள்.
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுவிப் பதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழ வைத்தார்கள். பிறகு சொற்பொழிவு (மிம்பர்) மேடைக்குத் திரும்பிவந்து உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (அல்கவ்ஸர்' எனும்) எனது தடாகத்தைக் காண்கின்றேன். எனக்கு "பூமியின் கருவூலத் திறவுகோல்கள்' அல்லது "பூமியின் திறவுகோல்கள்' வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணை வைப்போராக மாறிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவருக் கொருவர் போட்டியிட்டு (மோதி)க் கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். நூல்: புகாரி (6426)
"எனக்குப் பின்னால்'' என்று நபியவர்கள் கூறியது "அவர்களுடைய இறப்பிற்குப் பின்னால்'' என்பதாகும்.
மேலும் தம்முடைய இறுதி ஹஜ்ஜின் போதும் தாம் விரைவில் மரணித்துவிடக்கூடும்  என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு உணர்த்தினார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்தவாறு (ஜம்ரத் துல் அகபாவின் மீது) கல் எறிவதை நான் கண்டேன். மேலும் அவர்கள், "நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து இந்த ஆண்டிலேயே) கற்றுக்கொள்ளுங் கள். ஏனெனில் நான், எனது இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா) செய்ய மாட்டேனா என்பதை அறியமாட்டேன்'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள். நூல்: முஸ்லிம் (2497)
இறக்கப் போவதை உரக்கச் சொன்ன இறைத்தூதர்
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். அதில், "இந்த உலகம், அல்லது தன்னிடமிருப்பது - இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி தூயோன் அல்லாஹ் ஓர் அடியாருக்கு சுயாதிகாரம் அளித்தான். அ(ந்த அடியாரான)வர், அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்' என்று சொன்னார்கள்.
(இதைக் கேட்ட) உடன், அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுதார்கள். அப்போது நான் எனக்குள்ளே, "இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது - ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அல்லாஹ் ஓர் அடியாருக்கு சுயாதிகாரம் அளித்த போது அவர் அல்லாஹ்விடமிருப்பதை தேர்ந்தெடுத்துக் கொண்டால் அதற்காக இந்தப் பெரியவர் ஏன் அழவேண்டும்?' என்று வினவிக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் அந்த (சுயாதிகாரம் அளிக்கப்பட்ட) அடியாராக இருந்தார்கள். (நபி (ஸல்) அவர்கள் தமது இறப்பைப் பற்றியே குறிப்படுகிறார்கள் என்பதை அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிந்து கொண்டார்கள். (ஏனெனில்) அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களே! அழாதீர்கள் என்று கூறிவிட்டு, "தன் நட்பிலும் தனது செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூபக்ரேயாவார். (என் இறைவனல்லாத வேறு) ஒருவரை சமுதாயத்தாரில் நான் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களேயே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், (அதைவிடச் சிறந்த) இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அபூபக்ருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத்தான் செய்கிறது. (எனது) இந்தப் பள்ளிவாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூபக்ரின் வாசலைத் தவிர' என்று சொன்னார்கள். நூல்: புகாரி (466)
இறைச் செய்தியை நிறுத்திய இறைத்தூதரின் இறப்பு
இறைத்தூதர் இறந்து விட்டதால் இனி இறைச் செய்தி (வஹீ) வராதே என்றெண்ணி அருமை ஸஹாபாக்கள் கண்ணீர் வடித்துள்ளனர். 
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், "நம்மை (அம்மையார்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்துவருவோம்'' என்று கூறினார்கள்.
அவ்வாறே உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், "ஏன் அழுகிறீர்கள்? (நம்மிடம் இருப்பதை விட)  அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?'' என்று கேட்டார்கள்.
அதற்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள், "அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழ வில்லை. மாறாக, (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்றுவிட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)'' என்று கூறி, அவர்கள் இருவரையும் அழச்செய்து விட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவரும் அழலாயினர்.  நூல்: முஸ்லிம் (4849)
இறுதித் தூதர் கூறிய இறுதி வார்த்தை
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை என்று நான் நபி (ஸல்) அவர் களிடமிருந்து செவியுற்றிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்களின் தொண்டை கட்டிக் கொண்டுவிட (கம்மிய, கரகரப்பான குரலில்), "அல்லாஹ் அருள்புரிந்துள்ள இறைத் தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள் மற்றும் நல்லடியார்களுடன்' எனும் (4:69) இறை வாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள். ஆகவே, இவ்வுலகம் மறுமை ஆகிய இரண்டிலொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கும் வழங்கப் பட்டது' என்று நான் எண்ணிக் கொண்டேன். நூல்: புகாரி (4435)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களது தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது அவர்கள் மூர்ச்சையடைந்து விட்டார்கள். மூர்ச்சை தெளிந்த போது அவர்களது பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது. பிறகு அவர்கள், இறைவா (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்ந்தருள்) என்று பிரார்த்தித்தார்கள். நூல்: புகாரி (4437)
மரண வேதனையை அனுபவித்த மாநபி
நபி (ஸல்) அவர்கள், தம் இரு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தைத் தடவிக் கொண்டு, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லை; மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு என்று கூறலானார்கள். பிறகு தமது கரத்தைத் தூக்கி, (இறைவா! சொர்க் கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்) என்று பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது நூல்: புகாரி 4449
இறந்து விட்ட இறைத்தூதர்
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்குமிடையே சாய்ந் திருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எவரது மரணத்தின் வேதனையைக் கண்டும் ஒரு போதும் நான் வருந்துவதில்லை. நூல்: புகாரி 4446
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அறுபத்து மூன்று வயதுடையவர்களாய் இருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். நூல்: புகாரி 4466
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  முப்பது ஸாவு' வாற்கோதுமைக்குப் பகரமாகத் தமது இரும்புக் கவசம் யூதர் ஒருவரிடம் அடைமானம் வைக்கப்பட்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். நூல்: புகாரி 4467
குளிப்பாட்டிய நபித்தோழர்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களைக் குளிப்பாட்ட முடிவு செய்தனர். "மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து விட்டு குளிப்பாட்டுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதா? அல்லது அவர்கள் அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டுவதா என்பது தெரியவில்லை' என்று பேசிக் கொண்டனர். அவர்கள் இதில் கருத்து வேறுபாடு கொண்ட போது அல்லாஹ் அவர்களுக்குத் தூக்கத்தை ஏற்படுத்தினான். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அணிந்துள்ள ஆடையுடனே குளிப்பாட்டுங்கள்' என்று வீட்டின் மூலையிலிருந்து ஒருவர் கூறினார். அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை. அதன்படி அவர்கள் அணிந்திருந்த ஆடையின் மேல் தண்ணீரை ஊற்றி அதன் மேல் தேய்த்துக் கழுவினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்கள்: அபூதாவூத் 2733, ஹாகிம்3/59
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த காரணத்தினால் தான் நபித்தோழர்கள் அவர்களுடைய ஜனாஸாவைக் குளிப்பாட்டினார்கள். இறைத்தூதர் மரணிக்காமல் உயிரோடு இருந்திருந்தால் அவர்களுடைய ஜனாஸாவை ஏன் நபித்தோழர்கள் குளிப்பாட்ட வேண்டும்? என்பதை இவர்கள் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளனர்.
இறுதி நபியவர்கள் இறப்பை எய்திவிட்டார்கள் என்பதைக் கூறும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை இதுவரை பார்த்தோம்.
நபியவர்கள் இறக்கவில்லை என்பதற்கு மாற்றுக்கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும் அவற்றுக்கான விளக்கத்தையும் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

ஆகஸ்ட் ஏகத்துவம் 2015  கே.எம். அப்துல் நாஸர், எம்.ஐ.எஸ்.சி.